You are here
ஒரு புத்தகம் பத்து கேள்விகள் 

”இயற்கையைப் பொதுவுடமையாகக் காணும் மார்க்ஸின் சிந்தனையை நிலை நிறுத்த வேண்டும்”

– நக்கீரன்    கேள்விகள்: ப.கு. ராஜன் “அரசியல் சாராத கவிதைகளிலும் அரசியல் உண்டு” என்ற விஸ்லாவா ஸிம்போர்ஸ்க்காவின் முகப்பு வரியோடு வந்த ‘என் பெயர் ஜிப்சி’ எனும் கவிதைத் தொகுப்பு மூலம் கவனிப்பும் பாராட்டுகளும் பெற்ற கவிஞராக அறிய வந்தவர் நக்கீரன். ‘பென்சிலை சீவ சீவ சுருள் சுருளாய் பூக்கிறது ஒரு பூ பென்சிலை சீவ சீவ சுருள் சுருளாய் விரிகிறது ஓர் சிறகு’ என்று எளிமையும் தனித்துவமும் கொண்ட அழகியலோடு கவிதைகள் எழுதிவந்த நக்கீரன் எழுதிய அடுத்த நூலோ ‘மழைக்காடுகளின் மரணம்’ எனும் சூழலியல் நூல். நக்கீரன் அடுத்து எழுதியது தமிழில் முன்னுதாரணம் இல்லாத ‘காடோடி’ எனும் நாவல்(அடையாளம் பதிப்பகம் பக்.340 ரூ.270). நாவல் என்பதன் சாதாரணமான எதிர்பார்ப்பிற்கு மாறான விவரணங்களோடும் விளக்கங்களோடும் ஆனால் ஒரு புனைவிற்கு மட்டுமே உரித்தான உணர்வுமயமான இழைகள் நெகிழ்ந்தோடும்…

Read More

வாய்மொழி வரலாறுகளை நம்பித்தான் நமது வரலாற்றுப் பதிவு!

மு. ராஜேந்திரன், கேள்விகள்: கொங்கு நாடன்  மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு அருகில் உள்ள வடகரை கிராமத்தில் பிறந்தவர். முதுகலை ஆங்கில இலக்கியமும், சட்டமும் படித்தவர். IAS., தேர்விற்காக வரலாற்றை ஒரு பாடமாகத் தேர்வு செய்து படித்த பிறகு, அவரின் முழு ஆர்வமும் வரலாற்றின் மீதே திரும்பியது. வரலாற்றைத் தேடி பயணிப்பதில் தீராத ஆர்வம் உள்ளவர். இயற்கைப் பாதுகாப்பு செயல்பாட்டாளர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராய் இருந்தபோது, மாவட்டத்தில் உள்ள அனைத்து மலைப் பகுதிகளிலும் 10 லட்சம் விதைகளைத் தூவி, மலைவளம் காத்தவர். மாவட்டத்தில் இருக்கும் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான கோயில்களில் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுகளை, தொல்லியல் துறையின் உதவியுடன் படியெடுத்தவர். திருக்குறளில் உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சட்டக் கூறுகள் என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர். 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற தஞ்சை தமிழ்ப்…

Read More
ஒரு புத்தகம் பத்து கேள்விகள் 

30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தில் என் அனுபவங்களே ஆயுத எழுத்து நாவல்

– சாத்திரி கேள்விகள்: கார்த்திக் மேகா சாத்திரி என்ற சிறி கௌரிபால் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி. புலத்திலும் களத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் புலிகளுக்காகப் பணிகள் செய்தவர். இதனால் உலகத்தின் பல திசைகளுக்கும் தேசங்களுக்கும் பயணித்தவர். அங்கெல்லாம் அபாயங்களின் மத்தியில் – சவால் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்தவர். அப்படி வாழ்ந்த, அந்த வாழ்க்கையில் பணியாற்றிய அனுபவங்களையும் நிகழ்ச்சிகளையும் முன்வைத்து ஏராளமாக எழுதி வருகிறார். இதில் கூடுதலான சர்ச்சையையும் எதிர்ப்பையும் சந்தித்தது, அவருடைய ஆயுத எழுத்து என்ற நாவல். இந்த நாவலின் வெளியீடு கடந்த ஜனவரி மாதத்தில் சென்னையில் நடந்தபோது இதற்கான எதிர்ப்புப் பலமாக இருந்தது. ஆனாலும் அதையும் மீறி நாவலை வெளியிட்டார் சாத்திரி. வெளியான நாவலை விற்பதற்கும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டன. அவற்றையும் கடந்து நாவல் உலகெங்கும் விற்பனையாகியது. இந்த நிலையில் இந்த நாவலைக் குறித்தும் சாத்திரியின்…

Read More
ஒரு புத்தகம் பத்து கேள்விகள் 

சுருக்கெழுத்து வருவதற்கு முன்பே சுருக்குத்தமிழ் பேசியவர்கள் எமது வடமாவட்ட மக்கள்

– கவிப்பித்தன் வட்டார வழக்குகளில் வெளிவரும் படைப்புகள் தமிழ் இலக்கிய வெளியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் சூழலில், இன்னும் உரிய அடையாளம் பெறாத வடமாவட்ட வழக்காற்றில் களம் அமைத்து தொடர்ந்து படைப்புகளை அளித்துவரும் வெகு சிலரில் கவிப்பித்தனும் ஒருவர். தன் ”இடுக்கி“ சிறுகதைத் தொகுப்பின் மூலம் பயணத்தை துவங்கிய கவிப்பித்தன், பின் ”ஊர்ப்பிடாரி”, ”பிணங்களின் கதை” (2014) என்று தொடர்ந்து பயணித்து, சமீபத்தில் “நீவாநதி” நாவலின் மூலம் புதிய தடத்தை அடைந்துள்ளார். வேலூர் மாவட்டத்தின் வாலாஜாவைப் பூர்வீகமாக கொண்ட கவிப்பித்தன் முதலில் பத்திரிக்கையாளராகப் பணியாற்றி, தற்போது அரசு வணிகவரித்துறையில் பணிபுரிந்துவருகிறார். பள்ளிப்பருவ பொது இலக்கிய ஆர்வம், முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தொடர்பு, களப்பணி, அதனூடாக சிறுபத்திரிகை மற்றும் எதார்த்த இலக்கிய வாசிப்பு எனத் தன் இலக்கிய அனுபவங்களை வளர்த்துக்கொண்டவர். தொண்ட வரண்ட தொண்டை மண்டலத்தின் மண்ணும் மனிதர்களுமே…

Read More
ஒரு புத்தகம் பத்து கேள்விகள் 

நாமக்கல்லில் மேட்டுத்தெரு ஆத்தூரில் மந்தைவெளி சேலத்தில் கிச்சிப்பாளையம்…

– பெருமாள்முருகன் பெருமாள் முருகன்(1966)  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் கூட்டப்பள்ளியில் பிறந்தவர்.கொங்கு வட்டார நாவலின் முன்னோடியான எழுத்தாளர் ஆர்.சண்முகசுந்தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.அரசு கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிவரும்  இவர் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, அகராதி என தமிழ் இலக்கியத்தின் பலதளங்களில் தீவிரமாக இயங்கிவருகிறார்.தற்போது காலச்சுவடு ஆசிரியர் குழுவில் பணியாற்றிவரும் பெருமாள் முருகன் இதுவரை ஏழு நாவல்களும் நான்கு சிறுகதை தொகுப்புகளும் நான்கு கவிதைத் தொகுப்புகளும் ஒரு கொங்கு வட்டாரச் சொல்லகராதியும் எட்டு கட்டுரைத் தொகுப்புகளையும் படைத்திருக்கிறார். பதிப்பாசிரியராக நான்கு புத்தகங்களும் தொகுப்பாசிரியராக ஏழு சிறுகதை தொகுப்புகளையும் கொண்டுவந்திருக்கும் இவரின் கூளமாதிரி,நிழல் முற்றம்,மாதொருபாகன் ஆகிய நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.கதா விருது ,கனடா இலக்கியத் தோட்ட விருது உட்பட இதுவரை பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். நூற்றாண்டு காலமாகத் தொன்றுதொட்டு…

Read More
ஒரு புத்தகம் பத்து கேள்விகள் 

படைப்பு மனநிலைக்கான குழந்தைமையைக் காப்பாற்றிக்கொண்டு உயிர்ப்புடனிருக்கிறேன்…

சமயவேல் கேள்விகள்: ப.கு.ராஜன் இதுவரை யாரும் எழுதி விடாத அற்புதக் கவிதையை எழுதிவிட பேனா எடுத்தேன். பக்கென்று இருள். மின்சாரம் போயிற்று… ……. வெளியே வந்தால் வெண்ணிற விளக்கெரியும் சுண்டல் வண்டியில் ……. ஓரத்தில் தெருவின் இருள் முழுவதும் உறிஞ்சி வண்டி முழுவதும் வெள்ளொளி உமிழும் பெட்ரோமக்ஸ் மேல் உட்கார்ந்திருந்தது நான் எழுத நினைத்த கவிதை. இப்படி சுண்டல் வண்டியின் பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் இருந்தெல்லாம் தன் கவிதையைக் கண்டெடுக்கின்றார் கவிஞர் சமயவேல். பிளாங்க் பொயட்ரி (Blank Poetry) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஓசை நயத்தை நம்பாத நேரடிக் கவிதைக்குள்ளேயே தனக்கென்று தனித்ததொரு கவிமொழியும் தனது கவிதைகளுக்கென்று மிகச் சாதாரணமான பரப்புகளையும் நிகழ்வுகளையும் கொண்டுள்ள சமயவேலின் கவிதைகள் ஏமாற்றக் கூடிய எளிமை கொண்டவை. சமகாலத் தமிழ் வாழ்வின் அலுப்பும் அசதியும் கோபமும் கழிவிரக்கமும் மெல்லிய மகிழ்ச்சிகளும் இவரது…

Read More
ஒரு புத்தகம் பத்து கேள்விகள் 

புலிகளின் தமிழீழம் என்பது முஸ்லிம்களற்ற தனிநாடு…

ஸர்மிளாஸெய்யித் கேள்விகள்: மதுசுதன் இலங்கை மட்டக்களப்புப் பகுதியின் ஏறாவூரில் 1982 இல் பிறந்த ஸர்மிளா ஸெய்யித் பத்திரிகைத் துறையில் ஈடுபாடு கொண்டவர். அத்தோடு இவர் சமூக ரீதியிலும் செயலாற்றி வந்தார். முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியுடன் இணைந்து செயற்பட்டார். சிறுவர், பெண்களின் கல்வி, உளவியல் முன்னேற்றத்தில் அதிக ஈடுபாடு கொண்ட ஸர்மிளா ஸெய்யித் தனது பிரதேசத்தில் சிறுவர் நலன்புரி அமைப்பை நிறுவி அந்நிறுவனத்தினூடாக சிறுவர்களின் கல்விக்கான செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்தியிருந்தார். அதே காலப்பகுதியில் “மீள்குடியேற்ற ஒன்றியம்”என்ற அமைப்பின் தலைவியாகச் செயற்பட்டு வந்ததோடு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சில முஸ்லிம் கிராமங்களின் மீளமைப்பிற்கான பணிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தியிருந்தார். விசேட தேவையுள்ள பெண்களின் சமூக வாழ்வு குறித்த முன்னேற்றத்திற்காவும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் பொருளாதார சமூக அபிவிருத்திக்காகவும் இவர் பணியாற்றினார். அநுராதபுரத்தைத் தலைமையகமாகக் கொண்ட விசேட தேவையுள்ள பெண்களுக்கான…

Read More
ஒரு புத்தகம் பத்து கேள்விகள் 

சினிமாவைப் பயிற்றுவிப்பதில் ஆத்மதிருப்தி கொள்கிறேன்…

எம். சிவகுமார் கேள்விகள்: கொங்குநாடன் எம். சிவகுமார்  திரைப்படக் கல்லூரியில் 1981லிருந்து  1984 வரை திரைப்பட இயக்கம் மற்றும் திரைக்கதை எழுதுதல் பயின்றவர்.  ‘சினிமா ஒரு பார்வை’ ‘சினிமா ஓர் அற்புதமொழி’,  ‘சினிமா கோட்பாடு’ போன்ற திரைப்படம் சார்ந்த புத்தகங்களை எழுதியும், மொழிபெயர்த்தும், சினிமா குறித்த புத்தகங்கள் தமிழில் இல்லையே என்ற மனக்குறையைப் போக்கியவர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள், கார்ப்பரேட் வீடியோக்கள், குறும்படங்கள், விளம்பரப் படங்கள் மற்றும் அறிவியல் சார்ந்த படங்களை இயக்கியவர். படங்களை இயக்குவதோடு தற்போது லி.க்ஷி. பிரசாத் ஃபிலிம் & டிவி அகெடமியிலும்  ஷிஸிவி பல்கலைக் கழகத்தின் சிவாஜி கணேசன் திரைப்படக் கல்லூரியிலும் திரைப்பட இயக்கம் மற்றும் திரைக்கதை இயக்கம் குறித்து வகுப்புகள் எடுக்கிறார்.  சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டு நூலிலிருந்து சில கேள்விகளை இயக்குநர் சிவகுமாரிடம் முன்வைத்தபோது அவரளித்த பதில்களை வாசகர்களுடன் பகிர்ந்து…

Read More

எளிய சொற்களில் கவிதை நிகழ்வதை மரபுவாதிகளால் ஜீரணிக்க இயலாதுதானே?

இசை மூதேவியால் அருளப்பட்ட எல்லா சொற்களுக்கும் சரஸ்வதியின் பூரண நல்லாசியுண்டு –                                                               _ இசை (0.00) புதிய நூற்றாண்டில் கவிதை எழுதத் தொடங்கிய இளம்தலைமுறையினரில் குறிப்பிடத்தக்கவர் இசை என இவ்வறிமுகத்தைத் தொடங்குவது சம்பிரதாயமானது. காலம்தோறும் தமிழ்க் கவிதை அடைந்து வரும் புதுப்புதுப் பரிணாமத்தின் நிகழ்கால அடையாளம் இசையினுடையது. தமிழ் நவீன கவிதை ந. பிச்சமூர்த்தி, அரூப்ராம் பிரமீள், பசுவய்யா, தேவதேவன், ஞானக்கூத்தன், சி.மணி, நகுலன், ஆத்மாநாம், கல்யாண்ஜி, கலாப்ரியா, சமயவேல், தேவதச்சன், விக்ரமாதித்யன் என விதம்விதமான குரல்களாக அந்தந்தக் காலகட்டத்தில் ஒலித்திருக்கிறது. இசை முதுகலைப் படிப்பாகத் தமிழ் பயின்றவர். அதன் தாக்கம் கவிதைகளில் ஆங்காங்கே தெறித்திருப்பினும் வடிவத்தை உடைத்துப் பரீட்சார்த்தம் செய்து பார்த்து இவரளவு வெற்றிகண்டவர்கள் குறைவு. யதார்த்த வாழ்வின் குரூரங்களை, கசப்புகளைப் பெரும் பகடி செய்து பார்க்கிறவர் இசை. நம்பிக்கை வறட்சியின் சாயல் கொண்டவை எனினும்…

Read More

சீனா தன் வழியில் சோசலிசத்தைக் கட்டியமைத்துக் கொண்டிருக்கும் ஒரு நாடுதான்

பேராசிரியர்- முனைவர் வெங்கடேஷ். பா. ஆத்ரேயா, சென்னை ஐ.ஐ.டி யில் வேதிப் பொறியியலில் பட்டம் பெற்றவர். சாதாரணமாக ஐ.ஐ.டி. பட்டதாரிகள் போல அல்லாது ‘வறுமையின் காரணம் அறிய’ அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் பயிலச் சென்றார்.

அங்கே பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். பல்கலைக் கழகப் பாடத்திட்டம் போதிக்காத உண்மைப் பொருளாதாரத்தை அவரைப் போன்ற மாணவர்களோடு இணைந்து ‘மூலதனம்’ நூலைக் கற்பதன் மூலம் கற்றறிந்தார். கல்லூரி வளாகம் விளக்காத உலகத்தை அங்கு வீறுகொண்டு நடந்த வியாட்நாம் போர் எதிர்ப்பு மாணவர் போராட்டங்கள் மூலம் விளங்கிக் கொண்டார்.

Read More