You are here

களப்போராட்டத்தின் கண்ணாடி

 -வெண்புறா மக்கள் வரலாற்றை எழுதத் துவங்கினால் அது பெரும்பாலும் போராட்ட வரலாறாகத்தான் இருக்கும். அதிலும் குறிப்பாக, தாழ்த்தப்பட்ட மக்கள் மூச்சுவிடுவதற்குக் கூட போராடித்தான் தீரவேண்டிய அவலத்தை எழுதித் தீராது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை ஆய்வு செய்வது, பதிவு செய்வது, படைப்பாக்குவது புதிதல்ல… ஆனால், அந்த மக்களோடு களத்தில் நின்று போராடி வெற்றிகளையும், நம்பிக்கைகளையும் பெற்றுத்தரும் நேரடி அனுபவங்களை புத்தகமாகக் கொண்டுவருவது, அவசியத்திலும் அவசியமான பணியாகும். அப்படியான ஒரு முக்கியத்துவம் வாய்ந்த புத்தகம்தான் தோழர் மு.கந்தசாமி எழுதியும், தொகுத்தும் வெளிவந்திருக்கும் ”மனுசங்கடா நாங்க மனுசங்கடா” தமிழ்நாட்டின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான சிவகங்கை மாவட்டம், சாதியக் கட்டமைப்பு வலுவாக வேரூன்றியிருக்கும் மாவட்டமாகும். அந்த மாவட்டத்தில் தங்குதடையின்றி நிலவும் தாழ்த்தப்பட்ட மக்கள்மீதான தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் நடத்திய வீரம்…

Read More

நமஸ்தே திலீப்குமார்!

கீரனூர் ஜாகிர்ராஜா இவ்வளவு காலமாக திலீப்குமாரை எழுத முடியாமல் போய்விட்டதற்காக இந்த சந்தர்ப்பத்தில் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். 90களில் எழுத வந்த எல்லோரையும்போல நானும் அவருடைய ‘கடிதம்Õ கதையைத் தான் முதன் முதலாக வாசித்தேன். தொடக்கத்தில் அவருடைய பெயரைக் கேள்விப்பட்டபோது இந்தி நடிகர் திலீப்குமார்தான் என் நினைவில் வந்து நீங்கினார். கூடவே சாய்ரா பானுவும். “எவ்வளவுக்கு சினிமா மோகமென அறிந்து கொள்வீராக..” அப்போது ‘சாய்ரா பானுவை உங்களுக்குத் தெரியாது’ என்று ஒரு சிறுகதை கூட எழுத முயற்சித்துப் பாதியில் விட்டுவிட்டேன். இந்த சாய்ராபானு பால்யத்தில் என்னை அலைக்கழித்த 17 பெண்களில் ஒருத்தி. என் உறவின் முறையும்கூட. முதலில் குறிப்பிட்ட சாய்ராபானு திலீப்குமாரின் காதல் மனைவி, நடிகை, அவர்கள் நட்சத்திரத் தம்பதிகள். நடிகர் திலீப்குமாருக்கு இப்போது வயது 91. சமீபத்தில் அவர் இறந்துவிட்டதாகக் கிளப்பிவிடப்பட்ட வதந்திக்கு ‘‘இல்லை. யூசுப் சாஹெப்…

Read More