You are here

கலாச்சார சுத்தகரிப்பு- -விபரீதமான– – ஆபத்து வடிவம்-

பேரா.ராமானுஜம் திங்கள், புதன் வெள்ளி மூன்று நாட்கள் எல்லாப் பெண்களும் புடவை அல்லது சுரிதார் மட்டும் போட வேண்டும், ஆண்கள் சட்டையில்லாமல் வேட்டி மட்டும் கட்ட வேண்டும். பிற நாட்களில் “மேலை நாகரிக” உடையான பேண்ட் சட்டை போடலாம் – ஆனால் அதுவும் ஆண்கள் மட்டுமே. பெண்கள் அந்தநாட்களில் சல்வார், பஞ்சாபி போன்ற ‘இந்திய ஆடைகளை உடுத்தலாம். என்ன கிண்டலா? என்று கேட்கிறீர்களா? இப்படிப்பட்ட ஆணைகள் அரசிடமிருந்து பிறப்பது சாத்தியமேயில்லை என்றா நினைக்கிறீர்கள்? ஓ! சொல்ல மறந்து விட்டேன். திங்கள், புதன், வெள்ளி நாட்களில் பிரெட், ஐஸ்கிரீம் எல்லாம் சாப்பிடக் முடியாது. வெங்காயம், மிளகாய், கேரட், முட்டைக் கோஸ் போன்ற வெளிநாட்டு உணவுகள் எல்லாம் கிடையாது. தில்லியில் காற்று மாசுபாட்டைக் குறைக்க, தில்லி அரசு ஒன்று விட்டு ஒரு நாள் ஒற்றைப்படை எண் கொண்ட கார் வண்டிகள்…

Read More

கூட்டுறவே நாட்டுயர்வு – கல்வி உயர்வும் கூட!

கூட்டுறவே நாட்டுயர்வு – கல்வி உயர்வும் கூட! ராமானுஜம் ஐந்து வருடங்களுக்கு முன்னால் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாடு சென்னையில் நடந்தது. அதில் கலந்து கொண்ட (நோபல் பரிசு பெற்ற) விஞ்ஞானி வெங்கடராமன் ராமகிருஷ்ணனின் குழந்தைகளுடன் பேசுகையில், “வாழ்க்கையில் காசு, பணம், வெற்றி என்று தேடாதீர்கள். நீங்கள் எந்தப் பணியில் ஈடுபட்டாலும் அன்றாட அளவில் அது நீங்கள் விரும்பிச் செய்வதாக இருப்பது முக்கியம், அதைத் தேடுங்கள்” என்று அறிவுரை தந்தார். இது மிகவும் பயனுள்ள அறிவுரை என்று நான் நினைக்கிறேன். 2012 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஒரு ஆய்வு கண்டறிந்ததன்படி, உலகெங்கும் ஒன்று தெரிகிறது. முப்பது-நாற்பது வயதினரில் 80%க்கும் மேலானோர் வேலை நாளன்று காலையில் எழும்போது “இன்று வேலைக்குச் செல்ல வேண்டுமே” என்ற சலிப்புடன்தான் எழுகின்றனர். இதில் ஒளிமயமான விதிவிலக்கு…

Read More
கல்வி புதிய கொள்கைக் கலவை 

கல்வி – புதிய கொள்கைக் கலவை – 3: படிப்பு, வேலை, தொழில்

ராமானுஜம் 1. இக்கட்டுரைத் தொடரின் முதல் பகுதியில் ‘மெஹருன்னிசாவை ராக்கெட் ஏற்ற வேண்டும்’ என்று எழுதியிருந்ததற்கு ஒரு நண்பர் எதிர்க் கருத்து தெரிவித்துள்ளார். “இம்மாதிரி ஒவ்வொரு குழந்தையின் கனவுகளையும் நம்மால் நனவாக்க முடியுமா, வேண்டுமா? ஒவ்வொருவரும் பிற்காலத்தில் ஏதோ வேலை, தொழில் செய்வார்கள், அது என்ன என்று இன்றே கண்டறிந்து பள்ளியில் அதற்கான தயாரிப்பைச் செய்ய முடியுமா? இதெல்லாம் போகாத ஊருக்கு வழி தேடுவதுதான்” – என்று அவர் சொல்லவில்லை. ஆனால் என் மனம் நோகக் கூடாது என்று பல பாராட்டுகளுடன் பெரும்பாலும் இதைத்தான் அவர் சொல்கிறார். இது மிகவும் நியாயமான விமர்சனம் என்று நான் கருதுகிறேன். கடந்த இதழில் இக் கருத்தின் மறுபுறமாக கல்வி மீதான வேறொரு விமர்சனத்தையும் முன்வைத்திருந்தேன். “படிப்புக்கும் செய்யும் வேலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை”, “பள்ளிக் கல்வியும் கல்லூரிக் கல்வியும் எந்த…

Read More
கல்வி புதிய கொள்கைக் கலவை 

மையத்தில் ஒரு முக்கோணம்

ராமானுஜம் படம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். பரோட்டாவுக்கு மாவு பிசைந்து கொண்டிருக்கும் காட்சி. அழுத்தி நிதானமாக மாவைக் கைகள் பிசைகின்றன. மாவு உருண்டையை அழுத்திப் பிசையும்போது காமிரா அருகே நெருங்க ‘க்ளோஸ் அப்’பில் காட்டுகிறது. அது ஒரு மனிதமூளையாகவும் பரோட்டா மாவாகவும் மாறி மாறித் தெரிகிறது. நம் மனம் அதற்குப் பழகும் போது, கைகள் மாவை நீண்ட குழாய் போல உருட்டிப் பிசைகின்றன. அடுத்த கணம் கத்தி வைத்து அதைச் சிறிய உருளைகளாக வெட்டும்போது, நம் மனம் பெரும் அதிர்ச்சி அடைகிறது. மூளையைப் பிசைந்து வெட்டினால் மனம் தாங்குமா? இது ஒரு படக் காட்சி. ஐஐடி மும்பையில் பணிபுரியும் நண்பர் பேராசிரியர் ராஜா மோஹந்தி 25 வருடங்கள் முன் எடுத்த குறும்படம். “எச்சரிகையாயிரு குழந்தாய், அவர்கள் உன் மனத்தைத் திருடுகிறார்கள்!” என்று பள்ளிக் கல்வி குறித்து எடுத்த…

Read More
கல்வி புதிய கொள்கைக் கலவை 

கல்வி புதிய கொள்கைக் கலவை 1 : மெஹருன்னிசாவை ராக்கெட் ஏற்ற வேண்டுமே!

பேரா. ஆர். இராமானுஜம் மூன்று வருடங்களுக்கு முன்னால் நான் ஒரு வேலையாக மும்பை சென்றிந்தபோது அந்நகரின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான தாராவிக்குச் சென்றிருந்தேன். அங்கு நம் நண்பர்கள் சிலர் கணிணி மையம் ஒன்றை நடத்திவருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் இளைஞர்களுக்கான முற்போக்கு சிந்தனை மையமாக அது இயங்கி வருகிறது. அவர்கள் ஏற்பாடு செய்த சிறுகூட்டத்தில் பெங்குபெற்ற நான் வரும் மாணவர்கள் இலவசமாக இண்டெர்நெட் பயிற்சி பெறுவதைப் பாராட்டினேன். “கல்விக்கான புதிய கருவி இது” என்று கணிணியைப் பற்றி பேசினேன். அங்கு வந்திருந்த மெஹருண்ணிசா என்ற                       14 வயதுப் பெண் என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஏதும் பேசவில்லை. கூட்டம் கலைய, சிலர் மட்டும் என்னுடன் பேசிக் கொண்டிருந்தனர். அந்தப் பெண்ணும் காத்திருப்பதைப் பார்த்த நான் அருகிலழைத்து “என்ன பேச வேண்டும்” என வினவினேன். “நீங்கள் ஒரு விஞ்ஞானி…

Read More