You are here
கடந்து சென்ற காற்று 

சல்யூட் டு மேட்டுப்பாளையம்

ச.தமிழ்ச்செல்வன் கடந்த மாதம் எண்ணிக்கையில் அதிகமான கூட்டங்களில் பங்கேற்க வேண்டியிருந்தது.பெரும்பாலான இரவுகள் ரயில் வண்டிகளின் படுக்கைகளில் உருளாமல் படுத்திருக்கும் கதி ஏற்பட்டது. எனக்கு அப்படுக்கை எப்போதும் சவப்பெட்டிக்குள் நீட்டிய கைகளோடு படுத்திருக்கும் நாளுக்கான ஒத்திகையாகவே படும். உறங்குவது போலும் சாக்காடுதானே. ரயில்வே நிர்வாகம் ஒருவர் ஆறு பயணங்களுக்கு மேல் இணையத்தில் முன் பதிவு செய்வதைத் தடை செய்து விட்டது. மூன்று ஊர்களுக்குப் போனால் ஆறு முன் பதிவு காலியாகிவிடுகிறது. நம்மைப்போல மாதாந்திரிகளின் கதை சிக்கலாகி விடுகிறது. மகன், மருமகள், மகள், மருமகன் என எல்லோருடைய ஐடிகளிலும் டிக்கெட் போட்டு அவர்கள் யாரும் தங்கள் ஐடியில் டிக்கெட் போடும் வாய்ப்பைப் பறித்துத்தான் சமாளிக்க நேர்கிறது.ரயில்வே நிர்வாகத்துக்கு பல்லாயிரம் ரூபாய்கள் பல ஆண்டுகளாக வழங்கி வரும் பயணி என்கிற வகையில் என் போன்றோருக்குச் சிறப்புச் சலுகையாக ஒரு மாதத்தில் 20…

Read More
கடந்து சென்ற காற்று 

இடையில் முடிந்த கதை

ச.தமிழ்ச்செல்வன் இரண்டு நிகழ்வுகள் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். மறைந்த கரிசல் படைப்பாளி வீர.வேலுச்சாமி அவர்களின் அனைத்துப் படைப்புகளையும் தேடிச் சேகரித்து ஒரே தொகுப்பாக தோழர் பா.செயப்பிரகாசம் ‘மண்ணின் குரல்’ என்ற பெயரில் நூலாக்கியுள்ளார்.பரிசல் வெளியீடாக அது வந்துள்ளது. அந்நூலின் வெளியீட்டுவிழா இராஜபாளையம் நகரில் ஜூலை 17 அன்று நடைபெற்றது.வீர.வேலுச்சாமி அவர்களின் மகன் பிரகாஷுடன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் கலை இலக்கியப் பெருமன்றமும் இணைந்து இந்த விழா ஏற்பாட்டைச் செய்திருந்தனர். தனது 24 ஆவது வயதில் பற்றிக்கொண்ட காசநோய் காரணமாக முழுவாழ்க்கையையும் வாழ்ந்துமுடிக்காமல் இடையில் முடிவுற்ற கதை வீர.வேலுச்சாமியினுடையது. இத்தொகுப்பு அவருடைய நினவுகளுக்குச் செய்யப்பட்ட உண்மையான அஞ்சலியாக அமைந்துள்ளது. அவருடைய ஒரே சிறுகதைத்தொகுப்பான ‘நிறங்கள்’ பற்றி புத்தகம் பேசுது இதழில் வெளியான ‘என் சக பயணிகள்’ தொடரில் குறிப்பிட்டு யாரேனும் இத்தொகுப்பின் மறு பதிப்பைக்…

Read More

இடப்பக்கம்

ச. தமிழ்ச்செல்வன் கடந்த மாதம் அதிகமான புத்தகங்களைத் தொட்டுத் தழுவிய மாதமாக அமைந்தது. சென்னை புத்தகக் கண்காட்சி ஒரு முக்கியமான காரணம்.அதல்லாமலும் புத்தக வெளியீடு புத்தகத்தை முன் வைத்த கருத்தரங்கு எனவும் பயணங்கள் வாய்த்த மாதமாக இருந்தது. தஞ்சாவூரில் இரு புத்தகங்கள் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்கும் வாய்ப்புக் கிட்டியது..விஜய் பிரசாத் எழுதி ச.சுப்பாராவ் மொழிபெயர்த்த பாரதி புத்தகாலயத்தின் “இடது திருப்பம் எளிதல்ல” என்கிற புத்தகத்தை முன் வைத்த கூட்டத்தை தமுஎகச தஞ்சை நகரக்கிளை ஏற்பாடு செய்திருந்தது. இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் எதிர்காலம் குறித்த நம்பிக்கைகள், கவலைகள், விமர்சனங்கள் இவற்றை ஒரு வரலாற்றுப் பின்னணியுடன் பேசுகிற புத்தகம் இது. கம்யூனிஸ்ட் இயக்கம் குறித்து இந்தியாவிலும் உலகெங்கிலும் பல அறிவுஜீவிகள் ஏராளமான புத்தகங்களை எழுதியிருக்கிறார்கள். சிலவற்றை வாசிக்கும் வாய்ப்பு எனக்கும் கிடைத்திருக்கிறது. எதிர்மறையான மனோபாவத்துடன் எழுதப்பட்ட புத்தகங்களே அதிகம். கம்யூனிஸ்ட்…

Read More
கடந்து சென்ற காற்று 

இரண்டு புத்தகங்கள்

ச.தமிழ்ச்செல்வன் இரண்டு புத்தகங்கள் பற்றிக் குறிப்பிட்டுப் பேச வேண்டும். கடந்த 22.05.2016 ஞாயிற்றுக்கிழமை மதுரை அருகே கீழக்குயில்குடி சமணமலை அடிவாரத்தில் ஓர் அழகான திருமணம் நடைபெற்றது. ச.முருகபூபதியின் மணல் மகுடி நாடகக்குழுவைச் சேர்ந்த கலைஞர் பூபாலன் -ஹெலன் திருமணம். ஆலமரத்தடியில் நாற்காலிகள் போட்டு அந்நிலப்பரப்பில் வண்ணமயமாய் பூத்துக்கிடந்த காட்டு மலர்கள் பறித்து இரு மலர்மாலைகள் செய்து மணமக்களுக்கு அணிவித்து பறையொலி, ஜிம்ப்ளா மேளத்தின் அதிர்வலைகளின் லயத்துடன் திருமணம் நடைபெற்றது. நான், தமிழச்சி தங்கப்பாண்டியன், கோணங்கி, யவனிகாஸ்ரீராம், வர்த்தினி, இசையமைப்பாளர் பிரபாகரன், தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜ் எனப்பல கலை இலக்கிய ஆளுமைகள் பங்கேற்ற கலை இலக்கியத் திருமணம்.நீலகிரி மலைத் தோடர்கள் வந்திருந்து தங்கள் மொழியில் பாட்டுப்பாடி மணமக்களை வாழ்த்தி எல்லோருடைய மனங்களையும் நிறைத்தார்கள். சாதி மற்றும் மதங்களைத் தாண்டிய இக்காதல் மணமக்கள் ஒரு நூலை வெளியிட்டார்கள். பாரதி புத்தகாலய…

Read More
கடந்து சென்ற காற்று 

வாசிப்பின் வசியம்…

ச.தமிழ்ச்செல்வன் சடங்குகள்மீது நமக்கு வெறுப்பில்லை.ஆனால் அது நம் கழுத்தை நெறிப்பதாக இருக்கக்கூடாது.சமத்துவத்தை நிலைகுலையச் செய்வதாக இருக்கக்கூடாது. சாதியத்தை நிலைநிறுத்த உதவும் கருவியாக இருக்கக்கூடாது. காலத்திற்கேற்ற மாற்றங்களை உள்வாங்கிக்கொள்வதாகவும் சமகாலத்தோடு தொடர்பு படுத்திக்கொள்ளும் சாத்தியமுள்ளதாகவும் இருக்க வேண்டும். உணர்வின் வெளிப்பாடாக நடத்தப்படும் நினைவேந்தல் கூட்டங்கள் அங்கு நிகழ்த்தப்பெறும் சம்பிரதாயமான உரைகளால் சடங்குத்தன்மை பெற்று இறுகிப்போவதையும், ஓரிருவர் ஆற்றும் நெகிழ்ச்சியான உரைகளால் காலம் உயிர்பெற்று எழுவதையும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிடும்போது யாரை அழைக்கலாம் என்று முடிவு செய்வதும் அவர்கள் மறுக்காமல் வந்துசேர்வதும் உயிரூட்டும் அடிப்படைகள். அப்படி சமீபத்தில் அமைந்த ஓர் உயிர்ப்பான நிகழ்வு விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் நடைபெற்றது.தமுஎகச கிளை நடத்திய உலகப்புத்தக தின விழா. நானறிந்தவரை வேலூரில் வசிக்கும் தோழர் லிங்கம் சிறந்த வாசகர் விருது பெறத்தகுதியானவர்.அவர் மூத்த தலைமுறையில் என்றால் இளம் தலைமுறை(அவரோடு ஒப்பிடுகையில்)…

Read More

பெண்கள் நிலையங்களின் தேவை

ச. தமிழ்ச்செல்வன் மார்ச் மாதம் எப்போதும் மகளிர் தினக் கூட்டங்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கானதுமாகக் கடந்துபோகும். அப்படித்தான் துவங்கியது இந்த ஆண்டும். ஆனாலும் ஆண்கள் பங்கேற்காத மகளிர் தினக்கூட்டங்கள் பெரிய பலன்களைத் தந்துவிடப்போவதில்லை. ஆண்களோடுதான் நாம் நிறையப் பேசவும் விவாதிக்கவும் வேண்டியிருக்கிறது.ஒடுக்கும் சாதிகளிடம் பேசாமல் ஒடுக்கப்படும் சாதி மக்களிடம் மட்டுமே பேசி முழுமையான மாற்றத்தைக் கொண்டுவந்துவிட முடியாது அல்லவா? பெண்களிடமும் ஒடுக்கப்பட்ட மக்களிடமும் பேசுவது தேவை. அதற்கான விளைவுகள் இருக்கும் என்பது வேறு விஷயம். இக்கூட்டங்களுக்காகப் போவதை ஒட்டிப் புத்தகங்களை வாசிப்பது கட்டாயமாகிவிடும். பைபிள் வாசிப்பதுமாதிரி மகளிர்தினக் கூட்டங்களில் பேசுவதற்காக; வாசிக்க என்று சில பைபிள்கள் என்னிடம் உண்டு. சிமான் டி பூவாவின் இரண்டாம் பாலினம் (The Second Sex), ராதா குமாரின் The story of the History of Doing, It Desn’t have to be…

Read More
கடந்து சென்ற காற்று 

நீர்வழிப் பயணம்

ச.தமிழ்ச்செல்வன் வறட்சியும் வெள்ளமும் ஏற்படுவதற்கு, வரலாற்றுப் பிழைகளோ அல்லது மனிதத் தவறுகளோ எந்த அளவிற்குக் காரணமாக இருக்கின்றன? அரசால் பின்பற்றப்படும் வழக்கமான வழிமுறைகளும் நுணுக்கங்களும் வெள்ளத்தையும் வறட்சியையும் குறைக்க எந்த அளவிற்குப் பயனளிக்கின்றன? கடந்தகாலங்களில் ஏற்பட்ட தீவிரமான இயற்கைநிகழ்வுகளின் மூலம் கற்றுக் கொள்ளப்பட்ட பாடங்கள் என்ன? மீண்டெழுவதற்கான சக்தியை மேம்படுத்துவதற்கு உடனடியாக செய்யவேண்டியவை என்ன? இந்தக்கேள்விகளோடு “நீர்வழி” என்கிற பொறுப்புள்ள குடிமக்கள் மற்றும் அமைப்புகளின் கூட்டியக்கம் துவக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இயங்கும் கனவுகளோடு துவக்கப்பட்டுள்ள இவ்வியக்கம் தன் முதல் நடவடிக்கையாகச் சென்னையை மீட்போம் என்கிற கருத்தரங்கை பிப் 20,21 ஆகிய இருநாட்கள் அண்ணாநகர் எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி வளாகத்தில் நடத்தியது. கருத்தாலும் கரத்தாலும் போராடும் அமைப்புகளும் அறிவுத்துறையில் இயங்கும் துறைசார் அறிஞர்களும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களும் ஒரே மேடையில் தம் கரம் இணைத்துள்ளது ஒரு நம்பிக்கையைத் தருகிறது. வெள்ளத்துக்குப் பிறகு…

Read More

குழந்தைகளும் புத்தகங்களும்

ச.தமிழ்ச்செல்வன் மறு நிமிஷத்தில்,குழந்தைகள் எல்லாருமாகச் சேர்ந்து ஒருமிக்க,’என்ன புத்தகம் கொண்டு வந்திருக்கிறீர்கள்?’என்று கேட்டார்கள். ‘ஒரு புத்தகமும் கொண்டு வரவில்லை !’ ‘பொய்,பொய்.சும்மா சொல்கிறீர்கள்’ ‘நிஜமாக,ஒரு புத்தகமும் கொண்டு வரவில்லை’ ‘நேற்று புத்தகம் கொண்டு வருவதாகச் சொன்னீர்களே!’ ‘நேற்று சொன்னேன்…’ ‘அப்புறம் ஏன் கொண்டு வரவில்லை?’ புத்தகங்கள் ஒன்றும் வரவில்லை.வந்திருந்தால்தான் கொண்டு வந்திருப்பேனே’ ‘பிருந்தா! மாமா பொய் சொல்கிறார்;கொண்டு வந்து எங்கேயாவது ஒளித்து வைத்திருப்பார்.வாருங்கள், தேடிப்பார்க்கலாம்’என்றாள் சித்ரா. அவ்வளவுதான்.என்னுடைய அறை முழுவதும் திமிலோகப்பட்டது.ஒரே களேபரம்…… பிருந்தாவும் சுந்தரராஜனும் பீரோவைத்திறந்து புத்தகங்களை எடுத்துக் கண்டபடி கீழே போட்டார்கள். சின்னஞ்சிறு குழந்தையான கீதா கீழே உட்கார்ந்து, இறைந்து கிடக்கும் ஆங்கிலப்புத்தகங்களை அர்த்தமில்லாமல் திறந்து பார்த்துக்கொண்டிருந்தாள். பீரோவைச் சோதனை போட்ட பிருந்தாவும் சுந்தரராஜனும் ஜன்னல்களில் அடுக்கியிருந்த புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கீழே போட்டார்கள். ‘இரண்டு நிமிஷத்தில் வந்து விடுகிறேன்’என்று அம்மாவுக்குப் பதில் குரல்…

Read More

கூடலில் மனிதக் கூடல்

ச. தமிழ்ச்செல்வன் வெள்ளம் சூழ்ந்த மனநிலையிலிருந்து விடுபட முடியாததாகவே சென்ற மாதம் கடந்து போனது.எதையும் வாசிக்கிற மனநிலையும் வாய்க்கவில்லை.முதல் மழைக்கும் இரண்டாவது மழைக்கும் நடுவில் ஒருநாளில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் நாற்பதாவது ஆண்டு நிறைவு சிறப்பு மாநாட்டை மதுரையில் நடத்தி முடித்தோம். மயிரிழையில் தப்பியதுபோல ஆனது. மாநாடுகளின் சம்பிரதாய நடவடிக்கைகளுக்கு அப்பால் பலரையும் ஓரிடத்தில் ஒரே நாளில் சந்திக்கும் மகிழ்ச்சியும் குதூகலமும் மாநாடுகளின் மிக முக்கியமான உபவிளைவாகும். 1975-ல் தமுஎசவின் முதல் மாநாடு நடைபெற்ற அதே மதுரை தமுக்கம் கலை அரங்கில் இம்மாநாடு நடந்தது.மாநகராட்சிக்குச் சொந்தமான அக்கலையரங்கம் அழுது வடிந்து கொண்டிருந்தது.ஒரு பொது நிறுவனம் பராமரிக்கப்படாமலும் தற்காலப்படுத்தப்படாமலும் இருப்பது நம் சமூகத்தின் அழுகிய மனநிலையின் ஒரு பகுதி. பிரபஞ்சன் இரண்டுநாள் எங்களோடு இருந்தார். ஆனால்,நான் ஒருநாள்தான் அவரோடு இருக்க முடிந்தது. வண்ணதாசன் கலை இரவின்…

Read More
கடந்து சென்ற காற்று 

கடந்து சென்ற காற்று-10: பரசுராமன் என்னும் நிலைக்கண்ணாடி

ச.தமிழ்ச்செல்வன் மரணம் தவிர்க்க முடியாததுதான். இயற்கையான நிகழ்வுதான். ஆனாலும் அது எதிர்பாராத தருணத்தில் நம் மனதுக்கு நெருக்கமானவர்களுக்கு நேரும்போது நாம் முற்றிலும் நிலைகுலைந்துதான் போகிறோம். புதுச்சேரியிலிருந்து தோழர் ராமச்சந்திரன் தொலைபேசியில் சொன்னபோது நம்ம பரசுராமனா இறந்துட்டார்? என்று கேட்டேன். பலரும் இப்படித்தான் கேட்டார்கள். என்னால் இன்னும் அவருடைய மரணத்தை ஏற்க முடியவில்லை. பாண்டிச்சேரி மொழியியல் மையத்தில் பேராசிரியராகப்பணியாற்றி வந்த முனைவர் பரசுராமன், நம் சம காலத்தில் ஒரு பேராசியர் அணிந்து கொண்டிருக்கும் எந்த மூடாக்கும் இல்லாத நம் சக தோழராக நம்மோடு பணியாற்றியவர். ஒரு உண்மையான காந்தியவாதி. இடதுசாரிகளோடும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தோடும் புதுவை அறிவியல் இயக்கத்தோடும் தன்னைக் கரைத்துக்கொண்டு பணியாற்றியவர். அவருடைய மரணத்துக்கு முந்தின இரவு வரை  இயக்கப் பணியாற்றிக் கொண்டிருந்தவர். ஒரு நாள் முன்னதாக சென்னையில் தமுஎகச அமைப்புக்கூட்டம் ஒன்றில்தான் அவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன்….

Read More