கல்வி – புதிய கொள்கைக் கலவை – 3: படிப்பு, வேலை, தொழில்

ராமானுஜம் 1. இக்கட்டுரைத் தொடரின் முதல் பகுதியில் ‘மெஹருன்னிசாவை ராக்கெட் ஏற்ற வேண்டும்’ என்று எழுதியிருந்ததற்கு ஒரு நண்பர் எதிர்க் கருத்து தெரிவித்துள்ளார். “இம்மாதிரி ஒவ்வொரு குழந்தையின் கனவுகளையும் நம்மால் நனவாக்க முடியுமா, வேண்டுமா? ஒவ்வொருவரும் பிற்காலத்தில் ஏதோ வேலை, தொழில் செய்வார்கள், அது என்ன என்று இன்றே கண்டறிந்து பள்ளியில் அதற்கான தயாரிப்பைச் செய்ய முடியுமா? இதெல்லாம் போகாத ஊருக்கு வழி தேடுவதுதான்” – என்று அவர் சொல்லவில்லை. ஆனால் என் மனம் நோகக் கூடாது என்று பல பாராட்டுகளுடன் பெரும்பாலும் இதைத்தான் அவர் சொல்கிறார். இது மிகவும் நியாயமான விமர்சனம் என்று நான் கருதுகிறேன். கடந்த இதழில் இக் கருத்தின் மறுபுறமாக கல்வி மீதான வேறொரு விமர்சனத்தையும் முன்வைத்திருந்தேன். “படிப்புக்கும் செய்யும் வேலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை”, “பள்ளிக் கல்வியும் கல்லூரிக் கல்வியும் எந்த…

Read More