பின்னலின் கதை!

ம. மணிமாறன் ஏதோவொரு புள்ளியில் தனக்கான மனத்திறப்பின் சாவியைப் பொதிந்து வைத்திருக்கின்றன புத்தகங்கள் என எல்லா வாசகர்களும் நம்புகின்றனர். ஆகவே தான் புத்தகங்களின் பக்கங்கள் புரள்கின்றன. விசித்திரப் புள்ளிகள் தோய்ந்திருக்கும் சொற்பதம் இதுதான் என கண்டடைய சிலசமயங்களில் அவனை கடைசிப்பக்கம் வரை காத்திருக்கச் செய்கின்றன புத்தகங்கள். அந்தப் புள்ளியை அடைந்த பிறகு அதுவரை வாசிக்கப்பட்ட பக்கங்கள் மறுமுறை புதியதொரு சுவாரஸ்யத்துடன் புரள்கின்றன. சில புத்தகங்களின் தலைச்சொல்லிலேயே வாசகன் சிக்கிக்கொள்வதும் உண்டு. அதன்பிறகு புத்தகமும், அவனும் ஒருவரையொருவர் பிரிவது சாத்தியமில்லை. வாசகனைக் குறித்த இச்சிறு குறிப்பினை அவசியமாக்கிய நூல் ஒன்றை வாசித்ததால் வந்த வினையே என்பதால் என் சகவாசகர்களே கொஞ்சம் பொறுத்துக் கொண்டு பின்தொடருங்கள். மேற்சொன்ன இருநிலைகளிலும் ஆனது ஊர்மிளா பவாரின் ‘முடையும் வாழ்வு’ என்கிற தன் வரலாற்று நூல். மராத்தியிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து தமிழ்வாசகர்களுக்காகவும் பெயர்க்கப்பட்டு போப்புவால்…

Read More