You are here
மீண்டெழும் மறுவாசிப்புகள் 

மீண்டெழும் மறுவாசிப்புகள்-5 : கர்ணனின் மனைவி

ச. சுப்பாராவ் அவள் ​பெயர் உருவி. பு​கேய நாட்டு மன்னர் வகுஷனுக்கும், அரசி சுப்ராவிற்கும் மகளாகப் பிறந்தவள். குரு வம்சத்திற்கு ​நேச நாடான பு​கேய நாட்டு இளவரசி அஸ்தினாபுரத்தில் அ​னைவருக்கும் ​செல்லக் குழந்​தை. குந்தி Ôஎன் மருமக​ளே’ என்றுதான் அவ​​ளை அ​ழைப்பாள். குரு வம்சத்து இளவரசர்களான பாண்டவர்களும், ​கௌரவர்களும் குருகுலம் முடிந்து தங்கள் திற​மைக​ளை ​வெளிக்காட்டும் அந்த நிகழ்ச்சிக்கு தன் தாய் தந்​தையருடன் வரும் உருவி, அர்ச்சுனனுக்கு சவால் விட்டு, அங்க​தேசத்து மன்னனாகிவிடும் கர்ணன் மீது காதல் ​கொள்கி​றாள். தந்​தை தனக்கு ஏற்பாடு ​செய்யும் சுயம்வரத்தில், கர்ணனுக்கு மா​லை சூட்டி உலகத்​தை​யே அதிர்ச்சிய​டையச் ​செய்கிறாள். உயர்வர்ணப் ​பெண் கீழ்வர்ண ஆ​ணைத் திருமணம் ​செய்வது தகுமா என்று ​கேள்வி ​கேட்பவர்களின் வாயை பிராமணப் ​பெண்ணான ​தேவயானி க்ஷத்ரியனான யயாதி​​யை மணக்கவில்​லையா என்று எதிர்​கேள்வி ​கேட்டு அ​டைக்கிறாள். அவள் திருமண…

Read More
நூல் அறிமுகம் 

தமிழீழம் குறித்த நம்பிக்கைகளின் மீது வீசப்படும் கேள்விகள்

எஸ். அர்ஷியா கடந்த மூன்று தசாப்தங்களாக இலங்கையின் வரலாற்றை குறிப்பிட்டளவு முன்நகர்த்தியிருந்த புலிகள் இயக்கம், உண்மையிலேயே விடுதலை பெற்றுத்தரும் என மக்கள் நம்பினார்கள்; ஆதரவு அளித்தார்கள்.  அந்த  இயக்கத்தின்,  ‘கட்டமைக்கப் பட்ட’ சித்திரம் 2009-ல் தகர்க்கப் பட்டு, நிதர்சனம் துலங்கியபோது கிடைத்த தரிசனம், தமிழக அரசியல் விதூஷகத்தில் ‘தொப்பூழ் கொடி உறவு‘ என்ற சொல்லாடலையும், கைக்கெட்டிய தூரத்திலிருக்கும் நாடு என்று எதிரொலித்த நிலவியல் குரல்களையும் ஆட்டம்காணச் செய்துவிட்டது. அதைப் பற்றிய நூல் இது  இல்லையென்றாலும், அதன் ஆணிவேரைத் தேடும் பண்பு இதற்குள் பொதிந்து கிடக்கின்றது. இலங்கைத் தீவில், தமிழ் எதிர்ப்பைத் தின்று செரித்த  பாசிச தரிசனத்துக்கு முன்னதாக, நம்பிக்கை யின் அடிப்படையில், கொடிய யுத்தத்திற்குள் ஏறத்தாழ முப்பது வருடங்கள், வெவ்வேறுதளங்களில் இயங்கியச் செயற்பாட்டாளர்களான நான்கு ஆளுமை களின், யுத்தத்தின் நேரடி சாட்சிய அகமன உணர்வு களின் வெளிப்பாடுகளை…

Read More

சிதைவுகளிலிருந்து…

ம. மணிமாறன் நாம் பழக்கப்படுத்தப்பட்டு உள்ளோம். ஆப்பிரிக்கக்கண்டத்தைப் பற்றிய கதைகளுக்கும் கூட இப்படியான தன்மை உண்டு. நம்மில் பலரும் நம்புகிறோம். கருப்பின மக்களின் பழக்க வழக்கங்கள் அசூசையானவை. நாகரிகத்தின் சுவடுகள் தங்களின் மேல் படிவதை அவர்கள் எப்போதும் அனுமதிக்க மாட்டார்கள். இன்னும் இதைப்போல நிறைய…. பொதுப்புத்தியில் ஆப்பிரிக்க இனமக்களைக் குறித்த அதிர்ச்சிகளையும், வக்கிரங்களையும் பதியச் செய்ததில் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய பங்குண்டு. பொதுப் புத்தியில் உறைந்திருக்கும் தவறுகளை அழித்து எழுதிடும் ஆற்றல் மிக்கவை புனைவுகள். இதுவரையில் உலகம் கண்டிராத ஆப்பிரிக்க மக்களின் ஆன்மாவை உலகறியச் செய்து வருகின்றனர் இலக்கிய கர்த்தாக்கள். இவர்களின் முதன்மையானவர் “சினுவா ஆச்சிபி” சினுவா ஆச்சிபியின் “ஜிபிமிழிநிஷி திகிலிலி கி றிகிஸிஜி” என்னும் ஆங்கில நாவல் “சிதைவுகள்” என தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சிதைவுகளுக்கு முன்பு தமிழ் இலக்கிய உலகம் அறிந்திடச் சாத்தியமற்ற கலாச்சார, பண்பாட்டுப்…

Read More