வாசிப்பு எனக்கு சுவாசமென ஆகிப்போன காலமது!

புத்தகங்கள் சூழ்ந்தவீடு-28 இருபத்து மூன்று அடி நீளமும், பதினைந்தடி அகலமுமுடைய மண் சுவற்றிற்கு மேல் மஞ்சம்புல் வேய்ந்த கூரைவீடு அது. வீட்டிற்கு வெளியேயும், உள்ளேயும் குளிர்ச்சி தங்கியிருக்கும். வீட்டின் நீளம் ஏழடி சமையலறையும், ஆறடி வரவேற்பறையும், மீதியுள்ளது படுக்கையறையுமாக மூன்றாகப் பகுக்கப்பட்டிருந்தது. சமையலறையில் மண்ணாலான ஓர் உறை (குதிர்) இருந்தது. அதனருகே பாய்போட்டு விறகடுப்பிலிருந்து சுடச்சுட கிடைக்கும் தோசையும், மல்லாட்டை சட்னியும், மீன் கொழம்பும் எப்போதும் யாருக்கும் கிடைக்கும். அப்பா ஹாலில் ஒரு ஈசிச்சேரிலேயே அவர் வாழ்வைச் சுருக்கிக் கொண்டார். அதிலேயே படிப்பு, தூக்கம் எல்லாமும். படுக்கையறை என அழைக்கப்பட்ட அந்தச் சிறு அறையில் ஒரு பழங்காலத்துப் பூவரசு மரக்கட்டில். மீதி இடங்களில் எப்போதும் பச்சை மல்லாட்டை உலர்த்தப் பட்டிருக்கும். அதன்மீது விரிக்கப்பட்ட பழம்பாயில் படுத்துக் கொண்டுதான் நான் முதன்முதலில் ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதனும் சில எருமைமாடுகளும்’…

Read More