You are here

சிறந்த 10 நூல்களுக்குப் பரிசு

தமிழ் நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமத்தின் சார்பில் சென்னை பொங்கல் புத்தகத் திருவிழா ஜனவரி 13 முதல் 24 வரை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு கவிதை, நாவல் சிறுகதை, வரலாறு, கல்வி, சுற்றுச்சூழல் கட்டுரை, மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம், பெண்ணியம் என 10 தலைப்புகளில் 2014 – 2015 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த சிறந்த நூல்களுக்கு பரிசு வழங்குவதென முடிவு செய்யப்பட்டது. நூல்கனளத் தேர்வு செய்ய எஸ். ராமகிருஷ்ணன். ச.தமிழ்செல்வன், பா.திருமாவேலன் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு பரிசுக்காக தேர்வு செய்த நூல்கள். 1. சிறந்த கவிதை நூல் அந்நிய நிலத்தின் பெண் – மனுஷ்யபுத்திரன் உயிர்மை பதிப்பகம் அடந்த கானகம் ஒன்றின் எண்ணற்ற வாசனைகளாலும் ஓசைகளாலும் நிரம்பியவை மனுஷ்யபுத்திரனின் கவிதைகள். பெருமூச்சுகளின் மெளனப் புயல்கள், எங்கோ…

Read More
ஒரு புத்தகம் பத்து கேள்விகள் 

சுருக்கெழுத்து வருவதற்கு முன்பே சுருக்குத்தமிழ் பேசியவர்கள் எமது வடமாவட்ட மக்கள்

– கவிப்பித்தன் வட்டார வழக்குகளில் வெளிவரும் படைப்புகள் தமிழ் இலக்கிய வெளியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் சூழலில், இன்னும் உரிய அடையாளம் பெறாத வடமாவட்ட வழக்காற்றில் களம் அமைத்து தொடர்ந்து படைப்புகளை அளித்துவரும் வெகு சிலரில் கவிப்பித்தனும் ஒருவர். தன் ”இடுக்கி“ சிறுகதைத் தொகுப்பின் மூலம் பயணத்தை துவங்கிய கவிப்பித்தன், பின் ”ஊர்ப்பிடாரி”, ”பிணங்களின் கதை” (2014) என்று தொடர்ந்து பயணித்து, சமீபத்தில் “நீவாநதி” நாவலின் மூலம் புதிய தடத்தை அடைந்துள்ளார். வேலூர் மாவட்டத்தின் வாலாஜாவைப் பூர்வீகமாக கொண்ட கவிப்பித்தன் முதலில் பத்திரிக்கையாளராகப் பணியாற்றி, தற்போது அரசு வணிகவரித்துறையில் பணிபுரிந்துவருகிறார். பள்ளிப்பருவ பொது இலக்கிய ஆர்வம், முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தொடர்பு, களப்பணி, அதனூடாக சிறுபத்திரிகை மற்றும் எதார்த்த இலக்கிய வாசிப்பு எனத் தன் இலக்கிய அனுபவங்களை வளர்த்துக்கொண்டவர். தொண்ட வரண்ட தொண்டை மண்டலத்தின் மண்ணும் மனிதர்களுமே…

Read More
நேர்காணல் 

கலைஞனை நம்புவதும் கலைஞனை நோக்கி நகர்வதும்தான் மனிதகுல மீட்சிக்கான ஒரே வழி…

கோணங்கி சந்திப்பு: கீரனூர் ஜாகிர்ராஜா  தமிழ் நவீன இலக்கியத்தின் தனித்துவம் மிக்க படைப்பாளி கோணங்கி. கரிசல் வட்டாரத்தில் நென்மேனி மேட்டுப்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்த கோணங்கியின் இயற்பெயர் இளங்கோ. இவருடைய தாய்வழிப் பாட்டனார் மதுரகவி பாஸ்கரதாஸ். அப்பா சண்முகம், அண்ணன் ச.தமிழ்ச்செல்வன் ஆகியோர் எழுத்தாளர்கள். தம்பி முருகபூபதி தமிழின் முக்கியமான நாடகக் கலைஞன். 1980களில் ஒரு இடதுசாரி எழுத்துக் கலைஞனாக  அறிமுகமான கோணங்கி,  மதினிமார்கள் கதை, கொல்லனின் ஆறு பெண்மக்கள் ஆகிய இரண்டு  சிறுகதைத் தொகுப்புகளின் மூலமாக இலக்கியப் பரப்பில் வலுவாகக் காலூன்றியவர். 1988ல் வேலையை உதறிவிட்டு கல்வராயன் மலையிலிருந்து Ôகல்குதிரை’ என்னும் சிறுபத்திரிகையைத் தொடங்கியதன் மூலம் தமிழ்ச்சூழலில் குறிப்பிடத்தக்க அசைவுகளை உருவாக்கினார். Ôகல்குதிரை’ இதழ் மூலமாக தாஸ்தயேவ்ஸ்கி சிறப்பிதழ், மார்க்வெஸ் சிறப்பிதழ், உலக சிறுகதைச் சிறப்பிதழ் போன்றவை வெளிவந்து தமிழ் வாசகப்பரப்பின் எல்லைகளை விரிவடைய வைத்தன….

Read More
மீண்டெழும் மறுவாசிப்புகள் 

மீண்டெழும் மறுவாசிப்புகள் – 1: அதிகரிக்கும் ஆங்கில மறுவாசிப்பு நூல்கள்

ச.சுப்பாராவ் ஆதிக்க​தைக​ளை இப்படி நடந்திருக்கு​மோ, இப்படி நடந்திருக்கலா​மோ, இது ம​றைக்கப்பட்டு விட்ட​தோ என்று ஒவ்​வொரு ப​டைப்பாளியும் ​​யோசித்து, ​யோசித்து ​வேறு​வேறு வடிவங்களில் எழுதிப்பார்ப்ப​தை மறுவாசிப்பு என்கி​றோம். மறுகூறல் என்பதுதான் சரியான ​சொல் என்றாலும்கூட மறு வாசிப்பு என்ற ​பெயர் நி​லைத்துப் ​போனதால் நாமும் அ​தை​யே பயன்படுத்தலாம். இந்தியாவில் மிகமிக அதிகமான அளவிற்கு மறுவாசிப்பிற்கு உள்ளான  ஆதிக்க​தைகள்  ராமாயணமும், மகாபாரதமும் என்று தனியாகச் ​சொல்ல ​வேண்டியதில்​லை. இ​வை எழுதப்பட்ட காலத்தி​லே​யே மறுவாசிப்பிற்கு உள்ளான​வை. காரணம், சமஸ்கிருதத்திற்கு எழுத்து வடிவம் இல்லாமல் பல்லாண்டு காலங்கள் வாய்வழியாக​வே இ​வை பரவிய​போது, ​சொல்பவர் சரக்குகளும் இயல்பாக ​சேர்க்கப் பட்டிருக்கும். கிட்டத்தட்ட 10-12 நூற்றாண்டுகளுக்குப் பின் நாட்டில் பக்தி இயக்கம் ​வேகம் ​பெற்று, இக்க​தை மாந்தர்களுக்கு ​தெய்வாம்சம் ஏற்றப்பட்டு, பல ​மொழிகளிலும் இ​வை ​மொழியாக்கம் ​செய்யப்பட்ட​போது, நடந்ததும் மறுவாசிப்புதான்.  எனினும், அச்சுப் புத்தகம் பரவலாகி,…

Read More
கடந்து சென்ற காற்று மற்றவை 

இலட்சியங்கள் கனவுகள் மயக்கங்கள்

ஒரு இதழில் கட்டுரை எழுதுவதற்காக எழுத்தாளர் அமரர் நா.பார்த்தசாரதியின் குறிஞ்சி மலர் நாவலை சமீபத்தில் மீண்டும் ஒருமுறை வாசிக்க நேர்ந்தது. அல்லது வாய்த்தது.அந்த வாசிப்பு அனுபவம் பகிர்ந்துகொள்ளத் தக்கது . அதற்கு முன்னதாக, என்னுடைய சிறிய முன்னுரை ஒன்று உள்ளது. நான் குறிஞ்சி மலரை முதன் முதலாக வாசித்தது 1972இல். கோவில்பட்டி ஜி.வி.என்.கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருந்தேன். முதலில் நா.பா.வின் பொன்விலங்கு வாசித்தேன்.அதன் இயல்பான அடுத்த கட்டமாக குறிஞ்சி மலரைக் கையில் எடுத்தேன். இவ்விரு நாவல்களும் என் வாழ்க்கையில்  திருப்புமுனையை ஏற்படுத்திய நாவல்கள் என்பேன். பொன்விலங்கில் வரும் சத்தியமூர்த்தியையும் குறிஞ்சி மலரின் நாயகன்  அரவிந்தனையும் அப்போது நான் கதாபாத்திரங்களாக உணரவில்லை. கதையில் இருந்த அவர்களின்  ‘பூமிக்கு வந்த அசல் வடிவமாக’ என்னையே நான் உணர்ந்தேன். உண்மை, நேர்மை, சத்தியம், லட்சியம், இலக்கியம் என்று தலையை நிமிர்த்திக்கொண்டு அரவிந்தன் அன்று…

Read More
கட்டுரை 

தேவ பேரின்பன்: வீண் பெருமை பேசாத அறிவியல்பூர்வ ஆய்வாளர்

செப்டம்பர் 17, 2014 தேவ.பேரின்பனின் முதலாம்  ஆண்டு நினைவு நாள். காலம் எவ்வளவு வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அவரது நினைவுகள் நமது மனக் கண் முன் இன்னமும் பசுமையாகவே தோற்றமளித்துக் கொண்டிருக்கின்றன. அதற்குள் ஓராண்டு முடிந்துவிட்டது. தத்துவம், அரசியல், பொருளாதாரம், கலை, இலக்கியம், தொல்லியல், நாணயவியல் என அவர் பேசாத பாடுபொருளே இல்லை எனலாம். எல்லாவற்றையும் மார்க்சியக் கண்ணோட்டத்திலேயே அணுகுவார். பொதுவுடமை இயக்கத்தில் 40 ஆண்டுக்காலம் முழுநேர ஊழியராகப் பணியாற்றிய அவர் ஏராளமான கட்டுரைகளையும் பலதுறை சார்ந்த ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார். தனது வாழ்க்கையின் இறுதிக்காலத்தில் தமிழாராய்ச்சித்துறையில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். செம்மொழி உயராய்வு மையத்தின் மூலம் தமிழர் தத்துவம் குறித்த ஆய்வ¤னை மேற்கொண்டார். தொன்மைக் காலத்தில் தமிழர்களிடையே நிலவி வந்த அறிவியல் தத்துவங்களை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். எட்டாண்டு காலம் ‘சமூக விஞ்ஞானம்‘…

Read More
தூரத்து புனையுலகம் 

பின்னலின் கதை!

ம. மணிமாறன் ஏதோவொரு புள்ளியில் தனக்கான மனத்திறப்பின் சாவியைப் பொதிந்து வைத்திருக்கின்றன புத்தகங்கள் என எல்லா வாசகர்களும் நம்புகின்றனர். ஆகவே தான் புத்தகங்களின் பக்கங்கள் புரள்கின்றன. விசித்திரப் புள்ளிகள் தோய்ந்திருக்கும் சொற்பதம் இதுதான் என கண்டடைய சிலசமயங்களில் அவனை கடைசிப்பக்கம் வரை காத்திருக்கச் செய்கின்றன புத்தகங்கள். அந்தப் புள்ளியை அடைந்த பிறகு அதுவரை வாசிக்கப்பட்ட பக்கங்கள் மறுமுறை புதியதொரு சுவாரஸ்யத்துடன் புரள்கின்றன. சில புத்தகங்களின் தலைச்சொல்லிலேயே வாசகன் சிக்கிக்கொள்வதும் உண்டு. அதன்பிறகு புத்தகமும், அவனும் ஒருவரையொருவர் பிரிவது சாத்தியமில்லை. வாசகனைக் குறித்த இச்சிறு குறிப்பினை அவசியமாக்கிய நூல் ஒன்றை வாசித்ததால் வந்த வினையே என்பதால் என் சகவாசகர்களே கொஞ்சம் பொறுத்துக் கொண்டு பின்தொடருங்கள். மேற்சொன்ன இருநிலைகளிலும் ஆனது ஊர்மிளா பவாரின் ‘முடையும் வாழ்வு’ என்கிற தன் வரலாற்று நூல். மராத்தியிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து தமிழ்வாசகர்களுக்காகவும் பெயர்க்கப்பட்டு போப்புவால்…

Read More

தி.க.சி. இளைஞர்களை உருவாக்கிய இலக்கிய இயக்கம்

மிகச்சிறந்த மார்க்சியத் திறனாய்வாளரும் பண்பாளருமான எழுத்தாளர் தி.க.சிவசங்கரன் 25.03.2014 அன்று திருநெல்வேலியில் காலமானார். தனது ஒப்பற்ற இலக்கியப் பணிகளால் ‘தி.க.சி.’ என அன்புடன் அழைக்கப்பட்ட தி.க.சிவசங்கரன் 1925 ஆம் ஆண்டு திருநெல்வேலி நகரத்தில் பிறந்தார். மறைந்த எழுத்தாளர் வல்லிக்கண்ணனுக்கும் இவருக்கும் இளம்பருவத்திலேயே நட்பு மலர்ந்தது. பிறகு அது ஆழ்ந்த நட்பாகப் பரிணாமம் பெற்று இருவரும் இறுதிவரை இரட்டையர்கள் போலவே இலக்கிய உலகை வலம் வந்தது அறிந்த செய்தி. தி.க.சி. ஜீவாவின் இலக்கியப் பள்ளியில் உருவாகியவர். எனவே மார்க்சியப் பார்வை என்பது அவரது இயல்பிலேயே ஊறியிருந்தது. 1960-1964களில் அவர் தாமரை இதழில் ஆசிரியராகப் பணியாற்றிய காலம் பொற்காலம் என இன்றளவும் பல இலக்கியவாதிகளால் குறிப்பிடப்படுவதுண்டு. தமிழில் மிகச்சிறந்த எழுத்தாளர்களை அக்காலகட்டத்தில் தி.க.சி உருவாக்கினார். 1964 முதல் சோவியத் கலாச்சார நிலையத்தில் செய்தித் துறையில் பணியாற்றி 1990ல் ஓய்வுபெற்றார். தனிச்சிறப்புள்ள…

Read More

பேப்பூர் சுல்தானின் கதை

கீரனூர் ஜாகிர்ராஜா எங்கள் வாப்பூப்பா வைக்கம் பஷீரைக் குறித்து ஒரு சிறிய இடைவெளியில் மீண்டும் எழுதக் கிடைத்த வாய்ப்புக்காக மகிழ்கிறேன். ஏற்கனவே அட்சரநதியில் பஷீராக மாறுவது சுலபமில்லை… என்னும் தலைப்பில் தோப்பில் முஹம்மது மீரான் சாகித்ய அகாதமிக்காக தமிழில் மொழிபெயர்த்த பஷீர் வாழ்க்கை வரலாறு குறித்து எழுதினேன். அந்தக் கட்டுரைக்கு கிடைத்த வரவேற்பினால் கிளர்ச்சியுற்று, பஷீரைப் பற்றி தனியாக ஒரு புத்தகம் எழுதத் துணிந்த போது, குறிஞ்சிவேலன் தமிழாக்கம் செய்த ‘காலம் முழுதும் கலைÕ, குளச்சல் யூசுப் மொழிபெயர்ப்பில் வந்த ‘உண்மையும் பொய்யும்’ என இரண்டு புத்தகங்களை வேலூர் லிங்கம் எனக்கு அனுப்பித் தந்தார். என்னிடமும் சில முக்கிய சேகரிப்புகள் இருந்தன.  நேரமின்மை காரணமாகப் பிறகு அந்தத் திட்டத்தைக் கைவிட்டேன். ஆனால் என் வாசிப்பனுபவத்தில் எழுந்த பஷீரின் மகோன்னத சித்திரத்தை அனுபவித்து வரைந்து பார்க்கும் வேட்கை அடிமனதில்…

Read More

தடை செய்யப்படும் புத்தகங்களும் எரிக்கப்படும் புத்தகங்களும்

சா. கந்தசாமி புத்தகங்கள் படிக்கவே எழுதப்படுகின்றன. அவை மனித அறிவு என்பதன் உச்சம். தங்களிடம் மானிட சமூகத்தின் உயர்விற்கும், முன்னேற்றத்திற்கும் கருத்து இருக்கிறது என்று நம்பியவர்கள்; எல்லோர்க்கும் மகிழ்ச்சி தரும் கதை இருக்கிறது, கவிதை உள்ளது என்று நம்பியவர்கள் எழுதினார்கள், எழுதி வருகிறார்கள். எழுதுவதும் படிப்பதும் சமூகத்தில் இழையறாமல் இருந்து வருகிறது. மனித சரித்திரம் என்பதே எழுதப்பட்டது படிக்கப்பட்டதின் சரித்திரமாக இருக்கிறது. அதன் காரணமாகவே புத்தகங்கள் புனிதமானதாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. எழுத்துக்கு ஆதாரமானது மொழி. பேசும் மொழியும், அதனை எழுதும் எழுத்தும் மனிதர்களுக்கு இறைவன் அருளால் அளிக்கப்பட்டது. எனவே அவற்றை இறைவனைத் துதிக்கவும், நன்மொழிகள் பேசவும், நல்லவற்றை எழுதவும் பயன்படுத்த வேண்டுமென்று நெடுங்காலமாகச் சொல்லிக் கொண்டு வருகிறார்கள். வெகு பழமையான நூலாகிய ரிக்வேதம் இறைவனைத் தொழுது பணிந்துபாடும் பாடல்களைக் கொண்டு இருக்கிறது. புத்தரின்அருளுரைகளின் சாரத்தை அசோகர் கல்வெட்டுக்களில்…

Read More