You are here
நூல் அறிமுகம் 

மிக மிக பிற்படுத்தப்பட்டோருக்கான குரல்!!

சாதி – அரசியல் அதிகாரம் நூலை முன்வைத்து ஓர் விவாதம் அ.பகத்சிங்     சாதியம்குறித்த விவாதங்கள் பல்வேறு தளங்களில் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. சாதியின் தோற்றம், வரலாறு குறித்து அறுதியிட்ட பொது ஆய்வு முடிவுகள் ஏதும் எட்டப்படாத சூழலில்தான் சாதியத்திற்கு எதிரான கருத்தியல்களும், கள செயல்பாடுகளும் பல்வேறு சித்தாந்த பின்புலத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுகிறது. சாதி ஒழிப்பு என்ற நெடிய இலக்கை அடைவதற்கு முன்னால் சாதியத்தால் வீழ்ச்சியுற்ற பல்வேறு சமூகப் பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, அவர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவும், மேம்பாட்டிற்காகவும் பலவேறு கருத்தியல்களும், போராட்டவடிவங்களும் முன்வைக்கப்படுகிறது. ஒடுக்குமுறைக்கு உட்பட்ட பல்வேறு சாதிய சமூகங்களின் மேம்பாட்டிற்கான கருத்தியலை முன்வைத்து பல நூல்கள் தமிழில் வெளிவந்துள்ளன. அவ்வகையில் தமிழகத்தில் சமூக-பொருளாதார-அரசியல் ரீதியில் பின்னடைவில் உள்ள சில சாதிகளை முன்வைத்து எழுத்தாளர் கௌதம சித்தார்த்தன் எழுதியுள்ள நூல் ”சாதி- அரசியல், அதிகாரம்”. இந்நூல் முன்வைக்கும்…

Read More
நூல் அறிமுகம் 

யஹன்ரிட்டா லேக்ஸ்

இரா . விஜயகுமார் உலகில்  வாழும்  அனைவரும்  யஹன்ரிட்டா லேக்ஸ் எனும் அமெரிக்க கருப்பினப்  பெண்ணிற்கு கடமைப்பட்டவர்கள்,    மனிதர்கள் மட்டுமல்ல, நவீன மருத்துவ விஞ்ஞானமும் கடமைப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டும்  நூல். போலியோவற்ற  உலகை இன்று  உருவாக்குவதற்கு  யஹன்ரிட்டாவின் செல்கள்  மூலம்   நடந்த   ஆராய்ச்சியின்  விளைவு, அதற்கான  மருந்து கண்டுபிடிக்கப்பட்டு அவை  சில தொண்டு நிறுவனங்களின் சாதனையாக   முன்னிறுத்தப்படுகிறது, மறந்து கூட யஹன்ரிட்டா லேக்சின்  பெயர் வெளிவந்ததில்லை. அமெரிக்க  கருப்பினத்தில் ஒரு ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்த  யஹன்ரிட்டா  சிறு வயதிலேயே தனது தந்தையால்    உறவினர் வீட்டில் வசதியின்றி    புகையிலைத் தோட்டத்தில்  கடுமையான  வேலைகளில்   ஈடுபடுத்தப்பட்டார், தனது 30 வயதில்  5 குழந்தைகளைப் பெற்றபின் கருப்பைவாய்  புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அக்டோபர் 4, 1951ல்    இறக்கும் வரை  அவளின் வாழ்வையும்,   அவளிடமிருந்து  அவளின் அனுமதி இன்றி  எடுக்கப்பட்ட செல்கள் மூலம்  நவீன  அறிவியல்…

Read More
நூல் அறிமுகம் 

தொடரும் நெய்தல் நிலத்துயரங்கள்

சித்தார்த்தன் சுந்தரம் “மீனவர்கள் பேராசைக்காரர்கள்’ அவர்களை நாகரிகப்படுத்த முடியாது” “தேசிய நீரோட்டத்தில் அவர்கள் இணைய விரும்புவதில்லை  ‘நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு முட்டுக் கட்டைப் போடுகிறார்கள்” இவை போன்று கடற்கரை சமூகத்துக்கு எதிராக ஏராளமான பரப்புரைகள் தினமும் வந்து கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம் யார்? ஆட்சியாளர்களும், அரசு அதிகாரிகளும் தான். அதிகார வர்க்கமும், அதிகார வர்க்கத்தின் அடிவருடிகளாக இருப்பவர்களும் (பெரு முதலாளிகள்) முன்னேற்றம், அபிவிருத்தி என்கிற பெயரில் இயற்கை வளங்களையும் அவற்றை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வரும் மக்களைத் தங்களின் ஆதாயத்துக்காகச் சுரண்டி வருவதையும், அதை எதிர்த்து சமூக ஆர்வலர் குழுக்கள் போராட்டம் நடத்தி வருவதையும் நாம்  அன்றாடம் பத்திரிகைச் செய்தியாகப் பார்த்து வருகிறோம். 2004 ஆம் ஆண்டு சுனாமி தமிழகத்தின் கடற்கரைகளைத் தாக்கி பலரின்     உயிரைக் காவு வாங்கியதுடன், ஆயிரக்கணக்கான கடற்கரையோர மக்களின் வாழ்க்கையையும் நிலை குலையச்…

Read More
நூல் அறிமுகம் 

உலகப் புத்தக தினம் வாசகர் பார்வைக்கு மேலும் சில புத்தகங்கள்

 தொகுப்பு: விசித்ரன் கருத்து சுதந்திரத்தின் அரசியல் கௌதம சித்தார்த்தன் /  எதிர் வெளியீடு, பொள்ளாச்சி ரூ.130 | பக்.136. கருத்து சுதந்திரத்தின் அரசியல் என்னும் கௌதம சித்தார்த்தனின் இந்நூலில் தமிழ் எழுத்துரு மாற்றத்தின் அரசியல், நோபல் விருதின் அரசியல், ஈமச்சடங்குகளின் அரசியல், தடைசெய்யப்பட்ட நூல்களின் அரசியல், நாட்டுடமையாக்கப்பட்ட நூல்களின் அரசியல் போன்ற முக்கியமான 11 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.  தம்மபதம் புத்தர் தமிழில் | யாழன் ஆதி /  எதிர் வெளியீடு, பொள்ளாச்சி ரூ.130 | பக்.154. தம்மபதம் புத்தரின் போதனைகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. திரிபீடகங்களாகத் தொகுக்கப்பட்ட புத்தரின் போதனைகளில் தம்மபதம் சுத்தபீடகத்தில் குந்தக நிகாயத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. நாற்பத்தைந்து ஆண்டுகாலம் தன் பணியைச் செய்த பின்னர், நீங்கள் செய்வனவற்றை முழு ஈடுபாட்டோடு செய்யுங்கள் என்று கூறினார். அப்படிப்பட்ட ஈடுபாட்டோடு செய்த செயல்தான் இந்நூல். ஓசூர் எனப்படுவது…

Read More

குட்டிச்சுவர் கலைஞன் ஒருவனல்ல 13 பேர்…

க.வை.பழனிசாமி ஒரு படைப்பாளியின் அனுபவம் சும்மா இருப்பதில்லை. மனதை சதா கீறி உழுது சுயமான விதைகளைத் தூவித்தூவி புதுப்புது விளைச்சல்களைக் கண்டுகொண்டே இருக்கிறது. பயிர்களைக் கண்டு பரவசம்கொள்ளும் மனம் மேலுமான விளைச்சல்களை நோக்கி நகர்கிறது. அனுபவம்… அனுபவம் கிளர்த்தும் எண்ணம்…. எண்ணம் கூட்டிச்சென்று காட்டும் கண்படாத இடங்கள். இந்த இடமிருந்து எழுதுகிறவர்கள் அரிதினும் அரிது. இப்படியான அரிதான எழுத்தில் தொடர்ந்து பயணிக்கும் படைப்பாளி கீரனூர் ஜாகிர்ராஜா. ஜாகிர்ராஜா தனது எழுத்தை ‘ஜின்னாவின் டைரி’ நாவலில் கொண்டாடி மகிழ்ந்திருப்பார். பகடியும் விமர்சனமும் கலந்த கொண்டாட்டமாக வாசகனைக் கவர்ந்த நாவல் அது. இப்போது “குட்டிச்சுவர் கலைஞன்” அதேவேகத்தில் வெளிவந்திருக்கிறது. இந்த இரண்டு நாவல்களிலும் புனைவின் பேரழகை நாட்டிய அழகில் அதிரவிடுகிறார். எப்படி இப்படியொரு பாய்ச்சல்? கோள்களில் கால் பதிக்கும் பெரு நகர்தல் என்று வியக்கிறோம். தெருவில் குழந்தைகள் குதித்து கும்மாளமிட்டு…

Read More

சென்னை புத்தகக்காட்சி புதிய வெளியீடுகள்

பாரதி புத்தகாலயம் இயக்கவியல் பொருள் முதல் வாதம்                                                                                                                 மாரிஸ் கான்போர்த் தமிழில்: மிலிட்டரி பொன்னுசாமி. செல்வச் செழிப்பும் மக்கள் நல ஒழிப்பும் – பேராசிரியர் சி.டி.குரியன் | தமிழில்: ச.சுப்பாராவ் மார்க்சிய இலக்கிய விமர்சனம் –  டெரி ஈகிள்டன் தமிழில் அ.குமரேசன் கலையின் அவசியம் – எர்ணஸ்ட் ஃபிஷர் தமிழில் மிலிட்டரி பொன்னுசாமி அறுந்துபோன ரத்த நாளங்கள் – எடுவர்டோ காலியானோ தமிழில். எம்.ஆனந்தராஜ் தமிழர் வளர்த்த தத்துவங்கள் –  தேவ. பேரின்பன். பாட்டியின் குரல்வளையைக் காப்பாற்றி வைத்திருக்கிறேன். கோணங்கி நேர்காணல் | சந்திப்பு: கீரனூர் ஜாகிர்ராஜா மதினிமார்கள் கதை | கோணங்கி கொல்லனின் ஆறு பெண்மக்கள் | கோணங்கி சித்தார்த்தன் | ஹெர்மன்ஹெஸ்ஸே மலாலா: கரும்பலகை யுத்தம் | இரா. நடராசன் ஜிகாதி: பதுங்கு குழியில் மறைந்திருக்கும் ஒரு சொல் – ஹெச்.ஜி.ரசூல்   NCBH…

Read More
நூல் அறிமுகம் 

கரும்பலகை

ச. மதுசுதன் சாமானியர்களின் வாழ்வைத் தீர்மானிக்கும் இயங்கு விசையாய் விளங்கும் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கும் இன்னபிற தேவைகளுக்கும் கிடைத்த வேலைக்கு தங்களைப் பொருத்திக்கொள்ளும் அநேகமானோரின் வாழ்வியல் பலப்பலவான பிரச்சனைகள் வந்து போய்க் கொண்டிருந்தாலும் அதுவெல்லாம் பெரிதாய் பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. அலைச்சலும் ஓய்வுமில்லாமல் பணியாற்றும் சூழல் சமகால நிதிமூலதன ஆதிக்கத்தில் சுழன்றுகொண்டிருக்கும் நம் அனைவரது வாழ்வும் நம் விருப்பம் போலல்லாமல் அகப்பட்ட நீரோட்டத்தினூடே நாமும் மௌனக் குவியலாய் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்கிற எதார்த்தம் எத்தனை உன்மையானதோ அதே அளவு குறைவிலாத பிரச்சனைகளைக் கொண்டது  அரசு வேலை என்கிற மாயபிம்பம். வருத்தப்பட்டு பாரம் சுமந்தும் இன்னல்களை வெளியே சொல்லமுடியாத சூழலில் அரசு வேலை என்கிற வெற்று  கவுரவத்திற்க்காக அலைக்கழிப்புகளை உள்ளுக்குள் புதைத்துக்கொண்டு போலித்தனமான புன்னகையோடு திரியும் பலபேரை அன்றாடம் நாம் கடந்து கொண்டுதானிருக்கிறோம் அத்தகையதொரு பெண்ணான ராஜலட்சுமியின் வாழ்வையும்…

Read More
நூல் அறிமுகம் 

வாசகனைச் சுயவிமர்சனத்திற்குத் தூண்டும் ஜாகிரின் சுயவிமர்சனம்

போப்பு தன்னைத் தானே மறுபரிசீலனை செய்து பார்ப்பது, அதன் வாயிலாகத் தான் செய்த தவறுகளைத் திருத்திக் கொள்வது, ஒருவனுடைய ஆளுமை வளர்ச்சிக்கு முக்கியமான பங்காகும். இந்த அற்புதமான பண்பை தன் ஊழியர்களுக்குப் பயிற்றுவிக்கின்றன உலகளாவிய மார்க்சிய இயங்கங்கள். தான் இயக்கத்தில் கற்ற சுய விமர்சனப் பண்பினை இந்நூலின் வாயிலாகத் தான் பிறந்த சமூகத்திற்குப் பொருத்தி வைத்துப் பேசுகிறார் கீரனூர் ஜாகிர்ராஜா. இந்த சுயவிமர்சனப் பண்பை கார்ப்பரேட்டுகளும் பின்பற்றுகின்றனர். தங்களது மூலதனப் பெருக்கத்திற்கு. கிருத்துவம் முன்வைக்கும் பாவமன்னிப்புக் கோருதலும் இத்தகையதே என்றாலும், இந்த ஒப்புக் கொடுத்தலானது தவறிழைத்தவன் தன் மன அழுத்தத்தை நீக்கி மீண்டும் தவறிழைப்பதற்கான விடுதலையுணர்வையே அளிக்கிறது. மார்க்சிய இயக்கங்கள் மட்டுமே முன்னோக்கிச் செல்வதற்குரிய ஆளுமையை வளர்த்தெடுக்கிறது. காலப் புறச்சூழலால் ஒரு மார்க்சிய ஊழியர் இயக்கத்தை விட்டுச் சென்ற பின்னும் தான் அங்கிருந்து கற்ற அல்லது தன்னில்…

Read More
நூல் அறிமுகம் 

எழுதப்படாதவர்களின் வரலாறு

சோளகர் வாழ்வும் பண்பாடும் நூலை முன்வைத்து ச. லெனின் விளிம்பு நிலை மக்கள் குறித்த எழுத்துக்கள் மிகுந்த போராட்டத்திற்கிடையே அதிகமாக வெளிவந்து கொண்டிருக்கும் காலம் இது. இது வரை புறக்கணிக்கப்பட்டு, எழுதப்படாதவர்களின் வரலாற்றை, வாழ்க்கையை எழுதுவதே விளிம்பு நிலை மக்கள் சார்ந்த எழுத்தாகும். அப்படி எழுதப்படாத, பலரின் சிறுகவனத்தில் கூட இல்லாத சோளகர் பழங்குடி மக்களைப் பற்றிய நூல் தான் பகத்சிங்கின் சோளகர் வாழ்வும் பண்பாடும். தமிழகத்தின் மக்கள் தொகையில் பழங்குடியின மக்களின் எண்ணிக்கை ஒரே ஒரு சதம்தான். பழங்குடியின மக்கள் தொகையிலேயே சோளகர்கள் வெறும் ஒரு சதம்தான். இப்படி மிகச்சிறிய எண்ணிக்கையிலான ஒரு பழங்குடியின மக்களின் வாழ்வு குறித்த இந்நூல் வரவேற்கதக்கது. இன்னும் தமிழகத்தில் உள்ள மற்ற 35 பழங்குடி மக்கள் குறித்தும், பழங்குடிகளாக வாழ்ந்தும் பழங்குடிப் பட்டியலில் அரசால் சேர்க்கப்படாத இனங்கள் குறித்தும் பல…

Read More