You are here
Melum Sila Sorkal கட்டுரை 

மேலும் சில சொற்கள் – நவநீதன்

ஒரு எழுத்தாளனின் உள்ளக்கிடங்கில் எப்போதும் இச்சமூகத்திற்கு சொல்லக்கூடிய, அதனோடு உரையாடல் நடத்தக்கூடிய எண்ணற்ற சங்கதிகள் என்றுமே நிரம்பியிருக்கும். தனது படைப்பின் வழியேயும், உரையாடல்களின் வழியேயும் அதை அவன் பகிர்ந்துகொள்கிறான். அப்படியாக நடத்தப்பட்ட நேர்காணல்களின் தொகுப்பே மதுசுதன் அவர்கள் தொகுத்து இந்த நேர்காணல்கள். அனலி பதிப்பம் வெளியிட்டுள்ள புத்தகம் பேசுது, தீக்கதிர், இளைஞர் முழுக்கம் போன்றவற்றில் வெளியான நேர்காணல்களைத் தொகுத்து புத்தகமாக்கியுள்ளனர் படைப்பு உருவாக்கப்பட்ட காலத்தையும் நேர்காணல் கண்ட காலத்தையும் இணைக்கும் ஒரு கண்ணியாக கேள்விகளும் அதற்கான பதில்களும் அமைந்துள்ளன. நேர்காணலில் பங்குபெற்ற எழுத்தாளுமைகளின் படைப்பை வாசிக்க ஒரு உந்துதலை தருகிறது என்பதே இத்தொகுப்பின் சிறப்பாகும். ‘உம்மத்’ நாவலின் மூலம் உலகில் தமிழ் இலக்கியம் பரவலாக அறியப்பட்ட இலங்கை எழுத்தாளர் ஸர்மிளா ஸயித் தனது நாவல் குறித்த அனுபவங்களையும், போருக்கு பின்னான இலங்கையின் அரசியல் சூழலையும் பகிர்ந்து கொள்கிறார்….

Read More
pinju கட்டுரை 

கி.ரா.96: கி.ராவின் “பிஞ்சுகள்” ஒரு சுய புனைவு நாவல் – க. பஞ்சாங்கம்

ஒரு சுய புனைவு நாவல். கி.ரா. (1923…) தனது ஐம்பத்து ஐந்தாவது வயதில் எழுதி, கைெயழுத்துப் படியாக இருக்கும் போதே 1978-ஆம் ஆண்டில் சிறந்ததொரு படைப்பு என்று “இலக்கியச் சிந்தனை” பரிசைப் பெற்றது “பிஞ்சுகள்” என்ற குறுநாவல். கி.ரா.வின் எழுத்துப் பயணத்தில் இந்தக் குறுநாவல் குறிப்பிடத்தக்கப் படைப்பு என்று சொல்ல வேண்டும்; ஏனென்றால் தனது இரண்டாவது மகன் “பிரபு”-வின் சிறுவர் பருவக் குறும்புகளிலும் அவரைப் படிக்க வைத்து எப்படியும் இந்தச் சமூக ஒழுங்கிற்குள் கொண்டு வர ஒரு தந்தை என்ற முறையில் தானெடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்வியில் முடிந்த நிகழ்வுகளிலும் தன்னையும் தன் தந்தையையும் கண்டு வியந்தெழுதிய படைப்பு இது. ஓரளவிற்கு இது தன் வரலாறு சார்ந்த புனைவு. எனவேதான் “எனது குழந்தைப் பிராயத்தில் என்னில் வாழந்த “பிரபு”க்கு” என்று இந்த நூலைச் சமர்ப்பணம் செய்துள்ளார். *****…

Read More
vanmurai ella vakupparai 1 கட்டுரை 

குழந்தைகள் ஏன் பள்ளியை வெறுக்கிறார்கள்…? வி.என். சுப்பிரமணியன்

27.05.2017 அன்று ‘வன்முறையில்லா வகுப்பறை’ என்ற புத்தகம் வாங்கினேன். பேருந்தில் பயணம் செய்தபோது சில பக்கங்களைப் படித்து வந்தேன். மேலும் வீட்டிற்கு வந்து படித்தேன். நான் ஒரு தொழில் நுட்பக் கல்லூரியில் 17 ஆண்டுகளாக துறைத் தலைவர் பதவி வகித்தேன். தற்போது 8 ஆண்டுகளாக நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். ‘வன்முறையில்லா வகுப்பறை’ புத்தகத்தை ஒவ்வொரு பக்கத்தையும் படிக்கும்போது என்னை அந்தப் புத்தகத்தில் உள்ள செய்திகளோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே வந்தேன். வன்முறையில்லா வகுப்பறை என்ற புத்தகத்தில் உள்ள சில செய்திகளையும், அதில் உள்ள புள்ளி விபரங்களையும் தெரிந்த பின் அதிர்ச்சி அடைந்தேன். ‘‘குழந்தைகள் ஏன் பள்ளியை வெறுக்கிறார்கள்…?’’ என்ற தலைப்பில் கூடியுள்ள தேசிய கல்வி கணக்கெடுப்பு (2009) தரும் இறுதி முடிவு என்னை அதிர்ச்சி அடைய செய்கிறது. ‘‘உங்கள் குழந்தை பள்ளியில் பாதிக்கப்படுகிறதா..?’’…

Read More
murkamibook கட்டுரை 

எழுத்து எனும் மராத்தான் – ச.சுப்பாராவ்

அவர் அல்ட்ரா மராத்தான் என்ற 100 கிமீ தூர ஓட்டத்தை ஓடியவர். உலகெங்கிலும் பல மராத்தான்களை ஓடியவர். மராத்தான் அலுத்துப் போனபிறகு, ட்ரைதலான் போட்டிகளில் களமிறங்கியவர். ட்ரைதலான் என்றால் முதலில் ஒன்றரைக் கிமீ நீச்சலடிக்க வேண்டும். அப்படியே நீரிலிருந்து வெளியே வந்து நாற்பது கிமீ சைக்கிள் ஓட்ட வேண்டும். அதை முடித்துவிட்டு, சும்மா ஒரு 10 கிமீ ஓடினால் ட்ரைதலான் முடிந்துவிடும். வேறு பத்திரிகைக்கு அனுப்பவேண்டிய விளையாட்டு வீரர் கட்டுரை தவறுதலாக இங்கே வந்துவிட்டதோ என்று நினைக்க வேண்டாம். இதையெல்லாம் செய்பவரும் ஒரு எழுத்தாளர்தான். புகழ்பெற்ற ஜப்பானிய எழுத்தாளரான ஹருகி முரகாமிதான் அவர். ஓட்டப் பந்தயங்கள் மீதான அவரது பெருவிருப்பத்தையும், அது அவரது எழுத்திற்கு எவ்வாறு துணைபுரிகிறது என்பதையும் மிக அழகாக அற்புதமாக ஆனால் சுருக்கமாக அவர் எழுதியிருக்கிறார். ஓடுவதைப் பற்றிப் பேசும்போது நான் எதைப் பற்றிப்…

Read More
Ranangal கட்டுரை 

ரணங்கள்: மதக்கலவரங்களின் கீரல்களினூடான ஒரு விசாரனை – எஸ்.ஜி.ரமேஷ்பாபு

ரணங்கள்: மதக்கலவரங்களின் கீரல்களினூடான ஒரு விசாரனை – எஸ்.ஜி.ரமேஷ்பாபு பிர்தவ்ஸ் ராஜகுமாரனின் ‘ரணங்கள்’ நாவலின் 320 பக்கங்களையும் படித்து முடித்ததும். இது என்ன? சம்பவங்களின் தொகுப்பாக, இடையிடையில் பின்குறிப்புகளூடாக அந்தந்த காலங்களின் நிகழ்வுகள் குறிக்கப்பட்டு ஒரு ‘முழு நாவல் பேக்கேஜ்’ இல்லாமல் இருக்கிறதே என வாசகர்கள் நினைக்கக்கூடும். ஆனால் தோழர் அ.மார்க்ஸ் இந்நாவல் குறித்து தனது முன்னுரையில் கூறியுள்ள ‘இலக்கண’ வரையறையை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். அதை முன்மொழிகிறேன். ‘நாவல் இலக்கணம், இலக்கியம், இலக்கிய நுட்பம், பாத்திர படைப்பு என்றெல்லாம் நுணுகி ஆராய்ந்து இது ஒரு இலக்கியமாகத் தேறியுள்ளதா இல்லையா எனச்சொல்லும் விற்பன்னர்கள் சற்றே ஒதுங்கிக்கொள்வது நல்லது. உங்களின் இலக்கிய, இலக்கண வரையறைக்குள் இது அடங்காமல் போகலாம். இது எந்த ஒரு தனி மனிதனின் வரலாற்றையும் சொல்லவில்லை. ஒரு ஊரின், ஒரு சமூகத்தின், ஒரு காலகட்டத்தின் வரலாற்றைச் சொல்லுகிறது. புதின…

Read More
kan-theriyaatha-isaingyan-nalla-nilam_FrontImage_668 கட்டுரை 

மகிழ்ச்சியின் ஊற்று – பாவண்ணன்

லியோ தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, மக்சீம் கார்க்கி போன்றோர் எழுதிக்கொண்டிருந்த காலகட்டத்தில் ரஷ்ய மொழியில் எழுதிய மற்றொரு முக்கிய எழுத்தாளர் விளாதிமிர் கொரலேன்கோ. அவர் 15-07-1853 அன்று உக்ரைனில் தென் மேற்குப் பகுதியிலுள்ள ஜித்தோமிர் என்ற சிறு நகரத்தில் பிறந்தார். அவருடைய தந்தையார் வழக்கறிஞர். ஆனால் கொரலேன்கோ தன் சிறுவயதிலேயே அவரை இழந்துவிட்டார். ஐந்து குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தை நடத்திச் செல்ல கொரலேன்கோவின் தாயார் மிகவும் சிரமப்பட்டார். பசியும் பட்டினியுமாக நாட்கள் கழிந்தன. அச்சூழலில் கொரலேன்கோவால் தன் கல்வியைச் சரியாகத் தொடரமுடியவில்லை. இருபது வயதிலேயே கல்லூரியிலிருந்து விலகிவிட்டார். கிடைத்த வேலையைச் செய்து குடும்பத்துக்குத் துணையாக இருந்தார். கொரலேன்கோ தொடக்கத்தில் ஒரு பத்திரிகையில் பிழை திருத்துபவராக சிறிது காலம் வேலை செய்தார். அந்தப் பத்திரிகை சர்வாதிகாரத்தை எதிர்த்து புரட்சிகர இளைஞர்களைப்பற்றிய செய்தியை வெளியிட்டது என்னும் காரணத்துக்காக காவல்துறையின் தொல்லைக்கு ஆளானது….

Read More

வாசிப்பாயா… ஆயிஷா இரா.நடராசன்

அன்பார்ந்த குட்டி நண்பர்களே நீங்கள் சந்தோசமாக இருக்கிறீர்கற் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? நீங்கள் நிறைய புத்தகங்களை வாசிக்கிறீர்கள் என்று அர்த்தம். – ஜவஹர்லால் நேரு (சுதந்திரதின உரை. 1959) 1. அற்புத உலகில் ஆலிஸ் (Alice’s Adventures in wonder land) உங்களுக்குத் தெரியுமா?? முயல்கள் பூமிக்கு சற்று கீழே பொந்துகளில் தான் வசிக்கின்றன. உங்களைப் போல எட்டு வயது சிறுமி ஆலிஸ் தன் உறவினர் வீட்டு விசேஷத்திற்குச் சென்றபோது தான் அந்த அதிசயம் நடக்கிறது. புத்தாடைகள் உடுத்திய முயல் ஒன்று அவசரமாக ஒரு பொந்தில் ஓடி மறைவதைப் பார்த்தாள் ஆலிஸ். அவள் பொந்தில் எட்டிப் பார்த்து இறங்கிட முயற்சி அவ்வளவுதான்.. விழுந்தாள் விழுந்தாள்… விழுந்துகொண்டே இருந்தாள் அவள். பல மைல் ஆழம் கொண்ட குழி அது. பொத்தென்று போய் விழுந்தாள். என்ன அதிசயம்! அடி…

Read More
Thirumavelan கட்டுரை 

சபாபதி நாவலரின் ‘திராவிடப் பிரகாசிகை’ – ப. திருமாவேலன்

‘திராவிடம்‘ என்ற சொல் இருந்ததால் அந்தப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினேன். அந்த வயதில் சுத்தமாக எனக்குப் புரியவில்லை. புரியாமல் போனாலும் எது கிடைத்தாலும் வாசித்தாக வேண்டும் என்ற ஆர்வம் மட்டுமே அப்போது இருந்தது. அந்தப் புத்தகம், ‘திராவிடப் பிரகாசிகை’. எழுதியவர் சிவத்திரு சபாபதி நாவலர். திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு. ‘திராவிடப் பிரகாசிகை என்னும் தமிழ் வரலாறு’ என்பதுதான் நூலின் முழுத் தலைப்பு. தமிழைக் கடவுள் நிலையில் கொண்டு போய் வைக்கும் நூல் மட்டுமல்ல, கடவுளால் உருவாக்கப்பட்டதே தமிழ் என்றளவுக்குச் சொல்லும் நூல் இது. ஆரிய மொழியும், தமிழ் மொழியும் ஆதிக்கட் பரமசிவனால் தோற்றுவிக்கப்பட்டு நடைபெறுந்தெய்வ மொழிகளாம். ஆரியம் பரமசிவனால் தோற்றுவிக்கப்பட்டு நடக்குந் தெய்வ மொழியென்பது வேதாகமம் முதலிய உரையானவைகளானே இனிது பெறுதும், தமிழ் அன்னதோர் மாட்சியுடைத் தென்பது எவற்றாற் பெறுதுமெனின்:- ‘தம்மலர்…

Read More
Sa Kandasamy கட்டுரை 

ஏன் நவீன இலக்கியம் அறியப்படுவதில்லை – சா. கந்தசாமி

கவிஞர்கள், நாவலாசிரியர்கள், சிறுகதை நாடக ஆசிரியர்கள் தம் படைப்புகள் வழியாக நூறு, நூற்று ஐம்பதாண்டுகள் முன்னே இருக்கிறார்கள். அவர்கள் எழுதும் மொழியின் சொற்கள்தாம் நிகழ்காலத்தினுடையதாக இருக்கின்றன. ஆனால் படைப்பு என்பது மொழி வழியாகவே மொழியைக் கடந்து விடுகிறது. படைப்பாளர்கள் தங்களுக்கென்று ஒரு தனி மொழியை உருவாக்கிக் கொண்டு விடுகிறார்கள். அது எப்பொழுதும் வாழும் மொழியாக உயிர்ப்புடன் இருக்கிறது. எழுதப்பட்ட மொழியில்தான் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதில்லை; எம்மொழியில் மொழி பெயர்த்தாலும் அது உயிரோடு இருக்கிறது. ஓர் படைப்பு என்பது அசலாக இருக்கும் வரையில் எழுதப்பட்ட மொழி; காலம் படைப்பாளன் வாழ்க்கை என்பதெல்லாம் இல்லாமல் போய்விடுகிறது. எனவேதான் அது எழுதப்பட்டக் காலத்தில் அதிகமாக அறியப்படாமல் போய் விடுகிறது. ஆகையால் படைப்புக் கலைஞன் முன்னே இருக்கிறான் என்று சொல்லப்படுகிறது. இலக்கிய உரையாசிரியர்கள், நவீன இலக்கிய விமர்சகர்கள் எல்லாரும் இருநூறு முன்னூறு ஆண்டுகள்…

Read More
ivan-turgenev கட்டுரை 

ரஷ்யாவின் கே.ராமச்சந்திரன் – ச.சுப்பாராவ்

ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், இருபது கிராமங்கள், ஐயாயிரம் அடிமைகள் கொண்ட ஒரு சிற்றரசியின் மகன் அவர். அந்த சிற்றரசிற்கு வேண்டிய அனைத்தும் அங்கேயே உற்பத்தி செய்யப்பட்டன. தனியாக மருத்துவர்கள் இருந்தார்கள். அரண்மனையில் ஒரு இசைக் குழுவும், நாடகக் குழுவும் இருந்தன. சிற்றரசி தனது தர்பாரில் அமர்ந்து ஆட்சிசெய்தாள். ஒரு எளிய போர்வீரனை அவனது அழகில் மயங்கி திருமணம் செய்து கொண்டு அரண்மனை மாப்பிள்ளையாக வைத்துக் கொண்டாள். அவரும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டு பொழுதுபோகாத நேரத்தில் அடிமைப் பெண்களைக் கற்பழித்துக் கொண்டிருந்தார். அடிமைகள் சிற்றரசியின் உத்தரவில்லாமல் திருமணம் செய்து கொள்ள முடியாது. உத்தரவின்றி குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. நாய் வளர்க்க முடியாது. அவள் உத்தரவின் பேரில் பெற்ற குழந்தையும் பிறந்தவுடன் தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு விடும். அவளது சிற்றரசிற்குள் போலீஸ் வரக்கூடாது. அனுமதி பெற்று போலீஸ் கமிஷனர் மட்டும்…

Read More