You are here
புரட்சி இலக்கியங்கள்: ஒரு மீள்வாசிப்பு 

இருபதாம் நூற்றாண்டில் மார்க்சியம்

என்.குணசேகரன் மார்க்சியம், இரண்டு நூற்றாண்டுகளில் அடைந்த வளர்ச்சியை ஆழமாக வாசிப்பவர்கள்,லெனின் குறிப்பிட்ட ஓர் அற்புதமான கருத்து சரியானது என்பதனை உணருவார்கள்.லெனின் எழுதினார்: “மார்க்சிய கருத்தாக்கங்கள் சர்வ வல்லமை கொண்டவை; ஏனென்றால், அவை உண்மையானவை’ (மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும்,மூன்று மூலக்கூறுகளும்.) மார்க்சிற்கு முந்தைய காலங்களில் உருவான மேன்மையான சிந்தனைகளை உள்வாங்கி,அவற்றை ‘இரக்கமற்ற விமர்சனம்” என்ற உரைகல்லில் உரசி, மார்க்ஸ், எங்கெல்ஸ் கட்டியமைத்த மகத்தான தத்துவம்தான் மார்க்சியம். இதனை இன்னும் நுட்பமாக லெனின் விளக்கினார்: “ஜெர்மானிய தத்துவம், ஆங்கிலேய அரசியல் பொருளாதாரம், பிரெஞ்சு சோசலிசம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மனித சிந்தனை உருவாக்கிய அனைத்து மேன்மையான படைப்பாக்கங்களுக்கெல்லாம் வாரிசாகத் திகழ்வது, மார்க்சியம்.”19-ஆம் நூற்றாண்டில் உருவான மார்க்சியத்திற்கு, வளமையான பங்களிப்புக்கள் 20-ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்துள்ளன. ஒவ்வொரு கால கட்டத்திலும் பல மார்க்சிய சிந்தனையாளர்கள் பங்களிப்பு செலுத்தியது மட்டுமல்ல;ஆசிய,ஆப்பிரிக்க கண்டங்கள் உள்ளிட்ட பல…

Read More
புரட்சி இலக்கியங்கள்: ஒரு மீள்வாசிப்பு 

பெண்மை எனும் கற்பிதத்திலிருந்து, புரட்சிக்கு…

என்.குணசேகரன் மார்க்சிய இயக்கத்தைச் சார்ந்தவர்கள் பொதுவாக சுயசரிதை எழுதுவதில்லைஇயல்பாகவே கம்யூனிச இலட்சியப் பிடிப்பு கொண்ட ஒருவருக்கு தன்னை முன்னிறுத்திக் கொள்வது சிரமமானது.சாதனைகள் என மதிப்பிடத்தக்க பல செயல்களைச் சாதித்த கம்யூனிஸ்டுகள் அவற்றைத் தங்களது சாதனைகளாகச் சொல்லிக் கொள்வதில்லை.கூட்டுச் செயல்பாடுகள் என்றே அவற்றைக் கூறுவார்கள். மற்றொன்று,மார்க்சிய இயக்கத்தில் தனிநபர் வழிபாடு,சுயபுராணம் போன்ற பழக்கங்கள் கம்யூனிச இலட்சிய நோக்கில் இயக்கம் நடைபோடுவதைப் பாதிக்கும். ஆனால்,இதற்கு எதிர்மறையான ஒரு விளைவும் உண்டு.முதலாளித்துவ பிரச்சார இயந்திரம்,கம்யூனிச இயக்கத்தின் சாதனைகளை மறைப்பது,திசை திருப்புவது,அவதூறு செய்வது என இடையறாது இயங்குவதற்கும் மேற்கண்ட அடக்க மான அணுகுமுறை இடமளித்து விடுகிறது.இது ஒரு தொடர் பிரச்சனை. பல மார்க்சியர்கள் சுயசரிதைகளும் எழுதியதுண்டு.இ.எம்.எஸ். நம்பூதிரி பாடின் வாழ்க்கை பற்றிய அவரின் எழுத்துகள்,சொந்தப்புராணமாக இல்லாமல்,கேரள சமூகத்தில் கம்யூனிச இயக்கம் ஆற்றிய அரும்பெரும் பணிகளை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.சமூக முரண்களின் இயக்கத்தில் தாங்களும் ஓர்…

Read More
புரட்சி இலக்கியங்கள்: ஒரு மீள்வாசிப்பு 

ஊடகங்களும் மாறுவேட முதலாளித்துவமும்

என். குணசேகரன். கடந்த கால் நூற்றாண்டில், ஊடகத் துறையின் வளர்ச்சி பிரமிக்கத் தக்கது. அச்சு ஊடகம், காட்சி ஊடகம், இரண்டும் பெரும் மாற்றங்களை கண்டுள்ளன. அவற்றோடு இணையான வளர்ச்சி பெற்றதாக சமூக ஊடகங்கள் திகழ்கின்றன. இந்த மாற்றங்களும், வளர்ச்சியும் மார்க்சிய இயக்கங்களுக்கு பெரும் சவால்களைத் தோற்றுவித்துள்ளன. ஊடகங்களில் மார்க்சியங்களின் செயல்பாடு குறித்த பழைய அணுகுமுறைகள், கருத்தாக்கங்கள் அனைத்தையும் புதுப்பிக்க வேண்டிய அவசியம் உள்ளது. பொருந்தாத சில கண்ணோட்டங்களைக் கைவிடுவதும் அவசியமாகிறது. இது குறித்து, மார்க்சியர்கள் மத்தியில் தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது. பேராசிரியை ஜோடி டீன் (Jodi Dean) எழுதிய ‘‘ஜனநாயகம் உள்ளிட்ட நவீன தாராளமய புனைவுகள்” (Democrasy and other Neoliberal Fantasies) என்ற நூல் முக்கியமானது. சமூக ஊடகங்கள் உள்ளிட்ட ஊடகங்களைக் கையாள்வதில் இடது சாரிகளின் செயல்பாடுகள் பற்றிய மிக கூர்மையான விமர்சனங்களை டீன்…

Read More
புரட்சி இலக்கியங்கள்: ஒரு மீள்வாசிப்பு 

ஸ்டாலின் வெறுப்பு ஏன் நீடிக்கிறது?

என்.குணசேகரன். சோவியத் யூனியனை 30 ஆண்டுகள் ஆட்சி செய்த ஸ்டாலின் பற்றிய சர்ச்சை, தொடருகிறது.அறுபது ஆண்டுகளாக ஓயாமல் தொடர்கிற இந்த சர்ச்சை, அடுத்த ஆண்டு ரஷியப் புரட்சியின் நூற்றாண்டையொட்டி அதிகரிக்கக்கூடும்.சோவியத் சோஷலிச சாதனைகளை திசை திருப்ப இந்த முயற்சி தீவிரமாக நடைபெறும். மேற்கத்திய மார்க்சியர் பலர் மேற்கொண்ட கண்மூடித்தனமான ஸ்டாலின் எதிர்ப்பு, சோஷலிச எதிரிகளுக்கு பெரிதும் பயன்பட்டது.,ஸ்டாலினை, ஹிட்லரோடு இணைத்து சித்தரிக்கவும்,கம்யூனிஸமே ஒரு வன்முறை சித்தாந்தம் என்ற பொய்யான பிம்பத்தை மக்களிடம் பதிய வைக்கவும் அது உதவியது. உலகை அழிக்கும் பேராபத்தாக உருவெடுத்த பாசிசத்தை முறியடித்ததில் சோவியத் யூனியனது பங்கினையும், அதற்கு தலைமை தாங்கிய ஸ்டாலினது பங்கினையும் மறைக்கும் முயற்சி தொடருகிறது. மனித விடுதலைக்கு ‘சோசலிசமே….இல்லையேல் காட்டுமிராண்டித்தனம்தான்!’ என்ற ரோசா லக்சம்பர்க்கின் கூற்று தற்போது உண்மையாகி வருகின்றது.இன்றைய அமைப்பு, ஏற்றத்தாழ்வுகளை தீவிரப்படுத்தி வருகிறது.முதலாளித்துவ மூலதன திரட்டல் வெறியினால்,…

Read More

வரலாற்றில் பரிசோதனை செய்தவரின் வரலாறு

– என்.குணசேகரன் “லெனின் மறுகட்டமைத்தல்:அறிவாற்றல் சார்ந்த ஒரு வாழ்க்கை வரலாறு” என்ற தலைப்பைக் கொண்ட நூலினை .ஹங்கேரியைச் சார்ந்த லெனினிய ஆய்வாளர் தாமஸ் கிராஷ் எழுதியுள்ளார்.(“Reconstructing Lenin:an Intellectual biography” -Tamas Krausz) “மறு கட்டமைத்தல்” என்கிற சொற்பிரயோகம் லெனினது மூல சிந்தனையை திரிக்கும் முயற்சியாக இருக்குமோ என்று முதலில் ஐயப்பட வைக்கிறது.ஆனால் நூலை வாசிக்கும் போது, நூலாசிரியர் லெனினியத்தை உருக்குலைத்திடாமல் விளக்கிட எடுத்துள்ள பெருமுயற்சியை உணர முடிகின்றது. நூலாசிரியர் புரட்சிகர தத்துவ வரலாற்றை விளக்குவதில்தான் அதிக கவனம் செலுத்தியுள்ளார். ஒரு நூற்றாண்டுக்கு முன் நடைபெற்ற தத்துவ விவாதங்களை மீண்டும் மறுவாசிப்பு செய்திடவும் இன்றைய நிலைமைகளுக்குப் பொருத்திப் பார்க்கவும் இந்த நூல் நம்மை அழைத்துச் செல்கிறது. எனவே, இது வழக்கமான தனிநபர் வாழ்க்கை வரலாற்று நூல் அல்ல.லெனினிய கருத்தாக்கங்களின் வரலாறு என்று கூறலாம். “யார் லெனின்?” என்ற…

Read More
புரட்சி இலக்கியங்கள்: ஒரு மீள்வாசிப்பு 

ஒவ்வொரு தோல்வியும் ஒரு பாடம்…

என்.குணசேகரன் மனித நாகரிக வளர்ச்சியில் முக்கியமான திருப்பம் எது?இந்தக் கேள்விக்கு விடைகள் பல இருக்ககூடும். ஆனால்,வரலாறு, புதிய எல்லைகளைத் தொடுவதற்கு உதவிய சிந்தனை என்ற அளவுகோல் அடிப்படையில் பார்த்தால், கம்யூனிஸம் எனும் சிந்தனைதான் மனித நாகரிக வளர்ச்சியில் முக்கியத் திருப்பம் என கூற முடியும்.ஏனென்றால் கம்யூனிஸம் மனிதனை மனிதன் சுரண்டும் அமைப்பிற்கு எதிராக, எதிர்நீச்சல் போட்டு வரும் தத்துவம்,அது. இதனை, பிரெஞ்ச் மார்க்சிய சிந்தனையாளர் அலைன் பதேயு, கம்யூனிஸம் – நாகரிக வரலாறு முழுவதும் என்றென்றும் இடையறாது, நீடித்து வரும் ஒரு எதிர்ப்பு நிகழ்வு(counter-current) என்றார். ‘முந்தைய காலங்களைவிட தற்போது ,கம்யூனிஸம் எனும் சிந்தனையை வலுவாக முன்னிறுத்த வேண்டிய காலம் இது’ என வலியுறுத்தி வரும் சிந்தனையாளர் அலைன் பதெயு(AlainBadiou). அவரது இந்தக் கருத்தாக்கம் கம்யூனிஸ்ட் கருதுகோள்(communist hypothesis) என்று அழைக்கப்பட்டு பரந்த அளவில் விவாதிக்கப்படுகிறது.இதே தலைப்பின்…

Read More
புரட்சி இலக்கியங்கள்: ஒரு மீள்வாசிப்பு 

மூலதன வாசிப்பு: அறிவுச் சிகரத்தின் உச்சியை எட்டிட…….

என்.குணசேகரன் 150-ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் மகத்தான படைப்பான, மூலதனம் நூலினை, மார்க்சியர் மட்டுமல்லாது, அறிவுத் தேடல் கொண்ட அனைவரும் வாசிக்கின்றனர். அது.வெளிவந்த நாள் முதல், பொருளாதாரம், வரலாறு, தத்துவம் என பல துறை சார்ந்தவர்கள் அதனை எதிர்த்தும், மறுத்தும் கருத்து யுத்தம் நடத்தி வந்துள்ளனர். இந்தத் தாக்குதல் இன்றுவரை தொடர்ந்தாலும், மூலதனம் காலத்தால் அழியாத படைப்பாக இன்றும் நீடிக்கக் காரணம் என்ன?உலகில் பெரும்பான்மையினரான, பாட்டாளி வர்க்கத்திற்கு, உயரிய மனிதம் தழைக்கும் ஒரு பொன்னுலகு படைக்க தத்துவ பலத்தை அது வழங்குவதுதான் முக்கியக் காரணம். மூலதன வாசிப்புக்கு உதவிடும் கையேடுகள் ஏராளமாக வெளிவந்துள்ளன. 1968-ல் வெளிவந்த மூலதன வாசிப்பு(Reading Capital) நூல் வித்தியாசமானது. மூலதனத்தை, தொழில்முறை பொருளாதார வல்லுனர்கள் வாசித்து பல விளக்கங்களை நூல்களாக வெளியிட்டுள்ளனர். மார்க்சிய நோக்கு கொண்ட பொருளாதார வல்லுனர்களும் சிறந்த பங்களிப்புக்களை வழங்கியுள்ளனர். ஆனால்…

Read More
புரட்சி இலக்கியங்கள்: ஒரு மீள்வாசிப்பு 

சாம்ராஜ்யங்கள் பற்றிய ஆய்வு

என்.குணசேகரன் கடந்த ஜனவரி 14 அன்று மறைந்த மார்க்சிய அறிஞர் எல்லன் மெய்க்ஸின்ஸ் வுட் (Ellen Meiksins Wood) மிகச்சிறந்த மார்க்சிய படைப்புக்களை உருவாக்கியவர். ‘கனடாவில் உள்ள யார்க் பல்கலைக் கழகத்தில் அரசியல்துறை பேராசிரியராக நீண்டகாலம் பணியாற்றிய பிறகு, அடுத்த நான்கு ஆண்டுகள் புகழ்பெற்ற சோஷலிசப் பத்திரிக்கையான மன்த்லி ரெவியூவின் ஆசிரியராகப் பணியாற்றினார். இடது சாரி தத்துவார்த்த ஏடான நியூ லெப்ட் ரெவியூவின் ஆசிரியர் குழுவிலும் அவர் நீண்ட காலம் இடம் பெற்றிருந்தார்.’ தொடர்ந்து அரை நூற்றாண்டாக மார்க்சிய ஆய்வு நூல்களை எழுதி வந்துள்ளார். மார்க்சிய தத்துவ விவாதங்களில் அவரது பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ‘புதிய இடது சாரிகள்’(NewLeft) எனும் பெயரில் எழுந்த ‘பிந்தைய மார்க்சியம்’ போன்ற கருத்தோட்டங்களையும், பின் நவீனத்துவம் எனும் பெயரில் உருவான அடையாள அரசியல் போக்குகளையும் எதிர்த்து தரமான கருத்தியல் போராட்டத்தை அவர்…

Read More

லெனினும், இயக்கவியலும். என். குணசேகரன்

லெனினும், இயக்கவியலும். என். குணசேகரன் முதலாம் உலகப் போரின்போது,உலகம் முழுவதும் வெடிகுண்டுச் சத்தங்கள் இடையறாது ஒலித்துக் கொண்டிருக்கும் வேளையில்,ஒரு மனிதர் நூலகத்தில் ஹெகெல் எழுதிய ‘தர்க்கவியலின் அறிவியல்’ போன்ற கனமான நூல்களைப் படித்து, விரிவான குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்தார். யாரும் அடையாளம் காணாத அந்த நபர், அடுத்த ஒரு குறுகிய காலத்தில், உலகின் மிகப் பெரிய நாட்டின் அதிபராக, பதவியேற்க இருக்கின்றார் என்பது ஒரு விசித்திரமான உண்மை. அவ்வாறு,நூலகத்தின்,ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு அமைதியாக குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தவர் ,லெனின்.இயக்கவியல் பற்றி தத்துவயியல் மேதை ஹெகல்,எழுதிய நூல்களையும்,அது பற்றிய அவரது பார்வையையும் லெனின் ஆய்வு செய்து கொண்டிருந்தார். லெனினுக்கு ரஷியப் புரட்சியை நிகழ்த்த இயக்கவியல் எனும் தத்துவ அறிவில் தேர்ச்சி தேவைப்பட்டது.இதற்காக அவர் அறிவுலகத் தளத்தில் தனிமையில் போராடிக் கொண்டிருந்தார்.அதற்கு அவருக்கு ஹெகலின் துணை தேவைப்பட்டது. லெனினது குறிப்புக்கள்…

Read More

லெனின் சிந்தனை எனும் அற்புதம்

என்.குணசேகரன் “லெனின் பாடங்கள்-33” நூலில் லெனின் சிந்தனையை அறிவியல் நேர்த்தியுடன் விளக்க முயல்கின்றார் நேக்ரி. லெனின் சிந்தனை ஓட்டத்தைப் புரிந்து கொள்வதற்காக, நேக்ரி மூன்றுதொகுதிகளாக அதனைப் பிரித்து விளக்குகிறார். முதலாவதாக, லெனின் சிந்தனை பற்றிய ஒரு ஒருங்கிணைந்த அறிமுகத்தை நேக்ரி அளிக்கிறார்.எவ்வாறு லெனினிய சிந்தனை அரசியல் தத்துவப் பிரச்னைகளை எதிர்கொள்கிறது?இன்றைய உலகில் நாம் எதிர்கொள்ளும் பிரச்னைகளோடு ஒப்பிட்டு அவை பேசப்படுவதுதான் நூலின் சிறப்பு. இரண்டாவதாக வருவது ஸ்தாபனம் பற்றிய கருத்தாக்கம்.லெனின் ரஷியக் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டியது பற்றிய நிகழ்வினையும் நுட்பமான முறையில் நூல் விளக்க்குகிறது. மூன்றவதாக அரசு மறைந்து போகும் கருத்தாக்கம் பற்றியது. இதில் லெனினுடைய “அரசும் புரட்சி” நூலின் உள்ளடக்கம் மிக முக்கியமான மையமாகும்.இதனையொட்டி தற்போது நிகழ்ந்து வரும் வர்க்கப் போராட்டமும், இன்றைய உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியும் ஆராயப்படுகிறது. இப்படி ஆராய்கிற போது லெனினது இன்றைய…

Read More