மீண்டெழும் மறுவாசிப்புகள் – 9: மஹாபாரதம் என்னும் இலக்கியப் பிரதி

ச.சுப்பாராவ் மஹாபாரதம் பற்றிய சமீபத்திய படைப்புகள் எல்லாம் இருவிதமான கண்ணோட்டங்களின் அடிப்படையில்தான் எழுதப்படுகின்றன. ஒன்று அதைக் கேள்விக்குள்ளாக்குவது என்ற பெயரில் அதன் பிரும்மாண்டத்தை, அதன் ஆழமான இலக்கியச்சுவையையும் சேர்த்து மறுதலிக்கும் விதமாய் எழுதுவது. மற்றது, அதில் இல்லாததே இல்லை என்று தேவைக்கு    அதிகமாகவே அதற்கு அதிமுக்கியத்துவம் தரும் ஒரு மதவாதப் பார்வை. இரண்டும் இல்லாமல் ஒரு இலக்கியப் பிரதியாக அதன் பலம், அழகு ஆகியவற்றையும் அதன் பலவீனங்கள், முரண்கள் பற்றியும் நடுநிலையோடு எழுதுவது மிக அபூர்வமாகத்தான் நிகழ்கிறது. 1970களில் வெளியான ஐராவதி கார்வேயின் ‘யுகாந்தா’ அப்படிப்பட்ட ஒரு முயற்சியின் முதல் அற்புதமான   படைப்பு. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பின் இப்போது வந்துள்ள அபிஜித் பாசுவின் மார்வல்ஸ் அண்ட் மிஸ்ட்ரீஸ் ஆஃப் மஹாபாரதா ( Marvels and Mysteries of Mahabharatha – Abijit Basu) அதற்கு இணையான…

Read More