வாசித்ததில் யோசித்தது

ஆசிரிய முகமூடி அகற்றி… ச. மாடசாமி | அறிவியல் வெளியீடு, சென்னை- 86 | பக்.72 ரூ.60 | போன் : 044-28113630பிராங் மக்கோர்ட் (1930-2009) அமெரிக்காவில் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தவர். ஆங்கில ஆசிரியர். மக்கோர்ட்டின் வகுப்பறை அனுபவங்கள் வித்தியாசமானவை. மாணவர் ஒவ்வொருவரும் உரையாடலில் பங்கேற்கும் விதமாக எப்போதும் தம் வகுப்பறையை மக்கோர்ட் திறந்து வைத்தார். அவை கற்பனை நிறைந்த வகுப்பறைகளும் கூட. வெவ்வேறு நாட்டுச் சமையல் குறிப்புகளுக்கு இசையமைத்துப் பாடி மகிழ்ந்த வகுப்பறைகள். மட்டன் அரை கிலோ, மிளகாய்ப் பொடி 100 கிராம், உப்பு  இரு  சிட்டிகை என வரும் அட்டவணையை இசைக்கருவிகளோடு பாட்டாகப் பாடி அமர்க்களப்படுத்திய வகுப்பறைகள். மக்கோர்ட் மகா சாமர்த்தியசாலி. ஆனால் எழுதும்போது அப்பாவிபோல் எழுதுகிறார். எளிமையாகவும் வெளிப்படையாகவும் அமைந்த அவர் எழுத்தை வாசிப்பது நாட்டுப்புறக் கதை கேட்பதுபோல ஒரு குதூகலமான அனுபவம்….

Read More