You are here

முதலை ஏன் கோழிகளைத் தின்பதில்லை?

ஒரு கோழி தினமும் ஆற்றங்கரைக்கு வந்து தண்ணீர் குடித்துச் செல்லும். ஒரு நாள் அது வழக்கம்போல ஆற்றங்கரையில் தண்ணீர் குடித்துக்கொண்டிருக்கும்போது, ஒரு முதலை வந்து அதைத் தின்னப்பார்த்தது. கோழி பயந்து கத்தியது: “ஐயோ, என்னைத் தின்றுவிடாதே, அண்ணே!” உடனே முதலை சொன்னது: “கோழியே, நீ என்னை அண்ணன் என்று அழைத்த காரணத்தால் என் தங்கையாகிவிட்டாய்! தங்கையாகிவிட்ட கோழியைத் தின்பது எங்கள் முதலை இனத்துக்கே இழிவாகும். எனவே நீ போய்விடு!” “மிகவும் நன்றி, அண்ணே!” என்று சொல்லி அந்தக் கோழியும் சென்றது. அடுத்த நாளும் அந்தக் கோழி தண்ணீர் குடிக்க வந்தது. முதலைக்கோ, தாங்க முடியாத பசி. அது கோழியின் மீது பாய்ந்து கொல்ல முற்பட்டது. உடனே கோழி அலறியது: “என்ன காரியம் செய்கிறாய், அண்ணே! நீ என் அன்பிற்குரிய மூத்த சகோதரன் அல்லவா! இந்த உலகில் எங்காவது…

Read More

அறிஞர்களின் பொன்மொழிகள்

மனித மனதில் தோன்றும் நல்ல எண்ணங்களே இந்த உலகின் மிகச் சிறந்த வைரங்கள். – பீட்டர் மார்சன் நண்பனோடு அளவோடு நட்புகொள், நாளை அவனே உனக்கு விரோதியாகலாம். எதிரியிடம் அளவாகப் பகைமைகொள், ஏனெனில் நாளை அவன் உனக்கு நண்பனாகக்கூடும். – நபிகள் நாயகம் நான் வாழ்வதற்காக என் பெற்றோர்களுக்கு கடமைப்பட்டுள்ளேன். ஆனால், நான் முறையாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்கே பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். – மாவீரன் அலெக்ஸாண்டர் சிறுசிறு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு செய்தால் எந்த வேலையும் கஷ்டமாக இருக்காது. – ஹென்றி போர்ட் கடைசி நேரத்தில் அவசர அவசரமாக ஓடிச் செல்வதில் பயனில்லை. முன்கூட்டியே புறப்பட்டிருக்கவேண்டும் என்பதுதான் முக்கியம். – பான்டெய்ன் தவறுகளை ஒத்துக்கொள்ளும் தைரியமும், அவற்றை விரைவில் திருத்திக்கொள்வதற்கான வலிமையும்தான் வெற்றி பெறுவதற்கான குணங்கள். – மாமேதை லெனின் ஒவ்வொரு நல்ல செயலும், நல்ல எண்ணமும் முகத்துக்கு…

Read More

குழந்தையின் சிரிப்பு கவித்தம்பி

கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தார் நகரப் பேருந்தின் உள்ளேயொரு தாத்தா. பச்சிளம் குழந்தையை மடியிலிருத்தி பெண்மணியொருத்தி பக்கத்திலிருந்தாள். கோடை வெயிலின் வெப்பத்திலே குலுங்கிப் பாய்ந்த பேருந்தில் உயரக் கம்பியைப் பிடித்தபடி துன்பப் பயணம் செய்தார் தாத்தா. அடிக்கடி ஏறும் மக்கள் கூட்டம் தம்மைத்தாமே உள்ளே திணித்தது. வியர்வையில் வேகும் மக்களைப் பிளந்து தாத்தா அருகே நடத்துநர் வந்தார். டிக்கெட் வாங்க பிடியை விட்டு சட்டைப் பையில் சில்லறை தேட அந்தோ, குலுங்கிற்று பேருந்து, குழந்தை மீது சரிந்தார் தாத்தா! “அய்யோ குழந்தை!” என்றே கூவி ஆயிரம் கரங்கள் அரணாய் நீண்டன. “அடடா!” என்றே தாத்தாவைத் தாங்கின. குழந்தையைக் காக்கும் கைகள் மீதில் தடுமாறிச் சாய்ந்த தாத்தா நிமிர்ந்தார்! திடுக்கிட்டு விழித்த குழந்தை சிரித்தது, தாத்தா சிரித்தார் – பார்த்து நின்ற பலரும் சிரித்தனர். வெப்பம் அகன்று சற்றே…

Read More
மற்றவை 

குட்டி அலை

மலையாள நெடுங்கதை டாக்டர் கே. ஸ்ரீகுமார் தமிழில்: யூமா வாசுகி “செல்ல மகனே, கொஞ்சம் சீக்கிரம் வாடா. ஒன்னப் பாக்காம இந்த அம்மா நெஞ்சு வலிக்குதுடா…” 1 “மகனே, கொஞ்சம் பாத்து மெதுவாப் போ… நானும் ஒன்னோட வர்றேன்…” “ரொம்ப தூரத்துக்குப் போகாதடான்னு சொன்னா கேக்குறானா இவன்? சொல்லிச் சொல்லி என் தொண்டத்தண்ணியே வத்திப்போச்சி. செல்லங்குடுத்து செல்லங்குடுத்து குறும்புத்தனம் ரொம்ப அதிகமாப்போச்சி இவனுக்கு. ஒத்தப் புள்ளயா இருந்தாலும் கண்டிச்சி வளக்கணும்னு பெரியவங்க சொல்வாங்க. இங்கே வாடான்னு சொன்னா, இவன் நேரா அங்கே போவான். சொல்பேச்சே கேக்கறதில்ல…” அம்மா அலைக்கு ஒரே சலிப்பு. குட்டி அலை எதையும் பொருட்படுத்தாமல் குட்டிக்கரணம் போட்டு ஆடிப் பாடிப் போய்க்கொண்டிருந்தது. “இப்ப ரொம்ப தூரத்துல ஒரு மின்னல் பொட்டுபோலத் தெரியிறான் அவன். என்னதான் சொன்னாலும் கொஞ்சங்கூட காது குடுத்துக் கேக்கமாட்டான். பக்கத்துல எங்கயாச்சும்…

Read More

இந்த ஆண்டவரின் மன்றாட்டை கேட்டருளும் மானிடரே

ஆயிஷா இரா. நடராசன் கனடாவிலிருந்து நாம் துவங்கலாம். எதற்கும் ஓர் ஆரம்பம் வேண்டுமே. அங்கே தாமஸ் ஃபிஷர் நூலகம் உள்ளது. உலகின் அற்புதங்களில் அது ஒன்று. நியூட்டனின் பிரின்ஸிபியா புத்தகத்தின் பிரதான கையெழுத்து பிரதி அங்கேதான் வைக்கப்பட்டுள்ளது. அந்த நூலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இன்னொரு கையெழுத்து மூலப்பிரதி, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. சமீபத்தில் அந்த நூலகத்திற்கு ரிச்சர்ட் டாக்கின்ஸ் வருகை புரிந்தார். ஒரு குறிப்பிட்ட புத்தகத்தின் பெயரைச் சொல்லி மூல கையெழுத்து பிரதி பற்றி விசாரிக்கிறார். ஏற்கெனவே இந்த புத்தகத்தின் மூலப் பிரதியைத் தேடி அவர் டென்மார்க் கோபன்ஹேகன் நகரின் டானிஷ் ராயல் நூலகத்திற்கும் நேரில் விஜயம் செய்திருக்கிறார். அங்கே அது இல்லை. ஆனால் அவர் தேடிய மூலக் கையெழுத்துப் பிரதி கனடா, தாமஸ் ஃபிஷர் நூலகத்தில் கிடைத்தது. நூலின் தலைப்பு ‘தி மாஸ்டர் அண்ட் மர்காரிட்டா….

Read More

காலமெல்லாம் புலவோரின் வாயில் துதியறிவாய்…

ச.சுப்பாராவ் ‘உன் நண்பர்களைப் பற்றிச் சொல். நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்’ என்பது வாட்ஸ்அப் காலத்திற்கு முன்னாலேயே சொல்லப்பட்ட மூதுரை. எனவே அவரது நண்பர்களைப் பற்றி முதலில். டி.கே.சிதம்பரநாத முதலியார் அவரது நண்பர். மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை தனது மனோன்மணியத்தில் திருத்தங்கள் செய்து தரும்படி கேட்ட நண்பர். அவர் வீட்டிற்கு வந்து அவரது பணிகளைப் பற்றி விசாரித்துவிட்டு அவர் மீது வங்கமொழியில் ஒரு பாடலைப் பாடிச் சென்றார் தாகூர். நீர் இளைஞர்… நானோ முதியவன்.. உங்களைப் போல் என்னால் செயல்பட முடியவில்லையே.. என்றும், பாரி, அவனது மகளிற், (ஆம், எழுதியவர் இந்தற் தான் போட்டுள்ளார்) கபிலர்; பிசிராந்தையார் பற்றி கட்டுரை ஒன்று எழுதுகிறேன்; அவர்கள் பற்றிய கர்ணபரம்பரைக் கதைகள் வேண்டும் என்றும் ஆக்ஸ்போர்டிலிருந்து இவருக்குக் கடிதம் எழுதுகிறார் ஜி.யு.போப். கடிதத்திற்கு நடுவில் ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப…

Read More

கிளிப் பேச்சு

தொகுப்பு: ஜார்ஜ் அலெக்ஸ் அதிசயப் பாட்டு ‘கிளப் விங்டு மானக்கின்’ (Club Winged Manakin) எனும் பறவையின் பாட்டு மிகவும் அபூர்வமானதாகும். வேறு எந்தப் பறவைக்கும் இல்லாத ஒரு சிறப்புத் தன்மை இந்தப் பறவையின் பாட்டுக்கு உண்டு. அது என்னவென்றால், இந்தப் பறவை தன் வாயால் பாடுவதில்லை. தன் இறக்கைகளால் ஒலி எழுப்புகிறது. இந்த ஒலி உரத்த ஓசையுடன் ஒரே விதமாக இருக்கும். தன் தோழியைப் பார்த்த உடனே மானக்கின் ஆண் பறவை, தன் இரண்டு இறக்கைகளையும் பட்டென்று மேல் நோக்கி விரிக்கும். அப்போது இறக்கைகளில் ஏற்படும் அதிர்வு, பாட்டாக வெளிவரும். இந்தப் பறவை இறக்கை உயர்த்துவதும் பாடுவதும் சில நொடிகளுக்குள் முடிந்துவிடும். இது இப்படியே விட்டு விட்டுப் பாடிக்கொண்டேயிருக்கும். இந்தப் பறவைகள் கொளம்பியா மற்றும் ஈக்வடார் வனங்களில் வசிக்கின்றன. மனிதனுக்கு வால் இருக்கிறதா? நான்கு வாரம்…

Read More
மற்றவை 

கண்கள்

மாதவன் வெளிச்சம் குறைவான இடத்தில் படிப்பதோ, வேலை செய்வதோ கூடாது. மங்கிய வெளிச்சத்தில் படிக்கும்போது நம் கண்களுக்கு அதிக சிரமமாக இருக்கும். அதனால் கண்கள் சோர்வடையும். சூரியனுக்கு நேராக ஒருபோதும் வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. புற ஊதாக் கதிர்கள் (Ultra Violet) நேரடியாகக் கண்களின் மீது பட்டால், அது கண்களின் விழித்திரையை (Retina) கடுமையாகப் பாதிக்கும். கணிப்பொறித் திரையையோ, கைப்பேசித் திரையையோ நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது. வெறும் கண்களால் நீண்ட நேரம் இப்படிப் பார்த்துக்கொண்டிருந்தால் கண்களில் உள்ள நீர் வற்றிப்போகும். இது கண்களுக்கும் பார்வைத் திறனுக்கும் கேடு விளைவிக்கும். கண்கள் ஆரோக்கியத்துடன் இருக்க நம் உணவில் பழங்களும் காய்கறிகளும் முட்டையும் பாலும் சேர்த்துக்கொள்ளவேண்டும். கண்களில் ஏதும் அரிப்பு ஏற்பட்டால் உடனே கண்களைப் பலமாகக் கசக்கிக்கொள்ளக் கூடாது. அப்படிச் செய்தால் கண்களில் உள்ள அணுக்கள் சேதமடையும்….

Read More

வண்ண நதி

தொகுப்பு: ஜார்ஜ் அலெக்ஸ் வண்ண நதி கொலம்பியாவில், மேடா (Meta) மாகாணத்தில் ‘கானோ கிரிஸ்டல்ஸ்’ (Cano cristales river) எனும் நதி இருக்கிறது. இந்த நதியின் சிறப்புத் தன்மை என்ன தெரியுமா? செப்டம்பர் நவம்பர் மாதங்களில் இந்த நதி பல நிறங்களில் ஓடும். இந்த நதியை, ‘திரவ வானவில்’ (Liquid Rainbow) என்றும் ‘வண்ணங்களின் நதி’ (River of colors) என்றும் குறிப்பிடுகிறார்கள். மஞ்சள், சிவப்பு, பச்சை, நீலம், கருப்பு ஆகிய நிறங்களில் இந்த நதியைப் பார்க்க முடியும். மழைக்காலத்துக்குப் பிறகு ஏற்படும் இந்த நிறங்கள் நதியை மிகவும் அழகாக்குகின்றன. மழைக்குப் பிறகு ‘மக்கரீனியா க்லாவிகெரா’ (Macarena Clavigera) எனும் சிவப்பு நீர்த் தாவரம் நதியில் நிறைய உண்டாகிறது. இந்த தாவரம்தான் நதியில் நிற வித்தியாசம் ஏற்படுத்துகிறது. மூங்கில் பாலம் நாட்டின் முன்னேற்றத்துக்கு அடிப்படையான விஷயங்களில் பாலங்களும்…

Read More

பொன்மொழிகள்

முதியோர்களின் அறிவுரைகள் குளிர்காலச் சூரியன்போல சுடாது ஒளிரும். – அ. எர்மான் கட்டுப்பாடும் கவனமும் இன்றி செய்யத் தகாதவற்றைச் செய்பவனும், செய்யத் தக்கவற்றை செய்யாது இருப்பவனும் பெரிய துன்பத்துக்கு ஆளாவான் – புத்தர் உண்மையைக் கடைப்பிடிக்கும் மனிதன் அதிர்ஷ்டமில்லாதவனாக இருந்தாலும் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவான் – அரிஸ்டாட்டில் நீ ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலையே வராது. நீ அறிவாளியாக இருந்தால் குழப்பமே வராது. நீ துணிவுள்ளவனாக இருந்தால் அச்சம் ஏற்படாது – கன்ஃபூசியஸ் வெறும் அதிர்ஷ்டத்தை மட்டும் தேடி ஓடும்போதுதான் நாம் கால்கள் இடறி விழுந்துவிடுகிறோம் – ஷேக்ஸ்பியர் கற்பனை நம் வாழ்க்கையை உயர்வடையச் செய்கிறது – எமர்சன் நான் அனைத்தையும் நேசிக்கிறேன். அதனால்தான் என்னால் அனைத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது – டால்ஸ்டாய் சுடர்விட்டுப் பிரகாசிக்கும் விளக்காக இரு. அப்போதுதான் மற்ற விளக்குகளை ஏற்றி வைக்கலாம்…

Read More