அடித்தட்டு வாழ்வின் துறவு மனம்

போப்பு ஆர்வத்தைத் தூண்டும் விதமாக ‘கிளி நின்ற சாலை’ என்ற தலைப்பைக் கொண்டுள்ளது இப்புதினம். ரோடு ரோலர் வண்டியில் கிளீனராக வேலை செய்யும் திருமுருகன் எனும் விளிம்பு நிலைத் தொழிலாளியின் வாழ்க்கைப் பாட்டைப் பற்றி ரோடு ரோலர் போலவே நிதானமாக சொல்லிக்கொண்டு போகிறது. ஒன்றரையணா டிவிஎஸ் பிப்டி கூட ஏக அலப்பறைகள் பண்ணிக்கொண்டு ஏகத்திற்கும் சலம்பிக்கொண்டு போக, அத்தனை கனமான ரோடுரோலர் வண்டி, ஏதோ பாக்குக் கடிப்பதைப் போல கடக்கு முடக்கு என்று பிணையடிக்கும் மாடுபோல போய்க் கொண்டிருப்பது யாரும் காணக்கிடைக்கும் காட்சிதான். எத்தனையோ அதிசயங்களைப் பார்த்துவிட்டாலும் ரயில் போவதையும், ரோடு ரோலர் உருள்வதையும் நம் கண்கள் ஒரு நிமிடம் நிலைகுத்திப் பார்க்காமல் கடப்பதில்லை. அத்தனை பெரிய வண்டியை வேடிக்கை பார்க்கிறோம். அந்த வண்டி போட்ட சாலையில் ஒரு நாளைக்கு நூறு முறை சர்புர்ரென்று போய் வருகிறோம்….

Read More