You are here
நூல் அறிமுகம் 

ஒளி ஆண்டின் ஒளி

த.வி. வெங்கடேஸ்வரன் தொடு உணர்ச்சியை உணர்வது எளிது. நமது கை உடலின் மீது படும்போது ஏற்படும் மெல்லிய அழுத்தம் தான் தொடு உணர்ச்சி. அதே போல  பூக்களிலிருந்து வெளிப்படும் நறுமண வேதிப்பொருள் நமது மூக்கை அடைந்து உணர்வை தூண்டுகிறது. ஆனால் காட்சிப் புலன்? ஒரு பொருளை நாம் எப்படிப் பார்க்கிறோம்? கண்கள் என்ற புலன்கருவி அதற்கு முக்கியமானது என்றாலும் பொருள்கள் நேரடியாக அந்தப் புலன் உறுப்பில் தாக்கம் செய்யாத போது எப்படி காட்சி ஏற்படுகிறது என்பது மிகப்பெரிய அறிவியல் கேள்வியாகத் தான் இருந்தது.  கண்களிலிருந்து வெளிப்படும் ‘‘பார்வை ஒளி’’ கை போல நீண்டு பொருட்களை வருடும்போது காட்சிப் புலன் ஏற்படுகிறது என அரிஸ்டாட்டில் போன்றோரும் பொருட்கள் தாமே ‘‘பார்வை ஒளியை’’ வெளிப்படுத்துகின்றன. பூவிலிருந்து மிதந்து வரும் வாசம் மூக்கை அடைந்து நறுமணம் வெளிப்படுவது போல அந்தப் பார்வை…

Read More
நூல் அறிமுகம் 

பாக்., ஆப்கனில் பயங்கரவாதக் குஞ்சு பொரிப்பு!

இர.இரா.தமிழ்க்கனல் எந்த மதவாதமும் இயல்பாகவே பயங்கரவாதத்துக்கு இட்டுச்செல்லும் வாய்ப்புகளோடு இருக்கிறது. தற்போது, உலக அளவில் குறிப்பாக மேற்குலக அரசுகளால் – உலகப் போர்களை நடத்திய அரசுகளால், இஸ்லாமிய மதவாத ஆயுதக்குழுக்களே, மதப் பயங்கரவாதமாகக் காட்டப்படுகின்றன. ஒருவேளை, இப்படிச் சொல்வது உண்மை இல்லையா என்று உங்கள் மனம் கேள்வி எழுப்பக்கூடும் என்றால், இது மட்டுமே உண்மை அல்ல என்பதுதான் பதில்! ஆனாலும் இந்த அடிப்படைவாத- மதப்பயங்கரவாதமானது, மேற்காசியாவின் அரை நூற்றாண்டுக்கால மானுடகுலப் பிரச்சனையாக நீடித்துவருவது, பகுத்தறிவுள்ள மனிதர் ஒவ்வொருவருக்கும் பெருத்த அவமானமாகும். சிரியா, எகிப்து, துருக்கி, குர்திஸ்த்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா உட்பட கண்டம்விட்டு கண்டம் பாய்ந்தோடி, அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கக்கூடியதாக மாறியிருக்கிறது, இந்தப் பயங்கரவாத நோய். இந்தக் கண்ணியின் ஒரு பகுதிதான் ஆப்கனில் தாலிபான் உருவாக்கமும் என்பதை விளக்க வேண்டியதில்லை. அமெரிக்க வல்லரசு உருவாக்கிவிட்ட இந்த பன்னாட்டுக்…

Read More
நேர்காணல் 

பண்டைய இந்தியாவில் விமானம் இருந்தது போன்ற போலியான தகவல்கள் அறிவியலை வளர்க்க உதவாது

– த.வி. வெங்கடேஸ்வரன்  சந்திப்பு: இரா. நடராசன் எண்ணற்ற அறிவியல் நூல்களைத் தமிழில் எழுதியுள்ள த.வி.வெங்கடேஸ்வரன் தற்சமயம் டெல்லியில் மத்திய அரசின் தேசிய அறிவியல் பிரச்சார மையத்தின் முதுநிலை விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறார். ஒரு ரயில்வே தொழிலாளியாகத் தன் வாழ்வைத் துவங்கிய த.வி.வெ. தன்சொந்த முயற்சியால் அறிவியலில் முதுகலைப்பட்டமும் டாக்டர் பட்டமும் பெற்றவர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றி தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் அறிவியல் பார்வையைக் கொண்டு சென்றவர். பிள்ளையார் பால் குடிக்கிறார் என்கிற வதந்தியைக் கட்டுடைத்து பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி அறிவியல் பூர்வமாக அதை விளக்கியவர். அறிவியல் கேள்வி பதில்கள், மனித குலத்தின் தோற்றம் உள்ளிட்ட பல பொருள் குறித்த நூல்களை வெளியிட்டுள்ளார்.பல்துறை அறிஞராக இந்தியா முழுவதும் சென்று அறிவியல் பணி ஆற்றி வருகிறார். தமிழகஅரசு சமச்சீர் பாடப்புத்தகம்…

Read More
வாங்க அறிவியல் பேசலாம் 

டார்வின் ஒரு லட்சம் முறை வென்றிருக்கிறார்…

– டாக்டர்ஜேன்கூடல் நேர்காணல்: மரியன்ஷெனால் தமிழில்: இரா. நடராசன் உலகிலேயே மிகக் கடினமான வேலை என்று வானியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் ஒப்புக் கொண்ட விஷயம் மனிதக் குரங்குகள் பற்றிய சமூக ஆய்வு. காரல் சாகன் தனது அறிவியல் கட்டுரை ஒன்றில் (அது நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளிவந்தது) உயிரைப் பணயம் வைக்கும் அறிவியல் ஆராய்ச்சி என்று அதையே வர்ணித்தார். மனிதக் குரங்குகளான உராங்கொட்டான், கொரில்லா, சிம்பன்ஸிகளுடனே வாழ்ந்து வருடக்கணக்கில் அவற்றின் வாழ்க்கை ரகசியங்களை சமூகவியல் சாதனைகளை உலகிற்கு கொண்டு வருதல் சாதாரண வேலையல்ல. 1960ம் ஆண்டு மனிதக்  குரங்கிலிருந்து தொடங்கிய மனிதத் தோற்றம் குறித்த கல்வியாளர்  (Paleanthropologist)  லூயிஸ் லீக்கி தனது மாணவிகள் மூவரை இப்பணிக்கு கானகம் நோக்கி அனுப்புகிறார். லீக்கியின் தேவதைகள் (Leakey’s Angels) என்று அவர்களை அறிவியல் உலகம் அழைத்தது. அவர்களில் ஒருவர்தான் டாக்டர்…

Read More
நூல் அறிமுகம் 

டார்வின் ஸ்கூலின் மூன்று மனது

இளையஇதயகீதன் ‘டார்வின் ஸ்கூல்’ சாகித்ய அகாடமியின் பாலபுரஸ்கார் விருதுபெற்ற ஆயிஷா.இரா.நடராசனின் புதிய குழந்தைகள் நூல். (யாருடைய நூல்களைப் படித்து வளர்ந்தோமோ அவருடைய நூலைப் பற்றியே எழுதுவதென்பது பெரும்பேறு). குழந்தைகளுக்கான நூலைப் பெரியவர்கள் எழுதுவது என்பது எவ்வளவு கடினமோ, அவ்வளவு கடினம் குழந்தைகளுக்கான நூலைப் பெரியவர்கள் வாசிப்பதும். ஒரு போதும் குழந்தைகளின் உலகில் பெரியவர்களால் சஞ்சரிக்கமுடியாது  என்பதே  எனது எண்ணம். ‘குழந்தைகள் எப்படிப் பார்ப்பார்கள்’ அல்லது ‘எப்படிப் பார்க்க வேண்டும்’ என்கிற கருத்தில் நின்றுகொண்டு பெரியவர்கள் பார்ப்பதே குழந்தைகளுக்கான நூல்கள். குழந்தைகள் ‘எப்படிப் பார்ப்பார்கள்?’ என்கிற  மையத்தில் இருந்து எழும் கதைகளை விட குழந்தைகள் ’எப்படிப் பார்க்கவேண்டும்?’ என்கிற  மையத்தில் இருந்து எழுந்த கதைகள்தான் நம் மத்தியில் அதிகமாக உலா வந்து கொண்டிருக்கின்றன. (ஈசாப் கதைகள் உட்பட பல கதைகள்). டார்வின் ஸ்கூல் நூலும் குழந்தைகள் எப்படிப் பார்க்கவேண்டும்…

Read More

கதைக்குள் கதையாய் விரியும் ரஃப் நோட்டு

மதுசுதன் பள்ளிக்கூட நாட்களில் நண்பர்கள் நமக்கு எவ்வளவு நெருக்கமானவர்களோ அதைப்போல் நாம் பயன்படுத்திய ரப்நோட்டும் அவ்வளவு நெருக்கமானது என்று சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை.கிறுக்குவதாக இருக்கட்டும் படங்கள் வரைவதாக இருக்கட்டும் குறிப்புகள் எடுப்பதாக இருக்கட்டும் மனம் வேண்டியபடி பயன்படுத்தும் ஒரே நோட்டாக நமக்கு நெருக்கமாக இருந்திருக்கிறது.அப்படித்தான் இந்தக் கதையிலும் பாபு என்கிற எட்டாம் வகுப்பு பயிலும் மாணவனின் ரப்நோட்டு காணாமல் போய்விடுகிறது இவனது நோட்டு மட்டுமல்ல இவனது வகுப்பில் பயலும் அனைவரது ரப்நோட்டுகளும் மாயமாக காணாமல் போய்க்கொண்டே இருக்கிறது. பிறப்பிலேயே மந்த பார்வையுடனும் நியாபக மறதியும் தனக்குத் தானே பேசிக்கொள்ளும் பழக்கம் உடையவன் என்பதால் அவனுடன்  யாரும் நட்புக் கொள்வதில்லை. சுற்றுவட்டாரத்திலும் பைத்தியக்காரப் பிள்ளையென அனைவரும் சொல்ல மனம் நொந்து போகிறாள் அவனின் தாய். இப்படியான சூழலில் தான் மன நல மருத்துவரை அணுகுகிறார்கள். அவரும் அவனிடம்…

Read More