You are here

சென்னை- பொங்கல் புத்தகத் திருவிழா

பேராசிரியர் கோபால் கிருஷ்ண காந்தி மே.வங்க மாநில மேநாள் ஆளுநர், முன்னாள் இந்திய ஆட்சிப் பணி, வெளிநாட்டு தூதரகப் பணி உயர் அலுவலர் பேராசிரியர் கோபால் கிருஷ்ண காந்தி – (மகாத்மா காந்தி, ராஜாஜி ஆகியோரின் பேரன்) அவர்கள் ஆற்றிய துவக்க உரையின் சிறு பகுதி. ‘அறிவாற்றல் சிந்தனையை மழுங்கடிக்கும் போக்குக்கு எதிராக விழிப்புணர்வு மிகவும் அவசியம்’ என்று மேற்குவங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி வேதனை தெரிவித்தார்.சென்னை பொங்கல் புத்தகத் திருவிழா ஜனவரி 13 துவங்கி 24ஆம் தேதி வரை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ.திடலில் நடைபெறுகிறது. அதன் துவக்கவிழா புதனன்று (ஜன.13) நடைபெற்றது. இதில் பேசிய அவர், “தமிழ்நாடு இயற்கை வளம் மட்டுமல்லாமல் ஆற்றல் வளமும் கொண்ட மாநிலமாகும். திறந்த மனதுடன் பேசும் மரபுக்குச் சொந்தக்காரர்கள். இடதுசாரி, பெரியார் சிந்தனைகள் சமூக-அரசியல் அம்சங்களில் ஏற்படுத்திய தாக்கம்தான் இதற்குக்…

Read More
நிகழ்வு 

இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் கருத்துரிமைக்கான தமிழ் எழுத்தாளர்களின் சென்னைப் பிரகடனம்

    • சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் ஒருபோதும் இருந்திராத அளவு மதரீதியாக தேசத்தைப் பிளவுபடுத்துகிற பேச்சுக்களும் வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டு, மதம்சார்ந்த அடையாள அரசியலின்கீழ் ஒட்டுமொத்த தேசத்தையும் கொண்டுவர நடக்கும் முயற்சிகள்குறித்து எங்கள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறோம். • பன்முகப் பண்பாடுகளின் கலவையாகத்  திகழும் இந்திய மக்களை, ஒற்றை அடையாளம் என்னும் பட்டிக்குள் தள்ளுகிற முயற்சியின் காரணமாக சிறுபான்மை மக்களை அந்நியர்களாகவும், இந்தியப்பண்பாட்டின் விரோதிகளாகவும் சித்தரிக்கும் போக்கு அபாயகரமான எல்லைக்கு வளர்ந்திருப்பதையும்; மதவாதக் கருத்துகள் சாதியரீதியான வன்முறைகளை ஊக்குவிப்பதால் தலித்துகள்மீதான தாக்குதல்கள் நாடெங்கும் அதிகரித்துவருவதையும் கவலையோடு சுட்டிக்காட்டுகிறோம். • எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி, பகுத்தறிவாளர்கள் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே ஆகியோர் திட்டமிட்ட முறையில் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வுகள் நாட்டிலுள்ள சுயசிந்தனையாளர்கள் அனைவருக்குமான அச்சுறுத்தல் என்பதை கவனப்படுத்துகிறோம். •   வகுப்புவாத வன்முறைகளுக்கு எதிராகவும், கருத்துரிமைக்கு ஆதரவாகவும், மத்திய அளவிலும் மாநில…

Read More
நிகழ்வு 

தேவ.பேரின்பன்: முதலாம் ஆண்டு நினைவு தின நூல் வெளியீட்டு விழா

மார்க்சிய அறிஞர் தேவ. பேரின்பன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நூல் வெளியீட்டு விழா தருமபுரி முத்து இல்லத்தில் 2014 செப். 18ல் நடைபெற்றது. தொல்லியல் ஆய்வாளர் சுகவனமுருகன் தலைமைவகித்தார்.தோழர் தேவ.பேரின்பன் நினைவுமலரை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத்தலைவர் ஜி.ஆனந்தன் வெளியிட முதல் பிரதியை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இரா.செந்தில் பெற்றுகொண்டார். மறைந்த தோழர் தேவ. பேரின்பன் எழுதிய தமிழர் வளர்த்த தத்துவங்கள் எனும் பாரதி புத்தகாலயம் வெளியிட்ட நூலை மார்க்சிஸ்ட் மாதஇதழ் ஆசிரியர் என். குணசேகரன் வெளியிட முதல் பிரதியை ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ச. வரதராசுலு பெற்றுகொண்டார். நினைவு உரையை கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் டி. இரவீந்திரன், மாவட்டச் செயலாளர் எம். மாரிமுத்து, சட்டமன்ற உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.இளம்பரிதி, தமுஎகச….

Read More

கூடலூர் 10வது வாசிப்பு முகாம்…

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 10-வது வாசிப்பு முகாம் தேனி மாவட்டம் கூடலூரில் மே 3, 4, 5 தேதிகளில் வெற்றிகரமாக நடைபெற்றது. தமிழகம் முழுவதிலுமிருந்து கல்வியாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். நினைவுகள் அழிவதில்லை நாவல் வாசிப்பிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அதன் மீதான விமர்சனங்களைப் பலரும் பகிர்ந்து கொண்டனர். அந்த உரைகள் இங்கே சுருக்கமாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

Read More

கீழத்தஞ்சையில் சமூகநீதிக்கான போராட்ட வரலாறு!

தொழிலாளி வர்க்கத் தலைவராகப் பரவலாக அறியப்பட்ட போதிலும் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்காகவும் குரல் எழுப்பி தன் வாழ்நாளையும் அடுத்த பல தலைமுறையினரின் வாழ்நாளையும் பயனுள்ளதாக மாற்றிய சமூகப் போராளியும் தலைசிறந்த கம்யூனிஸ்டுமான தோழர் வி.பி.சி.யின் 27வது நினைவுதினமான மே 8, 2014 மற்றொரு வகையில் குறிப்பிடத்தக்கதொரு நாளாகவும் அமைந்தது.

Read More
நிகழ்வு 

பாரதி புத்தகாலயத்தின் புதிய வெளியீடுகள்!

எல்லாமாகிய எழுத்து – சா.கந்தசாமி என் சக பயணிகள் – ச.தமிழ்ச்செல்வன் சந்தித்தேன் (ஆளுமைகளுடன் நேர்காணல்) – ச.தமிழ்ச்செல்வன் மார்க்ஸ் உண்மையில் கூறியது என்ன? – எர்னஸ்ட் ஃபிஷர் அடிப்படைவாதங்களின் மோதல்: சிலுவைப் போர், ஜிகாத், நவீனத்துவம்… – தாரிக் அலி | தமிழில்: கி.ரமேஷ் சதியில் எழுந்த சாதி – பி.சம்பத் பஷீர் தனி வழியிலோர் ஞானி – பேரா. எம்.கே.ஸாநு தமிழில்: யூமா.வாசுகி துப்பாக்கிகள்,கிருமிகள், எஃகு (மனித சமூகங்களின் நிலையை தீர்மானித்த காரணிகள்) – ஜாரெட் டைமண்ட் | தமிழில்:ப்ரவாஹன் இந்திய நாத்திகம் – தேவிபிரசாத் சட்டோபாத்யாயா தமிழில்: சாமி பால்கட்டு – சோலை சுந்தரபெருமாள் சுஜாதா – ஓல்கா | தமிழில்: கௌரி கிருபானந்தன் பசி – எலிஸ் பிளாக்வெல் | தமிழில்: ச.சுப்பாராவ் நிகழ்வில் எழுதிய வரலாறு (உலகப் புகழ் பெற்ற…

Read More
நிகழ்வு 

திருக்குறள் காலமும் கருத்தும்!

சேலம் “பாலம்” புத்தக நிலையத்தில் வாரந் தோறும் ஞாயிற்று கிழமை நடக்கும் வாசகர் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்வில் 17.11.2013 அன்று எழுத்தாளர் பொ.வேல்சாமி கலந்து கொண்டார். தீதிருக்குறள் காலமும் கருத்தும் என்னும் தலைப்பிலான அவரது உரையிலிருந்து சில பகுதிகள். தற்போது தமிழின் அடையாளமாகக் கொண்டாடப் படும் தீதிருக்குறள்பீ 7ஆம் நூற்றாண்டுக்குப் பின் யாரும் அறியாத நூலாகவே இருந்தது. 19ஆம் நூற்றாண்டில்தான் கிறித்தவப் பாதிரியர்கள் அதன் சிறப்பை உணர்ந்து மக்களிடம் மீண்டும் அறிமுகப்படுத்தினர். நன்னூல், திருக்குறள் போன்ற நூல்கள் தமிழ் மக்களின் நாகரிகம் மீதான எண்ணங்களை வெள்ளையர்களிடம் அடியோடு மாற்றின. விவிலியத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல குறளின் கருத்துக்களை அவர்கள் பயன்படுத்தினர். தொடக்கத்தில் ஒரு சமண நூலாகவே அறியப்பட்ட திருக்குறள் மறுபடியும் புகழ் பெற்ற நூலானபோது சைவம் அது தன்னுடையது என்று வாதிட்டது. பலரும் தங்களுடைய சொந்த…

Read More
நிகழ்வு 

சத்யஜித்ரேயும் ஃபெலுடாவும்!

ஒரு படைப்பாளியும் மனிதனே. இன்னும் சொல்லப் போனால், மற்ற மனிதர்களைவிட சற்று முழுமை பெற்ற மனிதன், தன் வாழ்க்கைச் சூழலிலிருந்தும், அதோடு பின்னிப் பிணைந்திருக்கும் அன்றாடக் காரியங்களில் இருந்தும் முழுமையாகத் தன்னைப் பிரித்துக் கொள்வதென்பது அவனால் முடியாத காரியம். எனவே எந்த ஒரு படைப்பிலும், ஏதோ ஒரு வகையில் இந்த சமூகப் பிரக்ஞை என்பது இடம் பெற்றே தீரும்… தனது படைப்புகள் மூலம், அந்த சமூகப் பிரச்சனைகள் பற்றிய பிரக்ஞையை மக்களிடையே ஏற்படுத்துவதுதான் படைப்பாளி பிரச்சனைகளைத் தொடுவதன் நோக்கம். பிரக்ஞையடைந்த மக்கள் தமக்கான தீர்வுகளைத் தாமே சிந்தித்து முடிவு செய்வார்கள். -சத்யஜித்ரே ஒரு படைப்பாளியின் சமூகப் பொறுப்பு குறித்த கேள்விக்கு சத்யஜித்ரே மேற்கண்டவாறு பதிலளித்ததாகத் தமிழ்த் திரைப்பட இயக்குநரான பாலுமகேந்திரா தன் கட்டுரையன்றில் குறிப்பிடுகிறார். 1955 ஆம் ஆண்டில் ரேயின் முதல்படமான பதேர் பாஞ்சாலி வெளிவந்திருக்கிறது. அடுத்த…

Read More

பக்தி இலக்கிய வாசிப்பில் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள சித்திரம்பேசேல்

தொகுப்பு: நட்ராஜ் மீனாவின் “சித்திரம் பேசேல்” நூல் சென்ற அக்டோபர் 13 அன்று சென்னை அகநாழிகை புத்தக நிலையத்தில் விமர்சன ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. இலக்கிய ஆர்வலர்கள் நிறைந்த அக்கூட்டத்தில் விமர்சித்து ஒலித்த குரல்கள் கீழே: வெளி ரங்கராஜன் : மீனாவின் இப்பிரதி தமிழ் இலக்கிய, பண்பாட்டு அரசியல் வெளிகளில் உருவாக்கப்பட்ட பிம்பங்களை தீவிர மறு பரிசீலனைக்கு உட்படுத்தும் ஒரு நவீன குரலாக வெளிப்பட்டுள்ளது. வ.வே.சு அய்யர் போன்ற நமது இலக்கிய ஆளுமைகளின் வரலாற்றுப் பிழைகளைத் தனிமைப்படுத்திப் பார்க்காமல், அந்த ஓரம்சத்தின் அடிப்படையில் அவர்களின் ஒட்டு மொத்தச் செயற்பாடுகளை எடைபோடும் அளவுகோலின் அபாயங்களை கவனத்திற்குக் கொண்டு வருவது இந்நூலின் அடுத்த சிறப்பு. அழகியல் தனித்து இயங்காமல் நுண் அரசியல் தளங்களுக்குள் ஊடுருவி எதிர்ப்புணர்வைப் பதிவு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைக்கிறது மீனாவின் எழுத்துக்கள். எஸ்.சண்முகம்: இந்நூலிலுள்ள ராதிகா சாந்தவனம்…

Read More

பேராசிரியர் என்.சுப்ரமண்யன் – தமிழ் அறிவுலகின் ஓர் நட்சத்திரம்

அஞ்சலி வே.தூயவன் அறிவுலகம் கொண்டாடியிருக்க வேண்டிய, ஆனால் கொண்டாடப்படாத பேரறிஞர் என். சுப்ரமண்யன் மறைந்துவிட்டார். இன்னும் சில மாதங்கள் கடந்திருந்தால் அவருக்கு நூற்றாண்டு கொண்டாடியிருக்கலாம். ஆனால் அகவை 99 நடந்து கொண்டிக்கும்போதே அக்டோபர் 22ம் தேதி அவர் இந்த உலகை விட்டு நீங்கிவிட்டார். உடுமலைப்பேட்டையில் தனது இளைய மகன் சுந்தரேசன் வீட்டில் 22ம் தேதி காலை 10 மணியளவில் அவர் உறங்கிக் கொண்டிருந்த நிலையிலேயே நிரந்தரத் துயில் கொண்டுவிட்டார். கடலூர் நகரில் பலராம் ஐயர் என்ற தமிழறிஞரின் மகனாக 1915ம் ஆண்டு பிறந்தவர் என்.சுப்ரமண்யன்.  வீட்டில், அவர் தந்தை தமிழறிஞர்கள் பலரோடும் உறவாடக் கேட்டு, அவர் எடுத்துவரச் சொல்லும் செம்மொழித் தமிழ் நூல்களை, அலமாரியில் இருந்து எடுத்து வந்து தந்தையிடம் கொடுக்கும் பணி சுப்ரமண்யனுடையது. நன்னூல் சூத்திரம், தொல்காப்பிய உரைகள் என எத்தனை எத்தனையோ தமிழ்ப் புத்தகங்களை…

Read More