Madhvadha Arasiyal நூல் அறிமுகம் 

மதவாத அரசியல் இந்தியாவின் எதிர்காலம் – டி.ஞானையா

நூலின் பெயர் : மதவாத அரசியல் இந்தியாவின் எதிர்காலம் ஆசிரியர் : டி.ஞானையா பதிப்பகம் : என்சிபிஎச். விலை. ரூ.80 இதை நீங்கள் வாசித்து முடிக்கும் முன் இந்திய கொலைபாதக மதவெறி அரசியல் ஒரு நிமிடத்துக்கு மூன்று பேர் என்ற விகிதத்தில் அப்பாவி மக்களை காவு வாங்குகிறது. எனும் பாசிச காலத்தில் இப்போது வாழ்கிறோம். அத்தகைய மதவெறிக்கு எதிராக ஓங்கி ஒலிக்கும் குரல்வளைகள் நெரிக்கப்படுகின்றன. கவுரிலங்கேஷ் இருப்பது இரண்டாம் பட்ச பட்டியலில்தான். கொலை, பட்டியலின் முதல் தர வரிசையில் அறிஞர்கள், விஞ்ஞானிகள், மக்கள் எழுத்தாளர்கள் உள்ளனர். பண்டாரங்கள் தவிர வேறு யாவுமே கம்யூனிச தேசத் துரோகிகள். இந்த சூழலில் இந்தப் புத்தகம் மிக அற்புத தேவை. இதில் நம் பாரம்பரியத்தை, பன்முக அடையாளமான வேற்றுமையில் ஒற்றுமை என்பதை பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்சும், சங்பரிவார கும்பலும் எப்படி சிதைத்தெறிகின்றன என்பதை ஆழமான ஆதாரங்களோடு அவர்…

Read More
Rajakumari Veedu நூல் அறிமுகம் 

ராஜகுமாரி வீடு வழியில் இருந்தது – உமா மோகன்

நூலின் பெயர் : ராஜகுமாரி வீடு வழியில் இருந்தது ஆசிரியர் : உமா மோகன் பதிப்பகம் :  டிஸ்கவரி பேலஸ் விலை ரூ.100 உமாமோகன் எனும் தோழமையை அவரது வாழ்வை விட எழுத்துக்கள் வழியே அதிகம் உணர்ந்து வியக்கின்றவர்களில் ஒருவன் நான். அவரது கதைகள் தரும் அதிர்ச்சியும், ஈர்ப்பும் தீர பல நாட்களாகும். கதை சொல்வதில் கல்கி முதல் அம்பை வரை பலரது சாயல்களையும் சாட்டைகளையும் வரலாற்றிலிருந்து தன் ரத்த நாளங்களில் ஏற்றிக் கொண்டு தன் பேனாவின் வழி வெளிவந்துள்ளார். கதைகளே எழுதலாம் தனித்துவம் மின்னுகிறது. இந்தத் தொகுப்பில் 12 கதைகள் உள்ளன. சிறுகதை என்பது ஒரு சாமர்த்தியமான வடிவம். அதை வசமாக்கி உள்ளார்ந்த செய்திகளை பிசிறு இல்லாமல் தருவது தனி திறமை. ஒரு பயணம்போல புதிய வீதிகளை புதிய ஊர்களை கடக்கும் அதே சமயம் பழையனவற்றை உடைத்தெறியும் உத்தியை…

Read More
Iyarkai நூல் அறிமுகம் 

இயற்கை செய்திகள் சிந்தனைகள் – ச.முகமது அலி

நூலின் பெயர் : இயற்கை செய்திகள் சிந்தனைகள் ஆசிரியர் : ச.முகமது அலி பதிப்பகம் : இயற்கை வரலாறு அறக்கட்டளை விலை ரூ.200 சுற்றுச்சூழலை ரசிக்கத் தெரிந்தவனே உண்மையான இயற்கைவாதி என்பார் சலீம்அலி. இலக்கியங்கள் பலவும் இயற்கையின் பாற்பட்டு சிறப்பாக புனைந்துரைக்கப்படுதல் ஒரு புறம் மறுபுறம் நமக்கு முதலாளியம் பரிசளித்த நுகர்வுக் கலாச்சாரம் எதையும் உபயோகித்து ஏப்பம் விடும் மகா ஆபத்தோடு யுகங்களின் வெளியில் மனிதனை ஒரு பேரழிவு சக்தியாக்கிவிட்டது. முகமது அலி இயற்கை பற்றிய அசாத்தியமான செய்திகளோடு களம் புகுந்து நம் எண்ணங்களை செழுமைப்படுத்தி நம் நிலைக்கு கூனி கவலையுற்று ஏங்க வைக்கிறார். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற அய்ந்திணைகள் முற்றிலும் மரபழிந்து வில், வேங்கை, கயல், கொடி, மரபுகள், மாய்ந்து, வளர்ச்சி, சமூகமேம்பாடு என பேராலைகள், செய்கூலி சேதாரம் நோய் பரிசோதனை முற்றிலும் இலவசம்,…

Read More
sarithirathai-matriya-sarithira-purushargal-original நூல் அறிமுகம் 

சரித்திரத்தை மாற்றிய சரித்திர புருஷர்கள் – நாராயண் துரைக்கண்ணன்

சரித்திரத்தை மாற்றிய சரித்திர புருஷர்கள் நாராயண் துரைக்கண்ணன் | பானுபதிப்பகம், பக்.224 | விலை. ரூ.150 நாராயண துரைக்கண்ணன் சுவைபட சித்தரிக்கும் சரித்திர புருஷர்கள் சாதாரண ஜனங்களது மத்தியிலிருந்து கடும் உழைப்பால் வரலாற்றில் இடம் பெற்றவர்களே. ஆனால் நாஜி கட்சியை ஏற்படுத்தி உலக சர்வாதிகாரி ஆகத் துடித்த ஹிட்லரையும், பாசிச கட்சி தொடங்கி இத்தாலியை ஆட்டிப் படைத்த முசோலினியையும் சரித்திர புருஷர்கள் என ஏற்க நம் மனம் ஒப்பவில்லை என்றாலும் அவர்கள் பற்றிய இந்த நூலின் தகவல்கள் பல நாம் அறியாதவை. உதாரணமாக முசோலினி எழுதிய சிறுகதைகள் நாடகம் நான் வாசிக்கவில்லை. ஹிட்லரின் ஆஸ்திரியா பற்று (தாய்நாடு அது தான்) பற்றிய தனி நெடுங்கவிதை என் பார்வைக்கு வராதது. இந்தியாவில் குதிரை போலோ விளையாட்டை அறிமுகம் செய்தது அப்போது இங்கே ராணுவ அதிகாரியாக இருந்த சர்ச்சில்தான் என்பது…

Read More
Ullam Negizhum Oriya Kadhaigal நூல் அறிமுகம் 

உள்ளம் நெகிழும் ஓரியக் கதைகள் – த. முனைவர் ஆனைவாரி ஆனந்தன்

நூலின் பெயர் : உள்ளம் நெகிழும் ஓரியக் கதைகள் ஆசிரியர் : த. முனைவர் ஆனைவாரி ஆனந்தன் விலை – ரூ.125/- ஒரிசாவின் கோரபுட் பகுதியில் மலைவாழ் மக்களிடையே இன்றும் வானொலி இருக்கிறது. தொலைக்காட்சி, கணினி, கைபேசி கிடையாது. இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் வெளி ஆட்கள் மிக அரிதாகவே வருகிறார்கள். கோபிநாத் மொகந்தி அந்த பகுதிக்கு ஒரு துணை நீதிபதியாக வெளி உலகிலிருந்து சென்று அவர்களோடு தோழமையோடு கலந்து அவர்களது மலைப்பகுதிக் கதைகளை தொகுத்துள்ளார். அம்ரிதரா சந்தனா மற்றும் பரஜா போன்றவை நாடு முழுக்க பிரபலமாகிவிட்ட ஒரிய கதைகள். மலைவாசிகள் உலகின் சடங்கு சம்பிரதாயங்கள் கதைகளின் ஊடாக இடம் பெறுகின்றன. மரங்களே கடவுள். மழையே வரம். சின்ன சின்ன வேண்டுதல் குட்டி விலங்குகளே பலி. மனித நேயமே வாழ்க்கை. மதிமதலா கதையில் கதாநாயகிகள் ஒரு இலட்சியவாதி. இந்த கதைகளில்…

Read More
Jeyandhan Book மற்றவை 

ஜெயந்தன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – தொ. அகரமுதல்வன்

ஜெயந்தன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – தொ. அகரமுதல்வன் பதிப்பகம் –  டிஸ்கவரி புக்பேலஸ் விலை. ரூ.200 ஜெயந்தன் எனும் சிறுகதை ஜாம்பவானை இளைய தலைமுறை அவசியம் வாசிக்க வேண்டும். தமிழ்ச் சிறுகதைக்கு எழுபதுகளில் அறிமுகமானவர் ஜெயந்தன். ஜெயகாந்தனை ஜி. நாகராஜனை சேர்த்து குழைத்த சுவை. ஆனால் எதில் மேலிட இருக்கும் என்பது ஒரு திரில். இத்தொகுப்பில் உள்ள 18 கதைகளையும் வாசித்து எடுப்பது ஒரு பயிற்சிப் பட்டறைபோல வாழ்க்கையை அதன் முடைநாற்றங்களோடும் ஜீவமரணப் போராட்டங்களோடும் நேருக்கு நேர் சந்திக்கும் அனுபவம். ஜெயந்தனின் கதைகளில் ஒரு வகை ஆழ்மனவெளி புதையுண்டு இருப்பதை நாம் காணலாம். ஆதிக்கங்கள் நிறைந்திருக்கும் மிகவும் வெட்கக்கேடான சமூகத்தையும், அதையே தனக்கு ஆதரவாக மாற்றிக் கொள்ளும் ஆணவத்தை, கவுரவத்தை பகடி செய்வது அவருக்கே வந்த கலை. சம்மதங்கள், மனச்சாய்வு, துக்கம் போன்ற கதைகளை வாசித்தால் பல நாட்கள்…

Read More
Melum Sila Sorkal கட்டுரை 

மேலும் சில சொற்கள் – நவநீதன்

ஒரு எழுத்தாளனின் உள்ளக்கிடங்கில் எப்போதும் இச்சமூகத்திற்கு சொல்லக்கூடிய, அதனோடு உரையாடல் நடத்தக்கூடிய எண்ணற்ற சங்கதிகள் என்றுமே நிரம்பியிருக்கும். தனது படைப்பின் வழியேயும், உரையாடல்களின் வழியேயும் அதை அவன் பகிர்ந்துகொள்கிறான். அப்படியாக நடத்தப்பட்ட நேர்காணல்களின் தொகுப்பே மதுசுதன் அவர்கள் தொகுத்து இந்த நேர்காணல்கள். அனலி பதிப்பம் வெளியிட்டுள்ள புத்தகம் பேசுது, தீக்கதிர், இளைஞர் முழுக்கம் போன்றவற்றில் வெளியான நேர்காணல்களைத் தொகுத்து புத்தகமாக்கியுள்ளனர் படைப்பு உருவாக்கப்பட்ட காலத்தையும் நேர்காணல் கண்ட காலத்தையும் இணைக்கும் ஒரு கண்ணியாக கேள்விகளும் அதற்கான பதில்களும் அமைந்துள்ளன. நேர்காணலில் பங்குபெற்ற எழுத்தாளுமைகளின் படைப்பை வாசிக்க ஒரு உந்துதலை தருகிறது என்பதே இத்தொகுப்பின் சிறப்பாகும். ‘உம்மத்’ நாவலின் மூலம் உலகில் தமிழ் இலக்கியம் பரவலாக அறியப்பட்ட இலங்கை எழுத்தாளர் ஸர்மிளா ஸயித் தனது நாவல் குறித்த அனுபவங்களையும், போருக்கு பின்னான இலங்கையின் அரசியல் சூழலையும் பகிர்ந்து கொள்கிறார்….

Read More
Kongai book நூல் அறிமுகம் 

வலியோடு விமர்சனத்திற்கு உள்ளாகும் உடலரசியல் – மயிலம் இளமுருகு

வாழ்விலிருந்து இலக்கியமும் இலக்கியத்திலிருந்து வாழ்வியலும் தோன்றுகின்றன. நாம் உலகில் காணும் ஏதேனும் ஒரு கதாபாத்திரம் கூட கவிதையில், சிறுகதையில், நாவலில், பிரதிபலிக்கிறது. அதேசமயம் கற்பனை கதாபாத்திரங்களின் புனைவின் வழியாக பல்வேறு விஷயங்களைப் பேசுவதாக இலக்கியங்கள் தோன்றியுள்ளன. சமூக மாற்றங்களையும் எண்ணங்களையும் மாறுபட்ட பார்வையில் தருகின்ற படைப்புகள் தமிழ் இலக்கியத்தில் அவ்வப்போது எழுதப்பட்டு வருகின்றன. இவற்றைப் பேசுவதும் இன்றைய சூழலில் நடந்தேறிக் கொண்டுதான் வருகிறது. அவ்வகையில் தற்போது வெளிவந்திருக்கும் ‘கொங்கை’ என்ற நாவல் அண்டனூர் சுரா அவர்களால் எழுதப்பட்டது. இந்நாவல் குறித்து ஆசிரியர் பின்வருமாறு கூறியுள்ளார். “உண்மையில் இப்படியான ஒன்று நடந்துவிடக்கூடாதுதான். இது என் விருப்பம் மட்டுமல்ல. ஆனால் ஒரு மூலையில் யாரோ ஒரு சிறுமிக்கு நடந்த இச்சம்பவம்; என் மூலையில் யாருக்கும் எப்போதும் நடக்கக்கூடும் என்பது வெறும் பயமூட்டல் அல்ல” என்று கூறியுள்ளார். இவர் ஏற்கனவே ஒரு…

Read More
Charlie Chaplin நூல் அறிமுகம் 

ஹிட்லரின் மனது! ப. திருமாவேலன்

1980களின் மத்தியில் வெளியான ‘தினசரி’ நாளிதழின் நடுப்பக்கக் கட்டுரைகள் மிகப் புகழ் பெற்றவை. ஜேம்ஸ் பிரெடெரிக் நடத்திய நாளிதழ் இது. திடீரென்று ஒரு நாள் ‘தினசரி’ நாளிதழ் எங்கள் வீட்டில் நிறுத்தப்பட்டது. அதற்கு என்ன காரணம் தெரியுமா? சட்டமன்ற மேலவைக்கு நடந்த தேர்தலில் பி.டி.ஆர். பழனிவேல் ராஜனை எதிர்த்து ஜேம்ஸ் பிரெடெரிக் போட்டியிட்டார். எனது தந்தையார், பி.டி.ஆர். பழனிவேல் ராஜனுக்காக வேலை பார்த்தார்கள். அதனால்தான் ‘தினசரி’ நாளிதழ் திடீரென்று நிறுத்தப்பட்டது. இந்த நாளிதழ் மூலமாக நான் அறிந்து கொண்ட மனிதர்கள் இரண்டு பேர். ஒருவர் ரஜினீஷ். மற்றொருவர் ஹிட்லர். ரஜினீஷை இன்றும் தொடர்கிறேன். ஹிட்லரை படிக்கப் படிக்க நிராகரித்துக் கொண்டிருக்கிறேன். ‘தினசரி’ நாளிதழ் மூலமாக அறிமுகமான அடால்ப் ஹிட்லரைத் தேடிப் படிக்கத் தொடங்கினேன். எங்களது கோவில்பட்டி நூலகத்தில் ‘பலரால்’ படிக்கப்பட்ட புத்தகங்களின் பட்டியலில் இருந்த புத்தகம் ஒன்று…

Read More
Ilaiyor Ilakiyam Kalandhuraiyadal ஒரு புத்தகம் பத்து கேள்விகள் 

‘இளையோர் இலக்கியம்’ கலந்துரையாடல்

கருத்தாளர்கள்: எழுத்தாளர் தமிழ்ச்செல்வன்,உளவியலாளர் சுமதி சந்திரசேகரன் அருணா ரத்னம், சாலை செல்வம், விழியன், பிரியசகி, கலகலவகுப்பறை சிவா,விஷ்ணுபுரம் சரவணன், ஜெயஸ்ரீ, வித்யா, அக்சயா, நாகராஜன், ராஜன் போன்ற கருத்தாளர்கள் இலக்கியம் பற்றிப் பறிமாறிக்கொண்ட நிகழ்வு இது. 15.09.18 – கலந்துரையாடலும் முடிவுகளும் இளையோருடனான அனைவரின் அனுபவங்களும் இந்நிகழ்வில் பகிரப்பட்டன. இளையோருக்கான கதைகள், கட்டுரைகள், நாடகங்கள், மொழிபெயர்ப்புகள், பாடல்களின் தேவை குறித்தும் , அவை பிரச்சாரங்கள், முன்மாதிரிகள், வழிகாட்டுதல்கள் கொண்டவையாக இருக்கலாம் ஆனால் அறிவுரை கூறுவதாகவோ அல்லது முடிவுகளைத் திணிப்பதாகவோ இருக்கக் கூடாது என்றும் பேசப்பட்டது. ஏற்கனவே வெளிவந்த சிறந்த படைப்புகளை மீண்டும் மறுபதிப்பு செய்யலாம் என்று பேசப்பட்டது. மேலும் ஆங்கிலத்தில் Young Adult Literature / Juvinile Literature எப்படி இருக்கின்றது, எது பரபரப்பாக விற்பனையாகின்றது, அதன் பொதுத்தன்மைகள் பற்றி விழியன் கூறினார். அழகிய பெரியவன், தொ….

Read More