You are here
Uncategorized 

திருநெல்வேலி மாவட்ட நாவல்களில் காலப்பின்னணி

மு.ரா.மஜிதா பர்வின் ஒர் இலக்கியப் படைப்பிற்கு உயிர் போன்றது காலம். கதை, கதை நிகழும் இடம், கதாமாந்தர்கள், மொழித்திறன், கதை சொல்லப்பட்டவிதம் என்று பல காரணிகள் ஒரு படைப்பிற்கு வலிமை சேர்க்கின்றன. ஆனால் எல்லாக்காரணிகளையும் விட முக்கியமானது காலம். கதையில் விவரிக்கப்படும் சம்பவம், வாழ்க்கைமுறை எந்தக் காலத்தில் நிகழ்ந்தது என்பதைப் பொறுத்துத்தான் அதற்கு மதிப்பு ஏற்படுகிறது. படைப்பிலக்கியத்தில் குறிப்பிடப்படுகிறது. காலத்தை வைத்துத்தான் குறிப்பிட்ட காலப்பகுதியில், குறிப்பிட்ட நிலப்பகுதியில் மக்கள் எவ்வாறு வாழ்ந்தனர் என்பதை அறியமுடியும். அவ்வாறு அறிவதுதான் இலக்கிய வரலாறு. அந்தவகையில் திருநெல்வேலி மாவட்டத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்களின் காலத்தை அறிவது என்பது திருநெல்வேலி மாவட்ட இலக்கிய வரலாற்றை அறிவதாகும். அதே போன்று ஒவ்வோர் இலக்கியப் படைப்பின் வழியாக ஒவ்வொரு நாவலும் விவரிக்கும் காலத்தில் திருநெல்வேலி மாவட்ட மக்கள் எவ்வாறு வாழ்ந்தனர் என்பதை அறியமுடியும். இவ்வாறு…

Read More

கடலூர் புத்தகத் திருவிழா சிறார் எழுத்தாளர் விருதுகள்

இந்திய மருத்துவர் சங்கம், நம்ம கடலூர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ரோட்டரி, லயன்ஸ் கிளப், உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து தேசிய குழந்தைகள் புத்தகத் திருவிழா கடலூர் டவுன் ஹாலில் நவம்பர் 10 துவங்கி 15 வரை நடத்தி வருகிறது. இந்த புத்தகத் திருவிழா அமைப்புக்குழுவின் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவால் 2017 ஆம் ஆண்டுக்கான சிறந்த சிறார் எழுத்தாளர் விருது தேர்வு செய்யப்பட்டது. இவ்விருதினை குழந்தைகள் தினமான நவம்பர் 14 அன்று மாலை 6 மணிக்கு தேசிய குழந்தைகள் புத்தகத் திருவிழாவில் சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் ஆயிஷா இரா. நடராசன் அவர்கள் தலைமையில் சாகித்ய அகாதமி விருதுபெற்ற புகழ்வாய்ந்த எழுத்தாளர் சா.கந்தசாமி அவர்கள் வழங்கினார். விருதுகள் பெற்றவர்களைப் பற்றி… சுஜாதா தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் துளிர் சிறார் இதழின் ஆசியர் குழு…

Read More
Uncategorized 

வாய் பேசாதவன் -கவிஞர் புவியரசு

வாய் பேசாதவன் குவென்டின் ரெயினால்ட்ஸ் ‘ழீ நே செபா’ நள்ளிரவு நேரம். மூடுபனித் திரை. பக்கத்தில் வரும் ஆளைக் கூட அடையாளம் தெரிந்து கொள்ள முடியாது. அந்த வின்னிபெக் ரயில் நிலைய நடைமேடையில் பதற்றத்துடன் காத்திருக்கிறாள் மிரியல், தன் கணவனது வருகைக்காக. கம்பளிக் கோட்டுக்குள்ளும், கம்பளிக் குல்லாய்க் குள்ளும் குளிர் ஊடுருவி உடலை உலுக்குகின்றது. ஒன்பது ஆண்டுக்கால நீண்ட இடைவெளி போருக்குப் போய்விட்டு உயிரோடு திரும்பிவருகிறானே, அதுவே போதும். ஆபத்தான விமானப் படைப் பிரிவில் பணியாற்றி மீள்வது எவ்வளவு பெரிய கொடுப்பினை. அதோ ரயிலின் நீண்ட கூவல். எஞ்சினின் விளக்கு வெளிச்சம், பனித்திரையை ஊடுருவிக் கசிகிறது. தடதடத்த பெரிய ஓசை. அவளது நெஞ்சத் துடிப்பு போல. இதோ, வந்துவிட்டது. ரயில் நீண்ட பெருமூச்சுவிட்டு நின்றது. ஒரு சிலர் மட்டுமே இறங்குவது போலத் தென்பட்டது. ஜார்ஜ் எங்கே? அதோ,…

Read More
Uncategorized 

நீலத் தங்கம் என்றால் என்ன?

– ரஃபீக் அகமது • ‘பிஸ்கட்’ (Biscuit) எனும் பிரெஞ்சு வார்த்தையின் அர்த்தம், ‘இரண்டு நிலைகளில் சமைத்தெடுக்கப்பட்டது.’ • வாக்கியங்களின் முதல் எழுத்துகளை மட்டும் இணைத்தால் வார்த்தைகள் உருவாக்க முடிகிற கவிதை வடிவம் தமிழில் இருக்கிறது. அதன் பெயர், ‘கரந்துறை பாட்டு.’ ஆங்கிலத்தில் ‘அக்ரோஸ்டிக்’ (Acrostic) என்பார்கள். • புறாக்கள் மூலம் கடிதப் பரிமாற்றம் செய்யும் முறையை இந்தியாவில் ஏற்படுத்தியவர், ‘சந்திரகுப்த மௌரியர்.’ • ‘நீல ஜீன்ஸ்’ தயாரிக்கும் நிறுவனத்தை முதன் முதலாக ஆரம்பித்தவர், ‘லெவி ஸ்ட்ராஸ்’ (Levi strauss). • இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் சீருடையில் மூன்று நட்சத்திரங்கள் இருந்தால் அவரது பதவி, ‘கேப்டன்.’ • மருத்துவத் துறையில் ‘பொன்னான நேரம்’ (Golden hour) என்று குறிப்பிடப்படுவது, ‘விபத்து நடந்ததற்குப் பிறகான ஒரு மணி நேரம்’ ஆகும். இந்த நேரத்தில் சரியான சிகிச்சை கிடைத்தால்…

Read More
Uncategorized 

சுவையான செய்திகள் -மாலதி

மூக்கு அடையாளம் ஒவ்வொருவருக்கும் விரல் ரேகை வித்தியாசப்பட்டிருப்பதுபோல, ஒவ்வொரு நாயின் மூக்கில் உள்ள அடையாளங்களும் வித்தியாசமாக இருக்கும். நாய்களின் மூக்கை நுட்பமாகக் கவனித்தால், நம் விரல் அடையாளங்கள்போல பல வடிவங்களைப் பார்க்கலாம். அப்படியென்றால் நாய்களை அடையாளம் காண்பது சுலபம்தானே என்று நினைக்கிறீர்களா? ஆமாம்! அமெரிக்காவில் சில இடங்களில் நாய்களை அடையாளம் காண்பதற்கு, நாய்களின் மூக்கு அடையாளத்தைப் (Nose Print) பயன்படுத்துவது உண்டாம். கனடா நாட்டு நாய் வளர்ப்புச் சங்கங்கள் (Canadian Kennel clubs) 1938 முதல், நாய்களின் அடையாளப் பதிவாக மூக்கு அடையாளத்தை அங்கீரித்திருக்கின்றன. காணாமல்போன தங்கள் அன்புக்குரிய நாய்களைக் கண்டுபிடிப்பதற்கு, உரிமையாளர்கள் இந்த முறையைக் கடைப்பிடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஜி.பி.எஸ் ஜி.பி.எஸ்.ஸின் முழு வடிவம், ‘Global positioning system’ என்பது. பூமியின் சுற்றுப் பாதையில் சுற்றிக்கொண்டிருக்கும் செயற்கைத் துணைக்கோள்களைப் பயன்படுத்தித்தான் ஜி.பி.எஸ். செயல்படுகிறது. கைப்பேசியில் நாம் ஒரு…

Read More
Uncategorized 

செத்துப் பிழைத்தல்

இறந்தவர்களுக்கு உயிர் கொடுப்பதற்கான தொழில்நுட்பத்தை அறிவியல் என்றாவது கண்டுபிடித்துவிடுமா? கண்டுபிடித்துவிடும் என்றுதான் பலர் நம்புகிறார்கள்! ஆனால் அந்தத் தொழில்நுட்பம் பல ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டால் இப்போது உள்ளவர்களுக்கு என்ன பயன்? அதற்குத்தான் ‘கிரையோனிக்ஸ்’ (Cryonics) முறை இருக்கிறது! ‘Kryos’ எனும் கிரேக்க வார்த்தைக்கு ‘கடுங்குளிர்’ என்று அர்த்தம். அதிலிருந்து வந்ததுதான் கிரையோனிக்ஸ். இது என்னவென்று கேட்கிறீர்களா? இறந்த பிறகு என்றாவது உயிர் பெறவேண்டும் எனும் ஆசை உள்ளவர்கள், இறப்பதற்கு முன்பே கிரையோனிக்ஸ் திட்டத்தில் சேரவேண்டும். இந்தத் திட்டத்தில் சேர்ந்தவர் இறந்த உடனே மருத்துவர்கள் வந்து சவ உடலுக்கு எந்தக் கெடுதலும் ஏற்படாமல் தாழ்நிலை 196 பாகையில் (Minus 196 Degree) பாதுகாப்பார்கள். என்றாவது அறிவியல், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் முறையைக் கண்டுபிடிக்கும்போது அதைப் பயன்படுத்தி இவர்களுக்கு உயிர் கொடுப்பார்கள்! ‘இது என்ன முட்டாள்தனம்!’ என்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால் இதைக்…

Read More
Uncategorized 

கவிஞர் உள்ளம்

கவிஞர் ரவீந்திரநாத தாகூருக்கு 1913ல் நோபல் பரிசு கிடைத்தது. அதே ஆண்டில், வங்கத்தின் டாக்காவில் இலக்கிய மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த மாநாட்டுக்கு தாகூரையே தலைவராகத் தேர்ந்தெடுத்திருந்தார்கள். தன் சொந்த கிராமத்தில் தன் வேலைக்காரருடன் தங்கியிருந்தார் தாகூர். மாநாட்டில் தான் கலந்துகொள்ள முடியாதென்று, மாநாட்டுக்கு சில நாட்கள் முன்பே தந்தி கொடுத்துவிட்டார். மாநாட்டை ஏற்பாடு செய்தவர்கள் எல்லாரும் மிகவும் குழம்பிப்போனார்கள். அவர்களில் ஒருவர், விஷயம் என்னவென்று தெரிந்துகொள்வதற்காக அன்று மாலையே தாகூரின் கிராமத்துக்கு வந்தார். கிராமத்தில் காலரா நோய் பரவியிருந்தது. தன்னைக் காண வந்த நண்பரை வரவேற்றார் தாகூர். பிறகு பொறுமையாக, தான் மாநாட்டுக்கு வரமுடியாத காரணத்தை விளக்கினார். “என் வேலைக்காரர் காலரா நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு நான்தான் அருகிலிருந்து பணிவிடை செய்துகொண்டிருக்கிறேன். எனவேதான் என்னால் மாநாட்டுக்கு வரமுடியாது. அவரைத் தனியே விட்டுவிட்டு நான் மட்டும்…

Read More
Uncategorized 

துறவிநண்டும் கடல்தாமரையும்

திலகம் கடலின் அடிமட்டத்தில் ஏராளமான உயிரினங்கள் வாழ்ந்துவருகின்றன. பெரிய கடல்மீன் காட்சியகங்களிலோ (Oceanarium), திரைப்படங்களிலோ அவற்றை நீங்கள் பார்க்க நேர்ந்தால் மிகவும் வியப்படைவீர்கள். கடலின் அடியில் எவ்வளவு அதிசயமான உயிரினங்கள் வாழ்ந்துவருகின்றன! பல வகையான கடற்குதிரைகள், நட்சத்திர மீன்கள், கடல் பாசிகள், ஆக்டோபஸ்கள் ஆகியவை அவற்றில் சில. கடலில், ‘துறவிநண்டு’ எனும் ஒரு வகை நண்டும் இருக்கிறது. இது அரிய வகை நண்டு. ஆயினும் இது பரிதாபத்திற்குரியது. துன்பப்படும் மனிதர்களைப் பார்த்து நாம் இரக்கப்படுவோம்தானே? அவர்களுக்கு நம்மால் முடிந்த வகையிலெல்லாம் உதவி செய்ய முயல்வோம், அல்லவா? அந்த வகையில் இந்த நண்டும், தன்னைத் தற்காத்துக்கொள்ளும் திறனற்ற ஓர் அப்பாவி ஜீவன். இந்த நண்டை ஆங்கிலத்தில், ‘ஹெர்மிட் கிராப்’ (Hermit crab) என்று சொல்வார்கள். ‘ஹெர்மிட்’ என்றால், ‘துறவி’ என்று அர்த்தம். இந்த நண்டுக்கு, தவ்விச் செல்வதற்கு ஏற்ற…

Read More

பெரிய பல்லி

இப்போதுள்ள பல்லி இனத்தில் மிகப் பெரியவை ‘கொமோடோ டிராகன்’ (Komodo dragon). இவை ஏறத்தாழ மூன்று மீட்டர் நீளமும் எழுபது கிலோ எடையும் கொண்டவை. இவை இந்தோனேஷியாவில் கொமோடோ தீவில் காணப்படுகின்றன. ஒரு கடியிலேயே ஆளைக் கொல்லும் அளவுக்கு மிகக் கடுமையான விஷம் கொண்டவை.

Read More

ஆபே

ஹசன் மாலுமியார் ஒரு தச்சரின் மகன்தான் ஆபே. இவன்தான் பிற்காலத்தில் அமெரிக்காவின் மிகச் சிறந்த அதிபராக ஆனான். இது உங்களுக்கு வியப்பளிக்கிறதா? ஆயினும் இது உண்மைதான்! சிறு வயதில் ஆபே என்று அழைக்கப்பட்ட ஆபிரகாம் லிங்கன் வாழ்க்கையில் இதுபோன்ற நம்ப முடியாத சம்பவங்கள் நிறைய உண்டு. ஆபிரகாம் லிங்கனின் தந்தையின் பெயர் தாமஸ் லிங்கன். தன் பிள்ளைகளைப் படிக்க வைப்பதில் அவருக்கு ஆர்வம் இல்லை. அதைத் தவிர, அவரது வேலையும் அடிக்கடி இடம் மாறிக்கொண்டிருந்தது. அப்போதெல்லாம் புதிய இடங்களுக்குக் குடிபெயரவேண்டியிருக்கும். தந்தையால் எந்த இடத்திலும் நிலைத்திருக்க முடியவில்லை. இந்தக் காரணங்களால் ஆபேவுக்கு இளம் பருவத்தில் கல்வி கிடைக்கவில்லை. அவன் மிகவும் கஷ்டப்பட்டு தானே படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டான். படிக்கத் தெரிந்தவுடன் ஆபே, புத்தகங்கள் மீது ஆர்வம் கொண்டான். ஆனால் புத்தகங்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக இருந்தது. எனவே,…

Read More