கட்டுடைத்தலும் இட்டுக்கட்டலும்

ம. மணிமாறன் காலமே கலைகளின் நிலைக் கண்ணாடி. போரும், ரத்தப்பலியுமாகிக் கிடந்த இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பிறகான நாட்களில் சகமனிதர்களிடம் அன்பு செய்யுங்கள் என்றுரைக்க வேண்டிய அவசியம் படைப்பாளிகளுக்கு ஏற்பட்டது. அன்புவழியும், மதகுருவும் தமிழில் பெயர்க்கப்பட்டதற்கான காரணமும் கூட இதுதான். பட்டவர்த்தனமாக வெளிப்பட்ட அதிகாரத்தின் சுவடுகள் இப்போது நூதனமாக வெளிப்படத் துவங்கியிருக்கின்றன. கண்களுக்குப் புலனாகாத மர்மம் கொண்டதாகியிருக்கிறது அதிகாரம். சக மனிதர்கள் பரஸ்பரம் கைகுலுக்கிக் கொள்வதில் கூட அதிகாரத்தின் சுவடு மறைந்திருக்கிறது என்று பூக்கோ உரைத்தபோது தடுமாறியது அறிவுலகம். படைகளும், போர்க்கருவிகளும் உலகெங்கும் அதிகாரத்தை நிலைநிறுத்தப் போதுமானதில்லை என்கிற புரிதலுக்கு அதிகார வர்க்கம் வந்தடைந்திருக்கிறது. மனங்களைத் தகவமைத்திட அதனுடைய கருவிகள் மாற்று வடிவம் பெறத் துவங்கியிருக்கின்றன. லாபமும், நுகர்வு வெறியும் கொண்ட மனிதக்கூட்டத்தை உருவாக்கினாலே போதுமானது என்கிற அதிகார வர்க்கத்தின் புரிதலைக் கலைத்துப் போட வேண்டிய அவசியத்தைக்…

Read More