You are here
நேர்காணல் 

நூல்களின் வழியே குழந்தைகள் மனிதத்தை உணர்வார்கள்.

நேர்காணல்: யூமா வாசுகி  கேள்விகள்: எஸ். செந்தில்குமார் தி.மாரிமுத்து (1966) யூமா வாசுகி என்ற பெயரில் கவிதைகளும் நாவல்களும் சிறார் மொழிபெயர்ப்புகளும் செய்து வருகிறார். கும்பகோணம் அரசு ஓவியக் கலைத் தொழிற்கல்லூரியில் ஓவியக் கலையில் பட்டயப்படிப்பு படித்தார். உயிர்த்திருத்தல்(1999) சிறுகதைத் தொகுப்பு, ரத்தஉறவு(2000), மஞ்சள்வெயில்(06) ஆகிய இரு நாவல்கள், இரவுகளின் நிழற்படம்(2001) அமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு(2001) சாத்தனும் சிறுமியும்(2012) ஆகிய கவிதைத்தொகுப்புகளோடு பெரியவர்களுக்கான அனேக மொழிபெயர்ப்பு நூல்களையும் கொண்டுவந்திருக்கிறார். தனக்கென தனித்த மொழிகொண்ட கவிதைகள், எதார்த்தமான கதாபாத்திரங்களை கொண்ட புனைவுகள் மூலம் தமிழ் இலக்கியத்தில் ஸ்திரமான இடத்தைக் கொண்டிருக்கும் யூமாவின் ஓவியங்களும் நுட்பமானவை. தீவிரமான சிற்றிதழ் சூழலில் இயங்கி வருபவர் நீங்கள். கவிதையின் உச்சபட்சமான செறிவான அடர்த்தியான மொழியை வெற்றிகரமாக கையாண்டிருக்கிறிர்கள். குழந்தைகளுக்கான கதை எழுதுகிற மனநிலைக்கு எவ்வாறு மாறினீர்கள்? என் அம்மா வெகுமக்கள் பத்திரிகைகள்…

Read More
நேர்காணல் 

உயிர்ப்புள்ள கதைகளைக் கேட்க மனிதர்கள் வருவார்கள்…

நேர்காணல்: பவா.செல்லத்துரை கேள்விகள்:  இவள்பாரதி எழுத்தாளர், பேச்சாளர், இப்போது கதைசொல்லியென, தன் பயணத்தில் புதிய பரிணாமங்களை நோக்கிப் பயணிக்கும் பவா.செல்லதுரை, திருவண்ணாமலையின் அடையாளம். பவாவின் கதை வெளிக்காக தன் கதைகளைச் சொல்லி முடித்த ஓர் இரவில் ஆடுகளத்திலேயே அப்படைப்பாளியைச் சந்தித்தோம். எழுதுவதோடு எழுத்தாளனின் பணி நிறைவடைந்து விடுகிறது. அதைத் தாண்டி கதைகளை ஏன் சொல்ல வேண்டுமெனத் தோன்றியது உங்களுக்கு? இரண்டு வருடங்களுக்குமுன் என் நண்பன் ஜே.பி. என்னை அழைத்து “நீ எங்களுக்குச் சொல்லும் கதைகளை ஏன் இன்னும் கொஞ்சம் விரிவாக்கி ஐம்பது நூறு பேருக்குச் சொல்லக்கூடாது” எனக் கேட்டான். அந்த வாரமே திருவண்ணாமலையில் சேஷாத்ரி ஆஸ்ரமத்திற்கு எதிரிலுள்ள ‘”குவா வாடீஸ்’ பல்சமய உரையாடல்” மையத்தில் அந்நிகழ்வை நடத்துவதென அவன் முடிவெடுத்தான். அவ்வளாகத்தில் நான் எனக்குப் பிடித்தமான எழுத்தாளரின் மூன்று கதைகளைச் சொன்னேன். அறுபது எழுபது பேர் பார்வையாளர்களாய்…

Read More
நேர்காணல் 

திராவிட இயக்கம்: தேவையை உணர்கிறேன்… தலைமையை நிராகரிக்கிறேன்…

நேர்காணல்: ப.திருமாவேலன் கேள்விகள்: பூ.கொ.சரவணன் பெரியோர்களே, தாய்மார்களே’ நூல் சமகால அரசியலை கடந்த காலத்தின் கண்ணாடி கொண்டு விரிவாக அணுகுகிறது. அரசியல் சார்ந்த தீவிரமான கருத்துக்களைச் சொல்ல மேடைப் பேச்சு நடையை க்கையாண்டு இருப்பதாக உணர முடிகிறது. இது திட்டமிடப்பட்டதா? ஆமாம்! எனது எழுத்துக்களில் புரியாத சொற்கள், அறியாத சொற்கள், குழப்பமான சொற்கள் இருக்கக்கூடாது என்பதில் எப்போதும் எச்சரிக்கையாக இருக்கிறேன். புரியாத, அறியாத, குழப்பமான சொற்களைப் பயன்படுத்துவது என்பது எதற்காக எழுதுகிறோமோ, யாருக்காக எழுதுகிறோமோ அந்த நோக்கத்தையே சிதைத்துவிடுகிறது. எழுதுவதன் நோக்கம், ‘நான் அறிந்தவன்’ என்று கூவுவது அல்ல. நான் அறிந்ததைக் கூவுவது. இதற்கு மேடைப்பேச்சு நடையைக் கையாண்டதற்கு இரண்டு காரணங்கள்… மேடையால் வளர்ந்ததே தமிழக அரசியல். முழக்கங்களால் வளர்க்கப்பட்டதே தமிழக அரசியல். எத்தனை நவீன ஊடகங்கள் வந்தாலும் இன்றும் மேடையைக் கலைக்காமல் தான் உள்ளது தமிழக…

Read More
நேர்காணல் 

பின்னர் அரசாங்கம் வீழ்ந்தது. ஆனால், புத்தகங்கள் இருந்தன!

– ரொமிலா தாப்பர் சந்திப்பு: பயாப்தி சுர், கனாட் சின்ஹா தமிழில்: ச.சுப்பாராவ் ஒரு வரலாற்றாளராக இந்தியாவில் கல்விப்புலம் சார்ந்த வரலாற்றைப் பொதுவெளிக்குக் கொண்டுவருவதில் நீங்கள் முன்னோடியாக இருக்கிறீர்கள். அரசின் கொள்கைகளை மக்கள் புரிந்து கொள்ள ‘பொதுவான அறிவுஜீவிகள்‘ உதவவேண்டும் என்ற உங்களது கருத்து மிகவும் கவனம் பெற்றது. அரசியலில் வரலாற்றை நன்முறையில் பயன்படுத்துவதையும், தவறாகப் பயன்படுத்துவதையும், ஒரு ஜனநாயக சமூகமாக, இந்தியா எந்த அளவிற்குப் புரிந்துகொண்டுள்ளது? வரலாற்றை ஒரு கல்விப்புலம் சார்ந்த துறையாகவும், அரசியலில் பயன்படுத்தப்படுவதாகவும் வேறுபடுத்திப் பார்ப்பது இந்தியாவில் போதுமான அளவில் இல்லை என்று முதலிலேயே சொல்லிவிடுகிறேன். வரலாற்றை ஜனரஞ்சகமாக்கி, கல்விப்புலம்சார்ந்த வரலாற்றை மாற்றி எழுதிவிடும் போக்கு இருக்கிறது. கல்விப்புலம் சார்ந்த வரலாறு மாறுபட்ட ஒன்று என்பதைப் புரியவைப்பதே பெரிய போராட்டமாக இருக்கிறது. மக்களுக்கு தம் கடந்த காலம் பற்றித் தெரிய வைப்பது என்பதால்…

Read More
நேர்காணல் 

உண்மைக் குற்றவாளிகளின் தடத்தில்

ரானா அயுப்  – ஆசிரியர், குஜராத் ஃபைல்ஸ். ஆங்கிலத்தில்: ஸியா உஸ் சலாம். தமிழில்: கவிதா முரளிதரன் 2013ன் இறுதியிலும் 2014ன் ஆரம்பத்திலுமான காலகட்டம் அது. பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டிருந்த நரேந்திர மோடியைப் பற்றிய புத்தகங்களை எப்படியாவது கொண்டு வந்துவிட வேண்டும் என்று எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் போட்டிபோட்ட காலகட்டம். ஒரு வாரம் விட்டு மறு வாரம் மோடியைப் பற்றிய ஏதாவதொரு புத்தகம்-அவருடைய வாழ்க்கை வரலாறாக வேண்டும் என்கிற நோக்கத்தோடு – வெளி வந்துகொண்டிருந்தது. ஒரு பிரபல எழுத்தாளர் 1970களின் மத்தியில் நரேந்திர மோடி ஹிமாலயாவில் தங்கியிருந்ததைப் பற்றி எழுதினார். அந்த நேரத்தில் மோடி தில்லி பல்கலைக்கழகத்தில் அவருடைய பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். இன்னொரு எழுத்தாளரோ மோடி எப்படி ஒரு முதலையுடன் மோதி வெல்லும் அளவுக்கு வீரனாக இருந்தார் என்று எழுதியிருந்தார். டீ விற்பவராக மோடி இருந்ததையும்…

Read More
நேர்காணல் 

குறுகத் தெரித்த குரல் – பெருகத் தெறித்த சிந்தனைகள்

எடுவர்டோ கலியானோ உடன் ஒரு பேட்டி ஜோனா ரஸ்கின்     தென் அமெரிக்காவின் நடுப்பகுதியில் உள்ள பராகுவே நாட்டில் 1940ஆம் ஆண்டு பிறந்த எடுவர்டோ கலியானோவின் எழுத்துக்கள் மிகுந்த வீரியம் கொண்டவை. அவரது லத்தீன் அமெரிக்காவின் ரத்த நாளங்கள் என்ற நூல் தென் அமெரிக்காவின் ரத்தம் தோய்ந்த வரலாற்றை நம் கண் முன்னால் கொண்டு வரும் ஓர் ஆவணமாகும். வெனிசுவேலாவின் அன்றைய அதிபர் ஹூகோ சாவேஸ் ஏப்ரல் 2009இல் நடைபெற்ற அமெரிக்க கண்டத்திலுள்ள நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கு கலியானோவின் ரத்த நாளங்கள் புத்தகத்தை பரிசாக அளித்த நிகழ்வு உலகப் புகழ் பெற்றதாகும். ஐந்து நூற்றாண்டுகளாக லத்தீன் அமெரிக்காவின் இயற்கை வளங்களை உறிஞ்சி உரம்பெற்ற அமெரிக்காவின் செயல்களை நமது ரத்த நாளங்கள் கொதிக்குமளவிற்கு மிகுந்த உஷ்ணத்துடன் வெளிப்படுத்துவதாக அவரது எழுத்துக்கள் அமைந்திருந்தன….

Read More
நேர்காணல் 

4000 ஆண்டுகளில் நாம் கண்ட மகசூல் முன்னேற்றத்தை 4 ஆண்டுகளில் சாதித்தோம்…

எம்.எஸ்.சுவாமிநாதன் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களுக்கு அறிமுகம் ஏதும் அவசியமில்லை. சுதந்திர இந்தியாவின் வேளாண்மை வரலாற்றோடு இணைபிரியாததொரு பெயர். இந்திய வேளாண்மை அறிவியல் ஆய்வுக் கழகத்தின் (ICAR) இன் தலைவர், மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் செயலாளர், திட்டக் கமிஷனின் துணைத் தலைவர், சர்வதேச அரிசி ஆராய்ச்சிக் கழகத்தின் (IRRI) தலைவர் என அவர் வகித்த பொறுப்புகள் பல. பெற்ற விருதுகளையும், பரிசுகளையும் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது; சுமார் 50 இந்திய, சர்வதேசப் பல்கலைக் கழகங்கள் வழங்கியுள்ள டாக்டர் பட்டங்களும் ஆசியாவின் நோபல் பரிசு எனப்படும் ராமன் மக்சாயிசே விருது உட்பட பல விருதுகளும் இதில் அடக்கம். 90 வயதைக் கடந்து இன்றும் பணி தொடரும் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் இரண்டு நாட்களில் இரண்டு மணி நேரம் ஒதுக்கித் தந்து வழங்கிய நேர்காணல் இது. நேரமும், புத்தகம் பேசுது…

Read More
நேர்காணல் 

களப்பணியில் கம்யூனிஸ்டுகள்

ஜி. ராமகிருஷ்ணன் தலைவர்களைப் பற்றித் தொண்டர்கள் எழுதிய புத்தகங்கள் ஏராளம் உண்டு. எளிய தொண்டர்களைப் பற்றித் தலைவர் எழுதிய முதல் புத்தகம் இதுதான். இதை எழுத வேண்டும் என்று உங்களைத் தூண்டியது எது. பதில் : மாநிலக்குழு உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த ஒருவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து வெளியேற்றி நடவடிக்கை எடுத்தோம். அவருடைய கட்சி வாழ்க்கையில் கட்சி அவருக்கு எல்லாக் கட்டத்திலும் முக்கியத்துவம் கொடுத்தது. கூட்டுறவு சங்கத் தேர்தலில் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். கட்சி மாநாட்டில் மாவட்டச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். நகர்மன்றத் தேர்தலில் நகராட்சித் தலைவர் வேட்பாளர் ஆனார். சட்டமன்ற தேர்தலில் நிற்க வைத்து அவரை கட்சி சட்டமன்ற உறுப்பினராக்கியது. ஆனாலும் அவர் ஒரு கட்டத்தில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் கட்சியைவிட்டே வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மாநிலக்குழு உறுப்பினர் வரையில்…

Read More
நேர்காணல் 

அச்சுறுத்தும் புதிய நோய், பரிணாமம், ஆரோக்கியம்

டேனியல் இ லிபர்மேன் மானுடப் பரிணாம உயிரியல் பேராசிரியர் டேனியல் இ லிபர்மேன் ஹார்வார்ட் பல்கலையில் பணியாற்றுகிறார். மனித உடல் தற்போது நாம் காண்பதைப் போல இருப்பதன் காரணத்தையும், அது இப்போது செயல்படுகிற விதத்தில் செயல்படுவதன் காரணத்தையும் குறித்து நிறைய ஆய்வுகளை வெளியிட்டிருக்கிறார். தற்போது அவர் செய்து வரும் ஆய்வு, காலணிகள் இன்றி ஓடுவதன் சாதகங்கள் பற்றியது. எனவே அவருக்கு ‘வெறுங்கால் பேராசிரியர்’ என்று பட்டப்பெயரும் உண்டு. 2013ம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட டேனியல் லிபர்மேனின் The Story of Human Body: Evolution, Health and Disease என்ற நூல் (அண்மையில் இந்நூலை, மனித உடலின் கதை: பரிணாமம், ஆரோக்கியம், நோய் என்ற தலைப்பில் பாரதி புத்தகாலயம் தமிழில் வெளியிட்டிருக்கிறது.) குறித்து இயன் டக்கர் நூலாசிரியருடன் உரையாடியதிலிருந்து: [ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு] மக்கள் படித்தறிந்து, தங்களின் நடத்தையை…

Read More
நேர்காணல் 

தன்னின உயர்வுவாதமே பிரிவினைகளுக்கு முக்கியக் காரணம்…

– சு.கி. ஜெயகரன் நேர்காணல்: சஹஸ் படங்கள்: சுஜித் சுஜன் தாராபுரத்தில் பிறந்த சு. கிறிஸ்டோபர் ஜெயகரன் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் புவியியல் பட்டமும், சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் இங்கிலாந்து கிளாஸ்ப்பரோ பல்கலைக் கழகத்தில் நிலத்தடிநீர் ஆய்வு தொடர்பான சான்றிதழ் பட்டமும் பெற்றவர். பல ஆண்டுகள் ஆப்பிரிக்கக் கண்டத்தின் பல நாடுகளிலும், ஆஸ்திரேலியாவிலும், பாபுவா நியூகினியாவிலும் பணியாற்றியவர். கடைசியாக, ஜெர்மானிய நிறுவனம் ஒன்றிற்காகச் ஜாம்பியாவில் பணியாற்றி 2011ல் ஓய்வுபெற்றுத் தற்சமயம் பெங்களூருவில் வசித்துவருகிறார். தொல்லியல், ஆதி மனிதக் குடியேற்றம், தமிழின வரலாறு ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஜெயகரன் எழுதிய குமரி நில நீட்சி (காலச்சுவடு)பழங்காலத் தமிழக வரலாற்றின பின்னணியில் உருவான மாயைகளை உடைக்கும் ஓர் அறிவியல் நூல். அவரது இதர நூல்கள் மூதாதையரைத் தேடி (காலச் சுவடு), தளும்பல் (உயிர்மை), கறுப்புக் கிஸ்துவும்,…

Read More