You are here
அஞ்சலி 

அஞ்சலி: எட்வர்டோ காலியானோ

இந்த உருகுவே நாட்டு எழுத்தாளரின் ‘சோசலிசம்’ என்றைக்கும் அதன் இதயத்தையும் இலக்குகளையும் இழந்ததில்லை. இந்த கொடும் உலகத்தை மனிதநேயமிக்கதாக மாற்றுவதற்கான சாதாரன மக்களின் கனவோடு அது நெருங்கி இணைந்திருந்தது.   – விஜய் பிரசாத் எட்வர்டோ காலியானோவுக்கும் இந்தியாவிற்குமான கடைசித் தொடர்பு அவரது புகழ்பெற்ற நூலான வெட்டுண்ட குருதி நாளங்கள் – ஒரு கண்டத்தில் ஐந்து நூற்றாண்டாய் நடக்கும் சூறையாடல் (Open Veins of Latin America: Five Centuries of the Pillage of a Continent (1971).) மூலம் வந்தது. சென்னையின் பாரதி புத்தகாலயத்தைச் சேர்ந்த பி.கே.ராஜன் அவருடைய இந்த வரலாறு படைத்த நூலை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட அனுமதி கோரியிருந்தார். அந்த சாத்தியம் அவரை மகிழ வைத்திருந்தது. மொழிபெயர்ப்பு குறித்து அவருக்கு திடமான கருத்துகள் இருந்தன. தமிழ் மொழிபெயர்ப்பு நேரடியாக அவரது ஸ்பானிய மூல…

Read More

அஞ்சலி: ராஜம்கிருஷ்ணன்

முற்போக்குப் பெண் எழுத்தாளுமையான ராஜம்கிருஷ்ணன் தனது 89ஆம் வயதில் சென்னையில் காலமானார். 1925-ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறியில் பிறந்த ராஜம், பள்ளி சென்று முறையான கல்வி பயிலாதவர் அன்றைய சமூக வழக்கப்படி சிறுபிராயத்திலேயே மணவாழ்க்கைக்குத் தள்ளப்பட்டவர். ஆயினும் மின் பொறியாளரான கணவரின் உதவியுடன் புத்தகங்களை வாசிக்கவும், கதைகள் எழுதவும் தன்னைத் தயார்படுத்திக் கொண்டார். விரைவில் குறிப்பிடத்தக்க எழுத்தாளராகப் பரிணாமம் பெற்றார். சமூகப் பிரச்சனைகளை உள்ளடக்கமாகக் கொண்ட படைப்புகளைத் தந்த ராஜம்கிருஷ்ணன், தனது நாவல்களுக்காகவும், கதைகளுக்காகவும் பல களஆய்வுகளை மேற்கொண்டவர். அவருக்குப் புகழ் தேடித் தந்த ‘கரிப்பு மணிகள்’ நாவல் தூத்துக்குடி மீனவ மக்களின் வாழ்க்கையை நேரிடக் கண்டுணர்ந்து எழுதியது. அதேபோன்று பீகார் கொள்ளைக் கும்பல்காரன் டாகுமான்சியை நேரில் சந்தித்து முள்ளும் மலரும் நாவலை எழுதினார். ‘காலம் தோறும் பெண்’ என்கிற தலைப்பில் ராஜம்கிருஷ்ணன் எழுதிய நூல்…

Read More
அஞ்சலி 

ஆர். உமாநாத் : வரலாற்றுச் சான்றாகத் திகழும் வாழ்க்கை

தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம், செங்கொடித் தொழிற்சங்க இயக்கம் இவற்றின் வளர்ச்சியில் ஒரு அடையாள முகமாகிவிட்டவர் அருமைத் தோழர் ஆர். உமாநாத். நாட்டின் வரலாற்றில் சுதந்திரப் போராட்டத்தோடும் சுதந்திர இந்தியாவில் உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தோடும் கடல் நீரில் உப்புப் போலக் கலந்திருக்கிறது அனைவராலும் “”””ஆர்.யு.”” என்று வாஞ்சையோடு அழைக்கப்பட்ட அவருடைய வாழ்க்கை.

Read More
அஞ்சலி ஆளுமைகள் வரலாறு 

கேப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ்

ஏகாதிபத்திய ஸ்பானிய மொழியைக் கொண்டே அடிமைப்பட்டுச் சீரழிந்த லத்தீன் அமெரிக்க மக்களின் துயரங்களையும் கோப ஆவேசத்தையும் எழுத்தில் வடித்து அதை உலகெங்கிலும் ஒலிக்கச் செய்த பெருமை பெற்றவராக மார்க்வெஸ் திகழ்ந்தார்.

Read More

தி.க.சி. இளைஞர்களை உருவாக்கிய இலக்கிய இயக்கம்

மிகச்சிறந்த மார்க்சியத் திறனாய்வாளரும் பண்பாளருமான எழுத்தாளர் தி.க.சிவசங்கரன் 25.03.2014 அன்று திருநெல்வேலியில் காலமானார். தனது ஒப்பற்ற இலக்கியப் பணிகளால் ‘தி.க.சி.’ என அன்புடன் அழைக்கப்பட்ட தி.க.சிவசங்கரன் 1925 ஆம் ஆண்டு திருநெல்வேலி நகரத்தில் பிறந்தார். மறைந்த எழுத்தாளர் வல்லிக்கண்ணனுக்கும் இவருக்கும் இளம்பருவத்திலேயே நட்பு மலர்ந்தது. பிறகு அது ஆழ்ந்த நட்பாகப் பரிணாமம் பெற்று இருவரும் இறுதிவரை இரட்டையர்கள் போலவே இலக்கிய உலகை வலம் வந்தது அறிந்த செய்தி. தி.க.சி. ஜீவாவின் இலக்கியப் பள்ளியில் உருவாகியவர். எனவே மார்க்சியப் பார்வை என்பது அவரது இயல்பிலேயே ஊறியிருந்தது. 1960-1964களில் அவர் தாமரை இதழில் ஆசிரியராகப் பணியாற்றிய காலம் பொற்காலம் என இன்றளவும் பல இலக்கியவாதிகளால் குறிப்பிடப்படுவதுண்டு. தமிழில் மிகச்சிறந்த எழுத்தாளர்களை அக்காலகட்டத்தில் தி.க.சி உருவாக்கினார். 1964 முதல் சோவியத் கலாச்சார நிலையத்தில் செய்தித் துறையில் பணியாற்றி 1990ல் ஓய்வுபெற்றார். தனிச்சிறப்புள்ள…

Read More

குஷ்வந்த் சிங்கின் முற்றுப்புள்ளி

. . . . . என் சாவுக்கு வருந்தி நீ துக்கத்தில் மூழ்கலாம் என் கல்லறையில் வசந்தத்தின் மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தலாம்… அல்லது கல்லறைக் கல்லில் உன் காலனியின் மலத்தை துடைத்துவிட்டு என் பைத்தியக்கார நம்பிக்கைகளை நினைவுகொண்டு சிரிக்கலாம் நீ சிரித்தாலும் அழுதாலும் செய்வதறியாது திகைத்தாலும் நான் அசையப் போவதில்லை மண்ணிற்குள் ஆழப்புதைந்து கிடக்கும் நான் அசையப் போவதில்லை – ஃபெய்ஸ் அஹமத் ஃபெய்ஸ் குஷ்வந்த்சிங் அவர் விரும்பியபடி இறுதி விடைபெற்றுக் கொண்டார்.வாழ்நாளெல்லாம் தீவிரமாக திருஉருக்களை தகர்த்தவராகவும் வெளிப்படையான நாத்திகராகவும் எல்லாவித மத போதகர்கள் குறித்தும் மிக ஆரோக்கியமான விரோதம் கொண்டவராகவும் இருந்தார். இந்திராகாந்தியின் காட்டுத்தர்பாரான அவசரநிலையை ஆதரித்தது, 1984-ல் நடந்த டெல்லி சீக்கியர் படுகொலைகளுக்குபின் சிறிதுகாலம் பிஜேபியை ஆதரித்தது போன்ற சருக்கல்கள் உண்டு. ஆனால் அவற்றை வெகுவிரைவில் திருத்திக் கொள்ளவும் அவரிடம்…

Read More

பாலுமகேந்திரா காட்சி மொழியில் கதை சொன்ன கலைஞன்

எம். சிவகுமார் நான்  திரைப்படக் கல்லூரியில் சேர்ந்த புதிதில் மூடுபனி திரைப்படம் வெளியானது. முதல் நாள், முதல் காட்சி  பார்ப்பதற்காக  மாம்பலம் கிருஷ்ணவேணி தியேட்டருக்குச் சென்றபோது கூட்டம் முட்டி மோதியது. எனக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. முதல் நாள், முதல் காட்சி பார்க்கும் பழக்கம் எப்போதுமே இருந்ததில்லை. இப்படத்திற்கு போகக் காரணம், நான் பார்த்த அவரின் முதல் படமான ‘அழியாத கோலங்கள்’  தான். ‘அழியாத கோலங்கள்’ பட இயக்குநரின் படமாயிற்றே என்ற உந்துதலில் தான் அப்படத்திற்கு அவ்வாறு சென்றேன். அந்த அளவுக்கு அப்படம் என்னைக் கவர்ந்தது. தமிழ்ப் படம் பார்க்கையில் ஒரு மெல்லிய குளிர்த் தென்றல் வீசியதை முதன் முதலாய் அப்படம் பார்க்கையில் உணர்ந்தேன். உலக சினிமா குறித்து எந்தப் பரிச்சயமும் அப்போது எனக்கு கிடையாது. பின்னர் சில ஆண்டுகளுக்குப் பின்புதான் அப்படத்தில் நான் உணர்ந்த புதிய தென்றலுக்கு…

Read More