You are here
வாங்க அறிவியல் பேசலாம் 

உலகப் போராட்டங்களின் ரசவாதத்தைத் தொகுத்தவர்

ஆயிஷா இரா. நடராசன் லண்டன் ராயல் கல்வியகம் 2006-ஆம் ஆண்டு அதுவரை வெளிவந்த அறிவியல் நூல்களிலேயே சிறந்த பத்து நூல்களை முன்மொழிய முடிவு செய்தது.லட்சக்கணக்கான அறிவியல் நூல்கள், அறிவியல் புனைகதைகள் என பல வகைப்பட்ட புத்தகங்களை வாசிக்கக்கூட முடியாமல் வல்லுநர்கள் திணறினார்கள். ஆனால் கையிலெடுத்த பிறச்னைகளிலிருந்து பின்வாங்காத அந்த கவுரவமிக்க அமைப்பு ஏறத்தாழ ஏழு மாதங்களுக்குப் பிறகு பட்டியலை வெளியிட்ட போது அதில் முதலிடம் பிடித்த அறிவியல் கதை நூலைத்தான் இப்போது பார்க்க இருக்கிறோம். அப்படியான அந்த அறிவியல் நூல் அன்று மட்டும் அல்ல, இந்த 2017-ஆம் ஆண்டின் பட்டியலிலும் முதலிடத்திலேயே உள்ளதுதான் செய்தி.அப்படியென்றால் உலகில் இதுவரை வெளியிடப்பட்ட அறிவியல் கதையாடல்களில் சிறந்தது என முன்மொழியப்படும் நூலாக அதை வரலாற்றாளர்கள் அணுகுகிறார்கள்.அந்தப் புத்தகம் எழுதப்பட்ட மொழி இத்தாலிய மொழி.புத்தகத்தின் தலைப்பு வேதி அட்டவணை.அதாவது பீரியாடிக் டேபிள்.(இத்தாலியமொழித் தலைப்பு-சிஸ்டமா…

Read More
வாங்க அறிவியல் பேசலாம் 

அறிவியல் சர்வாதிகாரி அமெரிக்கா

லுக் மாண்டேக்னர் நேர்காணல்: மார்டின் என் சரிஸ்க் www.sciencemag.org தமிழில்: இரா. நடராசன் கொடிய எய்ட்ஸ் நோய் கிருமி, ஹியூமன் இம்யூனோ வைரஸ்(HIV) எனும் வைரஸ்ஸை கண்டு பிடித்து படம் பிடித்து 2008இல் நோபல் பரிசு பெற்றவர் லுக்  மாண்டேக்னர் (Luc Montagnier). பிரான்ஸ் நாட்டின் கிருமியியல் விஞ்ஞானி லுயிஸ் பாஸ்ச்சர் ஆய்வகத்தின் அயராத உழைப்பாளி. சமீபத்தில் ஐரோப்பாவிலிருந்து வெளியேறி சீனாவின் சாங்காய் ஜிய்யோ டோங் பல்கலைக் கழகத்தின் கிருமியியல் நவீன ஆய்வகத்தின் தலைமை பதவியேற்று உலகை அதிர்ச்சி அடைய வைத்தார் மாண்டேக்னர். அமெரிக்கர்கள் நம்புவதை புரிந்து கொள்வதை மட்டுமே தன்னால் கண்டுபிடித்துக் கொண்டிருக்க முடியாது  என்று பகிரங்கமாக அறிவித்த மாண்டேக்னர், சர்ச்சைக்குரிய இரண்டு அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளை 2009ல் சீனாவின் தனது தலைமையில் வெளிவரும் அறிவியல் ஏட்டில் வெளியிட்டார். சர்வதேச எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தை தலைமையேற்று…

Read More
வாங்க அறிவியல் பேசலாம் 

டார்வின் ஒரு லட்சம் முறை வென்றிருக்கிறார்…

– டாக்டர்ஜேன்கூடல் நேர்காணல்: மரியன்ஷெனால் தமிழில்: இரா. நடராசன் உலகிலேயே மிகக் கடினமான வேலை என்று வானியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் ஒப்புக் கொண்ட விஷயம் மனிதக் குரங்குகள் பற்றிய சமூக ஆய்வு. காரல் சாகன் தனது அறிவியல் கட்டுரை ஒன்றில் (அது நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளிவந்தது) உயிரைப் பணயம் வைக்கும் அறிவியல் ஆராய்ச்சி என்று அதையே வர்ணித்தார். மனிதக் குரங்குகளான உராங்கொட்டான், கொரில்லா, சிம்பன்ஸிகளுடனே வாழ்ந்து வருடக்கணக்கில் அவற்றின் வாழ்க்கை ரகசியங்களை சமூகவியல் சாதனைகளை உலகிற்கு கொண்டு வருதல் சாதாரண வேலையல்ல. 1960ம் ஆண்டு மனிதக்  குரங்கிலிருந்து தொடங்கிய மனிதத் தோற்றம் குறித்த கல்வியாளர்  (Paleanthropologist)  லூயிஸ் லீக்கி தனது மாணவிகள் மூவரை இப்பணிக்கு கானகம் நோக்கி அனுப்புகிறார். லீக்கியின் தேவதைகள் (Leakey’s Angels) என்று அவர்களை அறிவியல் உலகம் அழைத்தது. அவர்களில் ஒருவர்தான் டாக்டர்…

Read More
வாங்க அறிவியல் பேசலாம் 

அறிவியலாளர்கள் சமூகப் பணியாளர்களாகத் தங்களை உணரவேண்டும்

ராக்கேஷ்சர்மா நேர்காணல்: நிர்மல்கவுத்ரிகவுர்தமிழில்: இரா. நடராசன்   ஸ்குவாட்ரண்ட் லீடர் ராக்கேஷ் சர்மா இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் எனும் வரலாறு படைத்தவர். 1984 ஏப்ரல் 3 அன்று அவரது பயணம் தொடங்கியது. அது ஒரு பெரிய வெற்றிக்கதை. நமது நாட்டு சந்ததிகள் அவசியம் அறிய வேண்டிய அறிவியலின் வரலாற்று நாயகன் ராக்கேஷ் சர்மா. சோவியத் அறிவியலின் சாதனைகளை எப்போது வாய்ப்புக் கிடைத்தாலும் பேசும் அவரை நமது பாடப் புத்தகங்கள்கூட ஒருவரி குறிப்பிட்டுக் கைவிடுவது வேடிக்கை, வாடிக்கை. விர்ரென்று விண்ணளவு புகழ் பெற வேண்டிய இந்தியாவின் ஒரே விண்வெளி வீரருக்கு பாரதரத்னா விருது இதுவரை வழங்கப்படாததும் கூட அவரது இடது சார்ந்த அரசியலால் தான் என்பது பலரின் கருத்து. பலர் வெறுமனே விண்வெளியில் உலாவந்து திரும்பிய அந்த நாட்களில் வேதியியலின் முக்கியமான இரண்டு சோதனைகளை ஈர்ப்பு விசை…

Read More
வாங்க அறிவியல் பேசலாம் 

இந்திய ஆட்சியாளர்கள் கட்டமைக்கும் வளர்ச்சி அறிவியல் பூர்வமானது அல்ல

அமர்த்தியாசென்   உலகப் பிரசித்திபெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் இடதுசாரி சிந்தனை மரபில் தனது துறையை அறிவியல் மயம் ஆக்கியவர். பஞ்சங்கள் மனிதர்களால் ஏற்படுத்தப்படும் செயற்கை பேரிடர்கள் என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபித்தவர். நவீன கால அரசுகள் குறித்த அமர்த்தியா சென்னின் சந்தை மயமாக்கல் மீதான கடும் விமர்சனங்கள் அவரை ஆடம் ஸ்மித், மார்ஷல் போன்றவர்களின் வரிசையில் வைத்துப் போற்றத் தகுந்த இடத்தில் நிறுத்துகிறது. உலகமயமாக்கல் உட்பட பொருளாதாரத்துறையின் அதி நவீன தொழில்நுட்ப சந்தைகளின் சிக்கலான உட்பொருளை அறிவியல் பூர்வமாக கூறுபோட்டு – இந்த 21ஆம் நூற்றாண்டின் கூலி, விலை, லாபம் மற்றும் உபரி யார்பக்கம் சாய்கிறது என்பதை மக்களிடம் பேசத் தயங்காத அறிவியல்வாதி அவர். 1940களின் பெரும் வங்காளப் பஞ்சத்தின் போது சென்னுக்கு வயது பத்து. தனது உறவினர்கள் பலர் வறுமையில் பிச்சை எடுப்பதைக் கண்கூடாகப்…

Read More

ஆணாதிக்க அறிவியலே அழிவு அறிவியல்

– பார்பாராமெக்லின்டாக் பார்பாரா மெக்லின் டாக், மரபியலின் இரண்டு முக்கியத் திருப்பு முனைகளைச் சாதித்தவர். 1927ல் கார்னல் பல்கலைக்கழகத்தில் தனது அயராத உழைப்பில் குரோமோசோம் விட்டு குரோமோசோம் தாவும் மரபணுக்களின் முக்கியப் பண்பைக் கண்டுபிடித்து வெளியிட்டார். ஒருவகை மரபணு மற்றொரு வகை மரபணுவைக் கட்டுப்படுத்தும் எனும் அடுத்த திருப்புமுனைக் கண்டுபிடிப்பை சோள-தாவர மரபணுக்கள் வழியே அடைந்த மெக்லின்டாக்கின் ஆய்வு முடிவுகளை அன்று 1930களின் விஞ்ஞான உலகம் ஏற்கவில்லை. கிரிகர்மெண்டலுக்கு நேர்ந்ததைப் போலவே தனக்கு, ஆண்களே அதீத ஆதிக்கம் செலுத்திய அறிவியல் உலகால் கிடைத்த அவமானங்களைத் தாங்கமுடியாமல் 1951லிருந்து தனது ஆய்வு முடிவுகள் எதையும் வெளியிடாமல் மெக்லிண்டாக் நிறுத்திக் கொண்டார். தாவும் மரபணு (Jumping Gene)  மற்றும் கட்டுப்படுத்தும் மரபணு (Controlling Gene)ஆகிய இரண்டுமே சரிதான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு, மக்காசோளத்தின் மரபணு வரைபடத்தை (The…

Read More

ராக்கெட் விடுவதும் அணுகுண்டு சோதனையும் அறிவியல் அல்ல

திடநிலை வேதியியல் எனும் தனித்துறையே உருவாகக் காரணமானவர் இந்திய விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ். பெங்களூருவில் ஜவஹர்லால் நேரு உயர் அறிவியல் ஆய்வு மையம் உலகப் பிரசித்திபெற்றது. அதனை ஸ்தாபித்தவர். வெறும் அறிவியல் அல்ல. மூன்றாம் உலக அறிவியலாளர் பேரவை எனும் அமைப்பை உருவாக்கி பல்வேறு போராட்டங்களைக் களம் கண்டவர் ராவ்.

Read More
வாங்க அறிவியல் பேசலாம் 

எந்த மனித மொழியும் புனிதமானது அல்ல!

நோம் சாம்ஸ்கி ஒரு மொழியியல் விஞ்ஞானி. அரசியல் அரங்கில் ஐன்ஸ்டீனைப் போலவே தன்னை ஒரு இடதுசாரியாக அணிவகைப் படுத்துவதில் தயங்காதவர். அமெரிக்க வல்லரசின் மக்கள் விரோத அம்சங்களைத் தோலுரிக்கத் தவறாத அமெரிக்க அறிஞர் என்பதில் முன்னுதாரணமாக இருப்பவர்.

Read More

பரிணாமவியலும் சார்பியலும் பிரபஞ்சத்தைக் காண உதவும் இரு கண்கள்

காரல் சாகன் காரல் சாகன் அண்டத்தின் ஏனைய இண்டுஇடுக்குகளில் வசிக்கும் வெளிக்கிரக உயிரிகள் குறித்து உலகின் கவனத்தை திருப்பியவர். நட்சத்திரங்களின் கதிர்வீச்சு அமினோ அமிலங்களை தோற்றுவிக்கும் இயல்புடையது என்பதை நிரூபித்ததன் மூலம் புவியில் உயிரிகளின் தோற்றத்திற்கு கூறப்பட்ட, கூறப்படும் Ôபுனித’ காரணிகளை உடைத்தவர். வெள்ளி கிரகத்தின் மேற்தரை வெப்பநிலையை துல்லியமாக நிறுவிய இவரது மற்றொரு கண்டுபிடிப்பு டாப்ளர் விளைவை நட்சத்திரங்களிலிருந்து கோள்களின் தொலைவு ஏற்படுத்தும் விளைவுகளுக்குப் பொருத்தி மற்றொரு சர்ச்சையை முடித்துவைத்தது. அயல்கிரகவாசிகள் ஏதேனும் இருப்பின் அவற்றுக்கு விளங்கும் ஆரம்ப சமிக்ஞை தகட்டை(Pioneer plaque) தயாரித்தவர் சாகன். அது வியேஜர் விண்கலத்தில் அனுப்பப்பட்டது. அறிவியலை வெகுஜனங்களுக்கு எடுத்துச் செல்வதை தன் 600 அறிவியல் ஆய்வுரைகள், 20 அறிவியல் நூல்கள் மற்றும் அறிவியல் புனைகதைகள் வழியே பதிவுசெய்து வாழ்நாள் முழுவதும் அறிவியல் விழிப்புணர்வுப் போராளியாய் விளங்கிய காரல் எட்வர்ட்…

Read More
வாங்க அறிவியல் பேசலாம் 

அச்சப்படுபவர் அறிவியல்வாதியே அல்ல

மேரி கியூரி மேரி கியூரி. மேரி ஸ்க்லொடொஸ்கா கியூரி. இரு முறை அதிலும் வேறு வேறு துறைகளுக்கான நோபல் பரிசு பெற்ற ஒரே விஞ்ஞானி. தனது ஒரே குடும்பத்தில் அயர்னிகியூரி, பியரிகியூரி என நோபல் பாரம்பரியத்தை உருவாக்கியவர். 1867ல் நவம்பர் 7 அன்று வார்சாவில் (போலந்து) பிறந்தவர். அப்போது ரஷ்ய ஜார்பேரரசின் கீழ் இருந்த போலந்தில் பல்வேறு இடதுசாரி எழுச்சிகளுக்கு காரணமான குடும்பத்தில் பிறந்து ரகசியமாக நடத்தப்பட்ட வார்சா பல்கலைக்கழகத்தில் கற்று தனது சகோதரியோடு பாரீசுக்கு (பிரான்ஸ்) வேறு பெயரில் தப்பி அங்கு மிகுந்த போராட்டத்தின் நடுவில் கல்வியைத் தொடர்ந்தார் கியூரி. பெண் கல்விக்கும்  பெண் முன்னேற்றம், பங்களிப்பு இவை யாவைக்கும் முன் உதாரணமானவர். பகுத்தறிவுவாதி. பாதிரியார்களோ தேவாலயமோ செல்லாத சீர்திருத்த திருமணம் செய்து கொண்ட தைரியசாலியாக வரலாறு அவரைப் போற்றுகிறது. தாய் மொழிப் பற்று, இனப்பற்று,…

Read More