கதைகூறும் பொற்சித்திரங்கள்

கமலாலயன் குழந்தைகளின் மீதும், குழந்தைகளுக்கான இலக்கியப் படைப்புகளின் மீதும் மக்களின் கவனம் சற்றே அதிகரித்து வரும் காலம் இது. படைப்பாளிகளின் பார்வைகளும் குழந்தை இலக்கியங்களின் பால் பதியத் தொடங்கியிருக்கின்றன. தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர்களுள் ஒருவரான உதயசங்கரின் பங்களிப்பு, சமீபகாலமாகத் தமிழ்க் குழந்தையிலக்கியப் பிரிவிற்கு வளம் சேர்ப்பதாக அமைந்துள்ளது. ‘கேளு பாப்பா கேளு’ குழந்தைப் பாடல் தொகுப்பிலிருந்து, மலையாள மொழியிலிருந்து சிறார் இலக்கியக் கதைகளின் மொழியாக்கத் தொகுதிகள் வரை _ கணிசமான புத்தகங்கள் உதயசங்கரால் தமிழுக்கு வந்து சேர்ந்திருக்கின்றன. கேரள மண்ணின் வளங்களுள், குறிப்பிடத்தக்க வளமென யாவரும் அறிந்தது இலக்கியம். குழந்தை இலக்கிய முயற்சிகளைப் பொறுத்தவரை, நிச்சயம் மலையாள மொழிப் படைப்பாளிகளிடமிருந்து தமிழ் எழுத்தாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உண்டென்றே தோன்றுகிறது. கேரள மாநில குழந்தைகள் இலக்கியக் கழகம் மலையாள மொழியில் வெளியிட்ட 14 கதை நூல்களுடன்,…

Read More