ஜாதியற்றவளின் குரல்

 பாரதி செல்வா நேர்மையான சிந்தனை இங்கு மாற்று சிந்தனையாகிவிட்டது. அநீதியை எதிர்ப்பவர்களை மாற்று சிந்தனையாளரென அழைக்கிறோம். சமூகத்தின் பிரச்சனையைப் பேசுபவை இங்கே மாற்று ஊடகங்களாகி விட்டன. அப்படியெனில், இந்த பெரும்பான்மைச் சமூகமும் அதன் அரசியலும் பொருளாதாரமும், பொழுதுபோக்கும் வாழ்வியலும் நம்பிக்கையும் எத்தனை நேர்மையற்றதாக, பாகுபாடுகளைக் கொண்டாடுபவையாக இருக்கிறதென பாருங்கள். நீதியும் நேர்மையும் இங்கு மாற்றுச் சிந்தனையெனில் இந்த சமூகத்தின் நேரான சிந்தனை அநீதியும் நேர்மையின்மையும் தானே?” இப்புத்தகத்தின் முன் அட்டையில் முதல் பத்தி நேர்மையான சிந்தனை மாற்றுச் சிந்தனையாக பார்க்கப்படும் சமூக சூழலை விளக்கும், வலுவான வரிகளுடன் தன் பார்வையைப் பதிவு செய்கிறார் ஆசிரியர்.  சாதி இந்திய சமூகத்தின் மனித மூளைகளை ஒன்றிணைக்கவிடாமல் அணு அணுவாய் கூறுப்போட்டு வைக்கும் இழி சொல். இந்துத்துவத்தின் ஆணி வேரான வர்ணசிர்ம (அ) தர்மத்தின் அடிப்படையில் உருப்பெற்ற சாதியப் படிநிலை தன்…

Read More