You are here
நூல் அறிமுகம் 

ஜாதியற்றவளின் குரல்

 பாரதி செல்வா நேர்மையான சிந்தனை இங்கு மாற்று சிந்தனையாகிவிட்டது. அநீதியை எதிர்ப்பவர்களை மாற்று சிந்தனையாளரென அழைக்கிறோம். சமூகத்தின் பிரச்சனையைப் பேசுபவை இங்கே மாற்று ஊடகங்களாகி விட்டன. அப்படியெனில், இந்த பெரும்பான்மைச் சமூகமும் அதன் அரசியலும் பொருளாதாரமும், பொழுதுபோக்கும் வாழ்வியலும் நம்பிக்கையும் எத்தனை நேர்மையற்றதாக, பாகுபாடுகளைக் கொண்டாடுபவையாக இருக்கிறதென பாருங்கள். நீதியும் நேர்மையும் இங்கு மாற்றுச் சிந்தனையெனில் இந்த சமூகத்தின் நேரான சிந்தனை அநீதியும் நேர்மையின்மையும் தானே?” இப்புத்தகத்தின் முன் அட்டையில் முதல் பத்தி நேர்மையான சிந்தனை மாற்றுச் சிந்தனையாக பார்க்கப்படும் சமூக சூழலை விளக்கும், வலுவான வரிகளுடன் தன் பார்வையைப் பதிவு செய்கிறார் ஆசிரியர்.  சாதி இந்திய சமூகத்தின் மனித மூளைகளை ஒன்றிணைக்கவிடாமல் அணு அணுவாய் கூறுப்போட்டு வைக்கும் இழி சொல். இந்துத்துவத்தின் ஆணி வேரான வர்ணசிர்ம (அ) தர்மத்தின் அடிப்படையில் உருப்பெற்ற சாதியப் படிநிலை தன்…

Read More
தூரத்து புனையுலகம் 

தூரத்துப் புனைவுலகம் – 16 சாம்பல் படிந்த துயரப் பொழுதுகள்

ம. மணிமாறன் ரத்தம் கசிகிற வரலாற்றுப் பக்கங்களை எழுதிச் சென்றபடியே இருக்கிறது மத அடிப்படைவாதம். அன்பு, கருணை, நல்வழி என பசப்பிக் கொண்டு கச்சிதமாக நாம், பிறர் என்கிற பேதத்தை நீடித்திருக்கச் செய்வதில் வெற்றியும் பெற்றுக் கொண்டேயிருக்கிறது. தன்னையும், தான் சார்ந்த மதப் பற்றாளர்களையும் தவிர மற்றவரெல்லாம் அழித்தொழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் உறுதியாகவும் இருந்து வருகிறது. இந்த மனநிலையை வைரஸ் கிருமியாகப் பரப்பி வெற்றிகொள்ளவும் அரசதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான துருப்புச் சீட்டாக மதத்தைப் பயன்படுத்துவதிலும் தொடர்ந்து விதவிதமான திட்டமிடல்களை நிகழ்த்திக் கொண்டே வருகிறது. நம்முடைய காலத்தின் கண்ணீர்த் துளிகளாக வரலாறு முழுக்க நிறைந்திருப்பது மத அடிப்படைவாதம் நிகழ்த்திய யுத்தங்களே. மனித குல அழிவினை நிகழ்த்திடத் துடித்தலையும் மத அடிப்படை வாதம் நிகழ்த்திய ஆறாத வடுவாக இந்தியத் துணைக் கண்டத்தின் பக்கத்தில் “டிசம்பர் 6” எனும் கருப்புநாள் எழுதப்பட்டு விட்டது…

Read More
நூல் அறிமுகம் 

வாசகனைச் சுயவிமர்சனத்திற்குத் தூண்டும் ஜாகிரின் சுயவிமர்சனம்

போப்பு தன்னைத் தானே மறுபரிசீலனை செய்து பார்ப்பது, அதன் வாயிலாகத் தான் செய்த தவறுகளைத் திருத்திக் கொள்வது, ஒருவனுடைய ஆளுமை வளர்ச்சிக்கு முக்கியமான பங்காகும். இந்த அற்புதமான பண்பை தன் ஊழியர்களுக்குப் பயிற்றுவிக்கின்றன உலகளாவிய மார்க்சிய இயங்கங்கள். தான் இயக்கத்தில் கற்ற சுய விமர்சனப் பண்பினை இந்நூலின் வாயிலாகத் தான் பிறந்த சமூகத்திற்குப் பொருத்தி வைத்துப் பேசுகிறார் கீரனூர் ஜாகிர்ராஜா. இந்த சுயவிமர்சனப் பண்பை கார்ப்பரேட்டுகளும் பின்பற்றுகின்றனர். தங்களது மூலதனப் பெருக்கத்திற்கு. கிருத்துவம் முன்வைக்கும் பாவமன்னிப்புக் கோருதலும் இத்தகையதே என்றாலும், இந்த ஒப்புக் கொடுத்தலானது தவறிழைத்தவன் தன் மன அழுத்தத்தை நீக்கி மீண்டும் தவறிழைப்பதற்கான விடுதலையுணர்வையே அளிக்கிறது. மார்க்சிய இயக்கங்கள் மட்டுமே முன்னோக்கிச் செல்வதற்குரிய ஆளுமையை வளர்த்தெடுக்கிறது. காலப் புறச்சூழலால் ஒரு மார்க்சிய ஊழியர் இயக்கத்தை விட்டுச் சென்ற பின்னும் தான் அங்கிருந்து கற்ற அல்லது தன்னில்…

Read More
நூல் அறிமுகம் 

இஸ்லாம் உலகில் நடந்தது… – நடப்பது… – நடக்கவேண்டியது ……

சு.பொ. அகத்தியலிங்கம் இந்தப் புத்தகத்தில் இஸ்லாமிய உலகம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஒரே மாதிரியாக இருந்ததில்லை என்பதை விளக்க முயன்றுள்ளேன்” என முன்னுரையில் அல்ல 407 வது பக்கத்தில் நூலோட்டத்தில் நூலாசிரியர் கூறியுள்ள வரிகள் முற்றிலும் சரியானது. “நான் இஸ்லாம் குறித்தும் அதன் மூலம் அதன் வரலாறு, அதன் கலாச்சாரம் , அதன் செல்வங்கள், அதன் பிரிவுகள் குறித்து எழுத விரும்புகிறேன். அது ஏன் சீர்திருத்தத்துக்கு உள்ளாகவில்லை ? அது ஏன் இவ்வளவு பேரச்சத்திற்கு ஆட்பட்டுள்ளது? குரானை அர்த் தப்படுத்தல் மத அறிஞர்களின் அதிகாரமாக இருக்க வேண்டுமா ? இன்று இஸ்லாமிய அரசியல் எதனைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது? இஸ்லாமிய உலகில் இந்தச் சூழல் மேலெழுவதற்கு இட்டுச்சென்ற நடைமுறைகள் யாவை ? இந்தப் போக்கை பின்னிழுக்கவோ மீறிச் செல்லவோ இயலுமா ? சில விஷயங்கள் இஸ்லாமிய உலகிற்குள்ளும் வெளியிலும் விவாதத்தை…

Read More