You are here
வாங்க அறிவியல் பேசலாம் 

தகவல் அறிவை அனைவருக்குமான பொதுச்சொத்து ஆக்குவோம்!

செர்ஜி மிக்கா லோவிச் பிரின் (கூகுல்) (Google) ஸ்தாபகர்) நேர்காணல் : பெர்னாடோ ரிபெரியோ கார்யா தமிழில்: இரா.நடராசன் செர்ஜி பிரின் (Sergey Brin) தனது நண்பர் லாரி பேஜ் உடன் இணைந்து கூகுல் (Google) எனும் அறிவியல் அதிசயத்தை உலகிற்கு வழங்கியவர். ஸ்டான் போர்டு பல்கலைக்கழகத்தில் மாணவராக இருக்கும்போது நடந்த அற்புதம் அது. இன்று உலக வரலாற்றுப் பாதையை நாம் ஒரு அர்த்தத்தில் கூகுலுக்கு முன், கூகுலுக்குப் பின் என்று கூடப் பிரிக்கலாம். கல்வி, மருத்துவம், போக்குவரத்து, அரசியல், பொருளாதாரம் என அனைத்து துறைகளையும் ஒரு மவுஸ் கிளிக்கில் அதிவேக வளர்ச்சி அடையவைத்த இந்த ஒற்றைக் கண்டுபிடிப்பு உலக சிந்தனைப் போக்கையும் வாழ்க்கைத் தரத்தையும் மாற்றிவிட்டது என்பதில் இரு வேறு கருத்துக்களுக்கு இடமில்லை. தகவல் அறிவு ஒரு சிலருக்கே சொந்தம் என்பதை உடைத்து உண்மையாகவே ஒரு…

Read More
வாங்க அறிவியல் பேசலாம் 

ஹிரோஷிமா-நாகசாகியின் ஒரே சாட்சி நான்.!

— ட்சுடோமு யாமகுச்சி நேர்காணல்: டேவிட் மெக் நீல் தமிழில்: இரா.நடராசன் ட்சுடோமு யாமகுச்சி என்ற ஒரு மனிதர் பேசி விடக்கூடாது என்று சி.ஐ.ஏ.விலிருந்து பிரிட்டன் உட்பட அமெரிக்க ஆதரவு நாடுகளின் உளவு அமைப்புகள் பல சொல்லொண்ணா நிர்பந்தங்களை ஜப்பானிய அரசுக்கும் உலக தகவல் தொடர்பு அமைப்புகளுக்கும் தந்தன. 1945 ஆகஸ்ட் ஆறு, யாமகுச்சி, ஹிரோஷிமாவின் மிட்சுபுட்சி நிறுவன பொறியாளராக காலை வேலைக்கு கிளம்பி அமெரிக்க அμகுண்டு வீச்சில் சிக்கினார். யாமகுச்சியின் ஊர் ஹிரோஷிமா அல்ல. குற்றுயிரும் கொலையுயிருமாக நகரம் செத்துக் கொண்டிருந்த போது ஓடிய ஒரே ரயிலில் ஏறி தன் சொந்த ஊருக்கு ரத்தம் சொட்ட சொட்ட போய் இறங்கினார். அவரது சொந்த ஊர் எது தெரியுமா நாகசாகி மறுநாள் உள்ளூரிலிருந்த மிட்சுபுட்சி அலுவலகம் செல்லும் வழியில் அதேபோல மீண்டும் புகைக் காளான்; இரண்டையும் அனுபவித்து…

Read More
வாங்க அறிவியல் பேசலாம் 

கடவுள் துகள் என்றழைப்பது அபத்தமானது!

பீட்டர் ஹிக்ஸ் நேர்காணல்: பாப்லோ காரிகாஸ், ஜெஸிகா கிரிக்ஸ் | தமிழில்:  இரா. நடராசன் 2013க்கான இயற்பியல் நோபல் பரிசு அறிவிப்பு யாருக்கும் ஆச்சரியம் தரவில்லை. அது பீட்டர் ஹிக்ஸ§க்கு வழங்கப்படும் என்பது பெரும்பான்மை அறிவியலாளர்களின் கருத்தாகவே இருந்தது. அதிலும் கடந்த ஜூலை நான்கு அன்று ஐரோப்பிய அணுக்கருவியல் ஆய்வுமையமான  CERN (ஜெனிவா) ஹிக்ஸ் போசான் அறிவிப்பை வெளியிட்ட பிறகு 1964ல் ஹிக்ஸ் வெளியிட்ட கோட்பாடு நிரூபணமாகி நமது நவீன ஐன்ஸ்டீன் அந்தஸ்தை அது பீட்டர் ஹிக்ஸ§க்கு வழங்கியுள்ளது. கடவுள்துகள் கண்டறியப்பட்டதாக உலகெங்கும் மீடியாக்கள் பெரிய அளவில் பிரஸ்தாபித்தன. கட்டன்பர்க், கலீலியோ,  நியூட்டன், என நீளும் கண்டுபிடிப்பாளர் வரிசையில் கண்டிப்பாக வரலாறு பீட்டர் ஹிக்ஸ்க்கு இடம் கொடுக்கும். அணுவுக்குள் எலெக்ட்ரான் புரோட்டான் நியூட்ரானுக்குள்  என்ன இருக்கிறது? புரோட்டான் எதனால் ஆனது?  எலெக்ட்ரான் இதற்கு துகளியலாளர்கள் (particle physists)…

Read More