மிக மிக பிற்படுத்தப்பட்டோருக்கான குரல்!!

சாதி – அரசியல் அதிகாரம் நூலை முன்வைத்து ஓர் விவாதம் அ.பகத்சிங்     சாதியம்குறித்த விவாதங்கள் பல்வேறு தளங்களில் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. சாதியின் தோற்றம், வரலாறு குறித்து அறுதியிட்ட பொது ஆய்வு முடிவுகள் ஏதும் எட்டப்படாத சூழலில்தான் சாதியத்திற்கு எதிரான கருத்தியல்களும், கள செயல்பாடுகளும் பல்வேறு சித்தாந்த பின்புலத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுகிறது. சாதி ஒழிப்பு என்ற நெடிய இலக்கை அடைவதற்கு முன்னால் சாதியத்தால் வீழ்ச்சியுற்ற பல்வேறு சமூகப் பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, அவர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவும், மேம்பாட்டிற்காகவும் பலவேறு கருத்தியல்களும், போராட்டவடிவங்களும் முன்வைக்கப்படுகிறது. ஒடுக்குமுறைக்கு உட்பட்ட பல்வேறு சாதிய சமூகங்களின் மேம்பாட்டிற்கான கருத்தியலை முன்வைத்து பல நூல்கள் தமிழில் வெளிவந்துள்ளன. அவ்வகையில் தமிழகத்தில் சமூக-பொருளாதார-அரசியல் ரீதியில் பின்னடைவில் உள்ள சில சாதிகளை முன்வைத்து எழுத்தாளர் கௌதம சித்தார்த்தன் எழுதியுள்ள நூல் ”சாதி- அரசியல், அதிகாரம்”. இந்நூல் முன்வைக்கும்…

Read More