You are here
நேர்காணல் 

“மானுடம் நீதியுடன் வாழமுடியுமென்று நம்புகிற, அதற்காக போராடுகிற எவரும் எங்கே இருந்தாலும் அவர்கள் இடதுசாரிகளே”

– மனுஷ்ய புத்திரன் சந்திப்பு: கீரனூர் ஜாகிர்ராஜா “இந்தக் காரிருளைக் கடப்பது இயலாத காரியமல்ல” இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ச்சியோடும் தனித்துவத்தோடும் வரும் தமிழ்க் கவிஞர்கள் வரிசையில் நமது சமகாலத் தமிழ¤ன் முன்னணிக் கவிஞர்களில் ஒருவர் மனுஷ்யபுத்திரன். திருச்சி மாவட்டத்தில் துவரங்குறிச்சி எனும் சிறு நகரில் பிறந்த (1968) அப்துல் ஹமீது என்ற இயற்பெயர் கொண்ட மனுஷ்யபுத்திரன் கவிதைகள் இதுவரை 11 தொகுதிகள்- _ மனுஷ்யபுத்திரன் கவிதைகள் (1983), என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்(1993), இடமும் இருப்பும் (1998), நீராலானது (2001) மணலின் கதை (2005), கடவுளுடன் பிரார்த்தித்தல் (2007) அதீதத்தின்ருசி (2009), இதற்குமுன்பும் இதற்குப் பின்பும் (2010), பசித்தபொழுது(2011), அருந்தப்படாத கோப்பை(2013), சூரியனுக்கு அருகில் ஒரு வீடு (2013), அந்நிய நாட்டுப் பெண்(2015) ஆகியவை வந்துள்ளன. அதிலும் கடைசி தொகுப்பில் 270 கவிதைகள்! தினசரி காலை உணவிற்கு…

Read More
நேர்காணல் 

கலைஞனை நம்புவதும் கலைஞனை நோக்கி நகர்வதும்தான் மனிதகுல மீட்சிக்கான ஒரே வழி…

கோணங்கி சந்திப்பு: கீரனூர் ஜாகிர்ராஜா  தமிழ் நவீன இலக்கியத்தின் தனித்துவம் மிக்க படைப்பாளி கோணங்கி. கரிசல் வட்டாரத்தில் நென்மேனி மேட்டுப்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்த கோணங்கியின் இயற்பெயர் இளங்கோ. இவருடைய தாய்வழிப் பாட்டனார் மதுரகவி பாஸ்கரதாஸ். அப்பா சண்முகம், அண்ணன் ச.தமிழ்ச்செல்வன் ஆகியோர் எழுத்தாளர்கள். தம்பி முருகபூபதி தமிழின் முக்கியமான நாடகக் கலைஞன். 1980களில் ஒரு இடதுசாரி எழுத்துக் கலைஞனாக  அறிமுகமான கோணங்கி,  மதினிமார்கள் கதை, கொல்லனின் ஆறு பெண்மக்கள் ஆகிய இரண்டு  சிறுகதைத் தொகுப்புகளின் மூலமாக இலக்கியப் பரப்பில் வலுவாகக் காலூன்றியவர். 1988ல் வேலையை உதறிவிட்டு கல்வராயன் மலையிலிருந்து Ôகல்குதிரை’ என்னும் சிறுபத்திரிகையைத் தொடங்கியதன் மூலம் தமிழ்ச்சூழலில் குறிப்பிடத்தக்க அசைவுகளை உருவாக்கினார். Ôகல்குதிரை’ இதழ் மூலமாக தாஸ்தயேவ்ஸ்கி சிறப்பிதழ், மார்க்வெஸ் சிறப்பிதழ், உலக சிறுகதைச் சிறப்பிதழ் போன்றவை வெளிவந்து தமிழ் வாசகப்பரப்பின் எல்லைகளை விரிவடைய வைத்தன….

Read More

இடதுசாரி அரசியல் பணி எனப்படுவது

இடதுசாரிகளில் அதிதீவிரமாக இருப்பவர்கள் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் அரசியல் வேலை என்ற கருத்தைக் கொண்டிருகின்றனர். மாறாக சீர்திருத்தவாதிகளாக இருக்கும் இடதுசாரிகள் பலர், அரசாங்க நிர்வாகத்தில் தலையிடுவதே பிரதான அரசியல் நடைமுறையாகக் கருதுகின்றனர்.வேடிக்கை என்னவென்றால், இந்த இரண்டு பிரிவினரும் இடதுசாரி இலட்சிய அமலாக்கத்தின் முக்கிய கதாநாயகர்களான மக்களை மறந்து விடுகின்றனர் !

Read More

இடதுசாரி அரசியல் கலை!

வரலாற்றில் சோசலிச இயக்கங்களுக்கு வளர்ச்சியும் உண்டு; வீழ்ச்சியும் உண்டு.ஆனால், வீழ்ச்சிகள் என்றுமே நிரந்தரமாக இருந்ததில்லை. பாரீசில் முதலாவது தொழிலாளிவர்க்க அரசு 72 நாட்கள் இருந்தது. அது மிகவும் குரூரமாக முதலாளிகளால் நசுக்கப்பட்ட பிறகு, “சோசலிசம்”, “தொழிலாளி வர்க்க அரசு” என்பதெல்லாம் சாத்தியமில்லை என்ற கருத்து, பேயாட்டம் போட்டது.ஆனால் 30 ஆண்டுகளுக்குப் பிறகு “யுகப்புரட்சி”யாக ரஷியப் புரட்சி எழுந்து மனிதகுல வரலாற்றைப் புரட்டிப்போட்டது.

Read More