You are here
கட்டுரை 

இதயமற்ற உலகின் இதயம் பற்றி..

ச. சுப்பாராவ் உலகின் மிக சக்திவாய்ந்த நிறுவன அ​மைப்பு, எந்த​வொரு நிகழ்​வையும் தனக்கு சாதகமாக மாற்றிக் ​கொள்ளும் சாமர்த்தியம் உ​டையது. எதிர்ப்பவ​ரை மயக்கித் தன்பக்கம் இழுப்ப​தையும், வராமல் முரண்டு பிடிப்பவ​ரை அழித்துவிடுவ​தையும் மிக எளிதாகச் ​செய்யக்கூடியது எது என்றால், அத்த​கைய நிறுவன அ​மைப்பு மதம்தான் என்று நிச்சயமாகச் ​சொல்லலாம்.  மதத்தின் ஏமாற்று ​வே​லை​யை ​வெளியுலகிற்கு ​வெளிச்சம் ​போட்டுக் காட்ட முயன்று ​தோற்றுப் ​போகும் ஒரு சாமானியனின் க​தை​யை ஒரு மகத்தான நாவல் வழி​யே காட்டியிருக்கிறார் என் அன்பிற்கினிய ஆசான் இர்விங் வாலஸ். ஆனால், ‘தி ​வேர்ட்’ (tலீமீ ஷ்ஷீக்ஷீபீ) என்ற அந்த நாவல் அவ்வளவாகப் ​பேசப்படவில்லை.  ​நோபல் அ​மைப்பின் ஊழல்க​ளை, ஒரு கறுப்ப​ரை அதிபராக ஏற்க முடியாத அ​மெரிக்க சமூகத்தின் மன​நோ​யை அவர் எழுதும்​போது அவ​ரைக் ​கொண்டாடியவர்கள் கிறிஸ்துவ மதம் பற்றிய விமர்சனமாக வந்த இந்த நாவ​லைப்…

Read More
கட்டுரை 

உங்கள் நாவலை நாங்கள் எழுதித்தருகிறோம்

ச.சுப்பாராவ் எழுத்தும் வியாபாரமாகிவிட்ட வர்த்தக உலகில் எதுவும் நடக்கும்.  2000ல் லாரன்ஸ் ஸாண்டர்ஸ் என்ற ஒரு பிரபல எழுத்தாளரின் ​மெக்நல்லீஸ் ​டைலமா என்ற நாவல் வந்தது. அவரது வாசகர்கள் முண்டியடித்துக் ​கொண்டு வாங்கினார்கள். ஒரு விபரமான வாசகர் மட்டும் 1998ல் இறந்த லாரன்ஸ் 2000ல் எப்படி நாவல் எழுதினார் என்று ​யோசித்து அட்​டை​​யைப் பார்க்க கீ​ழே எறும்பு ​சைசில் வின்​சென்ட் லாண்​டோவுடன் இ​ணைந்து என்று ​போட்டிருந்தார்கள்.  வழக்​கைப் ​போட்டார்.  நீதிமன்றம் நாவ​லை வாங்கியவர்களுக்​​​கெல்லாம் 13 டாலர் தரும்படி பதிப்பாளருக்கு தண்ட​னை தந்தது.  ஆனால் எல்லா வாசகர்களும் இப்படி வழக்குப் ​போடமாட்டார்கள் என்ற ​தைரியத்தில் பல எழுத்தாளர்களும், பதிப்பகங்களும் ​செய்யும் தில்லுமுல்லுகள் பற்றித்தான் இக்கட்டு​ரை. இன்றுவ​ரை ​வெளிவரும் ​ஜேம்ஸ் பாண்ட் நாவல்கள், அதன் தி​ரை ஆக்கங்களில் ஆசிரியரின் ​பெயர் இயான் ஃபிளமிங் என்றுதான் ​போடுகிறார்கள்.  ஆனால் அவர் 1964​லே​யே…

Read More
கட்டுரை 

கோஹா எனும் கட்டற்ற நூலக மேலாண்மை மென்பொருள்

பெ.இராமமூர்த்தி இந்தியாவில் சமூக மாற்றத்தினை ஏற்படுத்துவதில் நூலகங்கள் பெரும்பங்காற்றி வருகின்றன. பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் உள்ள நூலகங்கள் மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் சேவையாற்றி வருகின்றன. ஆராய்ச்சி மையங்களில் உள்ள நூலகங்கள் அதனுடைய ஆராய்ச்சியாளர்களுக்கு தங்களுடைய ஆராயச்சிக்குத் தேவைப்படும் தகவல்களை அளித்து வருகின்றன. பொது நூலகங்கள் பொது மக்களுக்கு தினசரி, மாத பத்திரிகைகளையும், புத்தகங்களையும் இரவலாகக் கொடுத்தும் சேவையாற்றி வருகின்றன. நூலகங்களில் வாசகர்கள் தங்களுக்குத் தேவையான புத்தகங்களைத் தேடி எடுப்பதில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாயினர். இதனால், வாசகர்கள் மற்றும் நூலகர்களின் பெருமளவு நேரம் விரயமானது. இச்சிரமத்தைப் போக்குவதற்காக1984 ஆம் ஆண்டு இந்தியாவில் தனியுரிமை மென்பொருள்  அறிமுகப்படுத்தப்பட்டன. இம்மென்பொருளின் உதவியுடன் வாசகர்கள் தங்களுக்குத் தேவையான புத்தகங்களை  கணினி உதவியுடன்  மிக விரைவாகப் பெற முடிந்தது. மற்றும் நூலகர்கள் புதிதாக கொள்முதல் செய்த புத்தகங்களைப் பட்டியலிடுவதற்கு உதவியாக இருந்தது. இம்மென்பொருளைப்…

Read More

மண்டேலா: ரிவோனிய சதி வழக்கு எழுச்சி உரை

ஆப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சிக்கும், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸுக்கும் நெருக்கமான உறவு இருந்து வந்தது. அவை தங்கள் பல கொள்கைகளில் ஒரே அம்சத்தைக் கொண்டிருந்தன. காலனி ஆதிக்கதின் கீழ் உள்ள நாடுகள் தங்களது விடுதலைக்காகப் போராடியபோது, சோசலிச நாடுகள் ஆதரவு தந்தன. மலேயா, அல்ஜிரியா, இந்தோனேசியா போன்ற நாடுகளின் போராட்டங்களில் கம்யூனிஸ்ட்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.
ஆப்பிரிக்க கம்யூனிஸ்டுகள் குறித்துப் பேசும் மண்டேலா ‘ஆப்பிரிக்கர்களை சக மனிதர்களாகக் கருதி, சமமாக நடத்திய ஒரே அரசியல்குழு கம்யூனிஸ்ட் அமைப்புதான். எங்களோடு உண்ணவும், பேசவும் வசிக்கவும் வேலைபார்க்கவும் தயாராக இருந்தார்கள். இதன் விளைவாகவே ஆப்பிரிக்கர்கள் பலரும் விடுதலை என்பதை கம்யூனிசத்திற்கு சமமாகக் கருதுகின்றனர். கம்யூனிஸ்ட்களுக்கும், கம்யூனிஸ்ட் அல்லாதவர்களுக்கும் இடையேயான ஒற்றுமை என்ற இந்த அம்சம் தான் தென் ஆப்பரிக்காவின் தேச விடுதலை இயக்கத்திலும் பிரதிபலித்தது’ என்கிறார்.

Read More
கட்டுரை வரலாறு 

மே தினத் தியாகிகளின் மகத்தான வரலாறு!

உலகெங்கும் பல இடங்களில் குண்டுகள் வீசப்படுவதாக நாம் தினமும் படிக்கிறோம். ஆனால் அமெரிக்காவில் இப்படி குண்டு வீசப்பட்டது இதுதான் முதல் தடவை. இந்த குண்டு எட்டு மணி நேர வேலை இயக்கத்திற்கு எந்த வகையிலும் உதவவில்லை. உண்மையில் அது முதலாளிகளாலும், செய்தித்தாள்களாலும் தொழிலாளர் இயக்கத்தையும், குறைந்த வேலை நேரப் போராட்டத்தையும் அழிக்கப் பயன்படுத்தப்பட்டது. மறுநாள் காலை, மே 5 புதனன்று, கார்ட்டர் ஹாரிசனே ‘ராணுவச் சட்டத்தைப்’ பிரகடனப்படுத்த நேர்ந்தது. ‘சட்டம் ஒழுங்கு’ பிரச்சனையில் மென்மையாக நடந்து கொள்வதாகத் தோற்றமளித்துவிடக் கூடாது என்பதற்காக பல வாரங்கள் அவர் போன்ஃபீல்டுடனும், முதலாளிகளுடனும் உடன்பட்டுச் செல்ல நேர்ந்தது.

Read More
கட்டுரை சா.க. பக்கம் 

சிற்றிதழ்கள்!

சிற்றிதழ்கள் தங்கள் மீது சொல்லப்படும் குற்றம் குறைகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு படைப்பிலக்கியத்தை உயிர்ப்புடன் வைத்துக் கொண்டிருக்கின்றது. சிற்றிதழ் என்பது புதிய சோதனை, புதிய முயற்சி என்பதைச் சார்ந்தது. அது ஒரு நவீன இயக்கியம். மரபு என்பதற்கும், ஏற்கப்பட்டது, அங்கீகாரம் பெற்றது என்பதற்கும் எதிரானது. அதற்கு எழுத்தாளனே முக்கியம் கிடையாது, எழுத்து என்பதுதான் முக்கியமானது. புத்தம் புதிய படைப்பு எந்த வயதினரால் எழுதப்பட்டாலும் அதனை ஏற்று வெளியிட்டு நிலைநாட்டுவது என்பது சிற்றிதழ் மரபு.

Read More

தாவரங்களின் உரையாடல் முதல் காந்தியோடு பேசுவேன் வரை….

“சாரலுடன் குற்றாலத்தில் அலைகிற அனுபவம் தனி சுகம் ஆயிரமாயிரம் பேர் வேடிக்கை பார்க்கும் கண்களை மறந்து அருவிக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து நிற்பது “அருவிக்குள் நுழைந்தவுடனே வயது கரைந்து போய்விடுகிறது”போன்ற வர்ணனைகளையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

Read More

புத்தகத்தின் பலம்

ச. சுப்பாராவ் மனிதமனத்தின் சிந்த​னைப் ​போக்​கை மாற்றி. உல​கை த​லைகீழாகப் புரட்டிப் ​போட்ட பல புத்தகங்கள் பற்றி நாம் அறி​வோம்.  அவ்வப்​போது இது​போன்ற புத்தகங்களின் பட்டியலும் வருகின்றன. இ​வை ​பெரும்பாலும் நல்லவிதமான மாற்றங்க​ளை ஏற்படுத்துப​வை.  ஆனால் மக்கள் மன​தை தமக்கு சாதகமாக மாற்ற நி​னைப்​போரும் புத்தகங்க​ளை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவதுண்டு.  அப்படிப் பயன்படுத்தப்பட்டது ​தெரியாமல் வாசகமனம் அந்தப் புத்தகத்தில் மதிமயங்கிப் ​போவதும் உண்டு.  அப்படிப்பட்ட ஒரு புத்தகம்தான் லியான் யூரிஸ்  (Leon Uris) எழுதிய தி எக்​ஸோடஸ் (The Exodus). 1958ல் இந்த நூல் ​வெளியான ​போது ​தொடர்ந்து 19 வாரங்கள்  உல​கெங்கும் அதிகம் விற்ப​னையாகும் புத்தகங்களின் வரி​சையில் முதல் இடத்தில் இருந்தது. இலட்சக்கணக்கான பிரதிகள் உல​கெங்கும் விற்ப​னையானது. 1960ல் எம்.ஜி.எம். தயாரிப்பில் இ​தே ​பெயரில் தி​ரைப்படமாக வந்த​போது அது வசூலில் ​பெரும் சாத​னை புரிந்தது. ஐம்பதுக்கும் ​மேற்பட்ட…

Read More

தி.க.சி. இளைஞர்களை உருவாக்கிய இலக்கிய இயக்கம்

மிகச்சிறந்த மார்க்சியத் திறனாய்வாளரும் பண்பாளருமான எழுத்தாளர் தி.க.சிவசங்கரன் 25.03.2014 அன்று திருநெல்வேலியில் காலமானார். தனது ஒப்பற்ற இலக்கியப் பணிகளால் ‘தி.க.சி.’ என அன்புடன் அழைக்கப்பட்ட தி.க.சிவசங்கரன் 1925 ஆம் ஆண்டு திருநெல்வேலி நகரத்தில் பிறந்தார். மறைந்த எழுத்தாளர் வல்லிக்கண்ணனுக்கும் இவருக்கும் இளம்பருவத்திலேயே நட்பு மலர்ந்தது. பிறகு அது ஆழ்ந்த நட்பாகப் பரிணாமம் பெற்று இருவரும் இறுதிவரை இரட்டையர்கள் போலவே இலக்கிய உலகை வலம் வந்தது அறிந்த செய்தி. தி.க.சி. ஜீவாவின் இலக்கியப் பள்ளியில் உருவாகியவர். எனவே மார்க்சியப் பார்வை என்பது அவரது இயல்பிலேயே ஊறியிருந்தது. 1960-1964களில் அவர் தாமரை இதழில் ஆசிரியராகப் பணியாற்றிய காலம் பொற்காலம் என இன்றளவும் பல இலக்கியவாதிகளால் குறிப்பிடப்படுவதுண்டு. தமிழில் மிகச்சிறந்த எழுத்தாளர்களை அக்காலகட்டத்தில் தி.க.சி உருவாக்கினார். 1964 முதல் சோவியத் கலாச்சார நிலையத்தில் செய்தித் துறையில் பணியாற்றி 1990ல் ஓய்வுபெற்றார். தனிச்சிறப்புள்ள…

Read More

இரு துருவமான மனித சமூகம்

என்.குணசேகரன் ஹாரி பிரேவர்மன் இறப்பதற்கு சிறிது காலத்துக்கு முன்பு மேற்கு வெர்ஜினியா தொழில்நுட்பக் கல்லூரியில்  உரை நிகழ்த்தினார். மிகச்  சிறந்த  அந்த உரையில் நிறைவாக முடிக்கிறபோது கீழ்க்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்: “…..இது அனைத்தும் தெரிவிப்பது என்னவென்றால், முதலாளித்துவ சமூகத்தின் ஒரு துருவத்தில் சொத்து அதிகரிப்பு நிகழ்கிறது;அதற்கு ஏற்றவாறு,ஏழ்மை அதிகரிப்பு மற்றொரு துருவத்தில் நிகழ்கிறது….” சொத்து அதிகரிப்பில் முதலாளித்துவம் எவ்வாறு உழைப்புச் சக்தியை மலிவாக்கிட முயல்கிறது?அதற்கு, உழைப்பு மேலாண்மையை அது எவ்வாறு நவீனப்படுத்தியது? இதன் காரணமாக, தொழிலாளி  எவ்வாறு மனரீதியாக, உடல்ரீதியாக, மலினமாக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழக்கிறார்? இதனால், ஏழ்மை அதிகரிப்பு எவ்வாறு நிகழ்கிறது? இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டுபிடித்ததுதான் ஹாரி பிரேவர்மனின் வாழ்க்கைச் சாதனை. இந்தத் துறையில் இருபதாம் நூற்றாண்டுக்கு முந்தைய போக்குகளை மார்க்ஸ் கண்டறிந்தார். இருபதாம் நூற்றாண்டுக்கு அதனைப் பொருத்தி மார்க்சிய சிந்தனை முறையில்  ஆய்வை மேற்கொண்டவர்…

Read More