கருத்து சுதந்திர உரிமைப் போர் தொடரட்டும

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் நடத்தி வரும் எழுச்சிமிகு உரிமைப் போர் வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும். 2010ல் எழுதப்பட்ட ஒரு படைப்பு மாதொரு பாகன். குழந்தைப் பேறில்லா தம்பதியர் கோவில் தேர் இழுத்தால் பிரார்த்தனை நிறைவேறும்  எனும் நம்பிக்கைக்குப் பின்னால் நடக்கும் உலகறிந்த உயர்சாதி வக்கிரத்தைத் தோலுரித்த படைப்பு. ஆனால் 2014ல் எழுத்தாளர் பெருமாள் முருகன், தனது மாவட்டமான நாமக்கல் (திருச்செங்கோடு) தனியார் மேல்நிலைப் பள்ளிகளின் பணமுதலைகள் அடிக்கும் பகல் கொள்ளையைக் கடுமையாக விமர்சித்து எழுதியதும், பிரச்சனையை எதிர்கொள்ளவும் பதில் தரவும் திராணியற்ற பணம் படைத்தோர் கூட்டம் அவரது படைப்புகளுக்கு சாதி வர்ணம் பூசி இந்துத்வா வெறியாட்டத்தைத் தொடங்கி  அதை அரசின் அதிகார அமைப்புகள் ஆதரவோடு தனது ‘சிவ தாண்டவத்தை’ காவி தர்பாரைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்த உண்மைகளை…

Read More