படித்ததில் பிடித்தது 50:50

ஆயிஷா இரா. நடராசன் 1. சிறகை விரிக்கும் மங்கள்யான்   (கையருகே செவ்வாய்) மயில்சாமி அண்ணாதுரை | தினத்தந்தி பிரசுரம் ராக்கெட் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் தமிழ் எழுத்து நடை ஆச்சரியம் அளிக்கும் ஒன்று. 2013 ல் மங்கள்யான் விண்கலம் நம் மண்ணிலிருந்து புறப்பட்டதிலிருந்து நடக்கும் தொடர் அறிவியல் பயண நுணுக்கங்களை எல்லாருக்கும் புரியும்படி எழுதுவது அவ்வளவு சுலபமல்ல. ஒரு பாப்புலர் அறிவியல் நூலை நம் ராக்கெட் விஞ்ஞானிகளால் எழுதமுடியுமா? தமிழ்வழி கல்விகற்றதால் அது நம் அண்ணாச்சிக்கு கைவந்திருக்கிறது. எரிபொருளை சேதம் செய்யாமல் சிக்கனச் செயல்பாடுகளால் விண்கலம் வெற்றியடைந்ததை விளக்கும் இடமும் செவ்வாய் கிரஹம் குறித்த பல தகவல்கலும் அவற்றை நம் மண்ணோடு ஒப்பிட்டுப் பேசுவதும் நூலின் வெற்றிப்பக்கங்கள். 2. கம்பவனத்தில் ஓர் உலா   சாலமன் பாப்பையா | கவிதா பப்ளிகேஷன் சாலமன் பாப்பையா தன்னோடு பட்டிமன்றம் பேசும்…

Read More