You are here

வாசித்ததில் யோசித்தது

அடிமை டாக்டர் அம்பேத்கர் | என்சிபிஹெச் உலக அளவில் உள்ள அடிமை முறை வேறு சாதியப்படி நிலை வேறு என வாதிட்ட இந்து மத துதிபாடிகளுக்கு அண்ணல் அம்பேத்கார் தரும் பதிலடி இந்த உரை. உண்மையில் இரண்டையும் ஆய்வுக்கு உட்படுத்தி சாதி முறையே மிகக்கேடானது. கொடுங்கோன்மை மிக்கது என உலகிற்கு எடுத்து வைக்கிறார். சமூக ஆர்வலர்கள் உட்பட அனைவருமே வாசிக்க வேண்டும். சங்க காலத்து நாணயங்கள் இரா. கிருஷ்ணமூர்த்தி, தினமலர் இது ஆங்கில நூல். இருந்தும் நமது புதையலில் இடம் பெறுகிறது. பண்டை கால நாணய புழக்கத்தை உலகிற்கே அறிமுகம் செய்தது தமிழ் மண் தான் என்பதை ஆய்வின்வழி நிறுவி அசத்துகிறார் இரா. கிருஷ்ணமூர்த்தி, சங்க கால நாணயங்கள் படங்களோடு நூலை அழகுப் படுத்தியிருப்பது தனி முத்திரை. ஆராய்ச்சி நூல் என ஒதுக்க வேண்டியதில்லை. ரொம்ப சரளமாக…

Read More

வாசித்ததில் யோசித்தது

 ஆயிஷா. இரா. நடராசன் 1. சிங்கார வேலரின் சிந்தனைக் கட்டுரைகள் தொ: பா. வீரமணி, சாகித்ய அகாடமி தோழர் சிங்கார வேலரின் 42 பிரதானக் கட்டுரைகளின் புதிய தொகுதி இது. என்ன அற்புதம்!` எளிமையான மொழியாளுமை! சாதாரண மனிதர்களின் அப்பாவிப் பார்வையை விஞ்ஞானமயமாக்கும் மந்திர சக்தி இந்த தென்னக மார்க்ஸ்க்கு எப்படி கைவந்தது. கடவுள் என்றால் என்ன? பொது உடைமையைப் புரிந்து கொள்வோம்: விஞ்ஞானக் குறிப்புகள்; விஞ்ஞானமும் மூட நம்பிக்கையும்; சோவியத் ரஷ்யாவின் நீதிமுறை என ஒவ்வொன்றும் இன்றும்கூட நம் கண்களைத் திறக்கும் அரிய திறவுகோல்களாக மிளிர்கின்றன. இவற்றைப் பள்ளிகளில் போதித்தாலே போதும் என மனம் பதறுகிறது. 2. விடுதலையும் சோஷலிஸமும் சேகுவேரா, தமிழில் – கமலாலயன், பாரதிபுத்தகாலயம் சேவின் நன்கு அறியப்பட்ட, தனித்துவமிக்க படைப்புகள் இந்த நூலில் அறிமுகம் ஆகின்றன. அவர் கியூபா வேளாண் தேசிய…

Read More

வாசித்ததில் யோசித்தது

1. கசக்கும் கல்வியும் கற்கண்டாகும் பிரியசகி ஜோசப் ஜெயராஜ் – அரும்பு பதிப்பகம் ஆசிரியர்கள் தங்கள் பாடத்தை, கல்வியை புரிந்துகொள்வதைவிட குழந்தைகளை புரிந்துகொண்டால் பெரும்பான்மை பிரச்சனை தீர்த்து விடும். கற்றல் குறைபாடுகள் பல டிஸ்லெக்ஸியா, டிஸ்கிராபியா, டிஸ்கால் குலியா, உட்பட ஏறக்குறைய பன்னிரண்டு வகை பிரச்சனைகளை விரிவாக ஆராயும் நூல் இது. கல்வியின் பல்வேறு பரிமாணங்களைத் தொட்டுச் செல்லும் ஆசிரியர்களின் அவசியமான வழிகாட்டி. 2. தமிழின் பெருமை மூ. ராஜாராம் அல்லயன்ஸ் ஆம்பேனி மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜாராம் தமிழ்மொழி இனம் வளர்ச்சியுற்ற கதையை 71 தலைப்புகளில் அடுக்கிச் சொல்கிறார். ஏராளமான வரலாற்றுச் சான்றுகளை நம்முன் வைக்கிறார். தொல்காப்பியம், சிலப்பதிகாரம் இவற்றோடு விவிலியம், குரான் என ஆதாரங்கள் அதிசயிக்க வைக்கின்றன. படங்கள் நம்மை வீழ்த்துகின்றன. பிறமொழிகளில் வெளிவந்தால் நம்பெருமை இன்றும் எட்டுத்திக்கும் போய்ச் சேருமே என மனம்…

Read More

வாசித்ததில் யோசித்தது

கலிலீயோ: அறிவியலின் ஒரு புரட்சி -பேராசிரியர் முருகன் பாரதிபுத்தகாலயம் கலிலீயோவின் வாழ்க்கை அதிலும் முக்கியமாக அறிவியல் சாராத அவரின் வாழ்க்கையை துல்லியமாக தமிழில் படம் பிடித்து காட்டுகிற புத்தகம் கலிலீயோ. இதை எழுதிய பேராசிரியர் முருகன் கலீலியோவின் வாழ்க்கையில் தனிக்கவனம் எடுத்து அதன் பின்புலத்தை ஆராய்ந்து எழுதியுள்ளது பாராட்டுற்குரியது. அதிலும் மிகத்துல்லியமாகவும், ஸ்தூலமாகவும் எழுதியுள்ளது வாசகர்களை அக்காலகட்டத்திற்கு கொண்டு செல்லும் என்பது உண்மை. கலிலீயோவின் வாழ்க்கை வரலாற்றில் கவனம் செலுத்தியதால் அவரின் விஞ்ஞான வாழ்க்கை ஒன்றும் ஆசிரியர் கண்டுகொள்ளாமல் விடவில்லை. அதையும் செவ்வனே செய்திருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். ஆனால் அறிவியல் பின்புலத்தைவிட அவரது வாழ்க்கை வரலாற்றின் மீதுதான் கவனம் செலுத்தியதாக ஆசிரியர் ஒப்புக்கொள்ளவும் செய்கிறார். கலிலீயோ போப்புடன் உரையாடும் நிகழ்ச்சி மற்றும் விசாரணையில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தல் முதலிய உண்மையில் நம் கண்முன் நிகழ்வதைப் போல்…

Read More
வாசித்ததில் யோசித்தது 

வாசித்ததில் யோசித்தது 50க்கு ஐம்பது

1. எழுச்சி தீபங்கள் (இந்திய ஆற்றலின் ஊற்றுக் கண்) ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் (கண்ணதாசன்) அப்துல் கலாமின் குறிப்பிடத் தகுந்த புத்தகங்களில் ஒன்று. நாட்டின் ஜனாதிபதியாய் லட்சக் கணக்கான குழந்தைகளை சந்தித்த கலாம் அதன் பதிவாக இந்த நூலை முன் வைக்கிறார். நேர்த்தியாக மொழிபெயர்த்துள்ளார் மு.சிவலிங்கம். 2.விந்தைமிகு பேரண்டம் டாக்டர் ப.ஐயம் பெருமாள் – கிரேஸ் பப்ளிகேஷன்ஸ், குடந்தை இந்த அற்புதமான அறிவியல் நூலில் பதினைந்தாவது அத்தியாயமாக-இந்திய ஜோதிடவியல் எனும் கட்டுரை உள்ளது. ஜோதிடம் பொய் அறிவியல். ஒரு மனிதனின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது நட்சத்திரக் கூட்டமல்ல…. அவனது அறிவு, தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சிதான் என எழுதும் இடத்தில் தோழர் ஐயம் பெருமாள் வெற்றி அடைகிறார். 3. இனி இவர்களே வே. சண்முகசுந்தரம் – இளைஞர் முழக்கம் கேஃபார் கில்… ஆர்ஃபார் ரேப் எனத் தொடங்கும் இந்த அதிர்ச்சிப்…

Read More
வாசித்ததில் யோசித்தது 

வாசித்ததில் யோசித்தது

ஆயிஷா இரா.நடராசன் 1. கல்வியும் கற்கண்டாகும் கவி.பிரியசகி மற்றும் அருட்பணி ஜோசப் அரும்பு வெளியீடு |ரூ 250. கற்றல்குறைபாடான டிக்லெக்சியா பாதிப்பு குறித்த பாடப்புத்தகம் இது. ஒவ்வொரு ஆசிரியரும் வாசிக்க வேண்டிய நூல். குழந்தைகளுக்குள்ளே ஒளிந்திருக்கும் திறன்களை வெளிக் கொணரவே கல்வி, கல்வி; அவர்களது பலவீனங்களையே சொல்லிக்காட்டி பரிகசிக்கவல்ல… எப்போதாவது வெளிவரும் கல்வி குறித்த நல்ல புத்தகம் இது. 2. எளிமையான சிகரம் எங்கள் நல்லக்கண்ணு கே. ஜீவபாரதி – ஜீவா பதிப்பகம் | ரூ 180 விடுதலைப் போராட்டவீரர், விவசாய சங்கத் தலைவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலையாய தோழர்…. நல்லக்கண்ணு பற்றிய அபூர்வப் பதிவு. கவிஞர்கள், கலைஞர்கள், அமைப்பு, தோழமை உள்ளங்கள், தலைவர்கள் பலரும் அவரைப்பற்றிப் பகிர்ந்துள்ளார்கள்… இன்றும் தன்னை அடித்தள பணிக் குழுவில் ஒருவராக கருதும் மனிதநிலையின் பாடம்… இடது சாரித் தத்துவமாய்…

Read More
Uncategorized வாசித்ததில் யோசித்தது 

கணிணித்தமிழ் களஞ்சியம்

கணிணித்தமிழ் களஞ்சியம் இன்றைய தேதி வரையில் கணிணி உலகின் முன்னேற்றங்களை மிக விரைவாக, மிக எளிமையாக அதுவும் இனிய தமிழ் பெயர்களுடன் படித்து அறியும் வகையில் இந்நூலின் ஆசிரியர் சிறப்பாக தொகுத்துள்ளார். கணிணி உலகம் பற்றி எதுவும் அறியாதவர்கள் கூட இந்நூலை ஒரு முறை படிப்பதன் மூலம் தெளிவு பெற முடியும். நேர்த்தியான கட்டமைப்பு, எழுத்துக்களின் ஒழுங்கமைவு ஆகியவை உயர்தரத்தயாரிப்பை நல்குகிறது. ‘cloud computing’என்பது இன்றும் பலர் அறியாத ஒரு சிறந்த தொழில் நுட்பம். மேகம் எப்படி ஏற்றத்தாழ்வு நோக்காமல் பொழிந்து பயன்படுகிறதோ அதைப்போலவே கணிணிக்கான மென்பொருட்கள் எல்லோருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்ட்டது. இதை ஆசிரியர் தமிழில் ‘மேகக் கணிமை’ என்று விளக்குவது இந்நூலில் இடம் பெற்றுள்ள பல விவரங்களைக் குறிப்பிட இதுவே எடுத்துக்காட்டாகும். தேவையான இடங்களில் பொருத்தமான விளக்கப் படங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அவை…

Read More
வாசித்ததில் யோசித்தது 

விரும்பி வாசித்த விஞ்ஞான நூல்கள் 30

கமலாலயன் 1. கார்ப்பரேட் என்.ஜி.ஓக்களும் புலிகள் காப்பகங்களும் இரா.முருகவேள்  / பாரதி புத்தகாலயம் தென்னை மரத்தின் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறிகட்டிவிடும் என்பதுபோல, ஒரிசாவின் படபகால் கிராமத்திலும் தமிழ்நாட்டின் அட்டப்பாடி பள்ளத்தாக்கிலும் ஜப்பானின் நிதியுதவியோடு மரங்களை நடுவது எதற்காக என்று கேட்டால் – கிடைக்கிற பதில் இது: ‘ஜப்பானுக்கு சுத்தமான காற்று செல்லுமாம்!’  மலைகளிலும் காடுகளிலும் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்த பழங்குடி இனமக்கள், எவ்வித இழப்பீடுமின்றி வெளியே தூக்கி எறியப்படும் அதே சமயம் ‘எகோ டூரிஸத்திற்கான விடுதிகள் அங்கு கட்டப்படுகின்றனவே, அது ஏன்? மனிதர்களற்ற காடு என ஒரு கருதுகோள் உருவான விதம் எப்படி? காடுகளும், புலிகள் போன்ற விலங்குகளும் அழிந்தது பழங்குடி இன மக்களாலா? வனஉரிமைச் சட்டத்தை வனஇலாகா ஏன் எதிர்க்கிறது? கார்பன் வணிகம் நடத்துவதற்காக காடுகளைத் தனியாரும், அரசும், பன்னாட்டு சுற்றுலா நிறுவனங்களும்…

Read More
வாசித்ததில் யோசித்தது 

படித்ததில் பிடித்தது 50:50

ஆயிஷா இரா. நடராசன் 1. சிறகை விரிக்கும் மங்கள்யான்   (கையருகே செவ்வாய்) மயில்சாமி அண்ணாதுரை | தினத்தந்தி பிரசுரம் ராக்கெட் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் தமிழ் எழுத்து நடை ஆச்சரியம் அளிக்கும் ஒன்று. 2013 ல் மங்கள்யான் விண்கலம் நம் மண்ணிலிருந்து புறப்பட்டதிலிருந்து நடக்கும் தொடர் அறிவியல் பயண நுணுக்கங்களை எல்லாருக்கும் புரியும்படி எழுதுவது அவ்வளவு சுலபமல்ல. ஒரு பாப்புலர் அறிவியல் நூலை நம் ராக்கெட் விஞ்ஞானிகளால் எழுதமுடியுமா? தமிழ்வழி கல்விகற்றதால் அது நம் அண்ணாச்சிக்கு கைவந்திருக்கிறது. எரிபொருளை சேதம் செய்யாமல் சிக்கனச் செயல்பாடுகளால் விண்கலம் வெற்றியடைந்ததை விளக்கும் இடமும் செவ்வாய் கிரஹம் குறித்த பல தகவல்கலும் அவற்றை நம் மண்ணோடு ஒப்பிட்டுப் பேசுவதும் நூலின் வெற்றிப்பக்கங்கள். 2. கம்பவனத்தில் ஓர் உலா   சாலமன் பாப்பையா | கவிதா பப்ளிகேஷன் சாலமன் பாப்பையா தன்னோடு பட்டிமன்றம் பேசும்…

Read More
வாசித்ததில் யோசித்தது 

படித்ததில் பிடித்தது

ஆயிஷா இரா.நடராசன் 1. ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் பி.ச.குப்புசாமி / விஜயா பதிப்பகம் ஒரு ஆசிரியர்  தன் வரலாறு எழுதும்போது அது ஆயிரக்கணக்கானவர்கள் பற்றியதாக மாறிவிடும் அதிசயத்தை என்னசொல்ல. மிகக் கடினமான வேலை ஆரம்பப்பள்ளி ஆசிரியர் வேலை. குப்புசாமி சார் தன் கிராமத்துப் பள்ளி அனுபவம் ஒவ்வொன்றாகச் சொல்ல நம் குழந்தைகளின் உலகம் விரிகிறது… அவர்களின் சாகசங்கள் கோபதாபங்கள்… குட்டிக்கனவுகள் ரசனைகள் என இது 206 பக்க சொர்க்கபுரி… அற்புத ஆசிரியர் ஒரு மந்திரக்காரர்… குழந்தைகளின் நம்பிக்கை பெறுவது ஊழியத்தைவிட முக்கியம் என வாழ்ந்தவர் குப்புசாமி சார்… அவசியம் ஆசிரியர்கள் படிக்கவேண்டிய பொக்கிஷம் இது. 2. புத்தக தேவதையின் கதை பேரா.எஸ்.சிவதாஸ் (யூமா வாசுகி)                 புக்ஸ் ஃபார் சில்ரன் 2003ல் இராக்கின் பாஸ்ரா நகரத்தை அமெரிக்கப் படைகள் வானிலிருந்து…

Read More