You are here
நூல் அறிமுகம் 

இந்து மதமும் அம்பேத்கரும் பெரியாரும்

செ.சண்முகசுந்தரம்      ‘இந்து மதமும் அம்பேத்கரும் பெரியாரும்’ என்னும் மற்றுமொரு ஏவுகணை  பெரியாரின் பாசறைத் தளத்திலிருந்து ஏவப்பட்டிருக்கிறது. இம்முறை இலக்கை நோக்கி அது ஏவப்படும் முன்னரே எதிரி பயந்து ஒதுங்கிக் கொண்டுவிட்டான். ஆம். ஐ.ஐ.டி.சென்னை வளாகத்தில் பெரியார், அம்பேத்கர் படிப்பு வட்டம் தடை செய்யப்பட்டதைக் கண்டிக்கும் வகையிலும்,பெரியார் மற்றும் அம்பேத்கர் பற்றிய பழிதூற்றல்களுக்கு பதில்கூறும் வகையிலும் சுருக்கமாக ஆனால் கூர்மையாக எழுதப்பட்டுள்ள இந்நூல் பகுத்தறிவுவாதிகளுக்கும்,இந்து பாசிச எதிர்ப்பு சக்திகளுக்கும், சாதி,மத,இந்து எதிர்ப்பு சக்திகளுக்கும் மிகச்சிறந்த கையடக்க ஆவணக்களஞ்சியமாகத் திகழப்போகிறது. சமூகத்தில் நிலவும் கொந்தளிப்புகளுக்குப் பதிலளிக்கும் வகையில் பெரியாரின் கருத்துகளைக் குழைவாகப் பிசைந்து கொடுக்கும் மிக அற்புதமான காரியத்தை பெரியாரிஸ்ட் தோழர் பசு.கவுதமன் தொடர்ச்சியாக ஆற்றி வருகிறார். பெரியாரைக் குறித்தும், சாதி சமயக் கருத்துகளுக்கு எதிராகவும்,பகுத்தறிவுக் கருத்துகளைத்தாங்கியும் என அவர் இதுவரை வெளியிட்டுள்ள சிறிதும் பெரிதுமான தொகுப்பு நூல்கள்…

Read More
என் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல் 

என் வாழ்க்கை, என் போராட்டம் என் அறிவியல்-4 : அப்படியே விழுங்கிய புத்தகங்கள்….

சோ. மோகனா        ஒரு புத்தகத்தின் பயன் அதன் உள்ளே தேடப்படுவதை விட, வெளியே  ஏற்படுத்திய தாக்கத்தை வைத்தே  இருக்கிறது.”….      பிரடெரிக் எங்கெல்ஸ் நம்மால் வேறு எப்படியும் பயணிக்க முடியாத உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும் ஒரு மந்திரக் கம்பளம் புத்தகம்.”…  கரோலின் கோர்டன். வாசிப்பின்.. வாசல் ..இது..! மேலே கூறப்பட்ட இரு தலைவர்களின் பொன்மொழிகளும் என் வாழ்க்கையில் அனுபவப் பூர்வமாக உணரப்பட்டவை; இரு நாட்களுக்கு முன், தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் வெளிவந்த அம்பேத்கர் சாதி ஒழிப்பு,(டாக்டர். அம்பேத்கர் ), அம்பேத்கர் என்ன சொல்கிறார்? (கே. சாமுவேல்ராஜ்),மற்றும் சாதி, வர்க்கம், மரபணு (ப.கு.ராஜன்), மூன்று புத்தகங்களையும்,கையில் எடுத்துப் புரட்டி, முன்னுரை,முகவுரை,உள்ளே சில பக்கங்களையும், படித்தேன்..உடனே மனம் ஒரு 55 ஆண்டுகளுக்கு முன் பாய்ந்து ஓடியது. அத்துடன்  நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது, 1958ல்  பள்ளி ஆசிரியர்களால்…

Read More
நூல் அறிமுகம் 

மலம் அள்ளும் மனிதர்களின் வாழ்க்கை

சி.ஆர். ரவீந்திரன்  மகாகவி பாரதி இந்தியாவின் தனிச் சிறப்பு வாய்ந்த பெருமையைப் பற்றி மனம் திறந்து பாடினார். ‘‘பாரத பூமி பழம் பெரும் பூமி. நீரதன் புதல்வர், இந்நினைவகற்றாதீர்.” இந்தியாவிற்கு எவ்வளவோ பெருமைகள் இருப்பது உண்மைதான். அதன் இழிவான அம்சமாக இருந்து வரும் சிலவற்றின் அவலங்களும் இங்கே உண்டு. அவற்றில் ஒன்றுதான் ‘மலம் அள்ளும் மனிதர்களின் வாழ்க்கை’ அவர்களின் வாழ்க்கை இந்தியா முழுவதும் அறுவறுக்கத் தகுந்த ஒன்றாகவும், மனிதப் பண்பாட்டுக்கு எதிரானதாகவும் பரவலாகக் காணப்படுகிறது. அந்த வாழ்க்கை முறைகளில் பலவகையான நிலைமைகளைச் சமுதாய அறிவியல் கண்ணோட்டத்துடன் நேரில் கண்டு ஆய்வு செய்து Unseed: The Truth About India’s Manual Scavengers என்று ஆங்கிலத்தில் பாஷாசிங் என்பவர் எழுதியுள்ளார். இதன் தனிச் சிறப்பு என்பது இதை எழுதியிருப்பவர் அந்தச் சமுதாயத்தில் தோன்றியவர். அதைத் தமிழில் தெளிவாக மொழி…

Read More
கட்டுரை 

பீமாயணம்

சு.ப.பாரதி கடந்த இருமாதங்களின் முன்னர் சென்னை பனுவல் புத்தக அரங்கில் சமூக நீதிக்கானவாரம் என்ற தலைப்பில் நூலறிமுகக் கூட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன. அதில் காலச்சுவடு பதிப்பகம் சிறுவர்களுக்காக வெளியிட்ட பீமாயணம் நூல் குறித்துப் பேச  நான்  விரும்பினேன்.  பீமாயணத்தைப்பற்றி பேசுகின்றாயா? என்று கேட்டபோது ஆம்.. என்று கூறினேன்.அப்போது அம்பேத்கரின் இயற்பெயர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்,  அவர்தான் இந்தியாவின் அரசியலமைப்பு சட்டங்களை வடிவமைத்தார் போன்ற சில செய்திகளை மட்டுமே அறிந்திருந்தேன். பின்னர் பீமாயணம்  படிப்பதோடு  நிறுத்திக்கொள்ளாமல் அம்பேத்கர் குறித்த படம், ஆனந்த் பட்வர்தனின் ஆவணப்படம், அம்பேத்கரின் இறுதிப்பேச்சு  (ஙிஙிசி ஷிஜீமீமீநீலீ),  அருந்ததிராயின் பேச்சு மற்றும் விக்கிபீடியா முதலியவற்றைப் பார்த்தும் படித்தும் அம்பேத்கரைப்பற்றி கூடுதலாக அறிந்தேன். அம்பேத்கர் தனது சிறுவயதிலிருந்தே தண்ணீர்,  இருப்பிடம்  முதலிய தனக்கான அன்றாடத் தேவைகளைப் பெறக்கூட மிகவும் துன்புற்றார். அவர் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது தண்ணீரைத்தொட…

Read More

அம்பேத்கர் ஒளியில் நீதியரசர் சந்துருவின் தீர்ப்புகள்…

பேரா. பெ. விஜயகுமார் இருபதாம் நூற்றாண்டு இந்தியாவின் மிகப் பெரிய ஆளுமையான தாதாசாகிப் அம்பேத்கர் சாதிச் சிமிழுக்குள் அடைக்கப்பட்டும், அவருக்குரிய இடம் மறுக்கப்பட்டுமிருப்பது வருத்தத்திற்குரியது. இதனால்தான் நாடெங்கிலும் உள்ள அவரது சிலைகள் இரும்புக் கூண்டுகளுக்குள் அடைக்கப்பட்டுள்ளன. இந்த நாட்டின் ஒரு நீதிமன்ற வளாகத்திற்குள் அதர்மத்தை எழுதிய மனுவிற்குக் கூட சிலை வைக்க முடியும்  ஆனால் இந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் பெரும் பங்காற்றிய அம்பேத்கருக்கு சிலை வைக்க முடியாது என்பதுதான் கசப்பான யதார்த்தம். நீதித்துறை இந்திய ஜனநாயகத்தின் மிக முக்கியமான தூண் என்று அம்பேத்கர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால், இந்திய நீதித்துறை ஏனோ அம்பேத்கரை நினைவுகூரத் தவறியுள்ளது. இதிலிருந்து சற்றே வேறுபட்டவர் நீதிபதி சந்துரு. ஏழாண்டுகள் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதியாகப் பணியாற்றிய காலத்தில் அம்பேத்கர் ஒளியில் தனது தீர்ப்புகள் எழுதப்பட்டதாகப் பெருமையுடன் கூறுகிறார். இவ்வாறு…

Read More