You are here
Jeyandhan Book மற்றவை 

ஜெயந்தன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – தொ. அகரமுதல்வன்

ஜெயந்தன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – தொ. அகரமுதல்வன் பதிப்பகம் –  டிஸ்கவரி புக்பேலஸ் விலை. ரூ.200 ஜெயந்தன் எனும் சிறுகதை ஜாம்பவானை இளைய தலைமுறை அவசியம் வாசிக்க வேண்டும். தமிழ்ச் சிறுகதைக்கு எழுபதுகளில் அறிமுகமானவர் ஜெயந்தன். ஜெயகாந்தனை ஜி. நாகராஜனை சேர்த்து குழைத்த சுவை. ஆனால் எதில் மேலிட இருக்கும் என்பது ஒரு திரில். இத்தொகுப்பில் உள்ள 18 கதைகளையும் வாசித்து எடுப்பது ஒரு பயிற்சிப் பட்டறைபோல வாழ்க்கையை அதன் முடைநாற்றங்களோடும் ஜீவமரணப் போராட்டங்களோடும் நேருக்கு நேர் சந்திக்கும் அனுபவம். ஜெயந்தனின் கதைகளில் ஒரு வகை ஆழ்மனவெளி புதையுண்டு இருப்பதை நாம் காணலாம். ஆதிக்கங்கள் நிறைந்திருக்கும் மிகவும் வெட்கக்கேடான சமூகத்தையும், அதையே தனக்கு ஆதரவாக மாற்றிக் கொள்ளும் ஆணவத்தை, கவுரவத்தை பகடி செய்வது அவருக்கே வந்த கலை. சம்மதங்கள், மனச்சாய்வு, துக்கம் போன்ற கதைகளை வாசித்தால் பல நாட்கள்…

Read More
Kavipithan மற்றவை 

பாட்டிகள் பாட்டிகளாக இல்லை – கவிப்பித்தன்

பாட்டிகள் பாட்டிகளாக இல்லை – கவிப்பித்தன் எதிர்பாரா தருணத்தில் மஞ்சள் வெயிலோடு பெய்கிற அபூர்வமான மாலை நேரத்து மழையைப் போல… அந்த ‘கதைத் தாத்தா’ எங்கள் ஊருக்கு வருகிற ஒவ்வொரு முறையும் திருவிழா நாளின் குதூகலத்தோடு கொண்டாடித் தீர்ப்போம். வெள்ளை நிற அரைக்கைச் சட்டையும், கணுக்கால் தெரிய தூக்கிக் கட்டிய வெள்ளை வேட்டியுமாக தாங்கித் தாங்கி நடந்தபடி… பின்மாலையில்… திடீர் விருந்தாளியைப் போல ஊருக்குள் நுழைவார் தாத்தா. எப்போது வந்தாலும் ஊரின் நடுவில் இருக்கிற ஏட்டுத் தாத்தாவின் வீட்டுத் திண்ணையில் தான் உட்காருவார். அவரைப் பார்த்ததுமே குஷி பிறந்துவிடும் எங்களுக்கு. பள்ளிக்கூடம் போகிற, போகாத எல்லா பிள்ளைகளும் ஒன்றாக சேர்ந்து அவருக்காக சாப்பாடு வாங்க… விளக்குவைத்த பிறகு இரண்டு அலுமினிய குண்டான்களைத் தூக்கிக் கொண்டு வீடு வீடாக ஓடுவோம். ஒரு குண்டானில் களியும், இன்னொரு குண்டானில் குழம்பும் வாங்கிக்கொள்வோம்….

Read More
Yuma Vasugi மற்றவை 

விருது பெறுகிறார் யூமா வாசுகி – சா. கந்தசாமி

இந்திய அரசு இருபத்திரண்டு மொழிகளை இந்திய மொழிகள் என்று அங்கீகாரம் செய்துள்ளது. அரசியல் சாசன அங்கீகாரம் இல்லாத ஆங்கிலம், ராஜஸ்தானி மொழிகளையும் சேர்த்துக் கொண்டு சாகித்ய அகாதமி இலக்கியப் பரிசு. மொழிபெயர்ப்பு பரிசுகள் வழங்கி வருகிறது. இந்த ஆண்டு தமிழ் மொழி பெயர்ப்புக்காகப் பரிசு பெறும் மொழி பெயர்ப்பாளர் மாரிமுத்து என்ற இயற்பெயர் கொண்ட யூமா வாசுகி. அவர் படைப்பு எழுத்தாளர். ரத்த உறவு என்று நாவல் எழுதி பரவலாக மதிக்கப்படுகிறவர். கும்பகோணம் கவின் கலைக் கல்லூரியில் ஓவியம் படித்து பட்டம் வாங்கியவர். பத்தாண்டுகளுக்கு மேலாக மலையாளத்தில் இருந்து சிறுகதைகள், நாவல்கள், சிறுவர் கதைகள் என்று பலவற்றையும் மொழி பெயர்த்து வருகிறார். கஸாக்கின் இதிகாசம் என்று மலையாள மொழியில் ஓ.வி. விஜயன் எழுதிய நாவலை தமிழில் மொழி பெயர்த்ததற்காக சாகித்ய அகாதமி மொழி பெயர்ப்பாளர் விருதை பெறுகிறார்….

Read More
mirdad-book மற்றவை 

சிந்தனை உலகில் முதலும் முடிவுமான ஞானநூல் – கவிஞர் புவியரசு

மிகெய்ல் நைமியின்      மிர்தாதின் புத்தகம் உலக ஞான நூல்களில் தலை சிறந்ததான இந்தப் படைப்பின் பெயரே, ‘மிர்தாதின் புத்தகம்தான். பத்தாண்டுகளுக்கு மேலாக, வெளிவந்த நாளிலிருந்து அடக்கமான அலையடிப்பை நிகழ்த்திக் கொண்டிருக்கும் இந்தப் படைப்பிற்கு மேலான நூல் இல்லை என்கிறார் ஓஷோ. நீண்ட ஞான தாகம் கொண்டவர்களின் தவிப்பை நிரந்தரமாகப் போக்கவல்ல சிந்தனைக் களஞ்சியம் இது.  உலகின் படைப்பாளிகள் அனைவரும் தமது மனதின் அடியாழத்தைப் படம் பிடித்துக் காட்டவே ஆசைப்படுகிறார்கள். அவர்கள் அனைவரும் தோற்றுப் போனார்கள். இவன் ஒருவன் மட்டுமே அதில் வெற்றி பெற்றான் என்கிறார் ஓஷோ. இந்த மகத்தான நூலைப் படைத்தது, எந்த இந்திய மகரிஷியும் அல்ல. இதன் ஆசிரியர் ‘மிகெல் நையி’ இவர் லெபனான் நாட்டுக்காரர்! கலீல் ஜிப்ரானின் அருமை நண்பர். ஜிப்ரானின் உழைத்தவர். நைமியின் உறவு இல்லாமற் போயிருந்தால் அவன் எப்போதோ…

Read More
அந்தோன் மகரெங்கோவை மற்றவை 

அறிந்து கொள்வோம் அந்தோன் மகரெங்கோவை – அன்வர்

“நீங்கள் வியப்பூட்டும் மனிதர்” அந்தோன் மகரெங்கோவுக்கு மனம் திறந்து எழுதினார் மக்சீம் கார்க்கி. மகரெங்கோ சிறந்த போதனை இயல் நிபுணர். போர், வறுமை போன்ற இடிபாடுகளுக்கிடையே புதிய சோவியத் ருஷ்யாவை நிர்மாணித்தவர்களில் ஒருவராக விளங்கினார். மிக மிகக் கடினமான காலகட்டத்தில் மனத்தெளிவுடன் பணியாற்றி நூற்றுக்கணக்கான அகதிச் சிறுவர் சிறுமியரின் உள்ளங்களில் அவர்கள் இழந்துவிட்ட மனித நம்பிக்கையை மீண்டும் தளிர்க்கச் செய்தார். அவர் அற்புதமான எழுத்தாளர், ‘வாழ்க்கைப் பாதை’ என்ற அனுபவநயம் சொட்டும் கல்விக் காவியத்தை இயற்றியவர். புது மனிதனை உருவாக்கும் முயற்சியின் மாண்பைத் தெளிவாக்கியவர். 1905-1907ல் நடந்த முதலாவது ருஷ்யப் புரட்சியின் பாதிப்பினால் இளைஞர் மகரெங்கோவின் உலகக் கண்ணோட்டமும், போதனை இயல் கருத்துகளும் மிக விரிவடைந்திருந்தன. தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்த இந்த இளைஞரை மக்சீம் கார்க்கியின் எழுத்துகள் வெகுவாகப் பாதித்திருந்தன. மார்க்சீயப் பிரபஞ்ச உணர்வுடனும் தெளிந்த…

Read More
எளிமையும் தியாகமும் மற்றவை 

எளிமையும் தியாகமும் – பாவண்ணன்

பாடப்புத்தகங்களுக்கு அப்பால் நூலகத்துக்குச் சென்று புத்தகங்களைத் தேடிப் படிக்கும் ஆர்வத்தை எங்கள் பள்ளிப் பருவத்திலேயே விதைத்த தமிழாசிரியர்களில் ஒருவர் ராதாகிருஷ்ணன். ஒரு வரியைச் சொல்லி, அவ்வரியை எங்கள் மனத்தில் பதியவைக்க ஒரு வகுப்பு நேரம் முழுதும் ஏராளமான விளக்கங்களையும் கதைகளையும் தங்குதடையில்லாமல் அடுக்கிக்கொண்டே செல்லும் ஆற்றல் அவருக்கிருந்தது. படிப்பதனால் என்ன பயன் என்னும் கேள்வியை முன்வைத்து ஒருநாள் எங்களோடு உரையாடினார் அவர். “எழுதப்பட்ட புத்தகம் என்பது ஒரு சிந்தனை. அதைப் படிக்கும்போது அந்தச் சிந்தனை நம்மை வந்தடைகிறது. அதைப்பற்றி யோசிப்பதன் வழியாகவும் விவாதிப்பதன் வழியாகவும் நாம் அதை நம்முடைய சிந்தனையாக ஆக்கிக்கொள்கிறோம். பிறகு நாம் அதைப்பற்றி மற்றவர்களோடு பகிர்ந்துகொள்கிறோம்” என்றார். தொடர்ந்து “நம் மனம் ஒரு பெரிய அணைக்கட்டுபோல. ஒரு பக்கம் ஆற்றிலிருந்து தண்ணீர்வரத்தும் இருக்கவேண்டும். இன்னொரு பக்கம் மதகிலிருந்து வெளியேறிச் சென்றபடியும் இருக்கவேண்டும்” என்று சொன்னார்….

Read More
மற்றவை 

…என்றால் என்ன? -ரஃபீக் அகமது

குதிரைச் சக்தி என்றால் என்ன? மோட்டார்கள் மற்றும் எஞ்சின்களின் சக்தியை குதிரைச் சக்தி (hp) எனும் அலகால் (unit) குறிப்பிடுகிறோம். இந்தப் பெயர் எப்படி வந்தது தெரியுமா? ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் வாட் (James watt) எனும் விஞ்ஞானிதான் இந்தக் கருத்தை வெளிப்படுத்தினார். ஒரு குதிரைச் சக்தி என்பது, 746 வாட்டுக்குச் சமம். (Watt என்பது மின் சக்தி அல்லது திறனை அளக்கும் ஓர் அளவையாகும்). ஜேம்ஸ் வாட், ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் குதிரைகள் செய்யும் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு குதிரையின் செயல் திறன் எந்தளவு இருக்கும் என்று தெரிந்துகொள்ள அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. இப்படி உற்றுக் கவனித்ததுதான், ‘குதிரைச் சக்தி’ எனும் கருத்துக்கு அவரை இட்டுச் சென்றது. 33,000 பவுண்டு (14,968.5 கிலோ கிராம்) எடையை ஒரு நிமிடத்தில் தூக்குவதற்குத் தேவையான சக்திதான் ஒரு குதிரைச்…

Read More

உப்பும் தண்ணீரும் – அன்வர் அலி

புத்தர் ஒரு கிராமத்தில் தங்கியிருந்தார். அப்போது அவரைப் பார்ப்பதற்கு ஒரு இளைஞன் வந்தான். அவனுக்கு வயது இருபத்து ஐந்துதான் இருக்கும். அவனது கண்கள் கலங்கியிருந்தன. சோர்ந்த உடலுடனும் துயரமான முகத்துடனும் காணப்பட்டான். வெகு தொலைவு நடந்து வந்த அவன், புத்தரைப் பார்த்த உடனே கதறி அழுதான். புத்தர் கனிவுடன் கேட்டார்: “சகோதரா, ஏன் இப்படி அழுகிறாய்? உன் துன்பத்தை என்னிடம் சொல். என்னிடம் பகிர்ந்துகொள்வது உன் மனதுக்குச் சற்று ஆறுதலாக இருக்கும்.” இளைஞன் தயங்கித் தயங்கிச் சொன்னான்: “பகவானே, என் வாழ்க்கையில் நான் எல்லையற்ற துன்பங்களை அனுபவித்துவருகிறேன். எதை எடுத்தாலும் தோல்விதான். தாங்க முடியாத துயரம். ஆதரவுக்கு என்று எனக்கு யாருமில்லை. என் மனது மிகவும் பலவீனமாகிவிட்டது. நான் எப்படி இந்த உலகத்தில் வாழ்வது? எனக்கு ஒரு வழி சொல்லுங்கள். உங்களைப் பார்த்து முறையிடுவதற்காகத்தான் பல மைல்…

Read More
மற்றவை 

நிலைபெற்ற நினைவுகள்

ச.சுப்பாராவ் ஆலிவர் கோல்ட்ஸ்மித் ஐரோப்பா முழுவதும் நடந்தான். கார்க்கி ரஷ்யா முழுவதையும் தன் கால்களால் அளந்தான். முசோலினி நடந்தேதான் ரோம் நகரை அடைந்தான் என்று படித்திருந்த அந்தப் பையன் எழுத்தாளனாகும் பெரும் கனவுடன் சென்னைக்கு நடந்தே போவது என்று தீர்மானித்தான். திருநெல்வேலியிலிருந்து சென்னை சுமார் 400 மைல். தினமும் 30 மைல் நடந்தால் 14 நாட்களில் சென்னையை அடைந்து விடலாம் என்று கணக்கிட்டு 1942 மே மாதம் 25ம் தேதி கிளம்பினான். பையில் 2 வேட்டி, 2 சட்டை, 2 துண்டு, எஸ்எஸ்எல்சி சான்றிதழ், சில புத்தகங்கள், கொஞ்சம் வெற்றுத் தாள்கள், ஒரு பேனா. முதல் நாள் கோவில்பட்டி, அடுத்தநாள் விருதுநகர், அடுத்த நாள் மதுரை. ஆனால், அங்கிருந்து விதி அவனை புதுக்கோட்டைக்கு அனுப்பியது. திருமகள் பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்தான். இப்படி நடந்து நடந்தே மதுரை வரை…

Read More

‘கற்பித்தலில் பயிற்சியும் – அணுகுமுறையும் மாற்றப்பட வேண்டும்’

வ. கீதா தமிழகத்தில் கல்வியிலும், பள்ளியிலும், பாடப்புத்தகத்திலும், கற்பித்தலிலும் ஒரு நல்ல மாற்றம் வரப்போவது போன்ற நம்பிக்கை மக்களிடையே பரவியுள்ளது. தமிழக அரசு அதற்கான முயற்சிகள் செயல்பாடுகளைத் துவங்கியதுதான் அதற்கான காரணமாக இருந்தது. இச்சமயத்தில் தமிழகத்தில் தொடர்செயல்பாடாக இல்லாவிட்டாலும் தொடர்ந்து சில செயல்பாடுகள் கல்வியைக் காப்பாற்றிக்கொண்டு வருவதை மறுக்கமுடியாது. அதுபற்றி வ. கீதா அவர்களுடன் நடந்த உரையாடலின் தொகுப்பு. தமிழகத்தில் பள்ளிக் கல்வி கல்விக்காக தற்பொழுது எடுக்கப்பட்டுவரும் சீர்திருத்த முயற்சிகள், குறிப்பாகப் பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சிகள் வரவேற்கத்தக்கவை. கல்வி, அறிவியல், உளவியல்தேவை ஆகியவற்றை மனதில் வைத்து அனுபவமுள்ள கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் போன்றோரை இணைத்து இம்முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் இதுபோன்ற கல்விபற்றிய உரையாடல் தொடர்ந்து இருந்துள்ளதா என்ற கேள்வி வருகிறது. அப்படி அதைப் பார்க்கும்பொழுது,அகில இந்திய அளவில், கல்வியில் மாற்றம் வரும்பொழுது அதற்கான கருத்தியல்…

Read More