You are here
அஞ்சலி 

எல்லை தாண்டிய எழுத்து….

– சா. கந்தசாமி 2016, ஜூலை மாதத்தில் வங்க மொழியில் நூறு நாவல்கள், இருபது சிறுகதைத் தொகுப்பு௧ள், ஏராளமான அரசியல், சமூக ஆதி பழங்குடி மக்கள் வதைப்படுவது பற்றியும் எழுதி உள்ள மகாஸ்வேதா தேவிதன் தொன்னூறாவது வயதில் காலமானார். அவர் எழுத்தின் அடிப்படை கள ஆய்வு. எழுதுவதற்கு முன்னால் அது சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று மக்களை நேரடியாக சந்தித்து உரையாடி அதன் வழியாகப் பெற்றவற்றைக் கொண்டு நாவல்கள் எழுதினார். ஒரு படைப்பிற்கு களஆய்வு அப்படி யொன்றும் அவசியம் இல்லை. மனம் எழுத்தைத் தன்னளவிற்கு கள ஆய்வு செய்து கொண்டுவிடுகிறது. மேலும் கள ஆய்வு என்பது படைப்பைக் கட்டையாக்கி பரிணாமத்தைக் குறைத்து விடுகிறது என்று சொல்லப்பட்டு வந்ததையெல்லாம் கவி மனம் கொண்ட மகாஸ்வேதா தேவி எழுதியே புறந்தள்ளினார். அவர் படைப்புக்களில் கவனம் பெற்றதும் இந்தியா முழுவதிலும் பல எழுத்தாளர்கள்…

Read More
அஞ்சலி 

கவிஞர் நா.முத்துக்குமாருக்கு அஞ்சலி நின்றதுபோல் நின்றாய்…

ச.தமிழ்ச்செல்வன் ஒரு வலியைத் திரும்பத் திரும்பத் தொடும் வலியில் அப்படி என்ன சுகம்? உன் துருப்பிடித்த சைக்கிளின் செம்மண் தடங்களை தார்ச்சாலைகள்மூடிவிட்டன. நீ நடந்து சென்ற மார்கழியின் வீதிகளும் மாக்கோலமும் காலப்புழுதியில் கலைந்துவிட்டன. உன் நூலில் பறந்த பொன்வண்டுகள் பெயர் தெரியா காட்டுக்குள் தொலைந்துபோன முற்பகலும் தூக்கம் இல்லா பின்னிரவும் மறந்ததா மடநெஞ்சம்? என் ப்ரிய நண்பா… பிணத்தை எரித்துவிட்டு சுடுகாட்டிலிருந்து கிளம்புபவர்களிடம் சொல்வதைப்போல சொல்கிறேன்: திரும்பிப் பார்க்காமல் முன்னே நடந்து போ’ – நா.முத்துக்குமார் முத்துக்குமாரைப் புதைத்துவிட்டு திரும்பிப்பார்க்காமல் போக முடியவில்லை. ஏலகிரி மலையில் இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கான ஓர் பயிலரங்கில் நான் பேசிக்கொண்டிருந்தபோது எங்கள் மகன் சித்தார்த்திடமிருந்து வந்த தொலைபேசிச் செய்தி முத்துக்குமாரின் முடிவைச் சொன்னபோது நாவறட்சி ஏற்பட்டது. நம்பமுடியவில்லை. மனம் அப்படியே உறைந்ததுபோலானேன். சித்தார்த்துக்கும் முத்துக்குமாருக்கும் இடையிலான நட்பையும் ‘சித்து…’ என்று அழைக்கும் முத்துக்குமாரின்…

Read More
அஞ்சலி 

அஞ்சலி

கவிஞர். குமரகுருபரன் (43) திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர். 19.6.2016 அன்று மாரடைப்பால் காலமானார். இவர் கால்நடை மருத்துவர். சென்னையில் ஊடகத்துறையில் பணியாற்றி வந்தார். சமீபத்தில் கனடாவின் இலக்கியத் தோட்டத்தின் கவிதைக்கான இயல் விருது இவருக்கு அறிவிக்கப்பட்டது. கனடா விருது வழங்கும் அதே நாளில் குமரகுருபரன் இறந்தது அதிர்ச்சியான சம்பவம். ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ என்கிற கவிதைத் தொகுப்பை உயிர்மைப் பதிப்பகமும் சினிமாக் கட்டுரையை அந்திமழையும் வெளியிட்டிருக்கிறது. ‘குமுதம்‘ பப்ளிகேஷன்ஸ் – பயணிகள் கவனிக்கவும் என்ற தலைப்பில் ‘குமுதம்‘ இதழில் அவர் பணிபுரிந்தபோது எழுதிய பயணக் கட்டுரைகளைத் தொகுத்து நூலாக கொண்டு வந்திருக்கிறது. புத்தகம் பேசுது தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

Read More
அஞ்சலி 

லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராம்

லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராம் 1935 – 2016 ஜார்ஜ் ஹார்ட், ஏ.கே.ராமானுஜம், மா.லெ. தங்கப்பா என பழந்தமிழ் இலக்கியங்களை சமகால ஆங்கிலத்தில் அழகியல் குறைகள் அதிகமின்றி வழங்கியவர்கள் வரிசையில் வருபவர் லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராம். அவரது சிறப்பும் தனித்துவமும் அவர் மொழிபெயர்த்த நவீனத் தமிழ் இலக்கிய மொழி பெயர்ப்புகளில் உள்ளதெனக்கூறலாம். புதுமைப்பித்தன், மெ ளனி, முதல் அம்பை, பாமா வரையிலான தமிழின் மிகச்சிறந்த இலக்கியப் படைப்பாளர்களின் எழுத்துக்கள் அவர் மூலம் தமிழறியா உலகத்திற்குச் சென்றன. அதிலும் முக்கியமாக தமிழ் இலக்கியப் பரப்பின் ஆகச் சிறப்பான விளைச்சல்களாக தமிழ்க் கவிதைகளை உலகம் அறியத் தந்த பணி மகுடமெனலாம். சிலப்பதிகாரம், மணிமேகலை முதல் தற்காலத் தமிழின் அடாவடிப் பெண்களின் அராஜக சொற்கள் (Vicked Girls and Wild Words) வரை ஆங்கிலம் வழி பரந்த உலகிற்கு பயணம் செய்தன. தமிழ் இலக்கியத்தின் பட்டுப்பாதை காலம்…

Read More
அஞ்சலி 

பிலிம் நியூஸ் ஆனந்தன்  (1928- 2016)

அஜயன்பாலா பத்து வருடங்களுக்குமுன் பி சி ஸ்ரீராம் அவர்கள் இயக்கிய வானம் வசப்படும் படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்து அதற்கு முன்பாக சொல்ல மறந்த கதையில் வெறுமனே தலை காட்டியிருந்தாலும் . ஒரு கதாபாத்திரம் என்ற அளவில் எனக்கு அது முதல் படம் .படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த போது அதுகுறித்து தினத்தந்தி வெள்ளித்திரையில் ஒரு செய்தி வெளியானது . நடிகர்கள் பட்டியலில் என் பெயரும் இடம் பெற்றிருந்த்து. அன்று மாலையே ஒரு அழைப்பு தம்பி! நான் பிலிம் நியூஸ் ஆனந்தன் பேசறேன் எனக்கு சட்டென, ஒரு வரலாறு என்னோடு கலப்பதுபோல் ஒரு பெருமை. எத்தனை முறை அவரைப்பற்றிக் கேள்விப்பட்டிருப்போம் சொல்லுங்க சார் தம்பி! நீங்க வானம் வசப்படும் படத்துல நடிச்சிருக்கீங்கறத பேப்பர்ல படிச்சேன் ..புதுப் பேரா இருக்கு. உங்களைப் பத்தி விவரம் சொல்ல முடியுமா…

Read More
அஞ்சலி 

நொபுரு கரஷிமா புகழாஞ்சலி

ஆர். சம்பகலஷ்மி, ஒய். சுப்பராயலு நவம்பர் 26 அன்று நிகழ்ந்த நொபுரு கரஷிமாவின் மரணம் வரலாற்று உலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒருபோதும் இட்டு நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை அது உருவாக்கி விட்டது. மிகவும் அர்ப்பணிப்பும், உறுதிப்பாடும் மிக்க அறிஞர்களில் ஒருவரான கரஷிமா, சோழர் வரலாற்றின் ஒரு அம்சம் பற்றிய தனது பட்டப்படிப்பு ஆய்வுக் கட்டுரையின் மூலம் தென்னிந்திய வரலாற்றின்பால் ஈர்க்கப்பட்டார். அதுவரை பெரும்பாலான ஜப்பானிய அறிஞர்கள் வட இந்தியா மீதும், சமஸ்கிருத படைப்புகள்(ஆதாரங்கள்) மீதும்தான் தமது கவனத்தை செலுத்தினர். எனவே தென்னிந்திய வரலாற்றின் மூத்த அறிஞரான கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி தென்னிந்தியாவின் வளமான தமிழ் ஆதாரங்கள் மீது, தகுந்த பொருள்விளக்கங்கள் போதுமான அளவுக்கு இல்லை என்ற தனது கவலையை வெளிப்படையாகவே தெரிவித்தார். அவை ஆர்வமிக்க இளம் அறிஞரான கரஷிமாவுக்கு பெரும் சவாலை விடுத்தன. டோக்யோ பல்கலைக்கழகத்தில் கீழைநாட்டுக்…

Read More
அஞ்சலி 

அஞ்சலி: கெளரி சங்கர்

தனது மகுடிப் பேச்சால் பல இலக்கியவாதிகளையும் வாசகர்களையும் வசியம் செய்த எழுத்தாளர் கௌரிசங்கர் 19 டிசம்பர் 2015 அன்று மாரடைப்பால் அகாலமரணமடைந்தார். எழுத்தாளர் உதயசங்கர் தெரிவித்த இந்த அதிர்ச்சி தகவலிலிருந்து மீளமுடியவில்லை. விதை, சிறுகதை, நாவல், நாடகம் என அதன் பிரமாண்டங்களை எங்களுக்கு உணர்த்தி அதன் முன் எங்களை சிறு புல் என உணரச் செய்ததாலேயே ரோசம் கொண்டு பேயாக இயங்கினோம். காதலும் அன்பும் அவரது வாழ்வின் பாடுபொருளாக இருந்தது. மழைவரும்வரை கவிதை தொகுப்பும் முந்நூறு யானைகள் சிறுகதை தொகுப்பும் அவை வெளிவந்த காலத்தின் அதிசயங்கள்! அவர் பிரமாண்டமான இலக்கியத் தேரைத்தான் இழுக்கத் தொடங்கினார். வாழ்க்கை அதில் குறுக்கிட்டது. சமீபகாலமாக மீண்டும் உற்சாகமாக வடம் பிடித்தார். மரணம் குறுக்கிட்டு விட்டது. ஆழ்ந்த இரங்கல்! அப்பணசாமி

Read More
அஞ்சலி 

அஞ்சலி: கே.ஏ.குணசேகரன்

நாட்டுப்புற இசையை அதன் உக்கிரத்தோடும் அழகியலோடும் தமிழகம் முழுவதும் கொண்டு சென்றவர்களில் முதன்மையானவர் முனைவர் கே.ஏ.குணசேகரன். கல்லூரி நாட்களிலிருந்தே அவரது பாடல்கள் அவர் செல்லுமிடங்களிலெல்லாம் மேடைகளில் ஒலித்தது. லட்சக்கணக்கான மக்களுக்கு உணர்வுடன் கவிஞர் இன்குலாபின் ‘மனுசங்கடா’ பாடல் அவரால் உயிர் கொண்டு உலகமெங்கும் ஒலித்தது. பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் நிகழ்கலைத்துறையின் தலைவராக பணியாற்றிய கே.ஏ.குணசேகரன், சில காலமாக நோய் வாய்ப்பட்டிருந்தார். அவர் 17 ஜனவரி 2016 அன்று காலமானார். அந்த மக்கள் கலைஞனுக்கு சிரம் தாழ்ந்த அஞ்சலிகள்.

Read More
அஞ்சலி 

அஞ்சலி: ஆயிரக்கணக்கான புத்தகங்கள் அநாதைகளாயின…

   மேனாள் இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் கடந்த 27.07.2015 அன்று ஷில்லாங்கில் மாணவர்களிடையே உரையாடிக் கொண்டிருக்கையில் எதிர்பாராத விதமாக இயற்கை எய்தினார். அவருக்கு புத்தகம் பேசுது இதழ் ஆசிரியர் குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. திரு. கலாம் அவர்கள் 2011 பிப்ரவரி 16 அன்று, தில்லியில் சாகித்திய அகாதெமியின் இலக்கியத் திருவிழாவின் போது ஆற்றிய ‘சாம்வத்ஷார்’ உரையில், புத்தக வாசிப்பு மற்றும் குடும்ப நூலகம் குறித்து செறிவான பல கருத்துகளைக் கூறியிருந்தார். அந்த உரை புத்தகம் பேசுது 2011 ஆகஸ்ட் இதழிலில் பிரசுரமாகியிருந்தது. அதிலிருந்து ஒரு பகுதியை இங்கு மறுபிரசுரம் செய்துள்ளோம். திரு. கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நம் எல்லோருடைய இல்லங்களிலும் குடும்ப நூலகம் ஒன்று அமைப்போம்!     நண்பர்களே, இங்கே ஒரு அனுபவத்தைக் கூற…

Read More
அஞ்சலி 

அஞ்சலி: எட்வர்டோ காலியானோ

இந்த உருகுவே நாட்டு எழுத்தாளரின் ‘சோசலிசம்’ என்றைக்கும் அதன் இதயத்தையும் இலக்குகளையும் இழந்ததில்லை. இந்த கொடும் உலகத்தை மனிதநேயமிக்கதாக மாற்றுவதற்கான சாதாரன மக்களின் கனவோடு அது நெருங்கி இணைந்திருந்தது.   – விஜய் பிரசாத் எட்வர்டோ காலியானோவுக்கும் இந்தியாவிற்குமான கடைசித் தொடர்பு அவரது புகழ்பெற்ற நூலான வெட்டுண்ட குருதி நாளங்கள் – ஒரு கண்டத்தில் ஐந்து நூற்றாண்டாய் நடக்கும் சூறையாடல் (Open Veins of Latin America: Five Centuries of the Pillage of a Continent (1971).) மூலம் வந்தது. சென்னையின் பாரதி புத்தகாலயத்தைச் சேர்ந்த பி.கே.ராஜன் அவருடைய இந்த வரலாறு படைத்த நூலை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட அனுமதி கோரியிருந்தார். அந்த சாத்தியம் அவரை மகிழ வைத்திருந்தது. மொழிபெயர்ப்பு குறித்து அவருக்கு திடமான கருத்துகள் இருந்தன. தமிழ் மொழிபெயர்ப்பு நேரடியாக அவரது ஸ்பானிய மூல…

Read More