You are here
மீண்டெழும் மறுவாசிப்புகள் 

வில்லனும் நல்லவன்தான்!

வில்லனும் நல்லவன்தான்! ச.சுப்பாராவ் ஜெயித்தவர்களின் கதைகள் புகழ்ந்து பாடப்படும் போது கூடவே தோற்றவர்களின் கதை, அவர்கள் தரப்பு நியாயங்கள் சொல்லப்படாமல் நாசூக்காக விடப்பட்டு விடுகின்றன. தோற்றவனே வந்து ஐயா, இது இது இந்த மாதிரி நடந்தது. நான் தோற்றுப் போய்விட்டதால் இது சரியாகப் பதிவு செய்யப்படவில்லை என்று சொன்னால்தான் உண்டு. அப்படியான ஓர் அற்புதமான நாவலைப் படிக்க நேர்ந்தது. யான் பெற்ற இன்பம் உங்களுக்கும் இங்கே. வி.ரகுநாதன் எழுதிய துர்யோதனா என்ற ஆங்கில நாவல், பாரதக் கதையின் வில்லனும் நல்லவனே என்று நம்மை நினைக்க வைக்கும்படியாக மிக அற்புதமாக எழுதப்பட்ட நாவல். ஆரம்பமே மிகவும் கலக்கலாக இருக்கிறது. துரியோதனன் அடிபட்டு உயிர் பிரியும் நிலையில் வாசகரோடு பேசுவதாக எழுதப்பட்ட இந்த நாவலில், துரியோதனன் வியாசர் கூறியதை அப்படியே நம்பிவிட்டீர்களே என்று நம்மைத் தாக்கிவிட்டு, அடுத்ததாக ஆனால் நீங்கள்…

Read More

சீதைக்கு ராமன் சித்தப்பா…

சீதைக்கு ராமன் சித்தப்பா…ச.சுப்பாராவ் வரவர நாட்டில் வெளிவரும் மறுவாசிப்புகள் மறுவாசிப்பு என்ற வகைமை பற்றிய நமது புரிதலையே கேள்விக்குள்ளாக்குகின்றன. மக்களால் காலம் காலமாக ஏற்கப்பட்ட ஒரு இதிகாசப்பிரதியின் மூலக்கதைளை ஆதாரமாகக் கொண்டு, அதில் விடுபட்ட அம்சங்களை இட்டு நிரப்புவதும், மூலப்பிரதி அன்றைய சமூகச் சூழலில் படைப்பாளி தன்னையறியாமலோ, அல்லது வேண்டுமென்றோ சொல்லாமல் அமைதிகாத்துவிட்ட சில விஷயங்களைத் தொட்டுக் காட்டுவதும்தான் மறுவாசிப்பு என்பது முற்போக்காளர்களின் புரிதல். ஆனால், நாடு முழுவதும் அறிந்த ஒரு இதிகாசத்தின் கதாபாத்திரங்களின் பெயர்களை மட்டும் வைத்துக் கொண்டு, சொல்லப்பட்ட கதையை தன்னிஷ்டத்திற்கு மாற்றி எழுதும் போக்கும் இன்று எழுந்துள்ளது. அதற்கு ஏகப்பட்ட வரவேற்பும் இருக்கிறது என்பது அதனினும் கொடுமை. இந்த புதிய வகையில் சமீபத்தில் வந்துள்ள மிகப் பிரபலமான நாவல் ஷயான் ஆஃப் இக்ஷ்வாகு (Scion of Ikshvaku – இக்ஷ்வாகுவின் வாரிசு) என்ற…

Read More

மறுவாசிப்பிற்கு ஒரு மறுவாசிப்பு

மறுவாசிப்பிற்கு ஒரு மறுவாசிப்பு ச.சுப்பாராவ் எழுத்துலகில் வினோதங்களுக்குப் பஞ்சமேயில்லை. அடிப்படையான ஒரு இலக்கியப் பிரதியை மறுவாசிப்பு செய்வது மிகப்பெரிய ஒரு புதுமை என்று நாம் இன்றளவும் பேசிக்கொண்டே இருக்கிறோம். ஆனால், ஒருவர், ஒரு மறுவாசிப்புப் பிரதியை எடுத்து, அதில் விடுபட்டுப் போனதாக தான் நினைத்தவற்றைக் கோர்த்து புதியதாய் ஒரு நாவல் ஒன்றை எழுதியிருக்கிறார். விகாஸ் சிங் எழுதியிருக்கும் பீமா – தி மேன் இன் தி ஷேடோஸ் ( பீமன் – நிழலாய் வாழ்ந்த மனிதன்) என்ற மிகச் சமீபத்திய நாவல்தான் இந்த வகைமையில் வெளியான முதல் நாவலாக இருக்கக் கூடும். எம்.டி. வாசுதேவன் நாயரின் ‘இரண்டாம் இடம்’ என்ற புகழ்பெற்ற நாவலின் மறுவாசிப்பு இது. ஆசிரியர் குறிப்பில் தான் செய்துள்ளது சற்று அதிகப்பிரசங்கித்தனம் தான் என்று விகாஸ் சிங் ஒப்புக் கொண்டாலும் கூட, அந்த அதிகப்…

Read More

மீண்டெழும் மறுவாசிப்புகள் 10 : ஹஸ்தினாபுரத்தின் காற்றுகள்

ச.சுப்பாராவ்     இதுவரை எழுதப்பட்ட மறுவாசிப்புகள் பெரும்பாலும் பாரதத்தின் முக்கிய மாந்தர்களின் பார்வையில்தான் எழுதப்படுகின்றன. அதுவும் பெண் பாத்திரத்தின் வழியான மறுவாசிப்பு என்றால் பாஞ்சாலியைத் தவிர வேறு யாரும் படைப்பாளிகளின் கண்களுக்குப் புலப்படுவதில்லை. ஆனாலும், அந்த மஹாபாரதத்தில்தான் எத்தனை எத்தனை பெண்கள்! எல்லா வர்ணத்தைச் சேர்ந்த பெண்களும் வருகிறார்கள். எல்லோருக்கும் விதவிதமான துயரங்கள்! ஒருபக்கம் தான் நினைத்ததைச் சாதித்துக் காட்டியவளாக கம்பீரமாக உலா வரும் அதே பாத்திரத்தின் மறுபக்கத்தைப் பார்த்தால், அவள் வெளியே சொல்லாத சோகம் அவளது சாதனைக்கு, சந்தோஷத்திற்கு, வெற்றிக்கு,     இணையாக ஓடிக்கொண்டே இருக்கும். வானுலகிலிருந்து பூவுலகிற்கு வந்த கங்கையானாலும் சரி, மீனவ இனப் பெண்ணாகப் பிறந்து குருவம்சத்தின் பட்டத்தரசியான சத்யவதியானாலும் சரி; வெளியில் சொல்ல முடியாத துக்கம்தான் அவர்கள் வாழ்வில் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. அது இன்று ஒரு படைப்பாளியின் கண்களில் பட்டு…

Read More
மீண்டெழும் மறுவாசிப்புகள் 

மீண்டெழும் மறுவாசிப்புகள் – 9: மஹாபாரதம் என்னும் இலக்கியப் பிரதி

ச.சுப்பாராவ் மஹாபாரதம் பற்றிய சமீபத்திய படைப்புகள் எல்லாம் இருவிதமான கண்ணோட்டங்களின் அடிப்படையில்தான் எழுதப்படுகின்றன. ஒன்று அதைக் கேள்விக்குள்ளாக்குவது என்ற பெயரில் அதன் பிரும்மாண்டத்தை, அதன் ஆழமான இலக்கியச்சுவையையும் சேர்த்து மறுதலிக்கும் விதமாய் எழுதுவது. மற்றது, அதில் இல்லாததே இல்லை என்று தேவைக்கு    அதிகமாகவே அதற்கு அதிமுக்கியத்துவம் தரும் ஒரு மதவாதப் பார்வை. இரண்டும் இல்லாமல் ஒரு இலக்கியப் பிரதியாக அதன் பலம், அழகு ஆகியவற்றையும் அதன் பலவீனங்கள், முரண்கள் பற்றியும் நடுநிலையோடு எழுதுவது மிக அபூர்வமாகத்தான் நிகழ்கிறது. 1970களில் வெளியான ஐராவதி கார்வேயின் ‘யுகாந்தா’ அப்படிப்பட்ட ஒரு முயற்சியின் முதல் அற்புதமான   படைப்பு. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பின் இப்போது வந்துள்ள அபிஜித் பாசுவின் மார்வல்ஸ் அண்ட் மிஸ்ட்ரீஸ் ஆஃப் மஹாபாரதா ( Marvels and Mysteries of Mahabharatha – Abijit Basu) அதற்கு இணையான…

Read More
மீண்டெழும் மறுவாசிப்புகள் 

மீண்டெழும் மறுவாசிப்புகள் – 8: கிருஷ்ணனின் வம்சத்தில் கஜினிமுகமது!

ச.சுப்பாராவ் நான் மிகப் பொறுமையான வாசகன். எத்தனை கடினமான புத்தகமாக இருந்தாலும், சலிப்பூட்டுவதாக இருந்தாலும், அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் படித்து முடித்துவிடும் நிதானமும், பொறுமையும் உள்ளவன். என்னையே பொறுமை இழந்து, தூக்கிப் போட்டுவிடுவோமா என்று நினைக்க வைத்த ஒரு நாவலும் கைக்குக்கிடைத்த கொடுமையை என்னவென்பது? கதைகள்     எல்லையற்ற கற்பனையால் உருவாகின்றன என்று நமக்குத் தெரியும். எனினும், ஓரளவு நம்பகத்தன்மை எனும் ஒரு எல்லைக்குள்தான் அந்த    எல்லையற்ற கற்பனை இருக்க வேண்டும். அந்த எல்லையை மீறிய எல்லையற்ற கற்பனை எரிச்சல்பட வைத்தாலும், இக்கட்டுரைக்காகப் பொறுமைகாத்துப் படித்தேன். யான்பெற்ற இன்பத்தை(!) நீங்களும் பெறுவீராக! முதலில் அந்த எல்லையற்ற கற்பனைகளின் ஒரு பட்டியல். பாண்டவர்களுக்கும், கெளரவர்களுக்கும் மாமனான(?) பீஷ்மர் (நாவலில் சத்தியமாக இப்படித்தானய்யா இருக்கிறது!) இறந்தது கிமு 3067 மே மாதத்தில். ஹரி என்ற கடவுளைத்தான் கிரேக்கர்கள் ஹெர்குலிஸ் என்றார்கள். கலியுகம்…

Read More
மீண்டெழும் மறுவாசிப்புகள் 

மீண்டெழும் மறுவாசிப்புகள் – 7: மாய மாளிகை

ச.சுப்பாராவ் எண்ணற்ற கதாபாத்திரங்கள் கொண்ட ஒரு படைப்பில் ஒவ்வொரு கதாபாத்திரமும் தன் பங்கு முடிந்ததும் விலகிச் சென்றுவிடும். ஒவ்வொரு பாத்திரமும் பிறகு என்ன ஆனது என்று விளக்கம் தருவதும் கதாசிரியனுக்கு இயலாத காரியம். ஆனால் வாசகனுக்கு அப்படி விட்டுவிடுவது அவ்வளவாகப் பிடிக்காது. அதனால்தான் அக்காலத் திரைப்படங்களில் வணக்கம் போடுவதற்கு முன் காமெடியனும், அவனது ஜோடியும் கையில் மாலையோடு ஓடிவந்து எங்களயும் ஆசீர்வாதம் பண்ணுங்க என்பார்கள். அப்படிப்பட்ட காட்சி வைக்காவிட்டால், எத்தனை அற்புதமாக எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும், ரசிகன் வெளியே வரும்போது, கடசீல வடிவேலு/ விவேக் / சூரி  என்ன ஆனான்னே காட்டல்ல பாரு என்று புலம்பிக் கொண்டு வருவான். வாசகனின் இந்த எதிர்பார்ப்புதான்  மறுவாசிப்பு எழுத்தாளர்களுக்கு புதிய புதிய கருக்களைத் தருகிறது. ஏதேனும் ஒரு சிறுபாத்திரம் என்ன ஆனது என்ற தனது தேடலில் ஒரு படைப்பை உருவாக்கிவிடுகிறார்கள்….

Read More
மீண்டெழும் மறுவாசிப்புகள் 

மீண்டெழும் மறுவாசிப்புகள் -6: அவர்கள் சொல்ல மறுக்கும் கதைகள்

ச.சுப்பாராவ் அமெரிக்காவில் இரு ஆண்கள் கைகோர்த்து நடந்து சென்றால், அவர்களை சமூகம் ஓரினச் சேர்க்கையாளர்களாகவே பார்க்கும். இந்திய சமூகம் சாதாரண நண்பர்களாகப் பார்க்கும். ஏன் இந்த மாறுபட்ட பார்வை? ஆண் – ஆண், ஆண் – பெண்,    ஆண் – ஆண், பெண் – பெண், ஆண் – மூன்றாம் பாலினம், பெண் – மூன்றாம் பாலினம், மூன்றாம் பாலினம் – மூன்றாம் பாலினம் ஆகிய விதவிதமான சேர்க்கைகளின் உறவு பற்றி மேற்கத்திய இலக்கியங்கள் பேசத் துவங்குவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இவை பற்றி எல்லாம் இந்திய இலக்கியங்கள், வாய்மொழிக் கதைகள் நிறையப் பேசியிருப்பது ஒரு முக்கிய காரணம். இந்தியாவின் ஆதிப் பொதுவுடமைச் சமூகம் சமகாலத்தைப் போல அத்தனை இறுக்கமானதல்ல. தனிச் சொத்துரிமை, என் சொத்து என் வாரிசுக்கு மட்டுமே என்ற தந்தைவழிச் சிந்தனைகள் வலுப்பெற்ற போது,…

Read More
மீண்டெழும் மறுவாசிப்புகள் 

மீண்டெழும் மறுவாசிப்புகள்-5 : கர்ணனின் மனைவி

ச. சுப்பாராவ் அவள் ​பெயர் உருவி. பு​கேய நாட்டு மன்னர் வகுஷனுக்கும், அரசி சுப்ராவிற்கும் மகளாகப் பிறந்தவள். குரு வம்சத்திற்கு ​நேச நாடான பு​கேய நாட்டு இளவரசி அஸ்தினாபுரத்தில் அ​னைவருக்கும் ​செல்லக் குழந்​தை. குந்தி Ôஎன் மருமக​ளே’ என்றுதான் அவ​​ளை அ​ழைப்பாள். குரு வம்சத்து இளவரசர்களான பாண்டவர்களும், ​கௌரவர்களும் குருகுலம் முடிந்து தங்கள் திற​மைக​ளை ​வெளிக்காட்டும் அந்த நிகழ்ச்சிக்கு தன் தாய் தந்​தையருடன் வரும் உருவி, அர்ச்சுனனுக்கு சவால் விட்டு, அங்க​தேசத்து மன்னனாகிவிடும் கர்ணன் மீது காதல் ​கொள்கி​றாள். தந்​தை தனக்கு ஏற்பாடு ​செய்யும் சுயம்வரத்தில், கர்ணனுக்கு மா​லை சூட்டி உலகத்​தை​யே அதிர்ச்சிய​டையச் ​செய்கிறாள். உயர்வர்ணப் ​பெண் கீழ்வர்ண ஆ​ணைத் திருமணம் ​செய்வது தகுமா என்று ​கேள்வி ​கேட்பவர்களின் வாயை பிராமணப் ​பெண்ணான ​தேவயானி க்ஷத்ரியனான யயாதி​​யை மணக்கவில்​லையா என்று எதிர்​கேள்வி ​கேட்டு அ​டைக்கிறாள். அவள் திருமண…

Read More
மீண்டெழும் மறுவாசிப்புகள் 

மீண்டெழும் மறுவாசிப்புகள்-4 ஜயா ஒரு மறுகூறல்

ச. சுப்பாராவ் சொல்லப்பட்ட க​தை​யை இது இவ்விதமாக நடந்திருக்காது, இப்படியாக​வே நடந்திருக்கும் என்று பகுத்தறிவிற்கு இ​சைவாய் ​​யோசித்துப் ப​டைப்பது மறுவாசிப்பு என்று ​சொன்​னோம். சமீபகாலமாய் பழைய புராணங்களில் ​சொல்லப்படாத விஷயங்க​ளே இல்​லை என்று இன்​றைய நவீன விஞ்ஞானக் கருத்துக்களை ஏற்றிக் கூறுவதும் ஒரு வலதுசாரி மறுவாசிப்புப் ​போக்காக இருக்கிறது. இந்த இரண்டிற்கும் நடுவில் இப்​போது ஒரு புதுவிதமான மறுவாசிப்பு மு​றை ஒன்றும் உருவாகியுள்ளது. மூலப் புராணக்க​தை​யை உள்ளது உள்ளபடி அப்படி​யே கூறிச் ​செல்வது. பின்குறிப்புகளில் அந்த சம்பவங்கள் பற்றிய விமர்சனங்க​ளைச் ​சொல்லி, அது பற்றி வாசக​னை ​யோசிக்க ​வைப்பது என்ற இந்தப் புதிய மு​றை​யை, ​மேற்கண்ட இருவ​​கை மறுவாசிப்புகளிலிருந்தும் ​வேறுபடுத்திக் காட்ட மறுகூறல் க​தை என்று குறிப்பிடலாம் என்று கருதுகி​றேன்.    இப்படியான மறுகூறல் சம்பிரதாயத்​தை ஆரம்பித்து ​வைத்துள்ளவர் ​தேவதத் பட்நாயக். இவரது ஜயா என்ற நூல்…

Read More