படித்ததில் பிடித்தது

ஆயிஷா இரா.நடராசன் 1. ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் பி.ச.குப்புசாமி / விஜயா பதிப்பகம் ஒரு ஆசிரியர்  தன் வரலாறு எழுதும்போது அது ஆயிரக்கணக்கானவர்கள் பற்றியதாக மாறிவிடும் அதிசயத்தை என்னசொல்ல. மிகக் கடினமான வேலை ஆரம்பப்பள்ளி ஆசிரியர் வேலை. குப்புசாமி சார் தன் கிராமத்துப் பள்ளி அனுபவம் ஒவ்வொன்றாகச் சொல்ல நம் குழந்தைகளின் உலகம் விரிகிறது… அவர்களின் சாகசங்கள் கோபதாபங்கள்… குட்டிக்கனவுகள் ரசனைகள் என இது 206 பக்க சொர்க்கபுரி… அற்புத ஆசிரியர் ஒரு மந்திரக்காரர்… குழந்தைகளின் நம்பிக்கை பெறுவது ஊழியத்தைவிட முக்கியம் என வாழ்ந்தவர் குப்புசாமி சார்… அவசியம் ஆசிரியர்கள் படிக்கவேண்டிய பொக்கிஷம் இது. 2. புத்தக தேவதையின் கதை பேரா.எஸ்.சிவதாஸ் (யூமா வாசுகி)                 புக்ஸ் ஃபார் சில்ரன் 2003ல் இராக்கின் பாஸ்ரா நகரத்தை அமெரிக்கப் படைகள் வானிலிருந்து…

Read More