You are here

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு நூலகம்…

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு நூலகம்… உலகின் அனைத்துத் தங்க சுரங்கங்களிலும் இருந்து வெட்டி மொத்தமாக எடுத்த புதையலை விட அதிக செல்வம் புத்தகங்களுக்குள் புதைந்து கிடக்கிறது. – வால்ட் டிஸ்னி மனித வரலாற்றின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம்தான். ‘ புத்தகமே இல்லாத குழந்தைதான் உலகில் உண்மையான அனாதை குழந்தை என்பார் சிஸெரோ. இன்றைய சமூகத்தின் பல்வேறு அவலங்களுக்கான ஒற்றைத் தீர்வு புத்தக வாசிப்பை பரவலாக்குவதுதான் என்பது ஐ.நா. சபையின் சமீபத்திய அறிக்கையின் சாராம்சமாகும். அதிலும் குறிப்பாக நம் இளைய தலைமுறை வாசிப்பதை நாம் உறுதிசெய்யும் ஒரே செயல் மட்டுமே. நோபல் பரிசு உட்பட பெறும் குழந்தைகளாக, படைப்பாக்க உறுதி மிக்கவர்களாக அவர்களை மாற்ற முடியும். மனதை கட்டுப்படுத்துதல், தீய பழக்கங்களுக்கு ஆட்படாதிருத்தல், இலக்கை, லட்சியங்களை உருவாக்குதல், அதற்காக முழு ஈடுபாட்டுடன் உழைத்தல் எனும் வட்டத்தில் வாசிப்பு…

Read More

‘புதிய கல்விக் கொள்கை’ – எதிர்ப்பு ஆசிரியர் தினம்!

காலங்காலமாக ஆசிரியர்கள் சமூகத்தின் மாற்றங்களை கிரியா ஊக்கியாய் இருந்து சாதித்து வருகிறார்கள். அவர்களைக் கொண்டாடும் ஆசிரியர் தினத்தை குரு உஸ்தவ் ஆக்கி, அதில் காவி பூசிய அரசியல் மிகவும் ஆபத்தானது. முப்பதே சதவிகித ஓட்டுகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த இந்துத்வாவாதிகள் இன்று மற்றொரு ஆயுதத்தை மக்களுக்கு எதிராக கையிலெடுத்து இருக்கிறார்கள். ‘புதிய கல்விக் கொள்கை என்கிற பெயரில் கார்பரேட் தனியார் மய கொள்ளையர்களோடு கைகோர்த்து கல்வியை இந்துமத குருகுலமயமாக்கிட பெருஞ்சதியில் ஈடுபட்டிருக்கிறார்கள். மாட்டிறைச்சி அரசியலும், பல்கலைக் கழகங்களை சாமியார் மயமாக்கும் முயற்சியும் படுதோல்வியில் முடிந்ததால், அடுத்து கல்வியைக் கையிலெடுத்திருக்கும் இந்த அரசு, தலித்துகள், உழைக்கும் அடித்தள மக்கள் மத்தியில் கடும் சுரண்டலை ஏறக்குறைய குலக்கல்வி முறையை முன்மொழிந்து நூற்றாண்டுகாலப் போராட்டங்களை நீர்த்துப் போக வைக்கும் ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது. தாய்மொழிக் கல்வி, உலகளாவிய அறிவியல் கல்வி, என…

Read More

மக்கள் வாசிப்பு – புதிய நம்பிக்கை

நமது சமூகத்தின் நெருக்கடிகள் புரையோடி ஆழமாய் பதிந்து மக்கள் கொந்தளிப்புகளாய் வெடிக்கின்றன. கருத்துச் சுதந்திரத்தின் குரல் வளையை எப்படியாவது நெரித்து ஜனநாயகப் படுகொலைகளைத் தொடர்ந்திட ஆளும் இந்துத்துவ சங்க பரிவாரங்கள் ஆட்சி அதிகாரத்தின் துணையோடு நாட்டையே பிளவுபடுத்தி ரத்தம் குடிக்க துடிக்கின்றன. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம் முதல் பூனே திரைபடக் கல்லூரிவரை எங்கெங்கும் மாணவர் போராட்டங்கள் மற்றும் புகழ்பெற்ற மாபெரும் அறிஞர்களின் எதிர்ப்புகளையும் மீறி, தகுதியற்ற இந்து வெறியர்கள் பெரிய பதவிகளில் அமர்த்தப்படுகிறார்கள். தமிழகத்தில் ரயில் நிலையங்களில் பட்டப் பகலில் கூட பெண்கள் பத்திரமாக வேலைக்குப் போகும் பாதுகாப்பு தர வக்கற்ற காவல்துறை, சுவாதி கொலையை அரசியல் ஆக்கி சாதிக்கான நீதியாய் பரிகசிக்க வைத்திருக்கிறது. எந்த நெருக்கடி வந்தாலும் மக்களைப் பிளவுபடுத்தும் ஆட்சியாளர்களின் சூழ்ச்சிக்கு இதுவே உதாரணம். சாராய விற்பனை, தேர்தலுக்குப் பிறகு மூன்று…

Read More

புத்தகக் கண்காட்சியை பள்ளி – கல்வியின் அங்கமாக்குவோம்

வாசிப்பே அறிவின் ஒற்றை வாசல்…  புத்தகமே திறவுகோல். – கொரிய பழமொழி பள்ளிக்கூடங்களைத் திறந்து ஒரு மாதமாகிறது. தேர்ச்சி சதவிகித சர்ச்சைகளும் சப்தங்களும் இன்னமும் ஓயவில்லை. நமது கல்வியைப் பிடித்தாட்டும் பிசாசாக தேர்வுகள் இன்னமும் தொடர்கின்றன. எப்படியாவது காவியை கல்வியில் கலந்துவிட பலவகையில் சதித் திட்டங்களுடன் மோடிபரிவாரம் களத்தில் குதித்திருக்கிறது. ஏதாவது ஒரு வழியில் லேசான சந்து கிடைத்தால்கூட போதும் அவர்களுக்கு! ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹேட் கேவரின் நினைவுதினம் ஜூன் 21. அதை சர்வதேச யோகா தினமாக்கியது சமீபத்திய சாட்சி. பள்ளிக்கூடங்களுக்குள் எப்படி நுழைய வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். மனதை ஒருநிலைப்படுத்துவது, யோகா என்பதில் சூட்சுமமான அரசியலின் கோர துவேஷம் அதன் நூற்றாண்டுகால இந்துத்துவா நெடியில் ஒளிந்திருக்கிறது என்றால் இல்லை விஞ்ஞான பூர்வமானது. அது இது.. என்று நவீன மூலாம் பூசிட இன்று எல்லாரும் தயார்….

Read More

புத்தகக் கண்காட்சியை பள்ளி – கல்வியின் அங்கமாக்குவோம்

வாசிப்பே அறிவின் ஒற்றை வாசல்…  புத்தகமே திறவுகோல். – கொரிய பழமொழி பள்ளிக்கூடங்களைத் திறந்து ஒரு மாதமாகிறது. தேர்ச்சி சதவிகித சர்ச்சைகளும் சப்தங்களும் இன்னமும் ஓயவில்லை. நமது கல்வியைப் பிடித்தாட்டும் பிசாசாக தேர்வுகள் இன்னமும் தொடர்கின்றன. எப்படியாவது காவியை கல்வியில் கலந்துவிட பலவகையில் சதித் திட்டங்களுடன் மோடிபரிவாரம் களத்தில் குதித்திருக்கிறது. ஏதாவது ஒரு வழியில் லேசான சந்து கிடைத்தால்கூட போதும் அவர்களுக்கு! ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹேட் கேவரின் நினைவுதினம் ஜூன் 21. அதை சர்வதேச யோகா தினமாக்கியது சமீபத்திய சாட்சி. பள்ளிக்கூடங்களுக்குள் எப்படி நுழைய வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். மனதை ஒருநிலைப்படுத்துவது, யோகா என்பதில் சூட்சுமமான அரசியலின் கோர துவேஷம் அதன் நூற்றாண்டுகால இந்துத்துவா நெடியில் ஒளிந்திருக்கிறது என்றால் இல்லை விஞ்ஞான பூர்வமானது. அது இது.. என்று நவீன மூலாம் பூசிட இன்று எல்லாரும் தயார்….

Read More

வாருங்கள் சென்னை நோக்கி

வாருங்கள் சென்னை நோக்கி கல்லூரிப்படிப்பு வரை முடிக்கும் நம் தமிழ்நாட்டின் லட்சக்கணக்கான இளைஞர்களில் ஒரு நூறு பேர்கள் கூட வாசிப்பு எனும் அவசியமான பழக்கத்திற்குள் நுழைவது இல்லை என்பது கசப்பான உண்மை ஆகும். புத்தக வாசிப்பை தனது அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக்கிக் கொண்டவர்கள் இடையே சாமியாரிடம் ஏமாறுவது, ஆணவக் கொலைக்கு துணைப்போவது உட்பட பல சமூக விரோத பகுத்தறிவுக்கு எதிரான மனித நேயமற்ற செயல்பாடுகள் மிக குறைவு. பண்பட்ட சமூகவியலாளர்களாக உயர்ந்து நிற்கும் யாரையாவது நீங்கள் சந்திக்கிறீர்கள் என்றால் கேட்டுப்பாருங்கள். அவரிடம் பிரதானமாக புத்தக வாசிப்பும் ஒரு அன்றாட பழக்கமாக இருக்கும். தற்போதைய நிலவரம் வரை எந்தெந்த நூல்கள் வெளிவந்துள்ளன என்பதை அவரால் சொல்ல முடியும். ஒரு சமூகத்தின் ஆன்மா அங்கு வெளியாகும் வாசிக்கப்படும் புத்தகங்களில்தான் உள்ளது. தமது குழந்தைகளுக்கு விதவிதமான மின் அணு சாதனங்களை…

Read More

களத்தில் தோற்கடிப்போம்

களத்தில் தோற்கடிப்போம் ‘மக்கள் நலத்தை மறந்து முதலாளிய நலனை நோக்கமாகக் கொண்டது அரசு எனும் அமைப்பு. அப்படியான அரசு இறுதியில் தானே வாடி உதிர்ந்து போகும்‘ – கார்ல் மார்க்ஸ் ஒரே வருடத்தின் கணக்கெடுப்பு நம்மை அதிரவைக்கிறது. விவசாயிகளின் தற்கொலை, குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால் வந்த விபத்தில் மாணவர் எண்ணிக்கை, பல்வேறு பாலியல் வன்முறைக்கு பலியான மாதர்களின் எண்ணிக்கை, கொலை கொள்ளை வழிப்பறி குற்றங்களின் மொத்த எண்ணிக்கை, குடல் மற்றும் மார்பு நோய்கள் புற்றுநோய் இவற்றால் வந்த மரணம் – இந்தப் பட்டியல்கள் யாவற்றிலும் தமிழகத்திற்கு முதலிடம். கடந்த சில பத்தாண்டுகளாகவே நமது நிலை இது தான். இன்று புதிதாக மாப்பிள்ளை பார்த்து அவரைப் பற்றி விசாரித்து திருமணம் முடிக்கும்போது எப்பவாவது பார்ட்டினா குடிப்பாரு…. மற்றபடி கெட்ட பழக்கம் கிடையாது என சொல்வது சர்வ சகஜமாகிவிட்டது. தமிழ்ச்…

Read More

புத்தகதினப் புயலாய் எழுவோம்

சமுதாயம் ஒரு பிரம்மாண்ட பள்ளிக்கூடமாக மாற்றி அமைக்கப்பட வேண்டும். கற்றல், வாசிப்பு இவற்றை மக்கள் திரள் தனது சொந்த உடைமை ஆக்கிக் கொள்ள நாம் பணி செய்ய வேண்டும்… புத்தகங்களை அவர்களிடம் கொண்டு சேர்ப்பதே மக்களுக்குக் கற்பிப்பதில் மறைமுகமான வடிவம். நேரடி வடிவத்தைப்போலவே இதுவும் வலிமைமிக்க ஒன்றுதான். (சே-குவேரா) உலகில் இன்று பலவகை தினங்கள் கொண்டாடப்படுகின்றன. எல்லாவற்றிலும் சர்வதேச நாசகர சந்தை தனது ரத்தம் உறிஞ்சும் கபட நாடகத்தை அரங்கேற்றி விடுகிறது. யாவற்றையும் கடந்து உலக புத்தகதினம் வெல்லவேண்டி இருக்கிறது. வர்த்தக உலகம் இதைக் கண்டு கொள்ளாதது ஏன்? ஏனெனில் வாசிப்பு என்பது, வெறும் நுகர்வுலாப செயல்பாடு மட்டுமே அல்ல. அது கிளர்ச்சியைத் தூண்டக்கூடியது. எழுச்சியை விதைக்கவல்லது. கீழ்மை நோக்கிப் பொங்கிட மனதைத் தயார்ப்படுத்தும் இயல்பு மிக்கது. வால்டேர் மற்றும் ரூசோவின் புத்தகங்கள் பிரெஞ்சுப் புரட்சிக்கான கனவை…

Read More

பெண்… பெண்… பெண்..

“பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதற்கு, பொது போர்ப் பாசறை எனில் அது மிக அவசியமான நம் சாதனமாய் இருக்கும்” ஃபிரடெரிக் ஏங்கெல்ஸ் ((எனக்கு கோபம் ஏற்படுகிறது) – 1895 ஏப்ரல் 3, கடிதம்) ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களை தேசத்துரோகிகளாக சித்தரிப்பதன் பின்னணியில் உள்ள சதி மெல்லப் புலனாகும் இன்றைய சூழலில் வேறு எதைச் சொன்னாலும் தனக்கு எதிர்ப்பு உறுதி என அறிந்த பின் அந்த அறிவார்ந்த வளாகத்திலிருந்து ‘காண்டம்’ கிடைத்தது என்பது வரை அவதூறுகளை கூச்சமின்றி ஆளும் காவிபாசிசர்கள் வெளியிடத் தொடங்கியிருக்கிறார்கள். ஒருபுறம் ரோஹித் சுயகொலை மூலம் இந்த ஆளும் சக்தியான தலித் எதிர்ப்பு வெறியும், மறுபுறம் ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழக மாணவர் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தும் ஆபாச அநாகரீகத்தின் கோர நிழலும் நமக்கு எதிரியை அடையாளம் காட்டுகிறது. தேசஅளவில் இன்று மாணவர் அமைப்புகள் கிளர்ந்தெழும்…

Read More

காவி ‘அறிவியல்’ கயமை களைவோம்

மதத் திருவிழாக்களும் பண்டிகைகளும் முதலாளித்துவத்தின் வேட்டை நாய்கள் – காரல் மார்க்ஸ் நவீன அறிவியல் இன்று உலகையே மாற்றி உள்ளது. எத்தனையோ மூட-நம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல், மனிதனை என்றென்றும் புவியின் ஆளுமை சக்தியாய் வளர்ச்சி காண வைத்தது. ஆயினும் இன்று மனிதன் எதிர்கொள்ளும் சோதனைகள் பல. புவிவெப்பமடைதல்; தாவர, விலங்கு பல்லுயிரி அழிவு; வேகமாய் அழியும் வெப்ப மண்டலக் காடுகள்; கைவிடப்படும் கடல்வாழ் உயிரினப் பாதுகாப்பு; சரியான பாதுகாப்பு முறைகள் இல்லாத அணு உலைகள், அணுக்கழிவு பேராபத்துகள்; அச்சமூட்டும் நோய்ப் பரவல்; மூச்சு முட்டவைக்கும் நோய்த்தடுப்பு செலவினங்கள்; மாற்று வழி அறியாத எரிபொருள் புகைமூட்டம்; நில-மனிதஆக்கிரமிப்பு; நீர் நிலைகளை இரக்கமற்று சுரண்டுவது; பிளாஸ்டிக் கழிவுகளின் மண் உயிரி நஞ்சாக்கம்; மறுசுழற்சிக்கு அப்பாற்பட்ட உபயோக சந்தைப்பொருள் நெருக்கத்தால் குவிந்த குப்பை மலைகளால் மரணிக்கும் காற்று…. இப்படி அடுக்கிக்…

Read More