You are here

குட்டிச்சுவர் கலைஞன் ஒருவனல்ல 13 பேர்…

க.வை.பழனிசாமி ஒரு படைப்பாளியின் அனுபவம் சும்மா இருப்பதில்லை. மனதை சதா கீறி உழுது சுயமான விதைகளைத் தூவித்தூவி புதுப்புது விளைச்சல்களைக் கண்டுகொண்டே இருக்கிறது. பயிர்களைக் கண்டு பரவசம்கொள்ளும் மனம் மேலுமான விளைச்சல்களை நோக்கி நகர்கிறது. அனுபவம்… அனுபவம் கிளர்த்தும் எண்ணம்…. எண்ணம் கூட்டிச்சென்று காட்டும் கண்படாத இடங்கள். இந்த இடமிருந்து எழுதுகிறவர்கள் அரிதினும் அரிது. இப்படியான அரிதான எழுத்தில் தொடர்ந்து பயணிக்கும் படைப்பாளி கீரனூர் ஜாகிர்ராஜா. ஜாகிர்ராஜா தனது எழுத்தை ‘ஜின்னாவின் டைரி’ நாவலில் கொண்டாடி மகிழ்ந்திருப்பார். பகடியும் விமர்சனமும் கலந்த கொண்டாட்டமாக வாசகனைக் கவர்ந்த நாவல் அது. இப்போது “குட்டிச்சுவர் கலைஞன்” அதேவேகத்தில் வெளிவந்திருக்கிறது. இந்த இரண்டு நாவல்களிலும் புனைவின் பேரழகை நாட்டிய அழகில் அதிரவிடுகிறார். எப்படி இப்படியொரு பாய்ச்சல்? கோள்களில் கால் பதிக்கும் பெரு நகர்தல் என்று வியக்கிறோம். தெருவில் குழந்தைகள் குதித்து கும்மாளமிட்டு…

Read More

யாப்பியலில் கட்டளைக் கலித்துறையின் இடம்

இராம. குருநாதன் தமிழ் யாப்பியலுக்கு நீண்ட நெடும் வரலாறு உண்டு. தமிழ்க் கவிதை உலகில் பாவும் பாவினங்களும் கால மாற்றங்களை ஏற்றும் மாறுதலுக்கு உள்ளாகியும் வளர்ந்துவந்துள்ளன. யாப்பியலில்  கலிப்பாவிற்குரிய வரையறைகளையும், அதன் வகைகளையும் ஏனைய பா வகைகளை விடப் பெரிதும் தொல்காப்பியம் விரித்துள்ளது. கட்டளைக் கலித்துறை பற்றிய வரையறைகள் முந்தைய இலக்கணங்களில் போதுமானதாக இல்லை. பின்னர் வந்த யாப்பருங்கலக்காரிகை, யாப்பினைப்பற்றிக் கட்டளைக் கலித்துறையில் பாடிச்சென்றிருப்பினும் அந்நூலிலும் அதைப்பற்றிய வரையறை இல்லை. கட்டளைக் கலித்துறை பற்றி ஒரு முழுமையான கண்ணோட்டத்தைப்  பதிப்புச் செம்மல் சி.வை.தாமோதரனார் தாம் இயற்றிய மூன்று நூற்பாக்களில் இருந்து அறியமுடிகிறது. நூல் வடிவம் பெற்ற அந்த நூல் பல்லாண்டுகள் தமிழ்கூறும் நல்லுலகிற்குக் கிட்டாமல் இருந்தது. தமிழகத்தில் இந்நூற்பெயர் உச்சரிக்கப்பட்டதில்லை என்ற ஆதங்கத்தை உணரமுடிகிறது. ஈழம் தந்த தமிழறிஞர்களான கலாநிதி க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, நா.சுப்பிரமணியம் ஆகியோர் அந்நூலின்…

Read More