You are here
மற்றவை 

கிளியர் அண்ட் பிரசண்ட் டேஞ்சர்:

டாம் கிளான்சி தன்னையறியாமல் எழுதிவிட்ட  நாவல் ச.சுப்பாராவ் ஏகாதிபத்தியத்தின் ​கைகள் ரத்தப் பிசுபிசுப்​போடுதான் அதிகாரம் ​செலுத்துகின்றன. அந்த ரத்தம் அது நசுக்கும் குட்டி நாடுகளின் ஜனநாயக சக்திகளின் ரத்தம் மட்டும்தானா?  இல்ல​வேயில்​லை.  அதில் அதன் ​சொந்த நாட்டினரின் ரத்தம் – குறிப்பாக, தனது நாட்டிற்காக ரத்தம் சிந்தவும் தயார் என்று, அதிகாரவர்க்கத்தின் ஆ​ணைகளுக்கு இணங்க எங்​கெங்கோ ​தொ​லைதூர நாடுகளில்​ ​​சென்று உயிர்விடும் எளிய ​தேசபக்த ராணுவ வீரர்களின் ரத்தம் அதிகமாகவே இருக்கும்.  அதுவும், அப்படிப்பட்ட வீரர்கள் ​பெரும்பாலும் அ​மெரிக்காவின் விளிம்பு நிலை மனிதர்களான கறுப்பர்கள், வந்​​தேறிகளான ஹிஸ்பானிக் என்ற​ழைக்கப்படும் ஸ்பானியர்களாக இருப்பது மற்​றொரு ​கொடு​மை.  வியட்நாமிலும், ஆப்கனிலும், ஈராக்கிலும் இதுதான் நடந்தது. இப்​போதும் நடக்கிறது. இனியும் நடக்கும்.  இப்படிப்பட்ட ராணுவ நடவடிக்​கைகள் ​வெற்றி​பெறும்​போது தலைவர்கள் ​தொ​லைக்காட்சிகளில் வீரவசனம் ​பேசுவதும், சிக்கலாகும்​போது அது ஏ​தோ ஒருசில அதிகாரிகளின் தவறு…

Read More

புரட்சிப் பருந்து ரோசா லக்சம்பர்க்

என்.குணசேகரன் மார்க்சிற்குப் பிந்தைய தலைமுறை மார்க்சியர்களில் தலைசிறந்த பங்களிப்பைச் செய்தவர் ரோசா லக்சம்பர்க். மார்க்சிய தத்துவம், நடைமுறையை மேலும் வளர்த்திட்ட பெருமைமிகு வரலாறு  கொண்டவர் அவர். ஜெர்மனிக்கு மட்டுமல்ல, உலகப் புரட்சிக்கான போராளியாகத் திகழ்ந்தவர்,ரோசா. முதல் உலகப்போர்ச் சூழலில், போருக்கு எதிராகவும், மனித இனத்தின் மீது அழிவுப் போரைத் திணிக்கும் ஏகாதிபத்தியம் குறித்தும் அவர் பதிவு செய்துள்ள கருத்துக்கள் இன்றளவும் பொருந்துகின்றன. ஏகாதிபத்திய முறையையும், போரையும் எதிர்த்து  சோசலிசம் காணும்போது, இயக்கத்தில் எழும் சீர்திருத்தவாதம் எனும் நழுவல் போக்கை கடுமையாக எதிர்த்தவர் ரோசா.அதனையொட்டிய அவரது கருத்துக்கள் இன்றும் ஜீவனுள்ளதாகத் திகழ்கின்றன. இந்தியாவில் தேசிய சுயாட்சி ஏற்படுவதற்காக விடுதலைப் போராட்டம்  நடந்தது.  ஆனால், இன்றளவும் தேசிய இறையாண்மைக்கு வெளியிலிருந்தும், உள்ளுக்குள்ளிருந்தும் அச்சுறுத்தல் இருந்து வருகின்றது. தங்களது  மூலதன  நலன்களுக்காக உள்நாட்டு முதலாளித்துவம், ஏகாதிபத்தியத்துடன் கூடாநட்புக் கொள்கிறது. காங்கிரஸ், பாஜக…

Read More
கட்டுரை 

தேவதைகள் அழும்…

ச. சுப்பாராவ் அந்தக் கறுப்பின மக்களின் பூமியில் கிடைக்கும் கனிம வளங்களின் மதிப்​பைக் கணக்கிட​வே முடியாது.  தங்கமும், ​வைரமும், நிலக்கரியும், தாமிரமும், யானைத்தந்தங்களும், ஏராளமான கால்ந​டைகளும் ஐரோப்பியர்கள், குறிப்பாக பிரிட்டிஷார் கனவிலும் பார்க்காத​வை. ஆனால் அந்த மண்ணின் அந்த எளிய மக்களுக்கு  இ​வை எதுவும் ​தே​வையில்​லை.  உணவிற்கு ​வேட்​டையாடப்படும் விலங்கிடம், என் பசிக்காக உன்​னைக் ​கொல்ல ​நேர்ந்தது என்று மன்னிப்புக் ​கோரி, அதன் ஆன்மா சுவர்க்கம் புக அதன் உட​லைச் சுற்றி ஆடிப்பாடித் தம் கடவுள​ரை ​வேண்டும் நயத்தகு நாகரீகம் ​கொண்டவர்கள். ​பெரும் விலங்குக​ளை ​வேட்​டையாடவும், அவற்றிடமிருந்து தம்​மைத் தற்காத்துக் ​கொள்ளவும்  அவர்களுக்குத்  ​​​தே​வைப்பட்ட​தெல்லாம் துப்பாக்கிகள் தான். சிசில் ​ரோட்ஸ் என்ற தந்திரசாலி சில துப்பாக்கிக​ளையும், பாசிமணிக​ளையும் ​கொடுத்து லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களைக் கறுப்பின அரசரான ​லோ​பென்குலாவிடம் வாங்கிக் ​கொள்கிறான்.  அந்த நிலங்களில் கனிமவளங்க​ளைத் ​தோண்டி எடுக்க…

Read More