வாசகர்கள் கருத்து

எழுத்தாளர்களை உருவாக்க எங்கும் பயிற்சி வகுப்போ, பட்டயப் படிப்போ இருப்பதாகத் தெரியவில்லை. (பத்திரிக்கையாளராக, படைப்பாளியாக விஷ§வல் கம்யூனிகேஷன், இதழியல் படிப்புக்கள் இருப்பது வேறு விஷயம்.) வருவாய் போதாத தொழில் என்பதால் எழுத்தாளரைக் குடும்பத்திலும் அங்கீகரிப்பதில்லை. இந்நிலையில் எழுத்தாளராகும் விதம், அதற்கான வாழ்வியல் சூழலை உருவாக்கும் முறை, சக எழுத்தாளர்களோடு பழகும் தன்மையென அஞ்சல் வழி கல்விபோல கற்றுத் தரும் பகுதிகளாக முதல் பிரவேசம், என் சக பயணிகள், புத்தகம் சூழ்ந்த வீடு தொடர்கள் அமைகின்றன. அ. யாழினிபர்வதம், சென்னை. புதிய புத்தகம் பேசுது, அக்.13 இதழ் கிடைத்தது. இவ்விதழ் விழிப்புணர்வு கொள்ள வைக்கும் அறிவியல் சிந்தனைகளை உள்ளடக்கி வெளிவந்திருக்கிறது. அறிவியல் படிப்பும் அறிவியல் சிந்தனையும் தலையங்கம் இத்தருணத்தில் மிக அவசியமாகப் படுகிறது. பெரிய படிப்பு படித்தவர்களே இன்று மூட நம்பிக்கையில் மூழ்கி முடமாகிக் கொண்டிருக்கும் அவலத்தை எண்ணாமலிருக்க…

Read More