You are here
புரட்சி இலக்கியங்கள்: ஒரு மீள்வாசிப்பு 

புரட்சி இலக்கியங்கள்:ஒரு மீள்வாசிப்பு-3: புரட்சி வரலாற்றுக்கு ஒரு முன்னோடி நூல்

   என்.குணசேகரன் உலக வரலாற்றில்,சமூகத்தை அடியோடு மாற்றிய வரலாற்று நிகழ்வுகள் ஏராளம். மக்கள் எழுச்சியினால், அதிகார மாற்றங்கள், சமூகப் புரட்சிகள் நிகழ்ந்திடாத நாடுகளே இல்லை. ஆனால், அவற்றைப் பதிவு செய்துள்ள  பல வரலாற்றாசிரியர்கள், இந்த நிகழ்வுகளில் சாதாரண மனிதர்கள் ஆற்றிய  பங்கினை சரியாக  சித்தரிப்பதில்லை.‘வரலாற்றைப் படைப்பவர்கள் சில தனிநபர்கள்தான்; வரலாற்று நிகழ்வுகள்  தற்செயலானவை’ போன்ற பார்வைகளுடன்  நீடித்துவரும்  வரலாற்று நோக்குகளாக உள்ளன. சாதாரண மனிதர்களின் இயக்கம் வரலாற்று நிகழ்வுக்கு அடிப்படையானது. இந்தப் பார்வையை நிலைநிறுத்த, மார்க்சிய வரலாற்று ஆசிரியர்கள் இன்றும் போராடி வருகின்றனர். “கீழ் மட்டத்திலிருந்து வரலாறு” எனும் வரலாற்று நோக்குடன் வரலாறுகளை எழுதிய இ.பி.தாம்சன், எரிக் ஹப்ஸ்வம் போன்றோருக்கும் முன்னோடித்    தலைமுறையைச் சார்ந்தவர், ஜார்ஜ் லெபிவர். அவர் எழுதிய “பிரெஞ்ச் புரட்சி” எனும் நூல், ஐரோப்பிய சமூகத்தை முற்றாக மாற்றி, மன்னராட்சிகளையும், பிரபுத்துவத்தையும் தூக்கியெறிந்த ஒரு மாபெரும்…

Read More
புரட்சி இலக்கியங்கள்: ஒரு மீள்வாசிப்பு 

ஒரு தோல்வி ஏற்படுத்திய உலகப் பேரழிவு

என்.குணசேகரன் “தோல்வியடைந்த புரட்சிகளை நாம் மறந்து போகிறோம்” என்று வருத்தத்துடன் எழுதினார்  மார்க்சிய அறிஞர்,கிரிஸ் ஹார்மன். கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் நிகழ்ந்த ஜெர்மானியப் புரட்சியும் மறந்து போன ஒன்றாக மாறிப்போனது. இந்தப் புரட்சி எழுச்சிகள்  1919 – 1923-ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்தன. அந்தப் புரட்சி வெற்றியடைந்து நீடித்திருந்தால், உலகின் வரலாறு மாறியிருக்கும். கீழ்க்கண்டவை மாற்றங்கள் நிகழ்ந்திருக்ககூடும். ஹிட்லர் ஆட்சிக்கு வந்திருக்கவே முடியாது. பாசிசப் பேரழிவும் நடந்திருக்காது; இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்திருக்காது. ரஷியாவில் நடந்த சோசலிசப் புரட்சி, பொருளாதார, அரசியல் துறைகளில் ஜெர்மனியின் பக்கபலத்தோடு புத்துயிர் பெற்றிருக்கும். சோவியத் சோசலிசப் பரிசோதனைகளின் வெற்றி, உலகத்தின் சமுக மாற்றம் காண விழையும் இயக்கங்களுக்கு, புதிய வீர்யத்தை ஏற்படுத்தியிருக்கும். இருபதாம் நூற்றாண்டின் பிந்தைய வரலாறு வித்தியாசமாக இருந்திருக்கும். இத்தகு முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் புரட்சியை கிரிஸ் ஹர்மன் தனது  “வீழ்ச்சியடைந்த புரட்சி”…

Read More
மார்க்சியம் 

விண்ணைத்தாண்டி வளரும் மார்க்சியம்- 20 : மீண்டும் மீண்டும் லெனினியம்

என். குணசேகரன் நாட்டின் அதிபராக,ஒரு புதிய அமைப்பினை நிர்மாணிக்கும் மாபெரும் கடமையில் ஈடுபட்டுள்ளார், அவர். ஓவ்வொரு நிமிடமும் அவருக்குப் பொன்னானது. திடீரென்று அவர் அலுவலகத்திலிருந்து வெளியே தெருவிற்கு வந்து,கொட்டும் மழையில் நடனம் ஆடத் துவங்கினார். என்னவாயிற்று அவருக்கு? மகிழ்ச்சிக் களிப்பில் நடனம் ஆடியவர்,லெனின்! அவர் ஆட்டம் போட்ட நாள்,பாரிஸ் கம்யூன் எழுச்சி தினத்திற்கு அடுத்த நாள்.1871 ஆம் ஆண்டு நிகழ்ந்து, 72 நாட்கள் மட்டும் நீடித்த பாரிஸ் கம்யூன் ஆட்சியை விட ஒரு நாள் கூடுதலாக தனது சோவியத் ஆட்சி நீடித்த மகிழ்ச்சியில் தான் அவர் நடனமாடினார்! ​   சோவியத் ஆட்சி அமைந்தது,வெறும் நபர் அல்லது ஒரு கட்சியின் மாற்றம் அல்ல.அந்த ஆட்சி,பல ஆயிரம் ஆண்டு நீடித்து வந்த சமூக சமத்துவமின்மையை அதிரடியாக மாற்றும் முயற்சி. உழைக்கும் மக்களின் குடியரசை, அமைக்கும் வரலாற்றுப் பணி. சுற்றியுள்ள பல…

Read More
மார்க்சியம் 

விண்ணைத்தாண்டி வளரும் மார்க்சியம் -19 : கம்யூனிஸ்ட் கருதுகோள்

என்.குணசேகரன் கம்யூனிச எதிர்ப்பும், வெறுப்பும், இன்றளவும் நீடித்து வருகிற மேற்கத்திய உலகில், மார்க்சியத்தின் மகத்துவத்தை உயர்த்தி, உரக்கப் பேசி வரும், மார்க்சிய அறிஞர்  அலென் பதேயு. “கம்யூனிஸ்ட் கருதுகோள்” எனப்படும் அவரது முக்கிய கருத்தாக்கம் அதிக விவாதத்திற்கு உள்ளானது. 2008-ஆம் ஆண்டில், நியூ லெப்ட் ரிவியு இதழில் எழுதிய கட்டுரையில் இந்த கருத்தாக்கத்தினை அவர் முதலில்  வெளியிட்டார். பிறகு அதனை விரிவாக விளக்கி நூல்களும் கட்டுரைகளும் எழுதினார். அவர் சார்ந்த பிரெஞ்சு அறிவுலகத்தில் மட்டுமல்லாது, ஐரோப்பிய, அமெரிக்க அறிவுத்துறையினர் மத்தியிலும் இக்கருத்து மிகுந்த செல்வாக்குப் பெற்றுள்ளது. அவரது கருத்துக்கு மார்க்சிய எதிரிகளின் எதிர்ப்பு இயல்பானது. ஆனால், மார்க்சியர்கள் பலரும் கூட அவரது  கருத்தில் முரண்பட்டு, விவாதித்து வருகின்றனர். எனினும், இந்த விவாதத்தின் வெப்பம் அதிகரிக்க, அதிகரிக்க, மார்க்சியத்தின் மீதான  ஆர்வம் பல தரப்பினரிடமும் பரவலாக எழுந்துள்ளது. இந்த…

Read More
மார்க்சியம் 

விண்ணைத்தாண்டி வளரும் மார்க்சியம் – 18

பால் ஸ்வீசி: மார்க்சிய அறிவுஜீவிக்கான இலக்கணம் என். குணசேகரன் அறிவுத்துறை வளர்ச்சியை உயர்ந்த சிகரங்களை நோக்கிக் கொண்டு சென்ற பெருமை மார்க்சியத்திற்கே உரியது. தத்துவம், சமூகவியல், பொருளியல், வரலாற்றியல் அனைத்திலும் வளமிக்க சிந்தனைகள், மகத்துவமிக்க பங்களிப்புகள், எல்லையற்று விரிவடைந்து வரும் விவாதப்பரப்பு என மார்க்சியம் இடையறாது இயங்கி வருகின்றது. இவ்வாறு விண்ணைத்தாண்டி வளரச் செய்திடும் பணியை அறிவுத்துறையில் செயல்படும் அறிவாளர்களும், புரட்சி இலட்சியத்துடன் களப்பணி ஆற்றுவோரும் செய்து வருகின்றனர். இந்த வரிசையில் முக்கியமானவர் அமெரிக்க மார்க்சியரான பால் ஸ்வீசி. ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியர் பதவியையும், எதிர்கால வாய்ப்புக்களையும் உதறிவிட்டு, 1949ம் ஆண்டு மற்றொரு மார்க்சிய அறிஞரான லியொ ஹூயுபெர்மன் உடன் சேர்ந்து ‘மன்த்லி ரிவ்யூ’ துவங்கினார். தற்கால முதலாளித்துவத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் மார்க்சிய அடிப்படையில் ஆராய்ந்து அயராது எழுதி வந்தவர்  பால் ஸ்வீசி.  உலக முதலாளித்துவத்தின் குரலான…

Read More
மார்க்சியம் 

சீர்திருத்தம் பலனளிக்குமா?

என். குணசேகரன் இன்றைய ஆளும்வர்க்க முகாமைச் சார்ந்தவர்களும்,கார்ப்பரேட் ஊடகங்களில் உள்ள உயர்நடுத்தர வர்க்கம் சார்ந்தோர் பலரும் இடதுசாரி எதிர்ப்பைக் கண்ணும் கருத்துமாகச் செய்து வருகின்றனர். வேறுசிலர்,இடதுசாரிகள் மீது அனுதாபம் கொண்டவர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு இடதுசாரிகள் முன்னேற வேண்டுமெனில் இப்படியெல்லாம் இருக்க  வேண்டுமென்று  ஏராளமான  அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்குகின்றனர். இவர்களில்  பலர் அமைப்புரீதியாக, அமைப்புக்கோட்பாடுகள் கொண்டு செயல்படும் இடதுசாரி இயக்கங்கள் மீது அதிக ஆத்திரத்தை  வெளிப்படுத்துவார்கள். சோசலிச இலட்சியம் கொண்ட இடதுசாரிகள் இயக்கங்களின் வளர்ச்சி, தேக்கம்  பற்றிய பிரச்சனைகளை எப்படிப் புரிந்து கொள்வது? சரியான  புரிதல் ஏற்பட ரோசா லக்சம்பர்க் துணை நிற்கிறார். சோசலிசம் என்பது சிலரின் நல்லெண்ண நடவடிக்கைகளால் உருவாவது அல்ல; திறமையும் ஆற்றலும் கொண்ட, மிகக் “கவர்ச்சிகரமான” தலைவர்களால் உருவாக்கப்படுவதும் அல்ல. அதற்கு அறிவியல் அடிப்படை உள்ளது என்று கூறும் ரோசா, மூன்று முக்கிய…

Read More

புரட்சிப் பருந்து ரோசா லக்சம்பர்க்

என்.குணசேகரன் மார்க்சிற்குப் பிந்தைய தலைமுறை மார்க்சியர்களில் தலைசிறந்த பங்களிப்பைச் செய்தவர் ரோசா லக்சம்பர்க். மார்க்சிய தத்துவம், நடைமுறையை மேலும் வளர்த்திட்ட பெருமைமிகு வரலாறு  கொண்டவர் அவர். ஜெர்மனிக்கு மட்டுமல்ல, உலகப் புரட்சிக்கான போராளியாகத் திகழ்ந்தவர்,ரோசா. முதல் உலகப்போர்ச் சூழலில், போருக்கு எதிராகவும், மனித இனத்தின் மீது அழிவுப் போரைத் திணிக்கும் ஏகாதிபத்தியம் குறித்தும் அவர் பதிவு செய்துள்ள கருத்துக்கள் இன்றளவும் பொருந்துகின்றன. ஏகாதிபத்திய முறையையும், போரையும் எதிர்த்து  சோசலிசம் காணும்போது, இயக்கத்தில் எழும் சீர்திருத்தவாதம் எனும் நழுவல் போக்கை கடுமையாக எதிர்த்தவர் ரோசா.அதனையொட்டிய அவரது கருத்துக்கள் இன்றும் ஜீவனுள்ளதாகத் திகழ்கின்றன. இந்தியாவில் தேசிய சுயாட்சி ஏற்படுவதற்காக விடுதலைப் போராட்டம்  நடந்தது.  ஆனால், இன்றளவும் தேசிய இறையாண்மைக்கு வெளியிலிருந்தும், உள்ளுக்குள்ளிருந்தும் அச்சுறுத்தல் இருந்து வருகின்றது. தங்களது  மூலதன  நலன்களுக்காக உள்நாட்டு முதலாளித்துவம், ஏகாதிபத்தியத்துடன் கூடாநட்புக் கொள்கிறது. காங்கிரஸ், பாஜக…

Read More
மார்க்சியம் 

இடதுசாரிகளும், சமூக இயக்கங்களும்…

என்.குணசேகரன் மார்த்தா ஹர்நேக்கர், சிலி நாட்டில் 1970-1973 ஆம்-ஆண்டுகளில் நடந்த புரட்சி இயக்கங்களில் தீவிரமாகப் பங்கேற்றார். அதே போன்று கியூபப் புரட்சி அனுபவங்களையும் ஆழமாக ஆய்வு செய்து எழுதியுள்ளார். வெனிசுலாவின் புரட்சிகர மாற்றங்களில் நேரடிப் பங்களிப்பு செய்துள்ளார். இந்த தனது விரிந்த அனுபவப் பரப்பை அடிப்படையாகக் கொண்டு இடதுசாரி புரட்சிகர இயக்கங்கள், தற்காலத்திய சவால்களை எதிர்கொள்வதற்கான பல புதிய வியூகங்களை அவர் தனது நூல்களில் பதிவு செய்துள்ளார். அவற்றுள், முக்கியமானது சமூக இயக்கங்கள் பற்றிய அவரது சிந்தனை. உலகம் முழுவதும் அதிகரித்துவரும் சமூக இயக்கங்கள் குறித்து இடதுசாரி இயக்கங்களின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டுமென அவர் விளக்கியுள்ளார். மக்கள் நல நடவடிக்கைகள் பலவற்றைச் செய்து, முதலாளித்துவம் தனது இயல்பான மக்கள் விரோத முகத்தை மறைத்துக் கொள்ள முயற்சிக்கிறது.ஆனால், அதன் அன்றாட இயக்கம் மக்களை உளவியல், வாழ்வியல்ரீதியாக, அந்நியப்படுத்தி…

Read More

இடதுசாரி அரசியல் பணி எனப்படுவது

இடதுசாரிகளில் அதிதீவிரமாக இருப்பவர்கள் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் அரசியல் வேலை என்ற கருத்தைக் கொண்டிருகின்றனர். மாறாக சீர்திருத்தவாதிகளாக இருக்கும் இடதுசாரிகள் பலர், அரசாங்க நிர்வாகத்தில் தலையிடுவதே பிரதான அரசியல் நடைமுறையாகக் கருதுகின்றனர்.வேடிக்கை என்னவென்றால், இந்த இரண்டு பிரிவினரும் இடதுசாரி இலட்சிய அமலாக்கத்தின் முக்கிய கதாநாயகர்களான மக்களை மறந்து விடுகின்றனர் !

Read More

இடதுசாரி அரசியல் கலை!

வரலாற்றில் சோசலிச இயக்கங்களுக்கு வளர்ச்சியும் உண்டு; வீழ்ச்சியும் உண்டு.ஆனால், வீழ்ச்சிகள் என்றுமே நிரந்தரமாக இருந்ததில்லை. பாரீசில் முதலாவது தொழிலாளிவர்க்க அரசு 72 நாட்கள் இருந்தது. அது மிகவும் குரூரமாக முதலாளிகளால் நசுக்கப்பட்ட பிறகு, “சோசலிசம்”, “தொழிலாளி வர்க்க அரசு” என்பதெல்லாம் சாத்தியமில்லை என்ற கருத்து, பேயாட்டம் போட்டது.ஆனால் 30 ஆண்டுகளுக்குப் பிறகு “யுகப்புரட்சி”யாக ரஷியப் புரட்சி எழுந்து மனிதகுல வரலாற்றைப் புரட்டிப்போட்டது.

Read More