You are here
Naan Oru Troll கட்டுரை 

பிஜேபியின் டிஜிட்டல் ராணுவம்: இணையத்தில் விரிந்திருக்கும் விஷ சிலந்தி வலை – எஸ்.ஜி.ரமேஷ்பாபு

இரண்டாண்டுகால ஆய்வின் அடிப்படையில் புலனாய்வு நிருபர் ஸ்வாதி சதுர்வேதியின் கடுமையான உழைப்பில் உருவான “நான் ஒரு ட்ரால் − பிஜேபி டிஜிட்டல் ராணுவத்தின் ரகசிய உலகுக்குள்ளே” என்ற புத்தகம் இன்றைய சூழலில் அனைவரிடமும் செல்லவேண்டிய புத்தகம். ஆனால் சமூக வலைதளங்களில் இல்லாதவர்களுக்கு நிச்சயம் இந்தப் புத்தகம் புரியாது. சமூக வலைதளங்களில் செயல்படும் யாரும் இந்தப் புத்தகத்தைப் படித்தால் அதிர்ந்துதான்போவார்கள். ஏனெனில் இந்த நூலில் சொல்லப்படும் தாக்குதலுக்கு நிச்சயம் எல்லாரும் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதுதான் கசப்பான உண்மை. கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் சமூக வலைதளத்தில் தங்கள் சித்தாந்தத்தை நிலைநிறுத்த தர்க்கங்களோடு, ஆதாரங்களோடு அறிவுபூர்வமாக விவாதிப்பது ஒரு முறை. ஆனால் தங்கள் கருத்துகளுக்கு எதிரானவர்களை விரட்டவேண்டும் எனத் திட்டமிட்டு பொய்க் கணக்குகளை துவக்கி ஆபாசமாக, அருவருக்கும் முறையில் தனிநபர் தாக்குதலில் இறங்குவது இரண்டாவது முறை. இதில் கைதேர்ந்தவர்கள் மட்டுமல்ல, இதை ஒரு பிரும்மாண்டமான…

Read More
Pavannan Book கட்டுரை 

பொல்லாச் சூழ்ச்சியின் புற்றுகள் – பாவண்ணன்

சங்கப்பாடல்களை எடுத்துக்காட்டாகச் சொல்லி பேசாதவர்களோ, பெருமைப்படாதவர்களோ தமிழ்ச்சூழலில் இல்லை. அந்த அளவுக்கு அவற்றின் அறிமுகம் வேரூன்றியிருக்கிறது. அவை கருத்தாழம் கொண்டவை. காலத்தால் மிகவும் பழைமை வாய்ந்தவை. அப்பாடல்களில் அமைந்திருக்கும் நயங்களை எளிய வாசிப்புப்பழக்கம் கொண்டவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் இதுவரை ஏராளமான நூல்கள் எழுதப்பட்டுள்ளன. பல மேடைகளில் அவை மீண்டும் மீண்டும் முழங்கப்பட்டுள்ளன. பல பாடல்களை மனப்பாடமாகச் சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். சங்ககாலத்தில் தாவரங்கள், சங்ககாலத்தில் விலங்குகள், சங்ககாலத்தில் போர்கள் என ஏராளமான ஆய்வுகள் வெளிவந்துள்ளன. ஆனால் இதுவரை சங்ககாலத்தைப் பின்னணியாகக் கொண்டு தமிழில் யாரும் ஒரு நாவலை எழுத முயற்சி செய்ததில்லை. ஜெயமோகன் எழுதிய கொற்றவை நாவல் சங்ககாலத்துக்கும் முந்தைய பண்பாட்டுக்கூறுகளை பல கோணங்களில் தொகுத்தளிக்கும் முயற்சியை முன்னெடுத்த முக்கியமான படைப்பு. இப்படிப்பட்ட சூழலில் மனோஜ் குரூர் என்னும் மலையாள நாவலாசிரியர் சங்ககாலத்தைக் களமாகக் கொண்டு சில ஆண்டுகளுக்கு…

Read More
Ayesha Natarasan கட்டுரை 

10 /10 வாசிப்பாயா – ஆயிஷா இரா. நடராசன்

துப்பாக்கிகளைவிட புரட்சிக்கு சிறந்த ஆயுதங்கள் உண்டென்றால் அவை புத்தகங்களே… – ஃபிடல் காஸ்ட்ரோ 1. குள்ளநரிகளும் அராபியர்களும் (உலக சிறுகதைகள்) த.வ.கீதா / எஸ்.வி.ராஜதுரை NCBH பக்: 96 விலை: ரூ.90/- அதிகாரத்திடம் உண்மையை நெஞ்சை நிமிர்த்தி நேருக்கு நேர் சொல்லும் தைரியம் மிக்க பல படைப்பாளிகளின் கதைகள் அடங்கிய தொகுப்பு இது. மானுட விடுதலை கைவரப் பெறாத சூழலில் அதை முன்னெடுக்க இறுதிமூச்சு வரை போராடும் இந்தப் படைப்புகள் தமிழின் இடதுசாரி மொழிப்பெயர்ப்பாளர்களான எஸ்.வி.ஆர். மற்றும் வ.கீதாவின் கை வண்ணத்தில் நமக்கு கிடைத்துள்ளன. நவீன சீன எழுத்தாளர் வென் யுஹோங் எழுதிய “வெறிநகரம்” தரும் அதிர்ச்சியிலிருந்து நீங்கள் மீள்வது அவ்வளவு எளிதல்ல. நரமாமிசம் உண்ணும் வென் யுஹோங் காட்டும் நகர பயங்கரம் ஆதீத சுவை தேடிகள் வெளி ரசிகர்கள் கண்மூடித்தனமான கேளிக்கை விடுதிகள் என யாவற்றையும்…

Read More
Thirumavelan கட்டுரை 

ஒரு பெருங்கடல், ஒரு நாடு, ஒரு புத்தகம் – ப. திருமாவேலன்

விஞ்ஞான சோசலிசக் கழகம் (தீட்சித் பிரிவு – மும்பை) என்ற அமைப்பைச் சேர்ந்த கோவில்பட்டி தோழர் பால்ராஜ் அவர்கள் சென்னை சென்று வரும்போது வாங்கி வந்து கொடுத்த நூல். ‘இந்துமகா சமுத்திரமும் இலங்கை இனப்பிரச்சனையும்!’ ஒன்றல்ல, ஐந்து பிரதிகள் வாங்கி வந்து எங்களிடம் கொடுத்தார். ஈழ மக்களின் துன்ப, துயரங்கள், தம்பி பிரபாகரனின் வீரம் என்ற எல்லையைத் தாண்டி ஈழத்தின் உள்நாட்டு, வெளிநாட்டு, மேற்குலக அரசியலை ஓரளவு உணர்த்துவதாக அந்தப் புத்தகம் அந்த வயதில் உதவியது. உதயன், விஜயன் என்ற இரண்டு பத்திரிகையாளர்கள் எழுதிய இந்நூலை 1987ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வெளியிட்டார்கள். இதன் தமிழகப் பதிப்பு தோழர் எஸ்.வி.ராஜதுரை அவர்கள் நடத்திய ரோசா லுக்சம்பர்க் படிப்பு வட்டத்தினரால் தமிழகத்தில் வெளியிடப்பட்டது. எஸ்.வி. ஆர். வெளியிட்ட நூலைத் தான் தோழர் பால்ராஜ் வாங்கி வந்து தந்தார். இந்நூலை 2011ம்…

Read More
Translation கட்டுரை 

மொழிபெயர்ப்புகளின் காலம் – சா. கந்தசாமி

மனிதர்களின் அறிவு, ஞானம், கருத்து, கற்பனை என்பதெல்லாம் ஒரு நாட்டிற்குள்ளோ, ஒரு மொழிக்குள்ளோ அடங்கி இருப்பதில்லை. ஆனால் அவை மனிதர்களின் அகத்தில் இருக்கின்றன. அவற்றைத் தாம் அறிந்த மொழியில் சொல்கிறார்கள். ஒரு மொழியில் சொல்லப்பட்டது என்பதால், அது அம்மொழிக்கே சொந்தமானது கிடையாது. எங்கோ, தொலைதூரத்தில் வாழும் மனிதர்கள் தங்களின் மொழியில் சொன்னவற்றை, எழுதியவற்றை இன்னொரு மொழியில் தமக்குத் தெரிந்த மொழியில் மொழி பெயர்த்து அறிந்து கொள்கிறார்கள். அது தான் மொழி பெயர்ப்பு. எப்பொழுது உலகத்தில் நான்கைந்து மொழிகள் உருவானதோ அப்பொழுதே மொழி பெயர்ப்பும் வந்துவிட்டது. தமிழின் முதல் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் மொழி பெயர்ப்பு முறைகள் பற்றிச் சொல்கிறது. அதோடு மொழிபெயர்ப்பு என்ற சொல்லும் தொல்காப்பிய 1597 நூற்பாவில் இடம் பெற்று உள்ளது. மொழிபெயர்ப்பு இல்லாத மொழிகள் உலகத்தில் இல்லை. கருத்துப் பரிமாற்றம், தகவல் பகிர்வு, அறநூல்…

Read More
dumas book கட்டுரை 

மான்டி கிறிஸ்டோ நாயகன் – ச.சுப்பாராவ்

கால இயந்திரத்தில் ஏறி நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் சென்று பெங்களுரில் இறங்குகிறீர்கள். உங்களுக்கு எழுத்தாளர் சுஜாதா வீட்டிற்குப் போக வேண்டும் என்று ஆசை. ஏனோ அவரது முகவரி, பெயர் எல்லாம் மறந்து போய்விட்டது. ஆட்டோக்காரர் ‘எங்கே போகணும்’ என்று கேட்கும்போது, ‘கணேஷ் வஸந்த் வீடு’ என்று உளறுகிறீர்கள். ஆட்டோக்காரர் ‘சுஜாதா வீடா? ஏறி உக்காருங்க’, என்கிறார். இப்படி நடப்பது சாத்தியமா என்று உங்களுக்கு சந்தேகம் வந்தால், 150 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்சில் நடந்த இ.ந்த சம்பவத்தைப் பாருங்கள். அந்த பெரிய எழுத்தாளர் பிரான்சிற்கு வெளியே பிரும்மாண்டமான ஒரு கோட்டையைக் கட்டியிருந்தார். அதைப் பார்க்க ஒரு பிரபல நடிகை அந்த ஊருக்கு வந்தார். எழுத்தாளர் பெயர், ஏரியா எல்லாம் மறந்து போனது. எழுத்தாளரின் ஒரு மகத்தான பாத்திரத்தின் பெயர் மட்டும் நினைவிருந்தது.. குதிரை வண்டிக்காரரிடம் ‘மாண்டி கிறிஸ்டோ’ என்றார்….

Read More
vaskodakama கட்டுரை 

வாஸ்கோடகாமா – மயிலம் இளமுருகு

பூமியில் ஒரு பகுதியில் வாழ்ந்த மக்கள் மற்றொரு பகுதியில் வாழ்பவர்களைப் பற்றி தெரிந்து கொள்வதில் தொடக்க காலத்தில் ஆர்வமற்று இருந்தனர். காலப்போக்கில் நாம் இந்த நாட்டில் வாழ்வதைப் போன்றே வேறொரு நாட்டிலும் மக்கள் இருப்பார்களோ என்ற ஆவல் தோன்றியது. அதன் காரணமாக பிற நாடுகளைக் கண்டறிவதில் விருப்பம் காட்டினர்.மட்டுமன்றி வியாபாரத்திற்காகவும் மற்ற நாடுகளைக் கண்டறிவதில் முனைந்தனர். அதில் நாடுகளைக் கண்டுபிடிப்பதில் ஒவ்வொரு நாட்டினருக்கும் போட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நூலில் வேட்டை எஸ்.கண்ணன் அவர்கள் தொடக்ககால பயணம், மேற்கத்திய நாடுகளின் வளர்ச்சி அதனூடாகப் உலகச் சந்தை தோற்றம் போன்றவற்றை சுருக்கமாக கூறியுள்ளார். பிறகு தான் எடுத்துக் கொண்ட பொருளான வாஸ்கோடகாமா குறித்தும் அவருடைய கடற்பயணம் பற்றியும் விரிவாகச் சொல்லியுள்ளார். சிறந்த மொழியியலாளர் சாம்ஸ்கி கூறியுள்ள கருத்துகளைக் குறிப்பிட்டுள்ளார். இப்போது நடப்பது கலாச்சாரங்களின் போர் என்று சொல்லியுள்ளவை சிந்திக்கத்தக்கவை….

Read More
Subbarao கட்டுரை 

நான் எழுத்தாளனல்ல – விளையாட்டு வீரன் – ச.சுப்பாராவ்

“நான் வாழ்ந்தது போன்ற சாகசமான, வித்தியாசமான வாழ்க்கையை யாரும் வாழ்ந்திருக்க முடியாது. ஏழ்மையில் வாழ்ந்திருக்கிறேன். நல்ல செல்வச் செழிப்புடனும் வாழ்ந்திருக்கிறேன். மனித அனுபவங்களின் அனைத்து வகைகளையும் நான் ருசி பார்த்திருக்கிறேன். எனது காலத்தின் மகத்தான மனிதர்கள் பலருடன் எனக்கு நல்ல பழக்கம் உண்டு. எடின்பர்க்கில் மருத்துவப் படிப்பை முடித்து எம்.டி பட்டம் பெற்றிருக்கிறேன். நீண்ட கால இலக்கிய வாழ்வும் உண்டு. குத்துச் சண்டை, கிரிக்கெட், பில்லியர்ட்ஸ், கார் பந்தயம். கால்பந்து, விமான சாகசம், ஸ்கீயிங் என்று பல விளையாட்டுகளிலும் எனக்குத் திறமை உண்டு. நீண்ட தூர ஸ்கீயிங் விளையாட்டை சுவிட்ஸர்லாந்தில் அறிமுகப்படுத்தியதே நான்தான். ஆர்க்டிக் பகுதியில் திமிங்கல வேட்டைக்குச் செல்லும் கப்பலில் ஏழு மாதங்கள் ஒரு மருத்துவராகப் பயணம் செய்திருக்கிறேன். பின்னர் ஆப்பிரிக்காவின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலும் கப்பல் மருத்துவராகச் சென்றிருக்கிறேன். மூன்று போர்களில் பங்கேற்றிருக்கிறேன். என்…

Read More
கட்டுரை 

நதிகள்

மழை பெய்யும்போது தெருவில் நீர் வழிந்தோடுவதைப் பார்த்திருப்பீர்கள். அப்படி நீர் ஓடுவதைப் பார்த்தே, நதி எப்படி உருவாகிறது என்று நீங்கள் அறிந்துகொள்ளலாம். மழை நீர் ஒன்று சேர்ந்து சிறுசிறு ஓடைகளாகிறது. இந்த ஓடைகள் மேலும் சில ஓடைகளுடன் சேர்ந்து ஒரு பெரிய நீரோட்டமாகிறது. இதைப்போலத்தான், மலைகளிலும் குன்றுகளிலும் பெய்யும் மழை நீர், பல சிறு ஓடைகளாக ஓடி, பிறகு ஒன்றாகச் சேர்ந்து ஒரு பெரிய நதியாக உருவாகிறது. நதிகள் பெரும்பாலும் மலைகளில்தான் உற்பத்தியாகின்றன. சில சமயம் நீர் ஊற்றுகளும் ஆறாக ஓடுவது உண்டு. இமயமலைபோன்ற பகுதிகளில் சூரிய வெப்பத்தால் பனிக்கட்டிகள் உருகி, அந்த நீர் நதியாகப் பாய்கிறது. ஆகவே, பனிக்கட்டிகளும் நதிகளை உருவாக்குகின்றன. பெரிய நதிகளுடன் வந்து கலக்கும் சிறு ஆறுகளுக்கு ‘உபநதிகள்’ (Tributary) என்று பெயர். பெரிய நதிகளிலிருந்து சில ஆறுகள் கிளையாகப் பிரிந்து செல்வதும்…

Read More

புத்தகப் பயணம்

தங்கவேலு   புத்தகப் பயணம் கோவை மாவட்டத்தில் தொடங்கி கரூரில் மிகவும் உற்சாகத்துடன் முடிவு பெற்றது. கோவையில் பாண்டியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பேரா. மோகனா மாநில தலைவர் (TNSF) தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். தொடக்க விழாவில் பாதுஷா (மா.செயலாளர்), கோவை மாவட்ட நிர்வாகிகள் ராஜாமணி, V.G பாலகிருஷ்ணன் (செயலாளர்), மெகமோனிஷா (பொருளாளர்), கண்ணபிரான், மணி, சு. சரவணன், விசுவநாதன், தாமிரபரணி கலைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் மதியழகன் புத்தகம் பேசுதே என்கின்ற பாடலோடு உற்சாகமாக குழந்தைகளுடன் குழந்தைகளை இணைத்து புத்தக வாசிப்பு சம்பந்தமான நாடகம் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காமராஜ் பள்ளி, சங்கமம் பள்ளி, சாய் வித்யா விகாஸ் கோஜஸ், Boy angels L.E.F. பள்ளியில் கோவை மாவட்ட புத்தகப் பயணம் நிறைவு பெற்றது. (1-11-17 – 3-11-17) திருப்பூர் முருகன்…

Read More