You are here

இரு துருவமான மனித சமூகம்

என்.குணசேகரன் ஹாரி பிரேவர்மன் இறப்பதற்கு சிறிது காலத்துக்கு முன்பு மேற்கு வெர்ஜினியா தொழில்நுட்பக் கல்லூரியில்  உரை நிகழ்த்தினார். மிகச்  சிறந்த  அந்த உரையில் நிறைவாக முடிக்கிறபோது கீழ்க்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்: “…..இது அனைத்தும் தெரிவிப்பது என்னவென்றால், முதலாளித்துவ சமூகத்தின் ஒரு துருவத்தில் சொத்து அதிகரிப்பு நிகழ்கிறது;அதற்கு ஏற்றவாறு,ஏழ்மை அதிகரிப்பு மற்றொரு துருவத்தில் நிகழ்கிறது….” சொத்து அதிகரிப்பில் முதலாளித்துவம் எவ்வாறு உழைப்புச் சக்தியை மலிவாக்கிட முயல்கிறது?அதற்கு, உழைப்பு மேலாண்மையை அது எவ்வாறு நவீனப்படுத்தியது? இதன் காரணமாக, தொழிலாளி  எவ்வாறு மனரீதியாக, உடல்ரீதியாக, மலினமாக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழக்கிறார்? இதனால், ஏழ்மை அதிகரிப்பு எவ்வாறு நிகழ்கிறது? இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டுபிடித்ததுதான் ஹாரி பிரேவர்மனின் வாழ்க்கைச் சாதனை. இந்தத் துறையில் இருபதாம் நூற்றாண்டுக்கு முந்தைய போக்குகளை மார்க்ஸ் கண்டறிந்தார். இருபதாம் நூற்றாண்டுக்கு அதனைப் பொருத்தி மார்க்சிய சிந்தனை முறையில்  ஆய்வை மேற்கொண்டவர்…

Read More

மனிதம் மரிக்கும் ‘வேலை’

உழைப்போரின் ‘வேலை’ நிலைமைகள் பற்றிய அறிவியல் ரீதியான ஆய்வினை மார்க்ஸ் மேற்கொண்டார். தனது சிந்தனைகளை மூலதனம் முதல் தொகுதியில் அவர் பதிவு செய்திருக்கிறார். மார்க்சைப் பற்றி பேசுகிற பல பொருளாதார நிபுணர்கள் “வேலை” குறித்த மார்க்சின் கருத்துக்களை அலட்சியம் செய்து விடுவார்கள். ‘வீழ்ச்சி அடையும் இலாப விகிதம்’ போன்ற அவரது கருத்துக்களைப் பற்றி தலைதெறிக்க விவாதித்து ‘மார்க்ஸ் தவறு செய்து விட்டார்’  என்றெல்லாம் தீர்ப்பு அளிப்பவர்கள், ‘வேலை’பற்றிய மார்க்சின் கருத்துக்கள் மீது அதிக மௌனம் சாதிப்பார்கள். ஏன் இந்த மௌனம்? ‘வேலை’யில் ஈடுபடுவது என்ற மனித இனத்தின் இன்பகரமான,மேன்மையான ஒரு இயல்பினை முதலாளித்துவம் எப்படி சீரழித்து, தனது மூலதனக் குவியலுக்குப் பயன்படுத்துகிறது என்பதை அசைக்கமுடியாத ஆதாரங்கள், உண்மைகளை அடிப்படையாகக்கொண்டு மார்க்ஸ் விளக்குகிறார். இதை ஆழமாக கிரகிக்கும் ஒரு தொழிலாளி முதலாளித்துவ அமைப்பை அகற்ற வேண்டிய அவசியத்தை உணர்ந்துவிடுவார்….

Read More
மார்க்சியம் 

விண்ணைத்தாண்டித் தாண்டி வளரும் மார்க்சியம்-8!

பாசிச அபாயமும் கிளாராவின் சிந்தனையும் என்.குணசேகரன் ஜெர்மனியில் 1930-ஆம் ஆண்டுகளில் நாஜிகளின் பலம் அதிகரித்துக்கொண்டே வந்தது. நேரெதிர் சித்தாந்தம் கொண்ட மார்க்சிய சமூக ஜனநாயகமும், பாசிசமும் போராடிக் கொண்டிருந்த காலம் அது. மனிதகுலம் வந்தடைந்த ஜனநாயகம், சமுக நீதி மாண்புகள் அனைத்தையும் அழிக்க இயக்கம் கண்டவர் ஹிட்லர். உண்மையான ஜனநாயகம், சமத்துவம் நோக்கி மனிதகுலத்தை முன்னெடுத்துச் செல்லும் இலட்சியத்தோடு கம்யூனிஸ்ட்கள் பாசிச எதிர்ப்பியக்கத்தில் செயல்பட்டு வந்தனர். இந்த போராட்டத்தில் முக்கியமான பங்கினை வகித்தவர், கிளாரா ஜெட்கின். ரீச்டாக் என்று அழைக்கப்படும் ஜெர்மானிய பாராளுமன்றத்திற்கு 1920 ஆம் ஆண்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிளாரா ஜெட்கின். நாஜிகள் வெற்றி பெற்றிருந்த நிலையில் 1932 ஆகஸ்ட் 30 அன்று முதல் கூட்டம் நடந்தது. உடல்நலம் பாதிக்கப்பட்டு மாஸ்கோவில் குடியிருந்த 75-வயது கிளாரா ஜெட்கின் பாராளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்வதற் காக பெர்லின் வந்தார். அவர்…

Read More
மார்க்சியம் 

விண்ணைத்தாண்டித் தாண்டி வளரும் மார்க்சியம்-7!

வெல்வெட் கையுறையும், இரும்புக்கரமும் என்.குணசேகரன் கிராம்ஷியின் அரசியல் சிந்தனையின் மூன்று முக்கியக் கூறுகள் எனக் குறிப்பிட்டு அவற்றை விளக்குகிறார் எரிக் ஹாப்ஸ்பாம். அவை ஒவ்வொரு புரட்சியாளரும் உணர வேண்டிய கருத்துக்கள். முதலாவதாக “நிலைப்பாட்டுக்கானப் போர்” (War of Position) என்ற கிராம்ஷியக் கருத்தாக்கத்தின் முக்கிய பரிமாணங்களை ஹாப்ஸ்பாம் விளக்குகிறார். கிராம்ஷி, அரசு நிறுவனங்கள் தவிர்த்து சமூகத்தில் இயங்கும் வர்க்கங்கள், கட்சிகள், ஊடகங்கள், கல்வி நிறுவனங்கள், மத பீடங்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்புக்களையும் ‘குடியுரிமைச் சமூகம்’ என அழைக்கின்றார். இது அரசைத் தாங்கிப் பிடிக்கும் கோட்டையாக இருப்பதால் இதைத் தகர்க்க வேண்டிய பொறுப்பு, புரட்சிகர மாற்றம் விரும்பும் சக்திகளுக்குரியது. இது கருத்தியல், களப் போராட்டங்கள் முலமாக நடைபெறுகிறது. குடியுரிமைச் சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் தங்களது ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள ஆளும் வர்க்கங்களும் போராடுகின்றன. புரட்சிகர சக்திகளும்…

Read More

விண்ணைத்தாண்டித் தாண்டி வளரும் மார்க்சியம்-6

ஒரு சரித்திர ஆசானின் பார்வையில்-கிராம்ஷி மார்க்சியத்தின் பிரம்மாண்டமான பரப்பில் கிராம்ஷிக்கு ஒரு தனி இடம் உண்டு. மறைந்த மார்க்சிய வரலாற்று மேதை எரிக் ஹாப்ஸ்பாம் கிராம்ஷியை “1917-க்குப் பிறகு மேற்குலகின் தனித்தன்மை கொண்ட மார்க்சிய சிந்தனையாளராகத் திகழ்ந்தவர்” எனக் குறிப்பிடுகிறார். ஆனால், கிராம்ஷி மறைந்து நாற்பது ஆண்டுகள் வரை அவர் அறியப்படாமல் இருந்திருக்கிறார். 1970-ஆம் ஆண்டுகளிலிருந்து அவரது சிந்தனைகளின் பிரவேசம் சூறாவளியாக உருப்பெற்றது. பல்கலைக்கழக ஆராய்ச்சி உலகிலிருந்து, மார்க்சியத்தை மறுக்கும் தன்னார்வக் குழுக்கள் வரை கிராம்ஷியின் தாக்கம் இருந்து வருகிறது. தமிழக அறிவுத்தளத்தில் கிராம்ஷியின் சிந்தனைகள் குறித்த ஈர்ப்பு கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. அவ்வப்போது சரியாகவோ, தவறாகவோ அவர் சித்தரிக்கப்பட்டு வந்துள்ளார். அவரது சிந்தனைகளுக்கு பல பரிமாணங்கள் உண்டு. மார்க்சிய ஆய்வுமுறையில்,வரலாற்றை விளக்குகிற பணிக்காகவே தனது நீண்ட வாழ்க்கையை அர்ப்பணித்த எரிக் ஹாப்ஸ்பாம்…

Read More