You are here

காவி ‘அறிவியல்’ கயமை களைவோம்

தலையங்கம் மதத் திருவிழாக்களும் பண்டிகைகளும் முதலாளித்துவத்தின் வேட்டை நாய்கள் – காரல் மார்க்ஸ் நவீன அறிவியல் இன்று உலகையே மாற்றி உள்ளது. எத்தனையோ மூட-நம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல், மனிதனை என்றென்றும் புவியின் ஆளுமை சக்தியாய் வளர்ச்சி காண வைத்தது. ஆயினும் இன்று மனிதன் எதிர்கொள்ளும் சோதனைகள் பல. புவிவெப்பமடைதல்; தாவர, விலங்கு பல்லுயிரி அழிவு; வேகமாய் அழியும் வெப்ப மண்டலக் காடுகள்; கைவிடப்படும் கடல்வாழ் உயிரினப் பாதுகாப்பு; சரியான பாதுகாப்பு முறைகள் இல்லாத அணு உலைகள், அணுக்கழிவு பேராபத்துகள்; அச்சமூட்டும் நோய்ப் பரவல்; மூச்சு முட்டவைக்கும் நோய்த்தடுப்பு செலவினங்கள்; மாற்று வழி அறியாத எரிபொருள் புகைமூட்டம்; நில-மனிதஆக்கிரமிப்பு; நீர் நிலைகளை இரக்கமற்று சுரண்டுவது; பிளாஸ்டிக் கழிவுகளின் மண் உயிரி நஞ்சாக்கம்; மறுசுழற்சிக்கு அப்பாற்பட்ட உபயோக சந்தைப்பொருள் நெருக்கத்தால் குவிந்த குப்பை மலைகளால் மரணிக்கும் காற்று…. இப்படி…

Read More
என் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல் 

என் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்-2 பாழாய்ப் போன அக்ரஹாரத்தைக் கடந்து செல்லுதல்

எஸ். மோகனா “பண்டைக்கால மனிதர்கள் எதை எல்லாம் தீட்டு என்று கருதி வந்தார்களோ..அவைகள் எல்லா வற்றையும், இந்துக்களும் அவ்வாறே கருதி வந்தனர். மனு ஸ்மிருதி இதை கோடிட்டுக் காட்டுகிறது. தீட்டு பற்றியும் கூறி உள்ளது. ஆனால் “தீண்டாமை” என்ற தீட்டு பற்றியோ, யார் யார் தீண்டப்படாதோர் என்பது பற்றியோ எந்த சாத்திரமும் கூறவில்லை.” –  டாக்டர் அம்பேத்கர்.    “கி.பி600 களிலும் சண்டாளர்கள், தீண்டப்படாதவர்கள் என்ற நிலை இல்லை.” ஆகவே சரித்திரத்தை நன்குபடித்து, ஆராய்ச்சிக்கு உட்படுத்திய டாக்டர் அம்பேத்கர், “சுமார் கி.பி 400க்குப் பிறகுதான் தீண்டாமை என்பது ஏற்பட்டிருக்க வேண்டும்..பௌத்த மதத்துக்கும், பிராமணீயத்துக்கும் இடையே ஏற்பட்ட போரின் விளைவுதான் இது..”.. என்கிறார். ………. ம்.ம். மோகனா இப்ப அஞ்சாப்பு வந்தாச்சு.. அது கெடக்கட்டும். இந்த அஞ்சாப்புக்குள்ளான காலம், மோகனாவின் வாழ்வில், ஏராளமான இயற்பியல் மற்றும் வேதியல் மாற்றங்களைக்…

Read More
என் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல் 

என் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல் 1 மனதில் தோன்றிய முதல் தீப்பொறி

எஸ். மோகனா ‘நம் சமுதாயத்தில் பெண்கள் சார்ந்த தலைகீழான ஒரு புரட்சி ஏற்பட்டாலொழிய, பெரிய மாறுதல்களைக் கொண்டு வரவியலாது. அப்படி மாறுதல்கள் ஏற்பட்டாலும் முதலில் அடுப்பங்கரையை விட்டு அவர்களை வெளியேற்றவேண்டும். பெண்கள் கல்வி பெறுவது அவர்கள் உரிமை மட்டுமன்று; சமூக மாற்றத்திற்கு மிக இன்றியமையாததும் ஆகும். பெண்கள் கல்வி கற்றாலொழிய சமூக மாற்றங்கள் ஏற்படாது’ –   பெரியார் நான் என்னை, நான் கடந்து வந்த பாதையை கொஞ்சம் திரும்பிப் பார்க்கிறேன். கொஞ்ச நஞ்ச ஆண்டுகளா? 67ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது…? வாழ்க்கையில் நடந்ததெல்லாம் நிஜம்தானா? அதற்கும் மேல்தான் தாக்குப்பிடித்து நிற்கிறேனா? ம். ..ம்… ஒரு பெருமூச்சுதான் பதில். ஆனால் அனைத்தும் உண்மை. பூமி சுற்றுவது எப்படி உண்மையோ.. சூரியன் இந்த பால்வழியை சுற்றுவது எப்படி உண்மையோ… அதுபோல்தான் இதுவும் நிஜம்தான்.. ஆனால் இப்போது அனைத்தையும் நினைத்துப் பார்த்தால் ஒரு…

Read More
நேர்காணல் 

பண்டைய இந்தியாவில் விமானம் இருந்தது போன்ற போலியான தகவல்கள் அறிவியலை வளர்க்க உதவாது

– த.வி. வெங்கடேஸ்வரன்  சந்திப்பு: இரா. நடராசன் எண்ணற்ற அறிவியல் நூல்களைத் தமிழில் எழுதியுள்ள த.வி.வெங்கடேஸ்வரன் தற்சமயம் டெல்லியில் மத்திய அரசின் தேசிய அறிவியல் பிரச்சார மையத்தின் முதுநிலை விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறார். ஒரு ரயில்வே தொழிலாளியாகத் தன் வாழ்வைத் துவங்கிய த.வி.வெ. தன்சொந்த முயற்சியால் அறிவியலில் முதுகலைப்பட்டமும் டாக்டர் பட்டமும் பெற்றவர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றி தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் அறிவியல் பார்வையைக் கொண்டு சென்றவர். பிள்ளையார் பால் குடிக்கிறார் என்கிற வதந்தியைக் கட்டுடைத்து பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி அறிவியல் பூர்வமாக அதை விளக்கியவர். அறிவியல் கேள்வி பதில்கள், மனித குலத்தின் தோற்றம் உள்ளிட்ட பல பொருள் குறித்த நூல்களை வெளியிட்டுள்ளார்.பல்துறை அறிஞராக இந்தியா முழுவதும் சென்று அறிவியல் பணி ஆற்றி வருகிறார். தமிழகஅரசு சமச்சீர் பாடப்புத்தகம்…

Read More

ஆணாதிக்க அறிவியலே அழிவு அறிவியல்

– பார்பாராமெக்லின்டாக் பார்பாரா மெக்லின் டாக், மரபியலின் இரண்டு முக்கியத் திருப்பு முனைகளைச் சாதித்தவர். 1927ல் கார்னல் பல்கலைக்கழகத்தில் தனது அயராத உழைப்பில் குரோமோசோம் விட்டு குரோமோசோம் தாவும் மரபணுக்களின் முக்கியப் பண்பைக் கண்டுபிடித்து வெளியிட்டார். ஒருவகை மரபணு மற்றொரு வகை மரபணுவைக் கட்டுப்படுத்தும் எனும் அடுத்த திருப்புமுனைக் கண்டுபிடிப்பை சோள-தாவர மரபணுக்கள் வழியே அடைந்த மெக்லின்டாக்கின் ஆய்வு முடிவுகளை அன்று 1930களின் விஞ்ஞான உலகம் ஏற்கவில்லை. கிரிகர்மெண்டலுக்கு நேர்ந்ததைப் போலவே தனக்கு, ஆண்களே அதீத ஆதிக்கம் செலுத்திய அறிவியல் உலகால் கிடைத்த அவமானங்களைத் தாங்கமுடியாமல் 1951லிருந்து தனது ஆய்வு முடிவுகள் எதையும் வெளியிடாமல் மெக்லிண்டாக் நிறுத்திக் கொண்டார். தாவும் மரபணு (Jumping Gene)  மற்றும் கட்டுப்படுத்தும் மரபணு (Controlling Gene)ஆகிய இரண்டுமே சரிதான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு, மக்காசோளத்தின் மரபணு வரைபடத்தை (The…

Read More

ராக்கெட் விடுவதும் அணுகுண்டு சோதனையும் அறிவியல் அல்ல

திடநிலை வேதியியல் எனும் தனித்துறையே உருவாகக் காரணமானவர் இந்திய விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ். பெங்களூருவில் ஜவஹர்லால் நேரு உயர் அறிவியல் ஆய்வு மையம் உலகப் பிரசித்திபெற்றது. அதனை ஸ்தாபித்தவர். வெறும் அறிவியல் அல்ல. மூன்றாம் உலக அறிவியலாளர் பேரவை எனும் அமைப்பை உருவாக்கி பல்வேறு போராட்டங்களைக் களம் கண்டவர் ராவ்.

Read More
வாங்க அறிவியல் பேசலாம் 

அச்சப்படுபவர் அறிவியல்வாதியே அல்ல

மேரி கியூரி மேரி கியூரி. மேரி ஸ்க்லொடொஸ்கா கியூரி. இரு முறை அதிலும் வேறு வேறு துறைகளுக்கான நோபல் பரிசு பெற்ற ஒரே விஞ்ஞானி. தனது ஒரே குடும்பத்தில் அயர்னிகியூரி, பியரிகியூரி என நோபல் பாரம்பரியத்தை உருவாக்கியவர். 1867ல் நவம்பர் 7 அன்று வார்சாவில் (போலந்து) பிறந்தவர். அப்போது ரஷ்ய ஜார்பேரரசின் கீழ் இருந்த போலந்தில் பல்வேறு இடதுசாரி எழுச்சிகளுக்கு காரணமான குடும்பத்தில் பிறந்து ரகசியமாக நடத்தப்பட்ட வார்சா பல்கலைக்கழகத்தில் கற்று தனது சகோதரியோடு பாரீசுக்கு (பிரான்ஸ்) வேறு பெயரில் தப்பி அங்கு மிகுந்த போராட்டத்தின் நடுவில் கல்வியைத் தொடர்ந்தார் கியூரி. பெண் கல்விக்கும்  பெண் முன்னேற்றம், பங்களிப்பு இவை யாவைக்கும் முன் உதாரணமானவர். பகுத்தறிவுவாதி. பாதிரியார்களோ தேவாலயமோ செல்லாத சீர்திருத்த திருமணம் செய்து கொண்ட தைரியசாலியாக வரலாறு அவரைப் போற்றுகிறது. தாய் மொழிப் பற்று, இனப்பற்று,…

Read More