பீமாயணம்

சு.ப.பாரதி கடந்த இருமாதங்களின் முன்னர் சென்னை பனுவல் புத்தக அரங்கில் சமூக நீதிக்கானவாரம் என்ற தலைப்பில் நூலறிமுகக் கூட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன. அதில் காலச்சுவடு பதிப்பகம் சிறுவர்களுக்காக வெளியிட்ட பீமாயணம் நூல் குறித்துப் பேச  நான்  விரும்பினேன்.  பீமாயணத்தைப்பற்றி பேசுகின்றாயா? என்று கேட்டபோது ஆம்.. என்று கூறினேன்.அப்போது அம்பேத்கரின் இயற்பெயர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்,  அவர்தான் இந்தியாவின் அரசியலமைப்பு சட்டங்களை வடிவமைத்தார் போன்ற சில செய்திகளை மட்டுமே அறிந்திருந்தேன். பின்னர் பீமாயணம்  படிப்பதோடு  நிறுத்திக்கொள்ளாமல் அம்பேத்கர் குறித்த படம், ஆனந்த் பட்வர்தனின் ஆவணப்படம், அம்பேத்கரின் இறுதிப்பேச்சு  (ஙிஙிசி ஷிஜீமீமீநீலீ),  அருந்ததிராயின் பேச்சு மற்றும் விக்கிபீடியா முதலியவற்றைப் பார்த்தும் படித்தும் அம்பேத்கரைப்பற்றி கூடுதலாக அறிந்தேன். அம்பேத்கர் தனது சிறுவயதிலிருந்தே தண்ணீர்,  இருப்பிடம்  முதலிய தனக்கான அன்றாடத் தேவைகளைப் பெறக்கூட மிகவும் துன்புற்றார். அவர் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது தண்ணீரைத்தொட…

Read More