சென்னை வாசிப்பு முகாம்

என்.மணி நான், எனது இணையர் காந்திமதி, மகள் நிவேதிதா மற்றும் சச்சின் என குடும்ப சகிதமாக கலந்து கொண்ட வாசிப்பு முகாமின் முதல் கட்ட  அனுபவம் இது. செப்டம்பர் மாதம் 28  மற்றும் 29 தேதிகளில் சென்னையில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய  எட்டாவது வாசிப்பு முகாம். இம்முகாமிற்கு தேர்வு செய்யப்பட்ட “ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்கான கல்வி முறை”நூலை, முதல் முகாமிலேயே  (5&6செப்டம்பர் 2010)கடினம் என ஏகமனதாக முன்மொழிந்தனர்.அதனை ஒட்டி அந்நூலை எளிமைப்படுத்தலாம் என்னும் எண்ணங்களும் உருவாகியது. அந்நூலினை தமிழாக்கம் செய்த ஆயிஷா நடராசன் அம்முகாமிற்கு, உடல் நலக் குறைவு காரணமாக வர இயலாமல் போயிற்று. ஒருவேளை அப்போது அவர் வந்திருந்தால் இந்த எண்ணம் உருவாகாமலே போயிருக்கும். இந்த எட்டாவது வாசிப்பு முகாமில் கலந்து கொண்ட நடராசன் குறிப்பிட்டார் “இந்நூல் கடினம் எனப் பலர் கூறுகின்றனர். ஆயிஷா  தொடங்கி,எளிய…

Read More