You are here
Ruskin Pande நேர்காணல் 

குழந்தைகளின் ரசனை ஒரு சமூகக் குறியீடு – ரஸ்கின் பாண்ட்

இந்தியாவின் தலைசிறந்த சிறார் இலக்கியப் படைப்பாளியான ரஸ்கின் பாண்ட் 1934ல் ஒரு பிரித்தானிய விமானப்படை அதிகாரிக்கு பஞ்சாபில் பிறந்தார். தனது பத்து வயதில் தந்தையை இழந்த அவர் சிம்லாவில் பிஷப் காட்டன் பள்ளி விடுதியில் வளர்ந்து சிறுவயதிலிருந்தே எழுத தொடங்கினார். தான் ஓர் இந்தியர் என்பதில் பெருமிதம் கொண்டவர். தன் பதினாறாவது வயதில் இர்வின் டிவினிட்டி இலக்கியப் பரிசு பெற்றவர். சிறார்களுக்கான இவரது ரஸ்டி கதாபாத்திரம் மிகப் பிரபலம். எ பிளைட் ஆஃப் பிஜியான்ஸ், எ ரூம் ஆன் தி ரூஃப் உட்பட சிறார்களுக்கான 50 நூல்களின் ஆசிரியர். 1992ல் சாகித்ய அகாடமி விருதும், 1999ல் பத்மஸ்ரீ, மற்றும் 2014ல் பத்ம பூஷண் விருதும் பெற்றார். ஏகலைவா பதிப்பகத்திற்காக அவர் அளித்த பிரத்யேக நேர்காணல். நன்றி: www.ekalvya.com சந்திப்பு: அரவிந்தன் தமிழில்: ஆயிஷா இரா. நடராசன். கேள்வி:…

Read More
WOLF GANG STREECK 2 நேர்காணல் 

மார்க்ஸின் எழுத்துகள் – நேர்காணல் – தமிழில் : கமலாலயன்

முன் எப்போதையும் விட இன்றுதான் அதிகமாகப் பொருந்துகின்றன – வுல்ஃப்காங் ஸ்ட்ரீக் நேர்காணல் : ஜிப்சன் ஜான் மற்றும் ஜித்தீஷ் பி.எம். புதிய தாராளமயவாத முதலாளித்துவத்தை விமர்சனம் செய்யும் உலகின் முன்னணி விமர்சகர்களுள் வுல்ப்காங் ஸ்ட்ரீக்கும் ஒருவர். ‘நியு லெப்ட் ரெவ்யு’-இதழுக்காக 2014-இல் இவர் எழுதிய ‘முதலாளித்துவம் எப்படி முடிவுக்கு வரும் ?’ என்ற கட்டுரைக்காக சர்வதேச அளவில் கவனிக்கப்பட்டவர். இக்கட்டுரை மிக அதிக அளவில் விவாதிக்கப்பட்டபின், புத்தக வடிவிலும் வெளியானது. முதலாளித்துவத்தின் தற்போதைய செல்நெறித் தடத்தை மிக ஆழ்ந்த கவனத்துடன் பகுப்பாய்வு செய்து வருகிறவரான ஸ்ட்ரீக், “ஜனநாயகத்திற்கும், முதலாளித்துவத்திற்கும் இடையே நடைபெற்ற திருமணம், இரண்டாம் உலகப் போரின் நிழலில் பொருத்தமேதும் இன்றி இணைக்கப்பட்ட பங்குதாரர்களை ஒன்றிணைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சி. அந்தப் பொருந்தாத் திருமணம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது . நிதித்துறைப் பகுதியின் அத்துமீறல்களை ஒரு…

Read More
yuma vasugi நேர்காணல் 

மொழிபெயர்ப்பாளனின் வாதைகள் யாருக்கும் தெரிவதில்லை!

நேர்காணல்: யூமா வாசுகி சந்திப்பு: கமலாலயன் ஒளிப்படங்கள்: மாணிக்கசுந்தரம் அறிமுகம் ஓவியர், கவிஞர், சிறுகதையாளர், நாவலாசிரியர், பத்திரிகையாளர், சிறார் இலக்கியச் செயல்பாட்டாளர் என பல பரிமாணங்கள் கொண்டவர். இயற்பெயர், மாரிமுத்து. கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் நுண்கலையில் பட்டயம் (Diploma) பெற்ற ஓவியர். இவர் எழுதிய ‘ரத்த உறவு’, ‘மஞ்சள் வெயில்’ ஆகிய நாவல்கள், வாழ்க்கையின் வலிகளையும் உக்கிரங்களையும் உலுக்கி எடுக்கும் மொழியில் பேசியவை. ‘ரத்த உறவு’ நாவல் 2000மாவது ஆண்டில் தமிழ் வளர்ச்சித்துறை வழங்கிய சிறந்த நாவலுக்கான பரிசு பெற்றது. ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ‘உயிர்த்திருத்தல்’ இவரது சிறுகதைத் தொகுதி. ‘தோழமை இருள்’, ‘அமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு’, ‘என் தந்தையின் வீட்டைச் சந்தையிடமாக்காதீர்’, ‘சாத்தானும் சிறுமியும்’ ஆகியவை இவரது கவிதைத் தொகுப்புகள். ‘மரூனிங் திக்கெட்ஸ்’ என்பது, இவர் பத்திரிகைகளில் வரைந்த கோட்டோவியங்கள் அடங்கிய நூல். குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்குமாக…

Read More
நேர்காணல் 

நிறுவனமயமாக்கப்பட்ட பெரியார் தத்துவமயமாக்கப்பட வேண்டும்.

நிறுவனமயமாக்கப்பட்ட பெரியார் தத்துவமயமாக்கப்பட வேண்டும். நேர்காணல்: பசு கவுதமன்   ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான் (பாரதிபுத்தகாலயம்). நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்? (நியூசெஞ்சுரிபுத்தக நிலையம்) ஆகிய இரண்டு பெருந்தொகுப்புகளினூடாக பரவலான கவனக் குவிப்பைப் பெற்றவர்; இன்னும் பல படைப்புகளை உருவாக்கும் ஆயத்தப்பணிகளில் இருக்கிறார். சூழலியலாளர். இயற்கைமுறை விவசாயத்திலும், மீன் வளர்ப்பிலும் முனைப்புடன் இருப்பவர். தன்னுடைய இயற்கை வேளாண் பண்ணையில் – எழில் கொஞ்சும் சூழலில் பல கேள்விகளுக்கு மடைதிறந்த வெள்ளமென பதிலளித்தார். அவர் எழுத்தாளராக உருவானது எப்படி? ஏன்? எந்த சூழல் தன்னை மாற்றியது உள்ளிட்ட பல விவரங்கள்.…. தன் உடல்நலத்தை பெருமளவுக்கு கண்டு கொள்ளாமல் பெரியாரை பெரியாராகவே அறிமுகப்படுத்தும் அவரது முனைப்பு தமிழ்ச் சமூகம் கண்டு கொள்ள வேண்டிய ஒன்றாகும். இனி உரையாடலிலிருந்து…. தங்களைப்பற்றிச் சொல்லுங்களேன்… என் தந்தையார் ராணுவத்தில் பணியாற்றிவிட்டு பொன்மலை…

Read More
நேர்காணல் 

“குழாயத் தொறந்தா பணம் கொட்டுமே, உங்களுக்கென்னங்க குறை?” என்றார்கள்

– சுந்தர் கணேசன் இயக்குநர், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், சென்னை. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநரான திரு. சுந்தர் கணேசன், பழமையான தமிழ் நூல்களைச் சேகரிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர், வரலாற்று ஆய்வாளர். இயற்பியல் துறையில் தான் பெற்ற நிபுணத்துவத்தை புத்தகங்களைப் பாதுகாக்கும் தொழில் நுட்பத்தோடு இணைத்துப் பயன்படுத்துகிறார். உலக அளவிலான நூலகங்கள் குறித்தும், ஆய்ந்தும் பல்வேறு கட்டுரைகள் எழுதியுள்ளார். ‘யாழ்ப்பாண நூலகத்திற்கு ஓர் இரங்கற்பா’ என்பது இவர் எழுதிய குறுநூல். ரோஜா முத்தையா நூலகம் பற்றிய மாற்றுவெளி சிறப்பிதழ், மற்றும் காப்புரிமைச் சட்டம் குறித்த தொகுப்பு நூல் ஆகியவற்றின் பதிப்பாசிரியர். நூலகத்துறை சார்ந்த ஆர்வம் உங்களுக்கு ஏற்பட்டதற்கான காரணங்கள், பள்ளிக் காலச் சூழல் போன்ற அம்சங்களிலிருந்து தொடங்கலாமா? சுந்தர்: ஆமாம். அது சரியாக இருக்கும். நான் படித்த பள்ளி, சென்னை ஐ.ஐ.டி.யினுள் உள்ள…

Read More
நேர்காணல் 

‘கணிதத்தில் நிரூபணம் என்பது சமூகச் சிந்தனை’

டாக்டர் ஆர். ராமானுஜம் சென்னை தரமணியில் உள்ள கணிதவியல் நிலையத்தில் அறிவியல் ஆய்வாளராகப் பணியாற்றி வரும் டாக்டர் ஆர். ராமானுஜம் தமிழ்கூறு நல்லுலகம் நன்கறிந்த ஒரு பேராசிரியர். தமிழ்நாட்டில் ‘எல்லாக் குழந்தைகளும் பள்ளிக்கூடம் போகணும், பத்தாண்டுக் கல்வியினை நிச்சயம் படிச்சு ஆகணும்‘ என்ற முழக்கத்தை எண்பதுகளின் இறுதிப்பகுதியில் தொடங்கி இன்று வரை தொடர்ந்து எழுப்பி வருகிற ஒரு களச் செயற்பாட்டாளருங்கூட, குறிப்பாக பள்ளிக் கல்வித்துறை சார்ந்து பாடத் திட்ட வரைவு, மீளாய்வு, தேர்வு முறை குறித்த பரிசீலனை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பரிசீலனைகளையும், பரிந்துரைகளையும் முன் வைத்து வருபவர். பள்ளிக் குழந்தைகளின் பாடச் சுமையைக் குறைக்கவும், புதிய பாடத் திட்டத்தை உருவாக்கவும் தற்போது தமிழ்நாடு அரசு நியமித்திருக்கிற குழுவில் ஓர் உறுப்பினர். தனது களப்பயணம் குறித்த மலரும் நினைவுகளைப் புத்தகம் பேசுது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்:…

Read More
நேர்காணல் 

சோஷலிச எழுத்தின் அடிப்படைகள்

தோழர் விஜய் பிரசாத் உடன் ஒரு நேர்காணல் மார்க் நோவாக் தமிழில் – ச.சுப்பாராவ் சோஷலிச எழுத்து என்பது எழுதுபவரின் மேதமை பற்றியதல்ல; அது அவர்கள் சமூகத்தோடு நடத்தும் உரையாடல் பற்றியது. இடதுசாரி எழுத்துகள் பெரும்பாலும் யாராலும் எளிதில் நுழைய இயலாத குழூஉக்குறிகள் கொண்ட, யாரும் நேரம் செலவழிக்கத் தயாராக இல்லாத, மார்க்சிய மொழியில் இருப்பவை என்றோ, அல்லது மிகு எளிமைப் படுத்தப்பட்ட பிரச்சாரம் என்றோ, கேலிச்சித்திரமாக ஆக்கப்படுகின்றன. எனினும், ஒருவரது அரசியல், அவர் புரியாதபடி எழுதுவதை, வறட்டுத்தனமாக எழுதுவதை, அல்லது சாதாரணமாக ஒரு மோசமான எழுத்தாளராக இருப்பதை, ஒருபோதும் தடுக்க முடியாது. ஆனால், இடதுசாரிகளின் வரலாறு, தம்மிடம் சொல்வதற்கு முக்கியமான செய்தி உள்ளது என்பதற்காக பேனாவைக் கையில் எடுத்துக் கொண்டு, அந்தச் செய்தி பரந்த முறையில் தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைக்கும்…

Read More
நேர்காணல் 

எதிர்ப்பின் பாடலை முணுமுணுத்தல்—

சுமங்களா தாமோதரனின் புத்தகம், இப்டாவின் இசைப் பாரம்பரியத்தை அடியொற்றிப் போகிறது…. நேர்காணல்:சுமங்களா தாமோதரன் சந்திப்பு: குனால் ராய் சுமங்களா தாமோதரன்,ஓர் ஆசிரியர், பாடகர், செயற்பாட்டாளர்,எழுத்தாளர், இந்திய மக்கள் நாடகமன்றத்தின் இசைப்பாரம்பரியத்தைப் பற்றி ஆய்வு செய்து புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார். இடதுசாரி சிந்தனையுள்ள நாடகக் கலைஞர்களால் 1940களில் உருவாக்கப்பட்ட சங்கம் “இப்டா”.பிருத்விராஜ் கபூர், பால்ராஜ் சஹானி,குவாஜா அகமத் அப்பாஸ், சப்தர் மீராஸ் போன்ற பெரும்புகழ் பெற்ற கலைஞர்கள் அதன் உறுப்பினர்களாயிருந்தனர்.ஆவணமாக்கப்பட்டுள்ள அதன் படைப்பாக்கங்கள், நிகழ்த்துதல் விவரங்களை ஆழ்ந்தகன்று விரிந்த விதத்தில் ஆய்வு செய்து தானும் அவற்றை நிகழ்த்தியவர் சுமங்களா தாமோதரன். இசைக்கும் புலம் பெயர்தலுக்கும் இடையில் நிலவும் உறவைப்பற்றி ஆராய்ந்துவரும் ஒரு சர்வதேசக் கூட்டிணைவுத் திட்டத்தின் ஓர் அங்கமாகத் தற்போது பணியாற்றி வருகிறார். ஆசியாவிலும்,ஆப்பிரிக்காவிலும் பல பல்கலைக்கழகங்கள்,ஆய்வறிஞர்கள், இசைக்கலைஞர்கள்—என பல்வேறு தரப்பினர் ஒருங்கிணைந்து மேற்கொண்டுள்ள திட்டம் இது. தி…

Read More
நேர்காணல் 

சந்தையை நோக்கி மக்களைத் தள்ளுவதே இன்றைய அரசு!

தோழர் டி.கே.ரங்கராஜன், மாநிலங்களவை உறுப்பினர் சந்திப்பு: ப.கு. ராஜன், கமலாலயன் உங்களுடைய பின்னணி குறித்து கொஞ்சம் சொல்லுங்கள்.நீங்கள் ஒரு மார்க்சிஸ்டாக,தொழிற்சங்கத் தலைவராக உருவானது எப்படி? நான் பள்ளியிறுதி வகுப்பு முடித்தபோது, மேற்படிப்புக்குப் போக முடியாத சூழ்நிலையில் குடும்பநிலை கருதி வேலைக்குப் போக நேர்ந்தது.இ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலையில் எழுத்தர் என்பது என் பணி. நிர்வாகஊழியர்கள் அடுக்கில் அதுதான் கடைநிலை.1958-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி பணியில் சேர்ந்தேன்.பல மேலதிகாரிகள், ஜெனரல் மேனேஜர் உட்பட எல்லாரும் ஐரோப்பியர்கள், வெள்ளையர். தொழிலாளர்கள் சுமார் 1000 பேருக்குமேல் இருந்தனர். நான், இன்னும் மூன்று பேர் எழுத்தர்கள். தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்கம் உண்டு. காங்கிரஸ் – (ஐ.என்.டியு.சி.,), தி.மு.க கட்சிகளின் பின்னணித் தொழிற் சங்கங்கள் அவை. ஆனால் அலுவலக – நிர்வாக ஊழியர்களுக்குத் தொழிற்சங்கம் கிடையாது. ஒருகட்டத்தில், ஐ.என்.டி.யு.சி.சங்கம், ஏ.ஐ.டி.யூ.சி. சங்கமாக மாறியது. அன்றைய…

Read More
நேர்காணல் 

இயற்கையின் அழகைப் பிரதிபலிப்பவைதான் அறிவியல் சமன்பாடுகள்

இயற்கையின் அழகைப் பிரதிபலிப்பவைதான்   அறிவியல் சமன்பாடுகள் – முனைவர் டி. இந்துமதி சந்திப்பு: முனைவர் சுபஸ்ரீ தேசிகன் தமிழில்: ப.கு.ராஜன்,  புகைப்படம்: மணிசுந்தரம் முனைவர் டி. இந்துமதி: சென்னை, கணிதவியல் கல்விக் கழகத்தின் (Institute of Mathamatical Science) பேராசிரியர். சர்வதேச அளவில் தனது துறையில் புகழ் பெற்ற கோட்பாட்டு இயற்பியலாளர் (Theoritical  Physicist) துகள் இயற்பியல் (Partide Physics) ஆய்வில் ஈடுபட்டுள்ள முன்னணி அறிவியலாளர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர்களில் ஒருவர். அதன் அறிவியல் மற்றும் அறிவியல் உணர்வுப் பிரச்சாரங்கள்  தீவிரமான செயல்பட்டாளர். கணவர் முனைவர். ராமானுஜம் அவர்களும் ஒரு முன்னணி விஞ்ஞானி. முனைவர். சுபஸ்ரீ தேசிகன்: இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்ற சுபஸ்ரீ, அறிவியலைப் பரந்துபட்ட மக்களிடம் பேசும் ஆர்வத்தில் முழுநேர பத்திரிக்கையாளராகப் பணியாற்றி வருகின்றார். இந்து ஏட்டில் அறிவியல், தொழில்…

Read More